

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி
IRDAI UIN : SHAHLIP23081V082223
HIGHLIGHTS
Plan Essentials
நீரிழிவு நோய்க்கான காப்பீடு
டைப் 1 மற்றும் டைப் 2 வகை நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிற நோய்கள் அல்லது குறைபாடுகளும் இதில் கவர் ஆகிறது.
நுழைவு வயது
18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம்.
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். 2 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மட்டுமே ஃப்ளோட்டர் அடிப்படையில் எடுக்க முடியும்.
ஏதுவான திட்ட விருப்பங்கள்
திட்டம் A: காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையுடன். திட்டம் B: காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை இல்லாமல்
வெளிநோயாளருக்கான செலவுகள்
நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது நோய் கண்டறிதல் மையங்களில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு செலுத்தப்படும்.
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் அடிப்படை காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால், பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% ரீஸ்டோர் செய்யப்படும்.
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்
உலகில் எங்கு விபத்து நடந்தாலும், ஒரு நபர் கூடுதல் செலவின்றி தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும்.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுக்கு ஒருமுறை, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கட்டாயம் |
பிரிவு I - நீரிழிவு நோயின் சிக்கல்களால் மருத்துவமனையில் அனுமதி
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். | ||
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும். | ||
அறை வாடகைஅறை (தனி ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும். | ||
ஐசியூ கட்டணம்இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும். | ||
எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. |
பிரிவு I இன் கீழ் கவராகும் சிறப்பு நிலைகள்
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில், தானம் பெறுபவர் பாலிசிதாரராக இருந்தால், தானம் செய்பவருக்கான செலவுகள் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் இருப்புக்கு உட்பட்டு செலுத்தப்படும். | ||
டயாலிசிஸ் செலவுகள்டயாலிசிஸ் (AV ஃபிஸ்துலா / கிராஃப்ட் ஏற்படுத்தும் மாற்றங்கள் உட்பட) செலவுகள் ஒரு முறைக்கு ரூ.1000/-. வரை கவராகும். பாலிசிதாரருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்ந்து 24 மாதங்களுக்கு கவர் செய்யப்படும் | ||
செயற்கை உறுப்புகளின் விலைதுண்டிக்கப்பட்ட உறுப்புகளுக்கு மாற்றாக செயற்கை உறுப்புகளுக்கு ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 10% வரை கவராகும். |
பிரிவு II - வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகள்
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். | ||
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும். | ||
அறை வாடகைஅறை (ஒற்றை ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும். | ||
ஐசியூ கட்டணம்இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும். | ||
எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. |
பிரிவு II இன் கீழ் கவராகும் சிறப்பு நிலைகள்
| Plan A | Plan B | |
|---|---|---|
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
பிரிவு III - வெளிநோயாளருக்கான செலவுகள்
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
வெளிநோயாளருக்கான செலவுகள்நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது நோயறிதல் மையங்களில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
பிரிவு IV - நவீன சிகிச்சைக்கான பாதுகாப்பு
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
நவீன சிகிச்சைபலூன் சினுப்ளாஸ்டி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
பிரிவு V - தனிப்பட்ட விபத்து
| ப்ளான் A | ப்ளான் B | |
|---|---|---|
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்உலகில் எங்கு விபத்து நடந்தாலும், ஒரு நபர் கூடுதல் செலவின்றி தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும். |

காத்திருப்பு காலம்
திட்டம் A இன் கீழ் நீரிழிவு மற்றும் அதன் தொடர்பான சிக்கல்களுக்கு காத்திருப்பு காலம் கிடையாது. இருப்பினும், திட்டம் B இன் கீழ், 12 மாதங்களுக்குப் பிறகு அவை கவராகும்.
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜூக்கு இங்கே க்ளிக் செய்க.
தவணை வசதி: ப்ரீமியம் தொகையை அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.
ப்ரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் பலன்/பிரீமியம் விளக்கப்படம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஃப்ரீ லுக் பீரியட்
ஃப்ரீ லுக் பீரியட் புதிய தனிநபர் மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்குப் பொருந்தும். எனினும், புதுப்பித்தல்கள் அல்லது பாலிசியை போர்ட் செய்யும் போதோ / மாற்றும் போதோ பொருந்தாது.
பாலிசி எடுத்த நாளில் இருந்து 15 நாட்கள் வரை, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உடன்பாடு இல்லாத பட்சத்தில், பாலிசிதாரர் தனது பாலிசியை திருப்பி அளிக்க முடியும்.
ஃப்ரீ லுக் பீரியடில் காப்பீடு செய்தவர் க்ளைம் செய்யவில்லை என்றால், காப்பீடு செய்தவருக்கு பின்வரும் உரிமைகள் உண்டு
1. காப்பீடு செய்த நபரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணங்கள் நீங்கலாக மற்ற தொகையினை திரும்பப் பெற முடியும்.
அல்லது
2. பாலிசியை திரும்பப் பெற முடிவு எடுக்கும் பட்சத்தில், அதற்கு முன்பு பாலிசிதாரர் க்ளைம் செய்திருந்தால், க்ளைம் தொகை நீங்கலாக மீதமுள்ள பிரீமியம் திரும்பக் கிடைக்கும்.
அல்லது
3. பாலிசி புதுப்பித்தலின் போது ஃப்ரீ லுக் பீரியட் சலுகை பொருந்தாது
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்
இந்த பாலிசியானது வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
புதுப்பித்தலுக்கான கூடுதல் காலம்
பாலிசி காலாவதியான நாளிலிருந்து 30 நாட்கள்.
குறிப்பு
பிரீமியம் புதுப்பித்தல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் IRDAI இன் முன் அனுமதியுடன் மாற்றத்திற்கு உட்பட்டவை.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
அனைத்து திட்டங்களையும் பார்க்கஉடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்


உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
நீரிழிவு நோய்க்கான மருத்துவ காப்பீடு
பெரும்பான்மையான மக்கள் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும். இது பெரும்பாலும் மற்ற கடுமையான நோய்கள் பாதிப்பு ஏற்படுத்தத் தூண்டுகிறது. மேலும் இது மாரடைப்புக்கான முதன்மைக் காரணமாக அறியப்படுகிறது.
“இந்தியாவில் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்”- என்று மெடிக்கல் நியூஸ் டுடே 28-ஜூலை-2021 அன்று பதிவு செய்துள்ளது.
இளம் தலைமுறையினர் இடையே நீரிழிவு நோய் பாதிப்பு என்பது பொதுவானதாகி வருகிறது. நீரிழிவு நோயில் டைப் I மற்றும் டைப் II என்று இரண்டு வகை உள்ளது.
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை பிரச்சனைகளை நிர்வகிக்க, அதனை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிலையான கண்காணிப்பு அவசியம். முறையான மருத்துவ கவனிப்புடன், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மேற்கொள்ள முடியும். இருப்பினும், விரிவான மருத்துவ சிகிச்சை காரணமாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீடு தேவைப்படலாம். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும்.
டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி
பெயருக்கு ஏற்றார் போல், டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியானது டைப் I அல்லது டைப் II நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் கவர் செய்கிறது. இந்தத் திட்டம் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சை செலவுகளை கவர் செய்கிறது.
18 முதல் 65 வயதுக்குட்பட்ட டைப் I அல்லது டைப் II நீரிழிவு நோயாளிகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் எவற்றிற்கெல்லாம் கவர் செய்ய முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்த பாலிசியுடன், பிளான் ஏ மற்றும் பிளான் பி ஆகிய இரண்டு திட்ட விருப்பங்களைப் பெறுவீர்கள்.
டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி - திட்டம் A-ல் காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவை. மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளும், நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்களுக்கான அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் க்ளைம் தாக்கல் செய்ய இந்த திட்டம் உங்களை அனுமதிக்கிறது.
கார்டியோ வாஸ்குலர் சிஸ்டம், சிறுநீரக அமைப்பு, கண் நோய்கள், நீரிழிவு பெரிஃபெரல் வாஸ்குலர் நோய்கள் மற்றும் கால் புண்கள் போன்ற நீரிழிவு சிக்கல்களுக்கு பிளான் ஏ முதல் நாளில் இருந்து காப்பீடு வழங்குகிறது.
டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டம் Bக்கு காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. பாலிசி காலத்தில் நீரிழிவு நோயினால் உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் செலவுகள் அனைத்தும் காப்பீட்டுத் தொகையில் கவராகும்.
பிளான் B இல், இதய இரத்த நாள அமைப்பு, சிறுநீரக அமைப்பு, கண் நோய்கள், கால் புண், நீரிழிவு புற வாஸ்குலர் நோய்கள் மற்றும் நீரிழிவு நோயின் பிற சிக்கல்கள் தொடர்பான மருத்துவச் செலவுகள் 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு வழங்கப்படும்.
நீரிழிவு அல்லாத சிக்கல்களுக்கு உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் அனைத்து சிகிச்சைக்கான செலவுகளும் காப்பீட்டுத் தொகை வரம்புக்கு உட்பட்டு இரண்டு திட்டங்களிலும் கவர் செய்யப்படுகிறது. இந்த பாலிசியின் கீழ், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம் 48 மாதங்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு இது 24 மாதங்கள் மற்றும் பாலிசிக்கான ஆரம்பக் காத்திருப்பு காலம் விபத்துக்கள் தவிர 30 நாட்களாகும்.
உங்கள் உடல்நல பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து சரியான திட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- இரண்டு திட்டங்களும் தனிநபர் அடிப்படையிலும், ஃப்ளோட்டர் அடிப்படையிலும் வாங்கப்படலாம், கணவர் மற்றும் அவரது மனைவி என இருவரில் ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இருவரையும் இது கவர் செய்யும். வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் கிடைக்கும்
- இந்த பாலிசியில் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ₹10,00,000 ஆகும்
- இரண்டு திட்டங்களும் உங்கள் டே கேர் மருத்துவ செலவுகள் மற்றும் நவீன சிகிச்சைக்கான செலவுகளை (துணை வரம்புகள் வரை) கவர் செய்கிறது
- கண்புரை அறுவை சிகிச்சைகள் காப்பீட்டுத் தொகையின் குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள் கவராகும்
- டயாலிசிஸ் செலவுகள் கவராகிறது
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிதாரருக்கு உலகில் எங்கு விபத்து ஏற்பட்டு இறப்பு நேர்ந்தாலும் பாலிசி கவராகும்.
- அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள்
- அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், மருத்துவப் பயிற்சியாளர், ஆலோசகர்கள், சிறப்புக் கட்டணம்
- ஒரு பாலிசி காலத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை கட்டணம் ரூ.2,000 வரை
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு முன்பாக, 30 நாட்கள் வரை ஏற்பட்ட செலவுகளும் கவராகும்
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவமனை தொடர்பான செலவுகளில் 7% வரை கவராகும். அதாவது, ஒருமுறை மருத்துவமனையில் ஏற்படும் செலவில் அதிகபட்சமாக ரூ.5,000/- வரை கவராகும்
- உணவுக்கு முந்தைய சோதனை மற்றும் உணவுக்குப் பிந்தைய மற்றும் HbA1C சோதனைகள் ஆகியவை, எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையில் மேற்கொள்ளும் போதும், ஒரு நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 750/- ம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.1500/-ம் கவராகும். மருத்துவ ஆலோசனை, பிற நோய் கண்டறிதல், மருந்துகள் போன்ற வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி காலத்தில் குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்
- ஐசியூ கட்டணம்
- இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செலவுகள்
- மருத்துவ செலவுகள்
- பாலிசி காலத்தில் ஒருமுறை, அடிப்படை காப்பீட்டுத் தொகை தீர்ந்தவுடன், முழு தொகையும் 100% ரீஸ்டோர் செய்யப்படும்.
- காப்பீட்டுத் தொகையில் 10% வரை செயற்கை உறுப்பு பொருத்துவதற்கான செலவு கவராகிறது.
ஸ்டார் ஹெல்த் டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி காரணமாக உங்கள் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே:
- குறிப்பிட்ட பாதிப்புக்காக காத்திருப்பு காலத்தின் போது மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்
- உடல் பருமன் தொடர்பான மருத்துவ ஆலோசனை மற்றும் மதிப்பீட்டிற்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்
- மலட்டுத்தன்மை மற்றும் கருவுறுதல் தொடர்பான சிகிச்சை
- தாமாக ஏற்படுத்திக் கொண்ட காயம்
- முகக் கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ் மற்றும் பல் சிகிச்சைகள் ஆகியவற்றின் கட்டணம்
ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பாலிசி ஆவணங்களைப் படிக்கவும்
டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதற்கான காரணங்கள்
நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தவிர மற்ற மருத்துவமனை செலவுகளையும் கவர் செய்கிறது
- கார்டியோவாஸ்குலர் நோய், சிறுநீரக அமைப்பின் நோய்கள், கண் மற்றும் கால் புண்கள் போன்ற நோய்கள் பிளான் A இல் காத்திருப்பு காலம் இன்றி கவர் ஆகும். அதே சமயம், பிளான் B இல் காத்திருப்பு காலத்துடன் கவராகும்.
- பாலிசி காலத்தின் போது ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகை தீர்ந்தவுடன், முழு காப்பீட்டுத் தொகையையும் 100% தானாக மீட்டமைக்கப்படும்
- செலுத்தப்பட்ட பிரீமியம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80D இன் கீழ் நிவாரணத்திற்குத் தகுதியானது
- க்ளைம் போது கோ-பேமண்ட் தேவையில்லை
FAQ's
டயபிடிஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில், நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் அனைத்து செலவுகளும் கவர் ஆகின்றன.
- இந்த திட்டத்தின் கீழ் ஆரம்ப காத்திருப்பு காலம் 30 நாட்கள் (விபத்துகள் தவிர).
- PEDகளுக்கான காத்திருப்பு காலம் 48 மாதங்கள்.
- குறிப்பிட்ட நோய்களுக்கு, இது 24 மாதங்கள்.
திட்டம் A இன் கீழ் - வகை I மற்றும் வகை II நீரிழிவு நோய்க்கான சிக்கல்கள் முதல் நாளில் இருந்து கவர் செய்யப்படுகின்றன.
திட்டம் B-ன் கீழ் - வகை I மற்றும் வகை II நீரிழிவு நோய்களின் சிக்கல்களுக்கு 12 மாதங்களுக்குப் பிறகு கவர் செய்யப்படும்.
ஆம். இந்த திட்டம் மற்ற நோய்களுக்கும் பொருந்தும்.
கண்புரை, சிவிடி மற்றும் நவீன சிகிச்சைகளுக்கு துணை வரம்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு பாலிசி விதியைப் பார்க்கவும்.
பிளான் ஏ மற்றும் பிளான் பி ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும் இரண்டு வகைகளாகும்.
நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்ட 18-65 வயதுடைய எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்க தகுதியுடையவரே.

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



