

மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவ காப்பீடு பாலிசி
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த குடிமக்களுக்கான 'ரெட் கார்பெட் மருத்துவ காப்பீடு பாலிசி' மூலம் உங்களுக்கான பிரத்யேக மருத்துவப் பராமரிப்பு உலகிற்குள் அடி எடுத்து வையுங்கள். மூத்த குடிமக்களை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாலிசி, ஆரோக்கியமான மற்றும் கவலையற்ற எதிர்காலத்திற்கான, ஒரு பாலமாக அமைகிறது. 60 முதல் 75 வயதுடைய நபர்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம், வாழ்நாள் முழுவதும் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளும் (Lifelong renewal) உத்தரவாதத்துடன் விரிவான காப்பீட்டு வரம்பை வழங்குகிறது. உங்கள் மருத்துவத் தேவைகளை நெகிழ்வுத்தன்மையுடனும் கண்ணியத்துடனும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில், ரூ.1 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான பல்வேறு காப்பீட்டுத் தொகை ஆப்ஷன்களிலிருந்து, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், ஆன்லைன் மூலமாக பாலிசியை வாங்குவதற்கும் மற்றும் அதனைப் புதுப்பிப்பதற்கும் பிரத்யேக தள்ளுபடிகளைப் பெற்று மகிழுங்கள். இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றான இது, உங்களது வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாத்து, பிற மருத்துவச் செலவுகளுக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
IRDAI UIN: SHAHLIP26041V082526
HIGHLIGHTS
Plan Essentials
நெகிழ்வான காப்பீட்டுத் தொகை
தனிநபர் அடிப்படையில் - ரூ. 1/ 2/ 3/ 4/ 5/ 7.5/ 10/ 15/ 20/ 25 லட்சம் வரையிலும், குடும்ப அடிப்படையில் (Floater basis - சுய மற்றும் துணைவர்) ரூ.10/ 15/ 20/ 25 லட்சம் வரையிலும் காப்பீட்டுத் தொகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
நவீன சிகிச்சைகள்
பாலிசி விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு வாய்வழி கீமோதெரபி, இன்ட்ராவிட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கான செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பிரீமியம் தள்ளுபடிகள்
ஆன்லைன் மூலம் பாலிசியை வாங்குவதற்கும் மற்றும் புதுப்பிப்பதற்கும் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர, பாலிசி வாங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்கு முன்பு, பட்டியலில் உள்ள மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொண்டு ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி பொருந்தும்.
ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம்
ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள், பாலிசி விண்ணப்பத்தின் போது முறையாகத் தெரிவிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்குப் பிறகு அவை காப்பீட்டு வரம்பின் கீழ் கொண்டு வரப்படும்.
வெளிநோயாளி ஆலோசனை
நெட்வொர்க் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் வெளிநோயாளி ஆலோசனைக் கட்டணங்கள், பாலிசி விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள வரம்புகள் வரை வழங்கப்படும்.
சேர்க்கை வயது
60 முதல் 75 வயது வரையிலான மூத்த குடிமக்கள் நிலையான பிரீமியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியுடன், இப்பாப்பீட்டுத் திட்டத்தைப் பெறலாம்.
பாலிசி வகை
இப்பாலிசியைத் தனிநபர் (Individual) அல்லது குடும்பக் கூட்டு (Floater) அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கிய சிறப்பம்சங்கள்
பாலிசி காலம் (Policy Term)இந்தப் பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கால அளவிற்கு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். |
காப்பீட்டுத் தொகை (Sum Insured)இந்தப் பாலிசியின் கீழ் ரூ. 1,00,000/-, ரூ. 2,00,000/-, ரூ. 3,00,000/-, ரூ. 4,00,000/-, ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- , ரூ. 10,00,000/-, ரூ. 15,00,000/-, ரூ. 20,00,000/- மற்றும் ரூ. 25,00,000/- ஆகிய காப்பீட்டுத் தொகை தேர்வுகள் உள்ளன. இதில் ரூ. 10,00,000/- முதல் ரூ. 25,00,000/- வரையிலான காப்பீட்டுத் தொகைத் தேர்வு 'ப்ளோட்டர்' (Floater - குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும்) அடிப்படையில் கிடைக்கும். |
உள்நோயாளி மருத்துவமனை அனுமதிநோய், காயம் அல்லது விபத்துகளின் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏற்படும் சிகிச்சைச் செலவுகள் இதில் ஈடுசெய்யப்படும். |
மருத்துவமனை அனுமதிக்கு முந்தைய செலவுகள் (Pre-Hospitalisation)உள்நோயாளி மருத்துவச் செலவுகளுடன் கூடுதலாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகளும் இதில் அடங்கும். |
மருத்துவமனை அனுமதிக்கு பிந்தைய செலவுகள் (Post-Hospitalisation)பாலிசி நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பிந்தைய மருத்துவச் செலவுகள், மொத்த மருத்துவமனைச் செலவில் 7% வரை வழங்கப்படும். |
அறை வாடகை (Room Rent)உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் காலத்தில் தங்கும் அறை, உணவு மற்றும் செவிலியர் பராமரிப்புக்கான செலவுகள், நீங்கள் தேர்வு செய்துள்ள அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப ரூ. 10,000/- வரை வழங்கப்படும். |
தீவிர சிகிச்சை பிரிவு கட்டணம் (ICU Charges)ரூ. 10 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு, காப்பீட்டுத் தொகையில் 2% வரை தீவிர சிகிச்சை பிரிவு (ICU) கட்டணமாக வழங்கப்படும். மேலும், ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு, உண்மையான ஐசியூ கட்டணங்கள் (actuals) முழுமையாக ஈடுசெய்யப்படும். |
அவசர ஊர்தி சேவை (Road Ambulance)காப்பீடு செய்யப்பட்ட நபரை தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்படும் கட்டணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும். |
டே கேர் சிகிச்சைகள் (Day Care Procedures)தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான மருத்துவமனை அனுமதியே தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கும் காப்பீடு பொருந்தும். |
கண்புரை சிகிச்சை (Cataract Treatment)கண்புரை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள், 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, பாலிசி நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். |
கூட்டுப் பணம் செலுத்துதல் (Co-payment)இந்தப் பாலிசியின் கீழ் கோரப்படும் அனைத்து கிளைம்களுக்கும் (Claims) 30% கூட்டுப் பணம் செலுத்துதல் (Co-payment - அதாவது மொத்த செலவில் 30% தொகையை வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்) முறை பொருந்தும். |
கம்பேஷனேட் டிராவல்காப்பீடு செய்யப்பட்ட நபர், பாலிசியில் பதிவு செய்யப்பட்டுள்ள தனது வழக்கமான வசிப்பிடத்திலிருந்து, தொலைவில் உள்ள ஒரு இடத்தில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவரது உடனடி குடும்ப உறுப்பினர் ஒருவர் (உடன் பயணிப்பவரைத் தவிர) அந்த மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கான விமானப் பயணச் செலவு, ஒரு நிகழ்வுக்கு ரூ. 10,000/- வரை திருப்பித் தரப்படும். இதற்கு மருத்துவமனை அனுமதி கிளைம் பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். |
ஆயுஷ் சிகிச்சைஆயுஷ் (AYUSH) மருத்துவமனையில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளின் கீழ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை வழங்கப்படும். குறிப்பு: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (Naturopathy) முறைகளின் கீழ் வரும் கிளைம்கள், நிறுவனத்தின் முன் அனுமதியின் பேரில் மட்டுமே வழங்கப்படும். |
உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருதல்பாலிசியின் கீழ் மருத்துவமனை அனுமதி கிளைம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, காப்பீடு செய்யப்பட்ட நபர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அவரது உடலைப் பாலிசியில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது வசிப்பிடத்திற்கு கொண்டு வருவதற்கான செலவுகள் (எம்பாமிங் மற்றும் சவப்பெட்டி கட்டணங்கள் உட்பட) ஒரு பாலிசி காலத்திற்கு ரூ. 10,000/- வரை திருப்பித் தரப்படும். |
இரண்டாவது மருத்துவ ஆலோசனைகாப்பீடு செய்யப்பட்ட நபர், இந்த நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவப் பட்டியலில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம். |
தவணை முறை தேர்வுகள்பாலிசி பிரீமியத்தை மாதம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் செலுத்தலாம். மேலும், இதனை ஆண்டுக்கு ஒருமுறை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையிலும் செலுத்திக் கொள்ளலாம். |
வீட்டு வைத்து பெறும் சிகிச்சைகுறிப்பிட்ட சில மருத்துவ நிலைகளுக்காக, காப்பீடு செய்யப்பட்ட நபர் வீட்டிலேயே எடுக்கும் சிகிச்சைகளுக்கு, ஒரு பாலிசி ஆண்டில் காப்பீட்டுத் தொகையில் 10% அல்லது அதிகபட்சமாக ரூ. 50,000/- வரை வழங்கப்படும். |
வரம்பற்ற தொலைபேசி/டிஜிட்டல் மருத்துவ ஆலோசனைகாப்பீட்டாளர் ஸ்டார் ஹெல்த் (Star Health) மொபைல் செயலி அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் வரம்பற்ற எண்ணிக்கையிலான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடையலாம். |
முன்னெச்சரிக்கை ஆரோக்கியப் பரிசோதனைநீங்கள் தேர்வு செய்துள்ள காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப, அதற்குரிய ஆரோக்கியப் பரிசோதனைத் தொகுப்பை, எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் நாங்கள் ஏற்பாடு செய்து தருவோம். |

காத்திருப்பு காலம்
- ஏற்கனவேஇருக்கும் நோய்களுக்கு (Pre-Existing Diseases) - 12 மாதங்கள்
- குறிப்பிட்டநோய்கள்/சிகிச்சை முறைகளுக்கு (Specific Diseases/Procedures) - 24 மாதங்கள்
- ஆரம்பக்காத்திருப்பு காலம் (Initial Waiting Period) - 30 நாட்கள் (விபத்துகளுக்குத் தவிர)
மூத்த குடிமக்களுக்கான பிரத்யேகக் குறைதீர்ப்பு மற்றும் புகார்கள்
காப்பீட்டு நிறுவனத்தின் மீது புகார்கள் ஏதேனும் இருந்தால், பாலிசிதாரர்கள் முதலில் கீழே உள்ள இணைப்பின் மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் புகார்/குறைதீர்ப்புப் பிரிவை அணுக வேண்டும்:
மின்னஞ்சல்: gro@starhealth.in அல்லது grievances@starhealth.in
காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நியாயமான காலத்திற்குள் எந்தவொரு பதிலும் வரவில்லை என்றாலோ, அல்லது நிறுவனத்தின் பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலோ, புகார்களைப் பதிவு செய்ய கீழே உள்ள ஐஆர்டிஏஐ (IRDAI) போர்ட்டலை அணுகலாம்: ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (IGMS) - IRDAI போர்ட்டல்:
https://bimabharosa.irdai.gov.in/ மின்னஞ்சல்: complaints@irdai.gov.in
மேலும், கட்டணமில்லா உதவி எண்களான 155255 அல்லது 1800 4254 732 ஐயும் அழைக்கலாம்.
நவீன சிகிச்சை முறைகள்
நவீன சிகிச்சைக்கான காப்பீட்டு வரம்பை அறிய, தயவுசெய்து [இங்கே கிளிக் செய்யவும்].
காப்பீட்டுக் கட்டண உதாரண விளக்கம்
தனிநபர் மற்றும் குடும்பக் காப்பீட்டு அடிப்படையிலான பலன்கள்/கட்டண விளக்கப் படத்தைப் பார்க்க, தயவுசெய்து [இங்கே கிளிக் செய்யவும்].
காப்பீடு செய்ய உத்தேசித்துள்ள நபரின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பித்தால், காப்பீட்டுக் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும்:
- ஸ்ட்ரெஸ்தாலியம் அறிக்கை (Stress Thallium Report)
- இரத்தஅழுத்த அறிக்கை (BP Report)
- சர்க்கரைஅளவு அறிக்கை (இரத்தம் மற்றும் சிறுநீர்)
- பிளட்யூரியா மற்றும் கிரியேட்டினின் (Blood urea & creatinine)
பரிசீலனைக் காலம்
இந்தச் சுய பரிசீலனைக் காலமானது புதிய தனிநபர் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்; புதுப்பித்தல்களுக்கோ அல்லது பாலிசியை வேறு நிறுவனத்திற்கு மாற்றும் (Porting/Migrating) போதோ, இது பொருந்தாது.
பாலிசிதாரர் மின்னணு முறையிலோ அல்லது பிற வழிகளிலோ பாலிசி ஆவணத்தைப் பெற்ற தேதியிலிருந்து, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஆய்வு செய்ய முப்பது நாட்கள் சுய பரிசீலனைக் காலம் அனுமதிக்கப்படும்.பாலிசிதாரருக்கு அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் திருப்தி இல்லாமலிருந்து, அதுவரை எந்தவொரு காப்பீட்டுத் தொகையையும் (Claim) கோரவில்லை எனில், அவர் தனது பாலிசியை ரத்து செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இந்த வசதி ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலவரையறை கொண்ட பாலிசிகளுக்குக் கிடைக்கும்.
பாலிசிதாரர் தான் செலுத்திய காப்பீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற உரிமை உடையவர் ஆவார். எனினும், காப்பீடு அளிக்கப்பட்ட காலத்திற்கான விகிதாச்சார இடர் கட்டணம் (Proportionate risk premium), பாலிசிதாரருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததற்கான செலவுகள் (ஏதேனும் இருப்பின்) மற்றும் முத்திரை வரி (Stamp duty) ஆகியவை மட்டுமே இதிலிருந்து கழிக்கப்படும்.
குறிப்பு: புதுப்பித்தல் கட்டணம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை நடைமுறையிலுள்ள வழிகாட்டுதல்களின்படி மாற்றங்களுக்கு உட்பட்டவை.
வேறு ஏதேனும் தேடுகிறீர்களா?
அனைத்துத் திட்டங்களையும் காண்கதொடங்குங்கள்
சிறந்த சேவைக்கு நாங்கள் உத்திரவாதம்
எங்களோடு உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்


பாலிசி பெறத் தயாராகி விட்டீர்களா?
முதியோர் மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?
வயதாவது என்பது ஒரு இயற்கையான செயல்முறை, இது நம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு தனித்துவமான சவாலாகவே உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் முதியோர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவின் முதல் தீர்க்கமான முதியோர் ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள முதியோர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஏதேனும் ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்களிடம் அதிகமாகக் காணப்படும், நோய்களில் இதய நோய்கள், நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் போன்ற பல அடங்கும். ஓய்வூதிய வாழ்க்கையில் மிகப்பெரிய 'அறியப்படாத' சவால்களில் ஒன்று மருத்துவக் பராமரிப்புத் தேவைகளாகும். நிதி ரீதியாகப் பார்க்கும்போது, மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இத்தகைய நாள்பட்ட நோய்களுக்கான தரமான சிகிச்சையைப் பெறுவது உங்களது சேமிப்பைக் கரைத்துவிடும்; மேலும் உங்களது ஓய்வூதியக் காலச் சேமிப்பு இலக்குகளை அடைவதையும் கடினமாக்கும். முதியோர்களின் தனித்துவமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட மருத்துவக் காப்பீடு (உதாரணமாக: ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு 12 மாதங்களுக்குப் பிறகு, கண்புரை நோய்க்கு 24 மாதங்களுக்குப் பிறகு) அவசியமாகிறது. முதியவர்களின் பொற்காலத்தில் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க சரியான முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். எனவே, உங்களது மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் சரியான மற்றும் பயனுள்ள மருத்துவக் காப்பீட்டின் மூலம் உடனடியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் 70 வயதுடைய நபர்களுக்கான மருத்துவக் காப்பீட்டைத் தேடினாலும் சரி அல்லது முதியவர்களுக்கு எந்த மருத்துவக் காப்பீடு சிறந்தது என்று யோசித்தாலும் சரி, உங்களது தனித்துவமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்தைக் கண்டறிவதே முதன்மை நோக்கமாகும். இந்தியாவில் உள்ள முதியோர்களுக்கான நம்பகமான மருத்துவக் காப்பீடு, உங்கள் பொற்காலத்தில் நிதிப் பாதுகாப்பையும் நிம்மதியையும் அளிக்கும்.
முறையாக வடிவமைக்கப்பட்ட முதியோர் காப்பீட்டுத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வித நிதி நெருக்கடியும் இன்றி சரியான நேரத்தில் மருத்துவ ஆதரவைப் பெறுவதை உறுதி செய்கிறது. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கு ஒரு நம்பகமான பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, சரியான முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும்.
முதியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள்
முதியோர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள், பணமில்லா மருத்துவமனை அனுமதி மற்றும் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காப்பீடு போன்ற பலன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் வெளிநோயாளி சிகிச்சை, வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மிகக் குறைந்த காத்திருப்பு காலங்கள் ஆகியவை இருப்பது மிகவும் சிறந்தது. முதியோர் மருத்துவக் காப்பீட்டில் பல நன்மைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டின் முக்கிய பலன்கள் இதோ:
- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காப்பீடு: பெரும்பாலான முதியவர்களுக்குத் தொடர் ஆரோக்கியக் குறைபாடுகள் இருக்கும்; முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் அவர்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து மருத்துவப் பராமரிப்பைப் பெற உதவுகின்றன.
- பணமில்லா சிகிச்சை: பணமில்லா சிகிச்சை வசதியானது, முதியவர்கள் ஆரம்பத்திலேயே கையில் இருந்து பணம் செலுத்திவிட்டுப் பின்னர் அதைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மருத்துவச் சிகிச்சையைப் பெற அனுமதிக்கிறது. 70 வயதுடைய நபர்களுக்கான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- வரி விலக்கு பலன்கள்: பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வரி விலக்குச் சலுகைகளை வழங்குகின்றன. இந்தியாவில் முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டிற்குச் செலுத்தப்படும் பிரீமியம் தொகையானது, வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையதாக இருக்கலாம்.
- மருத்துவமனை அனுமதிச் செலவுகள்: முதியோர்களுக்கான இந்த வகையான காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னரும் பின்னருமான பராமரிப்புச் செலவுகள் உட்பட, மருத்துவமனை அனுமதி தொடர்பான மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டை வழங்குகிறது.
- விரிவான காப்பீடு: இத்தகைய மருத்துவக் காப்பீடு, முதியவர்கள் தங்களின் காப்பீட்டுப் பலன்களைக் கொண்டு அதிகச் செலவு பிடிக்கும் மருத்துவச் சிகிச்சைகளையும் எளிதாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.
- ஆயுட்காலம் முழுமைக்குமான புதுப்பித்தல் வசதி: இந்தத் தனித்துவமான அம்சம், பாலிசி வாங்குபவர்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வயதுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
- எளிமையான பிரீமியம் கட்டணங்கள்: முதியோர்களுக்கான சில அரசு மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் மிகவும் குறைவான பிரீமியம் கட்டணங்களைக் கொண்டுள்ளன.
- குறைந்தபட்ச மருத்துவப் பரிசோதனை: பெரும்பாலான முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை.
முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலிசியின் காப்பீட்டு வரம்பு, பிரீமியம் கட்டணங்கள் மற்றும் கிளைம் செய்யும் நடைமுறை ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியமாகும். முதியவர்களின் தேவைகளை நன்கு அறிந்து, இந்தியாவில் உள்ள சிறந்த முதியோர் மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
65 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டின் பலன்கள்
65 மற்றும் 70 வயதைக் கடக்கும்போது நபர்கள், அவர்களின் மருத்துவத் தேவைகள் பெரும்பாலும் மிகவும் சிக்கலானதாகவும் அடிக்கடி தேவைப்படுவதாகவும் மாறுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீடு அல்லது 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது, அவர்கள் எவ்வித நிதி நெருக்கடியும் இன்றி சரியான நேரத்தில் மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது. இத்தகைய திட்டங்கள் வயது முதிர்வு சார்ந்த ஆரோக்கிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், ஓய்வூதியக் காலத்தில் மனநிம்மதியை வழங்கும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதியவர்களின் தேவைகளை நன்கு அறிந்து, இந்தியாவில் உள்ள சிறந்த முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இந்தியாவில் முதியோர்களுக்கான சிறந்த மருத்துவக் காப்பீட்டின் அவசியம்
இந்தியாவில் முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீடு என்பது ஆடம்பரம் அல்ல, அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளால், அது ஒரு அத்தியாவசியமாகும். அதிக அளவிலான மருத்துவப் பராமரிப்புச் செலவுகளிலிருந்து, அவர்களின் சேமிப்பையும் நிதியையும், இது பாதுகாக்கிறது என்பதால், இது அவசியமாகிறது. இந்தியாவின் சிறந்த முதியோர் மருத்துவக் காப்பீடு 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குக் காப்பீட்டை வழங்குவதோடு, நவீன சிகிச்சைகள் மற்றும் மாற்று மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டைத் தேடுவோருக்கு, வயது அதிகரிக்கும்போது மருத்துவத் தேவைகள் அதிகமாகும் என்பதால், இது இன்னும் முக்கியமானதாகிறது.
முதியோர்களுக்கு ஏன் மருத்துவக் காப்பீடு தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- நிதிப் பாதுகாப்பு: முதியோர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், பெரிய அளவிலான மருத்துவப் பில்கள் மற்றும் அடிக்கடி தேவைப்படும் சிகிச்சைகளிலிருந்து அவர்களின் சேமிப்பைப் பாதுகாக்க உதவுகிறது.
- நிதிச் சுதந்திரம்: மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட முதியோர் மருத்துவக் காப்பீடு (அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு 12 மாதங்களுக்குப் பிறகு, கண்புரைக்கு 24 மாதங்களுக்குப் பிறகு), மருத்துவச் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் முதியவர்கள் தரமான மருத்துவப் பராமரிப்பைப் பெற உதவுகிறது.
- ஆரம்பக் கண்டறிதல்: இந்தியாவில் முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களைப் பாதுகாக்க முடியும்.
- ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள்: ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் செலவுகளை ஏற்க முதியோர் காப்பீட்டுத் திட்டங்கள் உதவுகின்றன.
- நாள்பட்ட நோய்கள்: நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் காப்பீடு வழங்குகின்றன.
- எதிர்பாராத அவசரநிலைகள்: முதியோர்களுக்கான, ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டம் எதிர்பாராத மருத்துவ அவசரநிலைச் செலவுகளை ஏற்க உதவுகிறது.
- மற்றவர்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்த்தல்: தகுதியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் முதியவர்கள், தங்களின் சில மருத்துவத் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அனைத்து மருத்துவத் தேவைகளும் சேர்க்கப்படாது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
- பணமில்லா சிகிச்சை வசதி: காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு பணமில்லா சிகிச்சை வசதியை வழங்குகின்றன. இதில் மருத்துவமனை பில்கள் காப்பீட்டு நிறுவனத்தால் நேரடியாகச் செலுத்தப்படுவதால், காப்பீடு செய்தவர் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இந்த வசதியானது, முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டிய அவசியமின்றி, எளிய முறையில் மன அழுத்தமின்றி மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.
மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மூத்த குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், 'மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை' வழங்குகிறது. இந்த முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 60 முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டமாகத் தனித்து நிற்கிறது. மேலும், இதன் பரந்த காப்பீட்டு வரம்பு மற்றும் குறைந்த கட்டணம் காரணமாக, இது முதியோர்களுக்கான சிறந்த மருத்துவக் காப்பீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த பாலிசி மூத்த குடிமக்களுக்கு மிகச் சிறந்த பலன்களை வழங்குகிறது. இதில் நவீன சிகிச்சைகள் சார்ந்த பல்வேறு வகையான பகல்நேரப் பராமரிப்புச் சிகிச்சைகளுக்கான காப்பீடு, முக்கிய மருத்துவச் சிகிச்சைகள், பாலிசியின் இரண்டாம் ஆண்டிலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காப்பீடு மற்றும் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய நிலையான பிரீமியம் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இந்த பாலிசி தனிநபர் அல்லது குடும்பக் காப்பீட்டு அடிப்படையில் கிடைக்கிறது. இந்தியாவில் தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற குறைந்த பிரீமியத்தில் மருத்துவக் காப்பீட்டைத் தேடும் மூத்த குடிமக்களுக்கு, இது மிகவும் பொருத்தமானது. இந்த பாலிசியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பாலிசியை வாங்கும் போது முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. இந்த பாலிசியை வாங்குவதன் மூலம், வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ் வரி விலக்கு பலனையும் நீங்கள் பெறலாம்.
சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம், ஒரு நபர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான நன்மைகளைப் பெற முடியும்:
- தனிநபர் அடிப்படையில் ரூ. 25 லட்சம் வரையிலும், குடும்பக் காப்பீடு அடிப்படையில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலும் அதிகப்படியான காப்பீட்டுத் தொகைத் திட்டம் கிடைக்கும்.
- நெட்வொர்க் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் வெளிநோயாளியாகப் பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான காப்பீட்டு வசதி உண்டு.
- பாலிசி எடுப்பவரின் வயது அல்லது அவர் தேர்வு செய்யும் காப்பீட்டுத் தொகையைப் பொருட்படுத்தாமல், பாலிசி எடுப்பதற்கு முன் எந்தவொரு மருத்துவப் பரிசோதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- பாலிசி எடுப்பதற்கு முன்பே இருக்கும் நோய்களுக்கு (PED), ஒரு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படும்.
- விரிவானநெட்வொர்க் மருத்துவமனைகளில், பணமில்லா(Cashless) மற்றும் கட்டணத் திருப்பொப்படைப்பு (ரீம்பர்ஸ்மென்ட்) ஆகிய இரு வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் மற்றும் ஒரே நாள் சிகிச்சை முறைகளுக்கான விரிவான காப்பீடு கிடைக்கும்.
- செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு, நடைமுறையில் உள்ள வருமான வரி விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ்,இந்த விலக்கைப் பெற தகுதி உண்டு.
- இந்த பாலிசியில் கூடுதல் நன்மையாக ஆயுள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும்வசதி வழங்கப்படுகிறது.
- குறிப்பிட்ட சில மருத்துவப் பரிசோதனை ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், பாலிசி பிரீமியம் தொகையில் 10% தள்ளுபடி பெற முடியும்.
- இந்த பாலிசியை இணையவழியில் வாங்குபவர்களுக்கு பிரீமியம் தொகையில் 5% தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
- பாலிசி பிரீமியங்களை காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டு, இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகள் என்ற கால வரம்புகளிலும் பிரீமியம் செலுத்த முடியும்.
- குடும்பங்கள் அல்லது சமூக அமைப்புகளுக்கு, மூத்த குடிமக்களுக்கான குழு மருத்துவக் காப்பீடுஎன்பது அனைவரின் கூட்டு நல்வாழ்வை உறுதி செய்வதற்கான, ஒரு சிக்கனமான வழியாகும்.
இத்தகைய அனைத்துச் சிறப்பான நன்மைகளையும் கொண்டிருப்பதால், இது இந்தியாவின் மிகச்சிறந்த மெடிகிளைம்பாலிசிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, மூத்த குடிமக்களாகிய உங்களின் மருத்துவக் கவனிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்களில் தனது காப்பீட்டு வரம்பை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம், இது 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஒரு மிகச்சிறந்த மெடிகிளைம் பாலிசியாக அமைகிறது.
ஒரே நாள் சிகிச்சைகள்: 24 மணி நேரத்திற்கும் குறைவான மருத்துவமனை அனுமதியே போதுமான அனைத்து விதமான ஒரே நாள் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ முறைகளுக்கான செலவுகள் இதில் அடங்கும்.
உள்நோயாளி மருத்துவமனை அனுமதிச் செலவுகள்: மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கான அனைத்துச் செலவுகளும் காப்பீட்டுத் தொகை வரம்பு வரை வழங்கப்படும்.
மருத்துவமனை அனுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு அதிகபட்சமாக 30 நாட்களுக்கு முன்பு வரையிலான மருத்துவமனை அனுமதிக்கு முந்தைய செலவுகள், இதில் அடங்கும். பாலிசி விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு ஏற்படும் பிந்தைய செலவுகளுக்கு, மருத்துவமனைச் செலவில் அதிகபட்சமாக 7% வரை வழங்கப்படும்.
நவீன சிகிச்சை முறைகள்: பாலிசி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளுக்கு உட்பட்டு, பலூன் சைனுபிளாஸ்டி, இம்யூனோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி உள்ளிட்ட பன்னிரண்டு நவீன சிகிச்சை முறைகளுக்கான செலவுகள் இதில் அடங்கும்.
வெளிநோயாளி செலவுகள்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளியாகப் பெறும், எந்தவொரு மருத்துவ ஆலோசனைச் செலவுகளும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்டு வழங்கப்படும். இதில் ஒரு முறை ஆலோசனை பெறுவதற்கு அதிகபட்ச வரம்பு ரூ. 200 ஆகும்.
ஆண்டு ஆரோக்கியப் பரிசோதனைகள்: காப்பீட்டுப் பலன்கள் எதுவும் கோரப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும், ஆரோக்கியப் பரிசோதனைச் செலவுகள் குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும்.
முன்பே உள்ள நோய்கள் (PED): பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு முன்பே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளுக்கு நீங்கள் காப்பீடு கோரலாம்.
குறிப்பிட்ட நோய்கள்/சிகிச்சைகளுக்கான காப்பீடு: சில குறிப்பிட்ட நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான காப்பீடு 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் (Waiting period) பிறகே வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான (Cataract surgery) காப்பீடு குறிப்பிட்ட வரம்புகள் வரை வழங்கப்படும்.
ஆரம்பக் காத்திருப்பு காலம்: விபத்துகள் தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளுக்கும் ஆரம்பக் காத்திருப்பு காலம் 30 நாட்கள் ஆகும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நிலைகளுக்கான செலவுகளை வழங்காது:
- அழகுக்கலை அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகள்.
- பாலினத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சைகள்.
- தற்கொலை முயற்சி அல்லது திட்டமிட்ட சுயமாககாயப்படுத்திக்கொள்வது.
- சாகச அல்லது அபாயகரமான விளையாட்டுகளில்பங்கேற்பதால் ஏற்படும் காயங்களுக்கான அவசியப்படும் சிகிச்சைகள் இதில் சேர்க்கப்படாது.
- போதைப்பொருள் அல்லது மதுப்பழக்க மறுவாழ்வு சிகிச்சைகள்
- பிறவி வெளிப்படை குறைபாடுகள்
இத்தகைய விலக்குகள் குறித்த விரிவான பட்டியலை அறிய, தயவுசெய்து இணையதளத்தில் உள்ள பாலிசி விதிமுறைகள் மற்றும் அதன் ஆவண விவரங்களை சரிபார்க்கவும்.
சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம் (UIN: SHAHLIP26041V082526)
மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு நம்பகமான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது, அவர்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை இரண்டும் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, தங்களின் பொற்காலத்தை மனநிறைவோடு அனுபவிக்க உதவுகிறது.
மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் சரியான காப்பீட்டைப் பெற, ஒரு நபர் செய்ய வேண்டியவை:
- ஆயுட்கால புதுப்பித்தல்வசதி மற்றும் கோ-பேமென்ட் நிபந்தனைகளைக் கொண்ட பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்க வேண்டும்.
- குறுகியகாத்திருப்பு காலத்திற்குப் பிறகு முன்பே உள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்கும் திட்டங்கள், மற்றும் ஒரே நாள் சிகிச்சைகள், இல்லத்தில் வைத்து பெறும் மருத்துவச் சிகிச்சை, ஆண்டு ஆரோக்கியப் பரிசோதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்களைத் தேட வேண்டும்.
- காப்பீட்டு நிறுவனத்திற்கு விரிவானபணமில்லா மருத்துவமனை நெட்வொர்க் மற்றும் வெளிப்படையான கிளைம் செட்டில்மென்ட் செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கும்போது பாதிக்கக்கூடிய அறை வாடகை வரம்புகள் மற்றும் சிகிச்சைக்கான உச்ச வரம்புகள் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது, குறைந்த பிரீமியம் மற்றும் விரிவான நன்மைகள் ஆகிய இரண்டிற்கும் இடையே சரியான சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இது அவர்களின் பொற்காலத்தில் ஏற்படும் அவசர மருத்துவச் சூழல்கள் மற்றும் வழக்கமான பராமரிப்புகளின் போது மன அமைதியையும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
முதுமை என்பது வாழ்க்கையில் பல விஷயங்களை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதற்கான ஒரு காலமாகும். அவற்றுள் மிக முக்கியமானது மருத்துவக் காப்பீடு ஆகும்.
அவசர மருத்துவச் சூழல்கள் மூத்த குடிமக்களுக்கு எதிர்பாராத நேரங்களில் ஏற்பட்டு, அவர்களைக் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளக்கூடும். எனவே அவர்கள் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கவும் செயல்படவும் விரும்புகிறது. மூத்த குடிமக்களையும், அவர்களின் நிலையான வருமானத்தையும் மதித்து, இந்த ‘சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை’ வழங்குகிறது.
இந்தத் திட்டம் 60 முதல் 75 வயது வரை உள்ளவர்கள், எந்தவொரு ஆரம்ப மருத்துவப் பரிசோதனை தொந்தரவும் இன்றி பாலிசியில் இணைய அனுமதிக்கிறது.
இந்தத் திட்டம் வெளிநோயாளி ஆலோசனை பலன்களை வழங்குகிறது. மேலும் முன்பே உள்ள நோய்களுக்கான காப்பீடானது, நிறுவனத்துடன் எடுக்கப்பட்ட முதல் பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து 12 மாத தொடர்ச்சியான காப்பீட்டிற்குப் பிறகு உடனடியாகக் கிடைக்கும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு ஏற்படும் மருத்துவச் செலவுகள், அனுமதிக்கு முந்தைய செலவுகளின் கீழ் வழங்கப்படும். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிந்தைய செலவுகளுக்கு, மருத்துவமனைச் செலவில் அதிகபட்சமாக 7% வரை வழங்கப்படும்.
இந்த பாலிசிக்கு 30% கோ-பே பொருந்தும். இது புதிய பாலிசிகள் மற்றும் புதுப்பித்தல் (Renewal) பாலிசிகள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அறை வாடகை வரம்புகள் வழங்கப்படும்.
தீவிர சிகிச்சை பிரிவு செலவுகளும் காப்பீட்டுத் தொகையில் (Sum Insured) ஒரு நாளைக்கு 2% வரை வழங்கப்படும்.
மருத்துவர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவப் பயிற்சியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோருக்கான தொழில்முறை கட்டணங்கள் காப்பீட்டுத் தொகையில் 25% என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு வழங்கப்படும்.
மயக்க மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், ஆபரேஷன் தியேட்டர் கட்டணங்கள், பேஸ்மேக்கர் (Pacemaker) செலவு போன்ற பிற மருத்துவச் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 50% வரை அனுமதிக்கப்படும்.
ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ரூ.1,500 வரையிலும், முழு பாலிசி காலத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 3,000 வரையிலும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் அனுமதிக்கப்படும்.
அனைத்து முக்கிய நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான சிகிச்சைச் செலவுகள், தேர்வு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் அமையும்.
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி முறைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை வழங்கப்படும்.
இந்தத் திட்டம் நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கான பயணம், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருதல் மற்றும் இலவச இரண்டாவது மருத்துவ ஆலோசனை ஆகிய வசதிகளையும் வழங்குகிறது.
மூத்த குடிமக்களின் நிதி எல்லைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகையானது தேர்வு செய்யப்படும் காப்பீட்டுத் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, வயதுக்கு ஏற்ப அதிகரிக்காது.
பாலிசியைப் புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் பிரீமியத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 வரை வருமான வரி விலக்கு பலன் உள்ளது.
ஒரு முக்கிய நற்செய்தியாக, திட்டமிடப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உள்நோயாளி சிகிச்சைகளுக்கு, இப்போது நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளிலும் கூட பணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
மூத்த குடிமக்கள் இப்போது பாலிசி அல்லது கிளைம் தொடர்பான எந்தவொரு ஆதரவிற்கும் எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 425 2255 அல்லது 044 4002 0888 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் அழகிய வாழ்நாட்களை ஆரோக்கியப் பிரச்சினைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள்!
அதன் விரிவான நன்மைகள், குறைந்த விலை மற்றும் ஆயுட்கால முழுவதும் புதுப்பித்தல் வசதி ஆகியவற்றுடன், இந்தத் திட்டம் இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
ஸ்டார் ஹெல்த்தில் இருந்து 'சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை' எடுத்து, வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏன் ஸ்டார் ஹெல்த் மருத்துவக் காப்பீட்டை எடுக்க வேண்டும்?
ஒரு காலத்தில் தேசத்தை கட்டியெழுப்பிய மூத்த குடிமக்களைக் குறிக்கோளாகக் கொண்டு, அவர்களின் தேவைகளுக்காகவே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள ‘சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் பாலிசி’ என்பது முதியோர் சமூகத்திற்கு ஆதரவளிக்கும், ஒரு முழுமையான திட்டமாகும்.
இந்த பாலிசியை வாங்குவதன் மூலம் மூத்த குடிமக்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான மதிப்புமிக்க நன்மைகளைப் பெற முடியும்:
- நெட்வொர்க் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்படாமல் வெளிநோயாளியாகப் பெறும், எந்தவொரு மருத்துவ ஆலோசனைகளுக்கான செலவுகளும், இதில் அடங்கும்.
- பாலிசி எடுப்பதற்கு முன் எந்தவொரு மருத்துவப் பரிசோதனையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- பாலிசி எடுப்பதற்கு முன்பே இருக்கும் நோய்களுக்கு (PED), ஒரு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படும்.
- ஒரே நாள் சிகிச்சை முறைகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகளுக்கு, இதில் விரிவானகாப்பீடு கிடைக்கிறது.
- மருத்துவச் செலவுகளைப் பற்றிய கவலைகள் ஏதுமின்றி, நெட்வொர்க் மருத்துவமனைகளில் இலவச ஆரோக்கியப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதியைப் பெறலாம்.
மேலும், இந்த பாலிசியானது 24 மணி நேரத்திற்கும் குறைவான ஒரே நாள் சிகிச்சையின் போது பாலிசிதாரருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியது.
மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கிளைம்கள் மற்றும் குறைகேட்பு வழிகாட்டி
காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராகப் புகார்களைக் கொண்ட பாலிசிதாரர்கள், முதலில் நிறுவனத்தின் குறைகேட்புப் பிரிவை கீழே உள்ள இணையதள முகவரியின் வழியாக அணுக வேண்டும்:
இணையதள முகவரி: https://www.starhealth.in/grievance-redressal/
மின்னஞ்சல் முகவரிகள்: gro@starhealth.in (அல்லது) grievances@starhealth.in
ஒருவேளை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நியாயமான காலத்திற்குள் எந்தவொரு பதிலும் வரவில்லை என்றாலோ, அல்லது நிறுவனத்தின் பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலோ, நீங்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ அமைப்புகளைத் தொடர்பு கொள்ளலாம்:
பீமா பரோசா - ஐஜிஎம்எஸ்: புகார்களைப் பதிவு செய்வதற்கான பீமா பரோசா ஐஆர்டிஏஐ (IRDAI) அமைப்பின் ஒருங்கிணைந்த குறை மேலாண்மைத் திட்டம்.
ஐஆர்டிஏஐ மின்னஞ்சல்: complaints@irdai.gov.in
கட்டணமில்லா எண்கள்: 155255 அல்லது 1800 4254 732.
சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகள்
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கிய நன்மை என்னவென்றால், பாலிசிதாரர் ரொக்கப் பணம் (Cash) அல்லாத பிற வழிகளில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு, 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் பிரிவு 80-D-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறத் தகுதி உடையவராவார்.
மூத்த குடிமக்களுக்கான மெடிக்ளைம் பாலிசியில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்
இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றை அமையத் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணிகளை ஆராய வேண்டும். கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகள் இதோ:
- கோ-பே: சிகிச்சைச் செலவினங்களில் உங்களின் பங்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகையான கோ-பே நிபந்தனைகளைக் கவனித்துத் தேர்வு செய்யவும்.
- காப்பீட்டுத் தொகை: பாலிசியின் மொத்த காப்பீட்டுத் தொகையைச் சரிபார்க்கவும்; மூத்த குடிமக்களுக்கு எளிதில் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிக காப்பீட்டுத் தொகை கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாகும். காப்பீட்டுத் தொகை என்பது ஒரு ஆண்டில், நீங்கள் அதிகபட்சமாக கிளைம் செய்யக்கூடிய தொகையாகும்.
- தீவிர நோய்களுக்கான காப்பீடு: மூத்த குடிமக்களுக்குக் கடுமையான அல்லது தீவிரமான நோய்கள் எளிதில் தாக்கக்கூடும் என்பதால், தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டம் உங்களின் நிதிநிலையைப் பாதுகாக்க உதவும்.
- வயது சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள்: மூத்த குடிமக்களுக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி, பொதுவாக வயது முதிர்வால் ஏற்படும் பொதுவான நோய்களை உள்ளடக்கியதா என்பதைச் சரிபார்க்கவும்.
- குடும்பக் காப்பீடு: ஒரு பேமிலி புளோட்டர் பாலிசியானது மூத்த குடிமக்களுக்கான மருத்துவமனை அனுமதிச் செலவுகள், மருந்துகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகளுக்கான விரிவான காப்பீட்டை வழங்குகிறது.
- வரிச் சலுகைகள்: சில குறிப்பிட்ட காப்பீட்டுத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு மற்றும் சலுகைகளை வழங்குகின்றன.
- புதுப்பித்தல் வயது: பொதுவாக வயது முதிர்ந்தவர்களுக்கு அதிக மருத்துவக் கவனிப்பு தேவைப்படுவதால், வயது அதிகரிக்கும் போது அதற்கேற்ப பாலிசி பிரீமியம் தொகையும் உயரக்கூடும்.
- நெட்வொர்க் மருத்துவமனைகள்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின்கீழ் எந்தெந்த மருத்துவமனைகள் நெட்வொர்க் பட்டியலில் (உள்நோயாளி பணமில்லா சிகிச்சை வசதியுடன்) உள்ளன என்பதைச் சரிபார்க்கவும்.
- ஆண்டு ஆரோக்கியப் பரிசோதனை வசதிகள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான மிகச்சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஆண்டுதோறும் இலவச ஆரோக்கியப் பரிசோதனைகளை வழங்குகின்றன. இத்தகைய வருமுன் காக்கும் பரிசோதனைகள் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவுகின்றன.
- அறை வாடகை வரம்புகள்: பல மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் அறை வாடகைக்கு உச்ச வரம்பு இருக்கும். அதாவது உங்கள் மருத்துவமனை அறையின் வாடகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டினால், கூடுதல் தொகையை, நீங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, அதிக அறை வாடகை வரம்பு கொண்ட அல்லது அறை வாடகை வரம்பே இல்லாத திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
70 வயதிற்கு மேற்பட்டோருக்கான மெடிக்ளைம் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய பிற முக்கிய அம்சங்கள். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய கூடுதல் காரணிகள் இதோ:
- முன்பே உள்ள நோய்கள்: மூத்த குடிமக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு, முன்பே உள்ள நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பாலிசியை வாங்கும் போது முன்பே உள்ள நோய்கள் சார்ந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்க்கவும். அதாவது, குறிப்பிட்ட சில முன்பே உள்ள நோய்களுக்குக் காப்பீடு கிடைக்கிறதா, மற்றும் அவை ஒவ்வொன்றிற்கும் காத்திருப்பு காலம் எவ்வளவு என்பதை ஆராய வேண்டும்.
- காத்திருப்பு காலம்: மூத்த குடிமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக, குறைந்தபட்ச காத்திருப்பு காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கோ-பேமேண்ட்: மூத்த குடிமக்களுக்கான திட்டங்களில் பெரும்பாலும் கூட்டுப்பங்கு நிபந்தனை இருக்கும். இதன் கீழ் சிகிச்சைச் செலவில், ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை பாலிசிதாரர் தன் சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டும்.
- காப்பீட்டுத் தொகை: முன்னரே குறிப்பிட்டபடி, அதிகளவிலான காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
- ஒரே நாள் சிகிச்சை வசதிகள்: மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு ஒரே நாள் சிகிச்சை முறைகளை உள்ளடக்குகிறதா என்று பார்க்கவும். பாலிசியில் வழங்கப்பட்டுள்ள ஒரே நாள் சிகிச்சைக்கான பட்டியலைச் சரிபார்க்கவும்.
- மருத்துவமனை அனுமதிச் செலவுகள்: உங்கள் திட்டம் மருத்துவமனை அனுமதிச் செலவுகளை உள்ளடக்குகிறதா என்பதைச் சரிபார்க்கவும், இது மருத்துவமனைச் செலவின் ஒரு பகுதியை ஏற்பதன் மூலம் முதியவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.
- காப்பீட்டு வரம்பு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டு வரம்பில் மருத்துவமனை அனுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஒரே நாள் சிகிச்சை செலவுகள் போன்றவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- ஆரோக்கியப் பரிசோதனைகள்: உங்கள் திட்டம் வழக்கமான ஆரோக்கியப் பரிசோதனைகளுக்கான செலவுகளை உள்ளடக்குகிறதா என்று பார்க்கவும்.
- நோ கிளைம் போனஸ்: நோ கிளைம் போனஸ் என்பது முந்தைய பாலிசி ஆண்டில் எவ்வித கிளைமும் கோரப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும், பாலிசியைப் புதுப்பிக்கும் போது பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியைக் குறிக்கும். மூத்த குடிமக்களுக்கான சில ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள், முந்தைய பாலிசி ஆண்டில் கிளைம்கள் இல்லாததால், அதே பிரீமியம் தொகையில் காப்பீட்டுத் தொகையை (Sum Insured) உயர்த்தி வழங்குகின்றன.
- ஆயுஷ் காப்பீடு: மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி ஆகிய சிகிச்சை முறைகளுக்குக் காப்பீடு உள்ளதா என்று பார்க்கவும்.
- பணமில்லா மருத்துவமனை அனுமதி: பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இந்த வசதியின் மூலம் காப்பீட்டு நிறுவனம் மூத்த குடிமக்களின் பாலிசியில் குறிப்பிட்டுள்ள நெட்வொர்க் மருத்துவமனையிலேயே நேரடியாகப் பில்களைச் சரிசெய்யும்.
- தீவிர நோய்களுக்கான பலன்கள்: மூத்த குடிமக்கள் திட்டத்தில் தீவிர நோய்களுக்கான பிரத்யேகப் பலன்கள் உள்ளனவா என்று தேடவும்.
- இல்லத்தில் வைத்து பெறும் மருத்துவச் சிகிச்சை: சில சந்தர்ப்பங்களில், மூத்த குடிமக்களால் மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட முடியாத சூழல் அல்லது படுக்கை பற்றாக்குறை இருக்கலாம். எனவே, நீங்கள் இல்ல மருத்துவச் சிகிச்சை காப்பீட்டு வரம்பு கொண்ட மூத்த குடிமக்கள் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பிரீமியம்: உங்களின் பிற நிதி சார்ந்த கடமைகளைப் பாதிக்காதவாறு, பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய, குறைந்த பிரீமியம் கொண்ட திட்டத்தைப் பார்க்கவும்.
- புதுப்பித்தல்: அதிகபட்ச வயது வரம்பு இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பாலிசியைப் புதுப்பிக்க அனுமதிக்கும் ஆயுட்கால புதுப்பித்தல் வசதி கொண்ட திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- வரிச் சலுகைகள்: பாலிசியில் எந்தெந்த அம்சங்கள் விலக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும், இதன் மூலம் தேவையற்ற பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம்.
- பணமில்லா சிகிச்சை: நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே மூத்த குடிமக்களுக்கான மெடிகிளைமைச் சரிசெய்ய, இது உங்களை அனுமதிக்கிறது.
- கிளைம் செயல்முறை: மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டுத் திட்டம் எளிதான மற்றும் தடையற்ற கிளைம் செயல்முறையைக் கொண்டிருக்க வேண்டும்.
- விலக்கப்பட்டவை: உங்கள் குடும்பத்தின் மூத்த குடிமகனுக்குத் தேவையான சிகிச்சைகள் பாலிசியின் விலக்கப்பட்டவை பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் அந்த பாலிசியைத் தவிர்ப்பது நல்லது.
- மருத்துவக் காப்பீட்டுத் தயாரிப்புகள்: அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்க 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் அவசியமானதாகும்.
- நெட்வொர்க் மருத்துவமனைகள்: எதிர்கால மருத்துவத் தேவைகள் மற்றும் விரைவான சிகிச்சை வசதிகளைக் கருத்தில் கொண்டு, அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகளைக் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூடுதல் ரைடர்கள்: காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் பாலிசியின் காப்பீட்டு வரம்பை மேம்படுத்தும் கூடுதல் ரைடர்கள் அல்லது ஆட்-ஆன்களை வழங்குகின்றன.
- புதுப்பித்தல் மற்றும் வயது வரம்புகள்: வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி கொண்ட, மூத்த குடிமக்கள் மெடிகிளைம் பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். வயதுக் கட்டுப்பாடுகள் இன்றி பாலிசியைப் புதுப்பிக்க, திட்டம் வழிவகை செய்கிறதா என்று பார்ப்பது மன அமைதியைத் தரும்.
70 வயதிற்கு மேற்பட்டோருக்கான மிகச்சிறந்த மெடிகிளைம் பாலிசியைத் தேர்ந்தெடுக்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது மிக அவசியமாகும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் பாலிசிக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள் கீழே உள்ள அட்டவணையில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன:
| அம்சங்கள் | ஹெல்த்இன்சூரன்ஸ் | மெடிகிளைம்பாலிசி |
| மருத்துவச் செலவுகள் (மருத்துவமனை அனுமதி, வெளிநோயாளி சிகிச்சைகள், தடுப்புமுறை பராமரிப்பு) | முழுமையாகக் காப்பீடு செய்யப்படும். | மருத்துவமனை அனுமதி மற்றும் சில குறிப்பிட்ட நோய்களை, ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டும் காப்பீடு செய்யும். |
| மருத்துவமனை அனுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் | பாலிசி விதிமுறைகளின்படி காப்பீடு செய்யப்படலாம். | பாலிசியைப் பொறுத்து காப்பீடு செய்யப்படலாம் அல்லது செய்யப்படாமலும் போகலாம். |
| ஆம்புலன்ஸ் கட்டணங்கள் | முழுமையாகக் காப்பீடு செய்யப்படும். | பாலிசியைப் பொறுத்து மாறுபடும். |
| ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் | முழுமையாகக் காப்பீடு செய்யப்படும். | பாலிசியைப் பொறுத்து மாறுபடும். |
| ஒரே நாள் சிகிச்சைகள் | பெரும்பாலும் முழுமையாகக் காப்பீடு செய்யப்படும். | காப்பீடு செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. |
| ஆட்-ஆன்கள் (உலகளாவிய காப்பீடு, தினசரி அலவன்ஸ்) | வழங்கப்படலாம். | வழங்கப்பட வாய்ப்பில்லை |
மூத்த குடிமக்களான பெற்றோருக்காகச் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு வருமான வரிச் சலுகைகளைப் பெற முடியும்?
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை இந்த வரிச் சலுகைத் தொகை கிடைக்கிறது. வரி செலுத்துவோர் தங்களின் சுய விவரங்கள், கணவன்/மனைவி, தங்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மருத்துவப் பலன்களை ஒருங்கிணைத்து, வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக மொத்தம் ரூ.1 லட்சம் வரை ஒட்டுமொத்த வரி விலக்கைக் கோர தகுதியுடையவர்கள் ஆவர்.
பொதுவாகப் பொதுமக்கள் அரசின் மூத்த குடிமக்களுக்கான மெடிகிளைம் திட்டங்களைத் தேடும் அதே வேளையில், மருத்துவச் செலவுக்கான வரி விலக்கு அளிக்கும் குறைந்த பிரீமியம் தனியார் திட்டங்களைப் பற்றியும் அறிய விரும்புகின்றனர். இதற்கேற்ப, 12 மாதங்களுக்குப் பிறகு முன்பே உள்ள நோய்களுக்கான காப்பீடு (PED) மற்றும் 24 மாதங்களுக்குப் பிறகு கண்புரை அறுவை சிகிச்சை போன்ற மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட பல தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் சந்தையில் கிடைக்கின்றன. மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு என்பது 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, ஒரு முதியோர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும். குறிப்பாக 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மருத்துவத் தேவைகளையும் நிதியுதவிகளையும் பூர்த்தி செய்ய, இத்தகைய காப்பீடுகள் மிகச் சிறந்த முதலீடாக அமைகின்றன.
எனவே, மூத்த குடிமக்களுக்குச் சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குத் தரமான சுகாதாரச் சேவைகளை வழங்குவதோடு ஓய்வுகாலத்தின் போது உறுதியான நிதிப் பாதுகாப்பையும் மன அமைதியையும் உறுதி செய்கிறது.
வாசகர்களுக்கான தகவல்: இங்கே விவாதிக்கப்பட்டுள்ள பிரிவு 80D வரிச் சலுகைகள், நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பழைய வரி விதிப்பு முறையின் கீழ் மட்டுமே பொருந்தும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் தொகையானது ரூ. 6,710 முதல் ரூ. 1,10,134 வரை (வரிகள் நீங்கலாக) பாலிசி காலம் மற்றும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகையானது ரூ.1 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
இதில் ஒரு சிறந்த தேர்வாக ரூ. 15 லட்சம் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக்கும் போது, 1 ஆண்டு பாலிசி காலத்திற்கு தோராயமாக ரூ. 32,214, 2 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ. 61,207 மற்றும் 3 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ. 89,394 பிரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த பாலிசியின் கீழ் காலவரம்புக்கு உட்பட்ட 3 விலக்குகள் அல்லது காத்திருப்பு காலங்கள் உள்ளன, அவை பின்வருமாறு:
- ஆரம்பக் கால நோய்கள்: 30 நாட்கள் (விபத்துகளுக்கான காப்பீடு முதல் நாளிலிருந்தே தொடங்கும்).
- குறிப்பிட்ட சிகிச்சைகள்: 24 மாதங்கள். (உதாரணமாக: கண்புரை, முதுகெலும்பு வட்டு நழுவுதல் - Prolapse of Inter vertebral Disc, காது-மூக்கு-தொண்டை சிகிச்சைகள், சிறுநீரகம் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கான அனைத்து வகையான சிகிச்சைகள், குடலிறக்கம் - போன்றவை).
- ஏற்கனவே இருக்கும் நோய்கள்: 12 மாதங்கள்.
ஆம், காப்பீட்டுத் திட்டத்தை வாங்குபவர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பித்து, அவை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் தனிநபருக்கு 10% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும்.
தேவைப்படும் மருத்துவ அறிக்கைகள்:
- ஸ்ட்ரெஸ் தாலியம் அறிக்கை
- இரத்த அழுத்த அறிக்கை
- சர்க்கரை அளவு அறிக்கை - இரத்தம் மற்றும் சிறுநீர்
- பிளட் யூரியா மற்றும் கிரியேட்டினின்
இந்த மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் காப்பீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன்னதாக 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
நாங்கள் டிஜிட்டல் (தொடர்பற்ற) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறோம்:
இணையவழியில் காப்பீட்டை முதன்முறையாக வாங்குபவர்களுக்கு மட்டும் 5% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் அடிப்படைப் கூறுகள் பின்வருமாறு:
- காப்பீட்டுத் தொகை: மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் அதிகபட்சத் தொகை.
- காப்பீட்டு விவரங்கள்: எந்தெந்த சிகிச்சைகள், மருத்துவமனை அனுமதி மற்றும் சேவைகள் இதில் அடங்கும்.
- விலக்குகள்: பாலிசியின் கீழ் எவை எவை காப்பீடு செய்யப்படாது.
- பிரீமியம்: பாலிசியைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் செலுத்தும் தொகை.
- காத்திருப்பு காலம்: சில பலன்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் காத்திருக்க வேண்டிய காலம்.
- பணமில்லா மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் தேர்வுகள்: கிளைம்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ், மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை வரி விலக்கு பெறலாம். மருத்துவச் செலவுகளுக்கான வருமான வரி விலக்குகளில், மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காகச் செய்யப்படும் மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்கான கழிவுகள் அடங்கும்.
மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, பொதுவாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்குக் கிடைக்கிறது. இது எந்தவொரு சிக்கலான மருத்துவப் பரிசோதனைகளும் இன்றி மூத்த குடிமக்களுக்கு எளிதாகக் காப்பீடு வழங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவமனையில் அனுமதித்தல், சிகிச்சைகள் மற்றும் மருந்துச் செலவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அவசியமான நிதி ஆதரவை வழங்குவதால் அவை தேவைப்படுகின்றன. இது மருத்துவ அவசரநிலைகளின் போது முதியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிதிச் சுமையைக் குறைத்து, மனநிம்மதியை மேம்படுத்துகிறது.
ஆம், இந்தியாவில் 70 வயதுடைய ஒருவருக்கு மருத்துவக் காப்பீடு தாராளமாகக் கிடைக்கும். பல காப்பீட்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகத் திட்டங்களை வழங்குகின்றன; மேலும், மத்திய அரசு தனது (AB PM-JAY - ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) திட்டத்தை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
ஆம், பொதுவாக முதியோர்களுக்கான காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் தீவிர நோய்கள் காப்பீடு செய்யப்படுகின்றன. இது மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் செலவுகளிலிருந்து பெரும்பாலும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. மருத்துவ அல்லது சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவுவதற்காக, இத்தகைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மொத்தத் தொகையாகப் பணத்தை வழங்கக்கூடும். சரியான மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, காப்பீடு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட தீவிர நோய்கள் மற்றும் வழங்கப்படும் தொகையின் அளவை, நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஆம், பொதுவாக முதியோர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் தீவிர நோய்கள் சேர்க்கப்படுகின்றன. இது மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளிலிருந்து சிறந்த நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இத்தகைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவ அல்லது சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக (Lump-sum) வழங்கக்கூடும். சரியான மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் எந்தெந்தக் குறிப்பிட்ட நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை நீங்கள் உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படுவனவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- அறை கட்டணம், நர்சிங் கட்டணம், மருத்துவர் கட்டணம் போன்ற செலவுகள்.
- கீமோதெரபி, டயாலிசிஸ் போன்ற 24 மணி நேரத்திற்கும் குறைவான மருத்துவமனை அனுமதி தேவைப்படும் சில பகல்நேரச் சிகிச்சைகள் பல திட்டங்களில் அடங்கும்.
- மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிந்தைய மருத்துவச் செலவுகள்.
- உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் போது, உறுப்பை வழங்குபவருக்கு ஆகும் மருத்துவச் செலவுகள் காப்பீடு செய்யப்படுகின்றன.
- குறிப்பிட்ட வரம்பு வரை ஆம்புலன்ஸ் கட்டணங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.
- ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, ஏற்கனவே இருக்கும் சில நோய்களும் காப்பீடு செய்யப்படுகின்றன.
- ஆயுஷ் (AYUSH) சிகிச்சைச் செலவுகள் முதியோர் பாலிசிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
- முதியோர்களுக்கான இல்லத்திலேயே பெறும் மருத்துவச் சிகிச்சைக் காப்பீடும், இதில் அடங்கும்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களின் தனித்துவமான ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது. நிதி ரீதியாகப் பார்க்கும்போது, நாள்பட்ட நோய்களுக்கான (Chronic diseases) வழக்கமான மற்றும் தரமான சிகிச்சைகளைப் பெறும்போது, தொடர்ந்து அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் முதியவர்களின் சேமிப்பைக் கணிசமாகக் குறைத்துவிடும்; மேலும் அவர்களின் ஓய்வூதியக் காலச் சேமிப்பு இலக்குகளை அடைவதையும் கடினமாக்கும்.
மருத்துவச் சேவைகளை எளிதாகப் பெறுவதற்கும், அரசு சுகாதாரத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை அடைவதற்கும், சிகிச்சைகளுக்கான பணமில்லா வசதி மற்றும் நிதிப் பாதுகாப்பைப் பெறுவதற்கும், அத்துடன் மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் போன்ற டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளைச் சரியான முறையில் சேமித்து வைப்பதற்கும் முதியோர்கள் மருத்துவ அடையாள அட்டையை உடன் வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீடு வாங்குவதன் நோக்கம், எதிர்பாராத மருத்துவ அவசரநிலைச் செலவுகளை எதிர்கொள்வதற்கான காப்பீட்டை வழங்குவதாகும். இது முதியவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க உதவுகிறது. அதாவது, முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீடு அவர்களின் சில மருத்துவச் சிகிச்சைத் தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருப்பதை மிகக் குறைவானதாக மாற்ற உதவுகிறது.
ஆம், பல காப்பீட்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகக் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன; இது குடும்பங்கள் அல்லது முதியோர் குடியிருப்புகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
முதியோர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது முதியவர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு காப்பீட்டு வரம்பு, குறைந்தபட்ச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அதிக காப்பீட்டுத் தொகை வழங்கும் தேர்வுகளைக் கொண்டுள்ளது.
ஆம், இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் தேர்வுகள் கிடைக்கின்றன. பல திட்டங்கள் முதியவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, வயது முதிர்வு சார்ந்த நோய்கள், ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நோய்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அதிக காப்பீட்டுத் தொகை வழங்கும் தேர்வுகள் ஆகியவற்றுக்கான காப்பீட்டை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களின் பிரீமியம் கட்டணங்கள் சற்றே அதிகமாக இருந்தாலும், அவை முதியவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பாதுகாப்பை வழங்குகின்றன.
வயது முதிர்வு சார்ந்த நோய்கள், ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கு விரிவான காப்பீட்டு வரம்பை வழங்குவதுடன், அதிக காப்பீட்டுத் தொகை தேர்வுகள், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பெரிய அளவிலான மருத்துவமனை நெட்வொர்க்குகளில் பணமில்லா சிகிச்சை வசதி ஆகியவற்றை வழங்கும் திட்டங்களே பொதுவாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களாகக் கருதப்படுகின்றன. முதியோர்களுக்கான நல்ல திட்டங்கள் பாலிசி வாங்கும் போது குறைந்த அளவிலான மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதிலும், எளிதான கிளைம் நடைமுறைகளைக் கொண்டிருப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. தங்களின் மருத்துவத் தேவைகளுக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரு திட்டத்தைக் கண்டறிய, நம்பகமான ஒப்பீட்டுத் தளங்களில் பல முதியோர் காப்பீட்டுத் திட்டங்களை, ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்திட்டமானது 60 முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் சேர அனுமதிக்கிறது, மேலும் அவர்கள் எந்தவித மருத்துவப் பரிசோதனையும் இன்றி, இதில் எளிதாக இணைந்து கொள்ளலாம்.
இல்லை, மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு இலவசமாகக் கிடைக்காது.
வயது முதிர்வு சார்ந்த உடல்நல அபாயங்கள் காரணமாக, மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டிற்குப் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்; மேலும் இதற்கான கட்டணம் பொதுவாக மற்றவர்களை விட அதிகமாகவே இருக்கும். இருப்பினும், அதிக காப்பீட்டு வரம்பு, பகல்நேரச் சிகிச்சைகள் (Day care treatments) மற்றும் பணமில்லா மருத்துவமனை அனுமதி போன்ற சிறப்பான பலன்களைக் கொண்ட பிரத்யேக மூத்த குடிமக்கள் காப்பீட்டுத் திட்டங்கள் கிடைக்கின்றன.
60 முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் இந்த மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களது பெற்றோர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால், அவர்களுக்காகச் செலுத்தப்படும் பிரீமியத்திற்கு ரூ. 25,000-க்கு பதிலாக ரூ. 50,000 வரை, நீங்கள் வருமான வரி விலக்கு கோரலாம்.
மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தற்போது 60 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே புதிய பாலிசிதாரர்களாக இணைய முடியும். எனினும், 75 வயதைக் கடந்த பிறகும், அவர்கள் உயிரோடு இருக்கும் வரை வாழ்நாள் முழுவதும், இந்த பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். உங்களது தேவைகளுக்கு ஏற்ப இன்னும் பல புதிய காப்பீட்டுத் திட்டங்களை, நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.




