

வீக்கத்தின்அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
வீக்கம் என்றால் என்ன? உடற்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண விரிவாக்கம் வீக்கம் எனப்படுகிறது. குறிப்பிட்டப் பகுதியில் திரவம் சேர்வது, காயம் மற்றும்; இன்ஃபிலமேஷன் ஏற்படுவதன் விளைவாக அப்பகுதி விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது. இன்ஃபிலமேஷன் அல்லது திரவம் கட்டிக்கொள்வது வீக்கத்திற்கு பொதுவான காரணங்களாகும். பெரும்பாலான நேரங்களில், மூட்டுக்கு வெளியே வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கப்படுகிறது. எஃப்யூஷன் என்பது கணுக்கால் அல்லது முழங்கால் போன்ற மூட்டுக்குள் ஏற்படும் வீக்கத்திற்கான மருத்துவப் பெயராகும். உறுப்புகள், தோல் அல்லது மற்ற உடல் பாகங்கள் பெரிதாகும்போது வீக்கம் ஏற்படுகிறது. உள்ளுறுப்புகள், தோல் மற்றும் வெளிப்புற தசைகளும் கூட வீக்கத்தால் பாதிக்கப்படலாம். வீக்கத்தினை பொதுவாக, உள்


ஆரோக்கியமான வாழ்வும், அதன் முக்கியத்துவமும்
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவம் ஆரோக்கியமில்லா வாழ்வு என்பது வீரர்கள் இல்லாத இராணுவம் போன்றதும், கோகோ இல்லாத சாக்லேட் போன்றதும் ஆகும். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாகவும், மனம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதால் ஆயுள் நீட்டிக்கும்; அதுவே உடலையும் மனதையும் கூட புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனிதனின் மகிழ்ச்சிக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியம் என்றால் என்ன? முழு உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக நலமுடன் இருக்கும் நிலையே ஆரோக்கியம் எனப்படுகிறது. ஆரோக்கியம் என்பது உடலைப் பராமரிப்பதும், பல்வேறு நோய்கள் ஏற்படும் சாத்தியங்களைக் குறைக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கியதாகும்.


வைட்டமின்B12 நிறைந்த உணவுகள் மற்றும் அதனைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
வைட்டமின் B12 என்றால் என்ன? வைட்டமின் B12 என்பது விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகளில் காணப்படும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். இந்த வைட்டமின் நீரில் கரையக்கூடிய வகையைச் சேர்ந்தது. இது நமது உடலில் -சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும், மைய நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து தேவையான அளவு இறைச்சி மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வந்தால், உங்கள் உணவில் போதுமான அளவிற்கும் மேலான வைட்டமின் B12 கிடைக்கும். பின்வரும் சில மருந்துகள் உங்களின் உடலுக்கு வைட்டமின் B12 மூலம் கிடைக்கும் பலன்களைக் குறைக்கலாம்: உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் B12-ஐ பெறுவதற்கு சில கூடுதல் சப்ளிமென்ட்களும் கிடைக்கின்றன. பெரும்பாலான B12 சப்ளிமென்ட் உணவுத் தயாரிப்புகளில் உள்ள உட்பொருட்கள் செயற்கையானவை (சிந்தடிக்) ஆகும். வைட்டமின் B12 ஏன் அவசியமான ஒன்றாக உள்ளது? உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் B12 வழக்கமாகத் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவுகளிலிருந்தும் வைட்டமின்


துளசி இலைகளின் 10 ஆரோக்கிய நன்மைகள்
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகிறது.மூலிகையின் அரசி என்று அறியப்படும் இந்த துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் போன்றவற்றிற்கு துளசியானது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.எனவே இந்திய மரபுகளில் இந்த செடிக்கு முக்கிய இடம் உண்டு.இந்தியாவில் சளி இருமலுக்கு இந்த இலைகள் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்,அழகுசாதனத் தயாரிப்பு,தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு


நாக்கில் ஏற்படும் கொப்புளங்கள் – அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை
நாக்கில் உள்ள புண்கள் அல்லது திரவம் நிறைந்த குமிழ்கள் நாக்கு கொப்புளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.கொப்புளம் ஏற்படுவதற்கு முன்,புண்கள் ஏற்பட்டு எரியத் தொடங்குகிறது.இவை கூச்ச உணர்வு மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுகிறது. அறிமுகம் சிலருக்கு வாய் பகுதிகளில் நாக்கு கொப்புளமானது அடிக்கடி ஏற்படும் சாதாரண நிலை. இவை உண்ணும் போதும் விழுங்கும் போதும் சிரமம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.இது வீக்கம்,திட்டுகள் அல்லது புண்களை ஏற்படுத்தும். இவற்றால் எந்த தீங்கும் இல்லை என்றாலும்,கொப்புளங்கள் சிலரை எரிச்சலடையச் செய்வதோடு சுவை உணர்வைத்


கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா?
“பழங்களின் தேவதை” என்று அழைக்கப்படும் பப்பாளி பழம் – பெரும்பாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவினை பூர்வீகமாக கொண்ட ஒரு பழமாகும். கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் பப்பாளி நன்கு பழுக்க வைக்கப்பட வேண்டும், இல்லையெனில் அது கருச்சிதைவினை ஏற்படுத்தும். பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. மாதவிடாய் தாமதமாகும்போது அதை தூண்டுவதற்கு, ஒரு பெண் எப்போதும் ஒரு கப் பப்பாளியை சாப்பிடலாம். ஆனால் கர்ப்பமான பிறகு, இதுபோன்று செய்தல் கூடாது; ஏனெனில், கற்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குழந்தைகளை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆகையால் அந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு தயாராகும் போது, குழந்தையை சுமக்கும்


சர்க்கரை நோய்க்கான உணவுமுறை திட்டம்– மற்றும்நீரிழிவு நோயாளர்களுக்கான சிறந்த இந்திய உணவுகளின் விளக்கப்படம்
சிறந்த ஆரோக்கியத்திற்காக ஒரு நீரிழிவு (சர்க்கரை) நோயாளர் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோய்க்கும், உணவுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்வது அவசியமாகிறது. மேற்கூறிய அனைத்து கருத்துகளையும் ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே, ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு நோயைப் புரிந்துகொள்வது நீரிழிவு நோய் பொதுவாக சர்க்கரை நோய் (டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்) என்று அழைக்கப்படுகிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் நோயாகும். கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது, அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட


மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள்
மஞ்சள் சேர்த்த பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹல்தி தூத் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹல்தி தூத் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வளிக்கும் ஒரு பானமாகும்; சூடான ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மட்டும் சேர்த்தால் போதும், உங்கள் உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அறிவார்ந்த அற்புத மூலிகையான மஞ்சள், பல நூற்றாண்டுகளாக நம்முடன் இருந்துவருகிறது, அன்றிலிருந்து இன்று வரை அதிகளவு பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. இந்தியா, உலகிலேயே மஞ்சளை அதிகம் பயன்படுத்தும் நாடாகும். மஞ்சள் நிறத்தை மட்டும் தருவதில்லை, உங்கள் உணவிற்கு சுவையையும் சேர்க்கிறது. பல மதங்களின் மரபுகளிலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவங்களில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.


பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?
பெண்களுக்கு ஏற்படக்கூடிய அடிவயிற்று வலியானது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.அது தொப்புளுக்கு கீழே ஏற்படக்கூடியது.சில நேரங்களில் அது இடுப்பு பகுதிக்கும் பரவக்கூடும்.வலிக்கான காரணங்கள் பல உண்டு.மாதவிடாய் முதல் குடல் கோளாறுகள் வரை எண்ணற்றவையாகும்.அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.முக்கியமாக பூப்படைந்த பெண்கள் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த வலி பொதுவாக பிரச்சனையாக இருந்தாலும் சில நேரங்களில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே கடுமையான வலி இருந்தால்