New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
DND Registration

தனிநபர் மருத்துவக் காப்பீடு

India +91✓

எங்களது தனிநபர் சுகாதாரத் திட்டங்கள்

உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் எங்களது தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

Star Special Care

ஸ்டார் ஸ்பெஷல் கேர்

சிறப்பு கவரேஜ்: ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பாலிசி
மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை
நவீன சிகிச்சை: நவீன சிகிச்சைக்கான செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்

Star Extra Protect - Add on Cover

ஸ்டார் எக்ஸ்ட்ரா புரொடெக்ட் - ஆட் ஆன் கவர்

ஆட் ஆன் கவர்: ஏதுவான பிரீமியத்துடன் உங்கள் அடிப்படை பாலிசியின் தொகையினை மேம்படுத்தலாம்.
நவீன சிகிச்சை: அடிப்படை பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய க்ளைம் இருந்தால், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை செலவுகள் கவராகும்.
க்ளைம் பாதுகாப்பு: உங்கள் அடிப்படை பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய க்ளைம் இருந்தால், மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ் பெறலாம்.

Special Care Gold, Star Health And Allied Insurance Company Limited

ஸ்பெஷல் கேர் கோல்ட், ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

தனித்துவமான பாலிசி: மாற்றுத்திறனாளி நபர்கள் அல்லது/மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது
ஆயுஷ் காப்பீடு: ஆயுஷ் சிகிச்சைக்கான மருத்துவமனை செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவராகும்
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை

Just Launched
Super Star

சூப்பர் ஸ்டார்

எல்லைகள் இல்லை, பலன்கள் மட்டுமே: வரம்பற்ற மீளமைப்பு, வரம்பற்ற புதுப்பித்தல் போனஸ், மற்றும் வரம்பற்ற காப்பீட்டுத் தொகை. உங்களுக்கான பாதுகாப்பு எப்போதும் குறைவதில்லை.
உங்கள் வயதை முடக்குங்கள்: நீங்கள் ஒரு காப்பீட்டுக் கோரிக்கையை சமர்ப்பிக்கும் வரை, உங்கள் வயதை அப்படியே லாக் செய்து, பிரீமியம் தொகையைக் குறைவாகவே வைத்திருக்கலாம்.
நம்பிக்கையான மருத்துவமனைகள், எந்த அறையும்: நாடு முழுவதிலும் உள்ள உயர்தர மருத்துவமனைகளில் இருந்து உங்களுக்குப் பிடித்தமானதைத் தேர்ந்தெடுக்கலாம்; கூடுதல் கட்டணமின்றி எந்தவொரு அறையையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

Star Women Care Insurance Policy

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

தனித்துவமான பாலிசி: பெண்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் ஒரு முறை 100% காப்பீடு தொகை ரீஸ்டோர் செய்யப்படும்

மகப்பேறு கட்டணங்கள்: நார்மல் & சிசேரியன் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டணம் கவர் செய்யப்படும் (பிறப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு பிறகான கட்டணம் உட்பட)

Comprehensive Insurance Policy

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% திரும்பப் பெறலாம்

பை-பேக் PED: முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க உதவும் ஆப்ஷனல் கவரேஜ் இது

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும்

Senior Citizens Red Carpet Health Insurance Policy

மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் மருத்துவ காப்பீடு பாலிசி

முதியோர்களுக்கான கவரேஜ்: 60 - 75 வயதுக்குட்பட்டவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

வீட்டு பராமரிப்பு சிகிச்சை: குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு மட்டுமே, காப்பீடு செய்யப்பட்ட நபர் வீட்டிலேயே சிகிச்சை பெறும் சிகிச்சைக்கு, ஒரு பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை காப்பீட்டுத் தொகையில் 10% வரை செலுத்தப்படும்.

வரம்பற்ற தொலைபேசி ஆலோசனை: ஸ்டார் ஹெல்த் மொபைல் பயன்பாடு அல்லது டிஜிட்டல் தளங்களில் காப்பீடு செய்யப்பட்டவர் வரம்பற்ற தொலைபேசி ஆலோசனைகளைப் பெறலாம்.

Trending
Family Health Optima Insurance Plan

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பிளான்

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: காப்பீட்டுத் தொகையில் 100% பாலிசி ஆண்டில் மூன்று முறை ரீஸ்டோர் செய்யப்படும்

சாலை போக்குவரத்து விபத்துக்கான கூடுதல் காப்பீட்டுத் தொகை: கவரேஜ் வரம்பு தீர்ந்துவிட்டால், சாலை போக்குவரத்து விபத்துக்கான காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும்

ரீசார்ஜ் நன்மை: கவரேஜ் வரம்பு தீர்ந்தால் பாலிசி ஆண்டில் ஒருமுறை கூடுதல் இழப்பீடு பெறுங்கள்

Star Health Premier Insurance Policy

ஸ்டார் ஹெல்த் ப்ரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி

சிறப்பு பாலிசி: அதிகபட்ச வயது வரம்பு ஏதுமின்றி 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.

மருத்துவ பரிசோதனைக்கான தள்ளுபடி: பாலிசியின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால் ப்ரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும்.

Super Surplus Insurance Policy

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி

குறை நிரப்பு திட்டம்: மலிவு பிரீமியத்தில் மேம்படுத்தப்பட்டஉடல்நல பாதுகாப்பைப் பெறுங்கள்
ரீசார்ஜ் பலன்:  காப்பீட்டுத் தொகை தீர்ந்தால், கூடுதல் செலவு எதுவுமில்லாமல் கூடுதல் இழப்பீட்டைப் பெறுங்கள்
நீண்ட கால தள்ளுபடி: 2 வருட காலத்திற்கு பாலிசி தேர்ந்தெடுக்கப்பட்டால், 5% பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும்

Medi Classic

மெடி க்ளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்)

ரீஸ்டோரேஷன் நன்மை: ஒரு பாலிசி காலத்தில் ஒரேயொரு முறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 200% ரீஸ்டோர் செய்யப்படும்

சாலை போக்குவரத்து விபத்து: அடிப்படை கவரேஜ் தொகை முடிவுற்ற நிலையில், சாலை போக்குவரத்து விபத்து ஏற்படும் பட்சத்தில், கவரேஜ் மீண்டும் கிடைக்கும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

Star Health Gain Insurance Policy

ஸ்டார் ஹெல்த் கெய்ன் இன்ஷூரன்ஸ் பாலிசி

விரிவான கவரேஜ்: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் வெளிநோயாளருக்கான மருத்துவ செலவுகள் ஆகிய இரண்டிற்கும் விரிவான கவரேஜ் வழங்குகிறது

நவீன சிகிச்சை: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது டே கேர் நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகிறது

வெளிநோயாளருக்கான நன்மை: எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் கவராகும்

Star Micro Rural and Farmers Care

ஸ்டார் மைக்ரோ ரூரல் அண்ட் ஃபார்மர்ஸ் கேர்

கிராமப்புற கவரேஜ்: பிரத்யேகமாக கிராமப்புற மக்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது

காப்பீட்டுக்கு முந்தைய சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

குறைவான காத்திருப்பு காலம்: PED & குறிப்பிட்ட நோய்கள் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பாதுகாக்கப்படும்

Star Hospital Cash Insurance Policy

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

மொத்த-தொகை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கையில் கிடைக்கும் நன்மை: மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தற்செயலான செலவுகளுக்கு தினசரி பணப் பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்: மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டால், ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% வரை பெறுங்கள்

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்: விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150% வரை ஹாஸ்பிடல் கேஷ் தொகையைப் பெறுங்கள்

Star Out Patient Care Insurance Policy

ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

அவுட் பேஷண்ட் கவரேஜ்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான கன்சல்டேஷன் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

நோயறிதல் & மருந்தகம்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

பல் மற்றும் கண் மருத்துவம்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

Young Star Insurance Policy

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் 100% கவரேஜ் தொகை ஒருமுறை ரீஸ்டோர் செய்யப்படும்.

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி, சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் புதிதாக பிறந்த குழந்தை ஆகியோரை பாலிசியின் இடைக்காலத்தில் சேர்க்கலாம்.

லாயல்டி தள்ளுபடி: 36 வயதுக்கு முன் பாலிசியைத் தேர்ந்தெடுத்து, 40 வயதுக்கு மேல் தொடர்ந்து ஒவ்வொரு முறை பாலிசியை புதுப்பிப்பிக்கும் போதும் பயனர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும்.

Arogya Sanjeevani Policy, Star Health and Allied Insurance Co Ltd

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.

கிராமப்புறங்களுக்கான தள்ளுபடி: கிராமப்புற மக்களுக்கு பிரீமியத்தில் தள்ளுபடி பொருந்தும்
நவீன சிகிச்சைகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை நவீன சிகிச்சைகளுக்கான காப்பீட்டைப் பெறுங்கள்
ஆயுஷ் கவர்: ஆயுஷ் சிகிச்சைகளில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை உள்ளடக்கியது

Star Health Assure Insurance Policy

ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்சூரன்ஸ் பாலிசி

குடும்பத்தின் அளவு: தனி நபர், மனைவி, பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் உட்பட 6 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகளுக்கு கவர் ஆகிறது.

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: ஒவ்வொரு முறையும் 100% வரை காப்பீட்டுத் தொகை எண்ணற்ற முறை ரீஸ்டோர் செய்யப்படும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

 Diabetes Safe Insurance Policy

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி

நீரிழிவு நோய்க்கான கவரேஜ்: டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளர்களுக்கான கவரேஜாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது

குடும்பக் காப்பீடு: இந்த பாலிசியை ஃப்ளோட்டர் அடிப்படையிலும் (தனிநபர் மற்றும் மனைவி) அவர்களில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் பெறலாம்

தாமாக மீட்டமைத்தல்: தனிநபர் திட்டத்தில் ஒரு பாலிசி வருடத்திற்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகையில் 100% ரீஸ்டோர் செய்யப்படும்

Star Cardiac Care Insurance Policy

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

கார்டியாக் கவரேஜ்: 10 முதல் 65 வயதுக்குட்பட்ட இதய நோய் பாதிப்புள்ள நபர்களை கவர் செய்கிறது.  உள்ளடக்கியது

கார்டியாக் அல்லாத கவரேஜ்: இதயம் சாராத நோய்கள் மற்றும் விபத்துக்களையும் கவர் செய்கிறது

காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை

Star Cardiac Care Insurance Policy-Platinum

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி - பிளாட்டினம்

பிரத்யேக கவரேஜ்: இதய நோய் அல்லது கோளாறு உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

பாலிசிக்கு முந்தைய பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

கார்டியாக் சாதனங்கள்: இதய சாதனங்களுக்கான காப்பீடு தொகையில் 50% வரை பெறுங்கள்

Star Cancer Care Platinum Insurance Policy

ஸ்டார் கேன்சர் கேர் பிளாட்டினம் இன்சூரன்ஸ் பாலிசி

பிரத்யேக கவரேஜ்: புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

பரந்த கவரேஜ்: புற்றுநோய்க்கு கவர் செய்வது மட்டுமின்றி, புற்றுநோயுடன் தொடர்பில்லாத வழக்கமான மருத்துவமனை செலவுகளையும் கவர் செய்கிறது.

மொத்தத் தொகை கவரேஜ்: ஒரு விருப்பத் தொகையாக, கேன்சர், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும்/அல்லது முதல் புற்றுநோய்க்கு தொடர்பில்லாத இரண்டாவது புற்றுநோய் புதிதாக ஏற்படும் பட்சத்தில் மொத்த தொகை வழங்கப்படுகிறது.

Star Critical Illness Multipay Insurance Policy

ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டி-பே காப்பீட்டு பாலிசி

தனித்துவமான கவரேஜ்: பாலிசி 37 முக்கிய முக்கியமான நோய்களை உள்ளடக்கியது

ஸ்டார் வெல்னஸ் திட்டம்: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க பிரீமியம் தள்ளுபடிகளைப் பெறுங்கள்

காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற 50 வயது வரை காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை

தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

 

தனிநபர் மருத்துவக் காப்பீடு என்பது, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே முழுமையான காப்பீட்டுத் தொகையை வழங்கும், ஒரு மருத்துவப் பாதுகாப்புத் திட்டமாகும். இது ஒரு தனிநபருக்கு ஏற்படும் மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள் மற்றும் பிற மருத்துவக் கட்டணங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டத்தை உங்களுக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த பெற்றோருக்காகவோ தனித்தனியாக எடுத்துக்கொள்ள முடியும்.

 

மேலும், முழு குடும்பத்திற்குமான பொதுவான திட்டமாக இல்லாமல், தனிப்பட்ட ஒருவரின் உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப இக்காப்பீட்டின் பாதுகாப்பை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பெரும்பாலான தனிநபர் காப்பீட்டுத் திட்டங்கள் அவசர மருத்துவச் செலவுகள் மட்டுமின்றி, ஒரே நாளில் முடிவடையும் பகல்நேர சிகிச்சைகள் (Daycare procedures), ஆயுஷ் போன்ற மாற்றுமுறை சிகிச்சைகள், உறுப்பு தானம் செய்வோருக்கான மருத்துவச் செலவுகள் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன.

 

தனிநபர் மருத்துவக் காப்பீட்டின் பிரீமியம் தொகையானது பாலிசிதாரரின் வயது, பாலினம், முந்தைய மருத்துவ வரலாறு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் உள்ள காப்பீட்டுத் தொகையையோ அல்லது பலன்களையோ மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. அதேநேரம், கூடுதல் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் 'ஆட்-ஆன்' வசதிகளையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம். தனிப்பட்ட தேவைகளுக்கான, ஒரு நல்ல மெடிக்ளைம் பாலிசியைத் தேடுபவர்களுக்கு, அவர்களின் உடல்நலச் சூழலுக்கு ஏற்ற பிரத்யேக பாதுகாப்பையும் நிதிப் பாதுகாப்பையும், இத்திட்டங்கள் அளிக்கின்றன. ஐஆர்டிஏஐ (IRDAI) அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு, உட்பட்ட இந்த பாலிசிகள், தற்போதைய மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த தீர்வுகளை வழங்குகின்றன.

 

இந்தியாவில் பொதுவான பணவீக்கத்தை விட மருத்துவச் செலவுகள் இரு மடங்கு வேகமாக உயர்ந்து வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக, 40 மற்றும் 50 வயதுகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 20-களில் இருக்கும் இளம் தலைமுறையினரும் கூட மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்து அதனை எடுக்கத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் ஏற்படும் எதிர்பாராத பெரிய மருத்துவச் செலவுகளில் இருந்து தங்களை நிதி ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டை முதன்மைத் தேர்வாகக் கருதுகின்றனர்.

 

 

தனிநபர் மருத்துவக் காப்பீட்டின் முக்கிய அம்சங்களும் பலன்களும்

 

ஸ்டார் ஹெல்த்தின் தனிநபர் மருத்துவக் காப்பீடு வழங்கும் பல்வேறு சிறப்பம்சங்களும் பயன்களும் பின்வருமாறு:

 

  1. தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் வசதி: தனிநபர் மருத்துவக் காப்பீடு விரிவான பாதுகாப்புத் தேர்வுகளை வழங்குகிறது. மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்கள், ஒரே நாளில் முடிவடையும் பகல்நேர சிகிச்சைகள் போன்றவற்றுக்கு, இது உதவுகிறது. பாலிசிதாரர்கள் தங்கள் தேவைக்கேற்ற காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்து கொள்ளும் சுதந்திரம் உள்ளதால், தேவையில்லாமல் கையில் இருந்து செலவு செய்வதைத் தவிர்க்கலாம். தனித்துவமான உடல்நலத் தேவைகளுக்கும் நிதி இலக்குகளுக்கும் ஏற்ற பாதுகாப்பை விரும்புபவர்களுக்கு, இத்திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும்.
  2. வரிச் சலுகைகள் (Tax Benefits) – தனிநபர் பாலிசி (Individual policy) வாங்குவது பல வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதாவது, மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் கீழ் ஒருவர் செலுத்தும் பிரீமியங்களை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D (Section 80D)-ன் கீழ் கழித்துக் கொள்ள முடியும், இது உங்கள் ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் (Tax liability) குறைக்கிறது. வரி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து உங்கள் வரி ஆலோசகரையோ அல்லது இந்தச் சட்டத்தையோ கலந்தாலோசிக்கவும். எனவே, பழைய வரி முறையின் (Old regime) கீழ் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் வரி விலக்கு பெறுவது ஆகிய இரு மடங்கு பலன்களை நீங்கள் பெறலாம். மேலும், தனிநபர் அடிப்படையில் வரியைச் சேமிப்பதற்கான கூடுதல் வாய்ப்பும் உங்களுக்கு இதில் கிடைக்கிறது.
    எடுத்துக்காட்டு: இந்த பாலிசி மூலம் செலுத்தப்படும் பிரீமியத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 25,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000 வரை விலக்கு கிடைக்கும். பாலிசிதாரர் மற்றும் காப்பீடு செய்யப்பட்டவர் இருவரும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்கும்பட்சத்தில், ஒட்டுமொத்தமாக ரூ. 1,00,000 வரை வரி விலக்குப் பெற முடியும்.
  3. ஆயுள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி: மருத்துவ நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கு, வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது. எங்கள் தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆயுள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை உறுதிசெய்கிறது. முதுமைக் காலத்தில் மருத்துவத் தேவைகள் அதிகரிக்கும் போது, தொடர்ந்து காப்பீட்டுப் பாதுகாப்பில் இருக்க, இது மிகவும் அவசியமாகும்.
  4. நோ-கிளைம் போனஸ்: எவ்வளவு முன்னதாகவே மருத்துவக் காப்பீட்டை எடுக்கிறீர்களோ, அவ்வளவு கூடுதல் பலன்களைப் பெறலாம். ஒரு பாலிசி ஆண்டில் எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருக்கும்போது, கணிசமான நோ-கிளைம் போனஸைப் பெற முடியும். இந்த போனஸ் உங்கள் அடிப்படைக் காப்பீட்டுத் தொகையோடு சேர்ந்துவிடுவதால், எதிர்காலத்தில் அதிகச் செலவு வைக்கும் சிகிச்சைகளையும் எளிதாகச் சமாளிக்க முடியும்.
  5. கூடுதல் காப்பீட்டு வசதிகள்: மகப்பேறு பலன்கள், காப்பீட்டுத் தொகையை மீட்டமைக்கும் வசதி, முந்தைய நோய்களுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் வசதி, கூடுதல் பாதுகாப்பு தரும் 'எக்ஸ்ட்ரா புரொடக்ட்' போன்ற ஆட்-ஆன் வசதிகளைத் தேர்வுசெய்து, உங்கள் பாலிசியின் பலன்களை அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன், விருப்பத் தேர்வாக உள்ள விலக்கு வசதிகள் மூலம் கோ-பேமெண்ட் முறையையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
  6. பணமில்லா சிகிச்சை: அவசர மருத்துவச் சூழலின் போது பணமில்லா சிகிச்சையைத் தேர்வுசெய்யலாம். இதன்மூலம் நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் சிகிச்சைச் செலவுகளைக் காப்பீட்டு நிறுவனமே நேரடியாக ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்குச் செலுத்திவிடும்.
  7. பகல்நேர சிகிச்சைகள் / வீட்டிலிருந்தே பெறும் சிகிச்சை: மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காத போதோ அல்லது மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழலிலோ, வீட்டிலிருந்தே 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தால், அதற்கான செலவுகளையும் தனிநபர் மருத்துவக் காப்பீடு ஏற்றுக்கொள்கிறது.

 

இந்தியாவில் தனிநபர் மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம்

 

இந்தியாவில் நாளுக்கு நாள் உடல்நலப் பாதிப்புகளும் புதிய நோய்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

 

எதிர்பாராத மருத்துவ நெருக்கடிகளை யாராலும் தவிர்க்க முடியாது என்பதால், மருத்துவமனையில் சேரும்போது ஏற்படும் முழுச் செலவுகளையும் ஈடுசெய்யக்கூடிய சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

 

நம் நாட்டில் பொதுவான பணவீக்கத்தை விட மருத்துவச் செலவுகளுக்கான பணவீக்கம் இரு மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, 40 மற்றும் 50 வயதுகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 20-களில் இருக்கும் இளைஞர்களும் கூட மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும், நமது தேவைக்கேற்ப பலன்களைத் தேர்வு செய்து கொள்ள முடிவதாலும், கட்டுப்படியாகக்கூடிய பிரீமியம் என்பதாலும் தனிநபர் மருத்துவக் காப்பீடு தற்போது பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது.

 

இளைஞர்கள், நடுத்தர வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் தங்களின் தனிப்பட்ட மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப, இந்த தனிநபர் காப்பீட்டைத் தேர்வு செய்யலாம். நமது தேவைக்கேற்ற விரிவான பாதுகாப்பு, குறைவான பிரீமியம் எனப் பல நன்மைகளைத் தரும் இந்த பாலிசிகள், கட்டுப்படியாகக்கூடிய விலையில் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. எளிமையான நடைமுறையையும் நீண்ட காலப் பாதுகாப்பையும் விரும்புபவர்களுக்கு 'ஒற்றைத் தவணை பாலிசி' ஒரு சிறந்த தேர்வாகும், இதில் ஒரே முறை பிரீமியம் செலுத்தி பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பாதுகாப்பைப் பெற முடியும்.

 

பெரிய அளவிலான நிதிப் பாதுகாப்பைப் பெற, இத்தகைய மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமானது. எனவே, எதிர்காலப் பாதுகாப்பிற்காக நமது ஒட்டுமொத்த நிதித் திட்டமிடலில், இதையும் கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, ஒற்றைத் தவணை பாலிசியைத் தேர்வு செய்வது நிதித் திட்டமிடலை எளிதாக்குவதோடு, ஆண்டுதோறும் பாலிசியைப் புதுப்பிக்கும் அலைச்சலையும் குறைக்கிறது.

 

சரியான தனிநபர் மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

 

உங்கள் நிதித் திட்டமிடலின் ஆரம்பக் கட்டத்திலேயே பொருத்தமான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் நல்லது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வுசெய்ய உதவும் சில முக்கிய வழிகாட்டுதல்கள்:

 

  1. உங்கள் மருத்துவத் தேவைகளைத் தீர்மானியுங்கள்: உங்கள் பட்ஜெட், எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய சிகிச்சைகள் மற்றும் பிரீமியம் கட்டணத்தை எளிதாகச் செலுத்தும் வசதி ஆகியவற்றை யோசித்து, உங்கள் தேடலைத் தொடங்குங்கள். பல்வேறு நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்கள் வயது, ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் மருத்துவச் செலவுகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஆண்டுதோறும் பிரீமியம் புதுப்பிக்கும் அலைச்சல் வேண்டாம் என நினைத்தால், ஒரே முறை செலுத்தி நீண்ட காலப் பாதுகாப்பு தரும் 'ஒற்றைத் தவணை பாலிசி' வசதியைத் தேர்வுசெய்யலாம்.
    அத்துடன் வெளிப்புறச் சிகிச்சை (OPD), மகப்பேறு பலன்கள், மருத்துவமனைச் சேர்க்கை, தீவிர நோய்களுக்கான காப்பீடு போன்றவை, உங்களுக்குத் தேவையா என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். இது உங்களுக்குப் பொருத்தமான பாலிசியை எளிதாக அடையாளம் காண உதவும்.
  2. நெட்வொர்க் மருத்துவமனைகளைச் சரிபாருங்கள்: உங்களுக்கு விருப்பமான அல்லது உங்கள் வீட்டின் அருகிலுள்ள மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பரவலான மருத்துவமனை நெட்வொர்க் இருக்கும்போதுதான், எவ்வித அலைச்சலுமின்றித் தரமான சிகிச்சையையும் பணமில்லா சிகிச்சை வசதியையும் எளிதாகப் பெற முடியும்.
  3. பிரீமியம், டிடக்டிபிள் மற்றும் க்ளைம் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளுங்கள்: வெவ்வேறு திட்டங்களின் பிரீமியம் கட்டணங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்; அத்துடன் டிடக்டிபிள் (Deductible) தொகை, உங்கள் பட்ஜெட்டிற்குள் வருகிறதா என்பதையும் உறுதிசெய்யுங்கள். குறைந்த செலவில் சிறந்த பாலிசியைப் பெற பிரீமியம் மற்றும் டிடக்டிபிள் இடையே சரியான சமநிலையைக் கண்டறிவது அவசியம். மேலும், கிளைம்களை நிறுவனம் எவ்வளவு விரைவாகவும் முறையாகவும் செட்டில் செய்கிறது என்பதை அறிய அவர்களின் கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தையும் கவனியுங்கள்.
  4. பாலிசி ஆவணங்களை முழுமையாகப் படியுங்கள்: ஒவ்வொரு பாலிசியின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் காப்பீட்டு ஆவணங்களைத் தெளிவாக வாசித்துப் பாருங்கள். குறிப்பாக, காத்திருப்பு காலம் எவ்வளவு மற்றும் பாலிசியில் சேர்க்கப்படாத சிகிச்சைகள் எவை என்பதைத் தெரிந்துகொள்வது சரியான திட்டத்தைத் தேர்வுசெய்ய மிகவும் உதவும்.
  5. வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்: காப்பீட்டு நடைமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், நிதி ஆலோசகர்கள் அல்லது காப்பீட்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய அவர்களின் வழிகாட்டுதல் பெரிதும் உதவும்.

 

தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் உங்களுக்கு எவ்வளவு காப்பீட்டுத் தொகை தேவை?

 

மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்கு அனைவருக்கும் பொருந்தும் ஒரே அளவுகோல் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு தனிநபரின் தேவைகளும் வாழ்க்கைச் சூழலும் வேறுபடுவதால், அதற்கேற்ப காப்பீட்டுத் தொகையைத் தனிப்பயனாக்குவது (Personalised) அவசியம். உங்களுக்குத் தேவையான சரியான காப்பீட்டுத் தொகையைக் கணக்கிட வயது, தற்போதைய உடல்நிலை, வாழ்க்கை முறை, ஆண்டுதோறும் உயரும் மருத்துவச் செலவுகள், நீங்கள் விரும்பும் மருத்துவமனைகள் மற்றும் குடும்பத்தின் மருத்துவ வரலாறு ஆகிய காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்வது முக்கியமாக மூன்று அம்சங்களைச் சார்ந்துள்ளது: முதலாவதாக, நீங்கள் வசிக்கும் பகுதி, இரண்டாவதாக, உங்கள் வயது மற்றும் வாழ்க்கை நிலை (Life stage), மூன்றாவதாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள்.

 

ஏற்கனவே எந்தப் பெரிய உடல்நலப் பிரச்சினைகளும் இல்லாத இளைஞர்கள், ஆரம்பத்தில் குறைந்த அளவிலான காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்வது போதுமானதாக இருக்கும். இது குறைவான பிரீமியத்தில் பலன் பெற உதவுவதோடு, எதிர்பாராத அவசர மருத்துவச் செலவுகளிலிருந்தும் நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது. பின்னர் வயது அதிகரிக்கும் போது, காப்பீட்டுத் தொகையையும் தேவைக்கேற்ப உயர்த்திக்கொள்ளலாம்.

 

நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு விரிவான பாதுகாப்பைத் தரும் முழுமையான காப்பீட்டுத் திட்டங்களே சிறந்த தேர்வாக அமையும். அதேபோல, குடும்பமாக இருக்கும்போது தனித்தனி பாலிசிகளை எடுப்பதை விட, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கும் 'ஃபுளோட்டர் பாலிசி'களைத் (Floater policies) தேர்வு செய்வது அதிகப் பலனளிக்கும். மேலும், கூடுதல் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பது முழுக் குடும்பத்திற்கும் போதிய பாதுகாப்பை உறுதிசெய்யும்.

 

முதியவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்களுக்கு விரிவான பாதுகாப்புத் தேவைப்படுகிறது. இக்காப்பீடு ஏற்கனவே உள்ள நோய்கள், மருத்துவப் பரிசோதனைகள், வழக்கமான உடற்பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவமனைச் சேர்க்கை மற்றும் மறுவாழ்வுச் சிகிச்சைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

 

மேலும், எதிர்காலத்தில் பராமரிப்பு உதவி அல்லது செவிலியர் கவனிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, நீண்டகாலப் பராமரிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்வது விவேகமான முடிவாகும்.

 

எடுத்துக்காட்டாக, 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களுக்கு அவசர சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளை வழங்கும் எளிய திட்டமே போதுமானது. இதுவே 31 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் என்றால், மகப்பேறு பலன்களையும் உள்ளடக்கிய விரிவான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வுசெய்வது நல்லது. அதேபோல், 51 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் வழக்கமான மருந்துகள், நாள்பட்ட நோய்கள் மற்றும் நீண்டகால மருத்துவ தேவைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் முழுமையான காப்பீட்டுத் திட்டத்தையே தேர்வுசெய்ய வேண்டும்.

 

பெண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெண்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்காகவே குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட தனிப்பயன் திட்டங்களும் கிடைக்கின்றன.

 

மருத்துவத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், புற்றுநோய்க்கான ஸ்டீரியோடாக்டிக் அறுவை சிகிச்சைகள் (Stereotactic surgeries), ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், நவீன புற்றுநோய் மருந்துகள் மற்றும் நவீன ஊடுகதிர்வீச்சு சிகிச்சைகள் போன்ற உயர்தர மருத்துவ முறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அதிக மதிப்பிலான காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்வது இன்றியமையாததாகிறது.

 

மேலும் எக்மோ (ECMO), டாவி (TAVI), இம்பெல்லா (Impella) மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற நவீன, தீவிர சிகிச்சைகளுக்கான செலவுகளைச் சமாளிக்கவும் கூடுதல் காப்பீட்டுத் தொகை கைகொடுக்கும்.

 

எவ்வளவு காப்பீட்டுத் தொகை தேவை என்பதைத் தீர்மானிக்கும்போது, உங்கள் நிதி வசதியையும் கவனத்தில் கொள்வது முக்கியம். போதிய மருத்துவப் பாதுகாப்பு இருப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு அந்த பிரீமியம், உங்கள் பொருளாதார நிலைக்கு சுமையாக மாறிவிடாமல் இருப்பதும் முக்கியம்.

 

உங்கள் மாத பட்ஜெட்டை முறையாகப் பரிசீலித்து, பிரீமியத்திற்காக சிரமமின்றி எவ்வளவு தொகையை ஒதுக்க முடியும் என்பதைத் திட்டமிடுங்கள். உங்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பிற்கும், உங்களால் சுலபமாகச் செலுத்தக்கூடிய பிரீமியத்திற்கும் இடையே சரியான சமநிலையைக் கண்டறிவதே மிகச் சிறந்த வழியாகும்.

 

உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்தமான சரியான காப்பீட்டுத் தொகையையும், பாலிசி வகையையும் தேர்வுசெய்ய, ஒரு நிதி ஆலோசகர் அல்லது காப்பீட்டு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

 

ஆன்லைனில் மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி?

 

1. காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வுசெய்யுங்கள்

 

கிளைம் செட்டில்மென்ட் விகிதம் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, உங்களுக்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வுசெய்யுங்கள். நிறுவனத்தை முடிவு செய்தவுடன், பாலிசியை ஆன்லைனில் வாங்குவதற்கு அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

 

2. உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடுங்கள்

 

சில காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதன்பின், நிறுவனத்தின் பிரதிநிதி, உங்களைத் தொடர்புகொண்டு ஆன்லைனில் பாலிசி எடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவார்.

 

3. பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்

 

பாலிசிதாரர்களின் வசதிக்காகப் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்திலேயே 'பிரீமியம் கால்குலேட்டர்' வசதியை வழங்குகின்றன. உங்கள் வயது, பாலினம், மருத்துவ வரலாறு உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் உத்தேசமாக எவ்வளவு பிரீமியம் வரும் என்பதை, இது கணக்கிட்டுக் காட்டும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தைத் திட்டமிட்டுத் தேர்வுசெய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.

 

4. பாலிசியைத் தேர்வுசெய்து பணம் செலுத்துங்கள்

 

கணக்கிடப்பட்ட பிரீமியம் தொகை, உங்களுக்குப் பொருத்தமாக இருந்தால், தொடர்ந்து ஆன்லைனிலேயே பாலிசியை வாங்கலாம். 'Add to Cart' விருப்பத்தைத் தேர்வுசெய்து பணத்தைச் செலுத்திவிட்டால் போதும். நடைமுறைகள் முடிந்ததும் பாலிசி ஆவணம் உங்களுக்கு உடனே மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வழியாக வந்துவிடும்.

 

தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் கிளைம் செய்வது எப்படி?

 

மருத்துவக் காப்பீட்டில் இரண்டு வழிகளில் நீங்கள் கிளைம் கோரிக்கையை முன்வைக்கலாம்: ஒன்று பணமில்லா சிகிச்சை முறை (Cashless Basis), மற்றொன்று பணத்தைத் திரும்பப் பெறும் முறை (Reimbursement Basis).

 

பணமில்லா சிகிச்சை முறை:

 

உங்கள் காப்பீட்டு நிறுவனம் அல்லது டி.பி.ஏ (TPA) அமைப்பின் நெட்வொர்க் பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே பணமில்லா சிகிச்சை வசதியைப் பெற முடியும். குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, உரிய படிவத்தைச் சமர்ப்பித்து முன்கூட்டியே அனுமதி (Pre-authorisation) பெற வேண்டும். நீங்கள் ஒற்றைத் தவணை பாலிசி (Single Premium Policy) எடுத்திருந்தாலும் கிளைம் நடைமுறைகளில், எந்த மாற்றமும் இருக்காது; பாலிசி காலம் முழுவதும் தடையின்றி, இந்த வசதியைப் பெற முடியும்.

 

மருத்துவ அவசர காலங்களில் பதற்றமடையாமல் இருக்க, பாலிசி ஆவணம் கைக்கு வந்தவுடனேயே, இந்த நடைமுறைகளை முன்கூட்டியே படித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

 

பணத்தைத் திரும்பப் பெறும் முறை (Reimbursement Basis):

 

பாலிசி ஆவணம் கிடைத்ததும் அதிலுள்ள க்ளைம் தொடர்பான விதிகளை முழுமையாகப் படித்துப் பாருங்கள்; இதன்மூலம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், விதிமுறைகளின்படி உடனடியாகக் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் பூர்த்தி செய்யப்பட்ட கிளைம் படிவம், டிஸ்சார்ஜ் சம்மரி, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் மருத்துவமனை ரசீதுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தனிநபர்களுக்கான மெடிக்ளைம் பாலிசி

 

தனிநபர் மெடிகிளைம் பாலிசி என்பது ஒரு தனிமனிதரின் மருத்துவச் செலவுகளுக்கு நிதிப் பாதுகாப்பளிக்கும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் மருத்துவமனைச் சேர்க்கை, குறுகிய கால பகல்நேர சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு, முன்பு மற்றும் பின்பு ஆகும் சிகிச்சைச் செலவுகளை சமாளிக்க உதவுகிறது.

 

குடும்ப மருத்துவ காப்பீடு மற்றும் தனிநபர் மெடிகிளைம் பாலிசிக்கு இடையேயான வித்தியாசம் என்ன?

 

குடும்ப மருத்துவ மற்றும் தனிநபர் மெடிக்ளைம் பாலிசிக்கு இடையிலான முதன்மையான வேறுபாடே, அவை எத்தனை நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன என்பதில்தான் உள்ளது. ஃபேமிலி ஃபுளோட்டர் திட்டம் அதாவது குடும்ப மருத்துவ காப்பீடு, குடும்ப உறுப்பினர்கள் பலரையும் ஒரே பாலிசியில் உள்ளடக்குகிறது; ஆனால், தனிநபர் மெடிகிளைம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே பாதுகாப்பை வழங்குகிறது.

 

இவ்விரண்டில் எது சிறந்தது என்பது, உங்கள் குடும்பத்தின் மருத்துவத் தேவைகள், பட்ஜெட் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற அம்சங்களைப் பொறுத்தே அமையும். அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 

குடும்ப மருத்துவ காப்பீடு

 

  • இப்பாலீசியில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மொத்தக் காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்துகொள்வார்கள்.
  • இந்த திட்டத்தின் கீழ் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவப் பாதுகாப்பு கிடைக்கும்.
  • தனிநபர் பாலிசிகளோடு ஒப்பிடும்போது குடும்ப மருத்துவ காப்பீடு பிரீமியம் குறைவாகவே இருக்கும்.
  • குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்திற்குப் பாதுகாப்பு தேடுபவர்களுக்கு, இது மிகவும் ஏற்றது.
  • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே க்ளைம் செய்யும் குடும்பங்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாலிசியில் உள்ள முழுக் காப்பீட்டுத் தொகையையும் இதில் சேர்க்கப்பட்டுள்ள எந்தவொரு உறுப்பினரின் சிகிச்சைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

தனிநபர் மெடிகிளைம் பாலிசி

 

  • ஒரு பாலிசியில் ஒரு நபருக்கு மட்டுமே மருத்துவப் பாதுகாப்பு அளிக்க முடியும்.
  • குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
  • இப்பாலீசியில் பிரீமியம் தொகையானது சம்பந்தப்பட்ட நபரின் வயது மற்றும் உடல்நிலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு வெவ்வேறு விதமான மருத்துவத் தேவைகள் இருக்கும் பட்சத்தில், இவ்வகைத் திட்டம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

 

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக அதிகக் காப்பீட்டுத் தொகை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இதுவே சிறந்த தேர்வாகும்.

 

தனிநபர் மெடிகிளைம் பாலிசியைத் தேர்வு செய்வது எப்படி?

 

தனிநபருக்கான சிறந்த மெடிக்ளைம் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது பல முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முதன்மையானவை:

 

  • வயது: பிரீமியத் தொகையைத் தீர்மானிப்பதில் வயது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது, பொதுவாக வயது கூடும்போது பிரீமியமும் அதிகரிக்கும்.
  • உடல்நிலையும் முந்தைய மருத்துவ வரலாறும்: பாலிசி வாங்குபவரின் தற்போதைய ஆரோக்கியம் மற்றும் முந்தைய மருத்துவ விவரங்களை அடிப்படையாகக் கொண்டே பிரீமியம் முடிவு செய்யப்படுகிறது.
  • ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகள்: ஏற்கனவே ஏதேனும் நோய் பாதிப்புகள் இருந்தால், அது பிரீமியத்தை உயர்த்தக்கூடும் அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குப் பாலிசியில் விதிவிலக்குகள் அளிக்கப்படலாம்.
  • காப்பீட்டுத் தொகை: உங்களின் மருத்துவத் தேவைகளே, உங்களுக்கு எவ்வளவு காப்பீட்டுத் தொகை தேவை என்பதைத் தீர்மானிக்கின்றன. அதே சமயம், கூடுதல் காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப பிரீமியமும் அதிகமாகும்.
  • மகப்பேறு பலன்கள்: தேர்வு செய்யும் மெடிகிளைம் பாலிசியில் மகப்பேறு மற்றும் பிரசவச் செலவுகளுக்கான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • கிளைம் நடைமுறைகள்: மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்போது சிரமமின்றிப் பலன்களைப் பெற, பாலிசியின் க்ளைம் செயல்முறைகளை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும்.
  • வரிச் சலுகைகள்: தனிநபர் மருத்துவக் காப்பீட்டிற்குச் செலுத்தும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்குச் சலுகைகளைப் பெற முடியும்.
  • நவீன கூடுதல் பலன்கள்: முதல் நாளிலிருந்தே முன்பிருந்த நோய்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகள், காப்பீட்டுத் தொகை தீர்ந்தால் மீண்டும் புதுப்பிக்கும் வசதி மற்றும் ஆண்டுதோறும் இலவச முழு உடற்பரிசோதனை போன்ற நவீனப் பலன்களையும் பார்த்துத் தேர்வுசெய்யுங்கள்.

 

முடிவுரை

 

தனிநபர் மருத்துவக் காப்பீடு என்பது அவசர காலங்களில் பணத்தைச் சேமிப்பதற்கான வழி மட்டுமல்ல; திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் எதிர்பாராத உடல்நலப் பிரச்சினைகள் என எதற்கும் பாதுகாப்பு இருக்கிறது என்ற நிம்மதியை, அது உங்களுக்குத் தருகிறது. உங்கள் குடும்ப உறுப்பினர்களையும், இதில் இணைத்துக் கொள்வதன் மூலம் மருத்துவமனைச் சிகிச்சைக்கான பலன்களையும், நீண்டகாலப் பாதுகாப்பையும் பெற முடியும். இத்தகைய திட்டங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும், கஷ்டப்பட்டுச் சேர்த்த சேமிப்பையும் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

 

மருத்துவச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், இப்போதே சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது எதிர்காலத்தில், உங்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும். பல்வேறு பாலிசிகளையும் நிதானமாகப் பரிசீலித்து, உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்; எதிர்காலத்தில் வரும் மருத்துவக் கட்டணக் கவலைகளுக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், நிச்சயமாகத் தேவை. பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு அடிப்படை மருத்துவத் தேவைகளை மட்டுமே, உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட பாதுகாப்பாகவே இருக்கும் என்பதால், அது முழுமையாகப் போதுமானதாக இருக்காது. தற்போதைய சூழலில், ஒருவருக்குச் சராசரியாகக் குறைந்தது ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை தேவைப்படுகிறது. எனவே, இதுபோன்ற சூழலில் நிறுவனக் காப்பீட்டுடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பிற்காக ஒரு 'டாப்-அப்' (Top-up) திட்டத்தையும் இணைத்து வாங்கிக் கொள்ளலாம்.

ஆம், உங்கள் தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியும். பாலிசி காலத்தின் இடைப்பகுதியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வசதியைப் (Mid-term inclusion) பயன்படுத்தி, புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையையோ, பிறந்த பச்சிளம் குழந்தையையோ அல்லது சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தையையோ பாலிசியில் சேர்த்துக்கொள்ளலாம்.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதலின்படி, தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் இணைவதற்கான அதிகபட்ச வயது 65 ஆகும். எனினும், வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்பெறும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு நெகிழ்வான திட்டங்களை வழங்குகின்றன. ஒருமுறை நீங்கள் பாலிசியில் இணைந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதனைத் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இல்லை, காப்பீட்டு நிறுவனம் நிர்ணயித்த பிரீமியத் தொகையைத் தவிர வேறு எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை, அதை நாங்களும் ஊக்குவிப்பதில்லை. பிரீமியத்தைத் தாண்டி வேறு ஏதேனும் கட்டணங்களை யாரேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ கேட்டால், அது நெறிமுறையற்ற செயலாகும். மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதற்காகப் பாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்திற்குச் செலுத்தும், ஒரே கட்டணம் பிரீமியம் மட்டுமே.

தனிநபர் மருத்துவக் காப்பீடு என்பது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகையை வழங்கும் ஒரு பிரத்யேகத் திட்டமாகும்.

ஆனால், குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தில் மொத்தக் காப்பீட்டுத் தொகையையும் குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் ரூ.4 லட்சத்திற்கான குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுத்திருந்தால், குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டாலும், அந்த ரூ.4 லட்சம் முழுவதையும் அவர்களது சிகிச்சைக்காகப் பயன்படுத்த முடியும்.

எனினும், இவ்விரண்டு திட்டங்களுக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் காப்பீட்டு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடக்கூடும்.

பல்-தனிநபர் மருத்துவக் காப்பீடு என்பது ஒரே பாலிசியின் கீழ் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும். இதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியே காப்பீட்டு வரம்பு ஒதுக்கப்படுவதால், ஒருவர் தனது சிகிச்சைக்காக அந்தத் தொகையைப் பயன்படுத்தினாலும், அது பாலிசியிலுள்ள மற்ற உறுப்பினர்களின் காப்பீட்டுத் தொகையை, எந்த விதத்திலும் பாதிக்காது.

குடும்ப காப்பீடு என்பது குடும்பத்திற்கு ஏற்ற ஒரு சிக்கனமான திட்டமாகும்; இது ஒரே பாலிசியின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தாலும், ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் பொதுவான ஒரே காப்பீட்டுத் தொகையை மட்டுமே வழங்குகிறது.

அதே நேரத்தில், தனிநபர் காப்பீட்டுத் திட்டம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது; ஆனால், குடும்ப மருத்துவ காப்பீட்டுடன் ஒப்பிடும்போது, இதன் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.

இந்தியாவில், ஒற்றைத் தவணை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது:

  • ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தும் தொந்தரவின்றி நீண்டகாலப் பாதுகாப்பு: ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியமின்றி, ஒரே முறையில் செலுத்திப் பல ஆண்டுகளுக்குத் தடையற்ற மருத்துவப் பாதுகாப்பைப் பெறலாம்.
  • எளிமையான நிதித் திட்டமிடல்: எதிர்காலப் பிரீமியம் உயர்வு குறித்த கவலையின்றி, உங்கள் மருத்துவக் காப்பீட்டுச் செலவை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது.
  • பிரிவு 80D கீழ் வரிச் சலுகைகள்: வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-இன் கீழ் வரிவிலக்குச் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
  • மருத்துவக் காப்பீட்டில் சிரமமில்லாத நடைமுறையையும், நீண்டகால நிலைத்தன்மையையும் விரும்புபவர்களுக்கு, இத்திட்டம் மிகவும் ஏற்றது.

தனிநபர் மெடிகிளைம் பாலிசி என்பது ஒரு தனிமனிதருக்கான பிரத்யேகக் காப்பீடாகும்; இதனை சம்பந்தப்பட்ட நபரே நேரடியாக வாங்குகிறார். இதற்கான காப்பீட்டுத் தொகை, பலன்கள் மற்றும் பிரீமியம் ஆகியவை, அந்த நபரின் வயது மற்றும் உடல்நிலையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

குழு மெடிகிளைம் பாலிசி (Group Mediclaim) என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பால் வழங்கப்படும் திட்டமாகும். இதில் வழக்கமாக மருத்துவப் பரிசோதனைகள் குறைவு மற்றும் பாலிசியில் இணைவதும் எளிது, அத்துடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான காப்பீட்டுப் பலன்களே கிடைக்கும். தனிநபர் பாலிசிகள், நமக்குத் தேவையான கூடுதல் பலன்களைத் தேர்ந்தெடுத்து மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியைத் தருகின்றன, அதே சமயம் குழுப் பாலிசிகள் எளிய, விரைவான அடிப்படைப் பாதுகாப்பை வழங்குகின்றன.

இந்தியாவில் தனிநபர் மருத்துவக் காப்பீட்டின் பிரீமியம் தொகையானது, உங்களின் வயது, தற்போதைய உடல்நிலை, வாழ்க்கை முறை மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, இளம் வயதினருக்குப் பிரீமியம் குறைவாகவே இருக்கும், அதே சமயம் அதிகக் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக்கும்போதோ அல்லது ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும்போதோ பிரீமியம் அதிகரிக்கும். ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் பிரீமியத்தைக் கணக்கிடுவதற்கு வெவ்வேறு அளவுகோல்களைப் பின்பற்றுவதால், இதன் துல்லியமான கட்டணம் நபருக்கு நபர் மாறுபடும்.

தனிநபர் மருத்துவக் காப்பீடு