Verified By Star Health Doctors

வாய் புண் (அல்சர்) – வகைகள், காரணங்கள், மற்றும் குணப்படுத்தும் தீர்வுகள்

வாயின் உட்புறத்தில் மியூக்கஸ் மெம்ப்ரேன் எனப்படும் வழவழப்பான படலம் உள்ளது. இந்த உணர்திறன் மிக்க திசுக்களின் படலத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் அரிப்பு அல்லது சிதைவு ஏற்பட்டால் அதுவே வாய் புண் அல்லது மவுத் அல்சர் எனப்படும். வாய் புண்கள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. எதிர்பாராத விதமாக கன்னத்தின் உட்புறத்தை கடித்துக்கொள்வது உள்ளிட்டவை இந்த காயம் ஏற்பட முக்கிய காரணமாகும். பல்வேறு மருந்துகள், வாய் பகுதியில் ஏற்படும் தோல் வெடிப்புகள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை …

வாய் புண் (அல்சர்) – வகைகள், காரணங்கள், மற்றும் குணப்படுத்தும் தீர்வுகள் Read More »

சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றினை போக்கும் 15 இயற்கையான வீட்டு நிவாரணிகள்

பூஞ்சை தொற்று பற்றிய ஒரு கண்ணோட்டம் சருமத்தில்  பூஞ்சை தொற்று (fungal infections) ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும்; பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நமது சுற்றுப்புறத்தில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சைகளுடன் நம்மில் பலர் தொடர்பு கொள்கிறோம். காற்றில் பூஞ்சைகளின் வித்துகள் இருக்கலாம், அதை நாம் சுவாசிக்கவும் நேரிடலாம். பூஞ்சை வித்துகளை சுவாசிக்கையில், ​​அது நம்மில் பெரும்பாலோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பூஞ்சை வித்துகளால் பாதிக்கப்படலாம், அது பூஞ்சை தொற்றுக்கும் வழிவகுக்கிறது. பூஞ்சையானது ஈரப்பதம் மற்றும் சூடான வெப்பநிலையில் வளரும். இத்தொற்றானது எந்தவொரு நபரையும் பாதிக்கலாம். இருப்பினும் இவை உயிருக்கு ஆபத்தானவை கிடையாது. பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுகளை சந்தர்ப்பவாத தொற்றுகள் என நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு …

சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றினை போக்கும் 15 இயற்கையான வீட்டு நிவாரணிகள் Read More »

வைட்டமின்களும் அதன் செயல்பாடுகளும்

மனித உடல் உலகில் வாழும் மிகவும் சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிரினங்களில் மனித இனமும் ஒன்றாகும். நமது உடல் நலமுடன் இருப்பதற்காக, முறைப்படுத்திய வழியில் ஒருமித்துச் செயல்படும் எண்ணற்ற நுண்ணிய உயிரணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உடல் பல்வேறு உயிரணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஆனது. நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் போன்ற மண்டலங்கள் உடலின் பல்வேறு சிக்கலான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. வைட்டமின்கள் கரிம மூலக்கூறுகளான வைட்டமின்கள் (உயிர்ச்சத்துக்கள்), பெரும்பாலான உயிரினங்களின் வளர்சிதை மாற்ற (மெட்டபாலிசம்) செயல்பாடுகள் சீராக  இருப்பதற்குத்  தேவைப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். குறைந்த அளவில் தேவைப்படும் கலவைகளே இந்த வைட்டமின்கள். நமது உடலால் தானாகவே வைட்டமின்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே நாம் உண்ணும் உணவிலிருந்து அவற்றைப் பெற வேண்டியிருக்கிறது. நமது உடலுக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவையாகும், ஏனெனில் அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கின்றன. உடலின் வைட்டமின் போதிய அளவுக்கு கீழ் குறைந்தால் …

வைட்டமின்களும் அதன் செயல்பாடுகளும் Read More »

நாக்கில் ஏற்படும்கரும்புள்ளிகள்–அறிகுறிகள்,காரணங்கள், மற்றும்சிகிச்சைகள்

நாக்கில் ஏற்படும் கரும்புள்ளிகளின் அளவானது சிறிய புள்ளிகளில் துவங்கி நன்கு தெரியும் திட்டுக்களாகவும் இருக்கலாம். புள்ளிகள், திட்டுக்கள் மற்றும் நிறமாற்றங்கள் ஆகியன நாக்கில் அவ்வப்போது ஏற்படலாம், அவை ஆபத்தானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், முக்கியமாக கவனிக்கவேண்டிய ஏதேனும் ஒரு  பிரச்சினையின் அறிகுறியாகவும் அது இருக்கலாம். அதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன், மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது, அப்போது தான் அவரால் சரியான காரணத்தைக்  கண்டறிய முடியும். நாக்கில் கரும்புள்ளிகள் ஏன் ஏற்படுகின்றன? நாக்கு என்பது நமது வாயின் உள் உள்ள ஒரு தசைப் பகுதியாகும். நமது நாக்கில் சுவையறியும் உணர்திறன்  கொண்ட எண்ணற்ற நுண்ணிய ரிசெப்டார்கள் (சுவை அரும்புகள்) உள்ளன. நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஒருவேளை அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட நிறம் இருந்தால், அல்லது அதனுடன் சேர்ந்து அரிப்பு அல்லது இதர அறிகுறிகள் தென்பட்டால், அவை ஏதேனும் ஒரு உடல்நலப் பிரச்சினை யின் அறிகுறியாக இருக்கலாம். நாக்கில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள் நாக்கில் காயம் ஏற்படுதல் நாக்கில் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆபரணம் அணியத் துளையிடுவது போன்ற காரணங்களால் …

நாக்கில் ஏற்படும்கரும்புள்ளிகள்–அறிகுறிகள்,காரணங்கள், மற்றும்சிகிச்சைகள் Read More »

வீக்கத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்

வீக்கம் என்றால் என்ன? உடற்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண விரிவாக்கம் வீக்கம் எனப்படுகிறது. குறிப்பிட்டப் பகுதியில் திரவம் சேர்வது, காயம் மற்றும்; இன்ஃபிலமேஷன் ஏற்படுவதன் விளைவாக அப்பகுதி விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது. இன்ஃபிலமேஷன் அல்லது திரவம் கட்டிக்கொள்வது வீக்கத்திற்கு பொதுவான காரணங்களாகும். பெரும்பாலான நேரங்களில், மூட்டுக்கு வெளியே வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கப்படுகிறது. எஃப்யூஷன் என்பது கணுக்கால் அல்லது முழங்கால் போன்ற மூட்டுக்குள் ஏற்படும் வீக்கத்திற்கான மருத்துவப் பெயராகும். உறுப்புகள், தோல் அல்லது மற்ற உடல் பாகங்கள் பெரிதாகும்போது வீக்கம் ஏற்படுகிறது. உள்ளுறுப்புகள், தோல் மற்றும் வெளிப்புற தசைகளும் கூட வீக்கத்தால் பாதிக்கப்படலாம். வீக்கத்தினை பொதுவாக, உள் …

வீக்கத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் Read More »

ஆரோக்கியமான வாழ்வும், அதன் முக்கியத்துவமும்

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவம் ஆரோக்கியமில்லா வாழ்வு என்பது வீரர்கள் இல்லாத இராணுவம் போன்றதும், கோகோ இல்லாத சாக்லேட் போன்றதும் ஆகும். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாகவும், மனம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதால் ஆயுள் நீட்டிக்கும்; அதுவே உடலையும் மனதையும் கூட புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனிதனின் மகிழ்ச்சிக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியம் என்றால் என்ன? முழு உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக நலமுடன் இருக்கும் நிலையே ஆரோக்கியம் எனப்படுகிறது. ஆரோக்கியம் என்பது உடலைப் பராமரிப்பதும், பல்வேறு நோய்கள் ஏற்படும் சாத்தியங்களைக் குறைக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கியதாகும். …

ஆரோக்கியமான வாழ்வும், அதன் முக்கியத்துவமும் Read More »

வைட்டமின் B12 நிறைந்த உணவுகள் மற்றும் அதன் பயன்கள்

வைட்டமின் B12 என்றால் என்ன? வைட்டமின் B12 என்பது விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகளில் காணப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். இந்த வைட்டமின் நீரில் கரையக்கூடிய வகையைச் சேர்ந்தது. இது நமது உடலில் -சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும், மைய நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து தேவையான அளவு இறைச்சி மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வந்தால், உங்கள் உணவில் போதுமான அளவிற்கும் மேலான வைட்டமின் B12 கிடைக்கும். பின்வரும் சில மருந்துகள் உங்களின் உடலுக்கு வைட்டமின் B12 மூலம் கிடைக்கும் பலன்களைக் குறைக்கலாம்: உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் B12-ஐ பெறுவதற்கு சில கூடுதல் சப்ளிமென்ட்களும் கிடைக்கின்றன. பெரும்பாலான B12 சப்ளிமென்ட் உணவுத் தயாரிப்புகளில் உள்ள உட்பொருட்கள் செயற்கையானவை (சிந்தடிக்) ஆகும். வைட்டமின் B12 ஏன் அவசியமான ஒன்றாக உள்ளது? உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் B12 வழக்கமாகத் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவுகளிலிருந்தும் வைட்டமின் …

வைட்டமின் B12 நிறைந்த உணவுகள் மற்றும் அதன் பயன்கள் Read More »

துளசி இலைகளின் 10 ஆரோக்கிய நன்மைகள்

துளசி இலைகளின் 10 ஆரோக்கிய நன்மைகள்

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில்  துளசிச் செடிகள் வளர்க்கப்படுகிறது.மூலிகையின் அரசி என்று அறியப்படும் இந்த துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் போன்றவற்றிற்கு துளசியானது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.எனவே இந்திய மரபுகளில் இந்த செடிக்கு முக்கிய இடம் உண்டு.இந்தியாவில்  சளி இருமலுக்கு இந்த இலைகள் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்,அழகுசாதனத் தயாரிப்பு,தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு …

துளசி இலைகளின் 10 ஆரோக்கிய நன்மைகள் Read More »

நாக்கில் ஏற்படும் கொப்புளங்கள் – அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை

நாக்கில் ஏற்படும் கொப்புளங்கள் – அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை

நாக்கில் உள்ள புண்கள் அல்லது திரவம் நிறைந்த குமிழ்கள் நாக்கு கொப்புளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.கொப்புளம் ஏற்படுவதற்கு முன்,புண்கள் ஏற்பட்டு எரியத் தொடங்குகிறது.இவை கூச்ச உணர்வு மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுகிறது. அறிமுகம்   சிலருக்கு வாய் பகுதிகளில் நாக்கு  கொப்புளமானது அடிக்கடி ஏற்படும் சாதாரண நிலை. இவை உண்ணும் போதும் விழுங்கும் போதும் சிரமம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.இது வீக்கம்,திட்டுகள் அல்லது புண்களை ஏற்படுத்தும். இவற்றால் எந்த தீங்கும் இல்லை என்றாலும்,கொப்புளங்கள் சிலரை எரிச்சலடையச் செய்வதோடு சுவை உணர்வைத் …

நாக்கில் ஏற்படும் கொப்புளங்கள் – அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை Read More »

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா?

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா?

“பழங்களின் தேவதை” என்று அழைக்கப்படும் பப்பாளி பழம் – பெரும்பாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவினை பூர்வீகமாக கொண்ட ஒரு பழமாகும். கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் பப்பாளி நன்கு பழுக்க வைக்கப்பட வேண்டும், இல்லையெனில் அது கருச்சிதைவினை ஏற்படுத்தும். பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. மாதவிடாய் தாமதமாகும்போது அதை தூண்டுவதற்கு, ஒரு பெண் எப்போதும் ஒரு கப் பப்பாளியை சாப்பிடலாம். ஆனால் கர்ப்பமான பிறகு, ​​இதுபோன்று செய்தல் கூடாது; ஏனெனில், கற்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குழந்தைகளை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆகையால் அந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு தயாராகும் போது, குழந்தையை சுமக்கும் …

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா? Read More »

Scroll to Top