தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனின் அறிகுறிகள்
வறண்ட சருமம்
ஹைபோதைராய்டிசம் வறண்ட சருமத்தையும் வியர்வை குறைவையும் ஏற்படுத்துகிறது.
குளிர் சகிப்புத்தன்மையின்மை
தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைகிறது. இதனால் உடலில் குளிர் தாங்கும் சக்தியும் குறைகிறது.
மலச்சிக்கல்
குறைந்த தைராய்டு ஹார்மோன் சுரப்பினால் இரைப்பை இயக்கம் குறைந்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
பிரெய்ன் ஃபாக்
குறைந்த தைராய்டு அளவே மறதிக்கும் கவனக்குறைவுக்கும் காரணம்.
எடை அதிகரித்தல்
உடல் மெட்டபாலிசத்தில் தடை ஏற்படுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.
முடி உதிர்வு
குறைந்த தைராய்டு ஹார்மோன் உற்பத்தியினால் முடி வளர்ச்சி தடைபடுகிறது
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
ஹைபோதைராய்டிசம் ப்ரோலேக்ட்டின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி மாதவிடாய் சுழற்சியை மாற்றுகிறது.
குறைந்த இதயத்துடிப்பு
தைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையினால் இதயத் துடிப்பு குறைகிறது.
வலுவற்ற நகங்கள்
செயலற்ற தைராய்டு ஹார்மோன்கள் நகங்களின் வலுவைக் குறைக்கிறது, மேலும் முடி மற்றும் தோலின் அமைப்பை மாற்றுகிறது.
வலி மற்றும் பிடிப்பு
குறைந்த தைராய்டு ஹார்மோன் சுரப்பு தசைச் சோர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது.