யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி
IRDAI UIN: SHAHLIP22036V042122
முக்கியமானவை
அவசியமானவற்றை திட்டமிடுக
இடைக்கால சேர்க்கை
கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம், புதிதாக திருமணம் செய்த மனைவி/கணவர், பிறந்த குழந்தை மற்றும்/அல்லது சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆகியோர் பாலிசியில் சேர்க்கப்படலாம். காத்திருப்பு காலம் அவர்கள் சேரும் தேதியில் இருந்து பொருந்தும்.
நுழைவு வயது
18 முதல் 40 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 91 நாட்கள் முதல் 25 வயது வரை உள்ள மூன்று குழந்தைகள் வரை காப்பீடு பெறுவார்கள்.
சிறப்பு தள்ளுபடி
36 வயதுக்கு முன் பாலிசியை பெறுவதற்கும், தொடர்ந்து 40 வயது வரை பிரீமியம் செலுத்துபவருக்கும், 41 வயதில் இருந்து பிரீமியத்தில் 10% தள்ளுபடி பொருந்தும்.
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெறப்படும் வெல்னஸ் புள்ளிகள், பாலிசி புதுப்பித்தலின் போது 2-10% வரை தள்ளுபடி பெறுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
சாலை விபத்துக்கான கூடுதல் கவரேஜ் தொகை
அடிப்படைக் காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால், சாலை விபத்துகள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில், கவரேஜ் தொகை 25% அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ. 10,00,000/- வரை கவர் செய்யப்படும்.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், ஆண்டுக்கு 1 முறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும் செலுத்தலாம்.
உடல்நல பரிசோதனை
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை இதில் அவசியமில்லை.
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
விரிவான பட்டியல்
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
Gold Plan | Silver Plan | |
---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும். | ||
டிஸ்சார்ஜுக்கு பின்புடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும். | ||
அறை வாடகைமருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும். | ||
சாலை வழி ஆம்புலன்ஸ்காப்பீடு செய்யப்பட்ட நபரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும், சிறந்த சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் ஏற்படும் கட்டணங்கள் கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான கட்டணம் கவராகிறது. | ||
நவீன சிகிச்சைவாய்வழி கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். | ||
சாலை போக்குவரத்து விபத்துக்கான கூடுதல் அடிப்படைத் தொகை (RTA)அடிப்படை கவரேஜ் தொகை தீர்ந்துவிட்டால், சாலை விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், கவரேஜ் 25% அதிகரித்து அதிகபட்சமாக ரூ. 10,00,000/ வரை கவர் செய்யப்படும். | ||
அடிப்படை கவரேஜ் தொகை ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்பாலிசி காலத்தில் கவரேஜ் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தினால், அதே பாலிசி காலத்தில் 100% கவரேஜ் தொகை ரீஸ்டோர் செய்யப்படும். | ||
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் கவரேஜ் தொகையில் 20% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படும். இது அதிகபட்சமாக 100% வரை வழங்கப்படும். | ||
ஆன்லைன் தள்ளுபடிஆன்லைன் மூலம் முதல் முறையாக பாலிசியை வாங்குவதற்கு பிரீமியத்தில் 5% தள்ளுபடி கிடைக்கும். | ||
சிறப்பு தள்ளுபடி36 வயதுக்கு முன் பாலிசியை பெறுவதற்கும் 40 வயதுக்குப் பிறகு புதுப்பிப்பதற்கும் பிரீமியத்தில் 10% தள்ளுபடி பொருந்தும். | ||
ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன்நிறுவனத்தின் வல்லுநர் குழுவிடமிருந்து, ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன் பெறும் வசதி காப்பீடு செய்யப்பட்ட நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும். | ||
உடல்நல பரிசோதனைநெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனைச் செலவுகள், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவர் செய்யப்படும். | ||
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. மேலும், தான் பெற்ற வெல்னஸ் போனஸ் புள்ளிகள் மூலம் அதிகபட்சம் 10% வரை பாலிசி புதுப்பித்தல் போது தள்ளுபடிகளைப் பெறலாம். | ||
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் ஆப்ஷனை வழங்குகிறது. | ||
மகப்பேறு செலவுகள்ஒரு பிரசவத்திற்கு அதிகபட்சம் ரூ. 30,000/- என்று மொத்தம் 2 டெலிவரி வரை சிசேரியன் உட்பட பிரசவ செலவுகள் கவராகும். | ||
ஹாஸ்பிடல் கேஷ் பலன்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 வழங்கப்படும். இது ஒவ்வொரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகபட்சம் 7 நாட்களுக்கும், பாலிசி காலத்தில் 14 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. |
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
பதிவிறக்கங்கள்
பிரீமியம் விளக்கப்படம்
வெல்னஸ் நன்மைகள்
பொதுவான கால விதிமுறைகள்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
ஸ்டார் நன்மைகள்
க்ளைம்ஸ்
மருத்துவமனைகள்
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்
ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.