New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
DND Registration

ஸ்டார் கேன்சர் கேர் பிளாட்டினம் இன்ஷூரன்ஸ் பாலிசி

India +91✓

IRDAI UIN: SHAHLIP22031V022122

HIGHLIGHTS

Plan Essentials

purple essential logo 3

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த பாலிசி பெறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டியது கட்டாயமில்லை.

purple essential logo 3

தனித்துவமான கவரேஜ்

புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாத நோய்களுக்கான மருத்துவ செலவுகளை கவர் செய்கிறது

purple essential logo 2

மொத்த தொகை கவரேஜ்

புற்றுநோய், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும்/அல்லது முதல் புற்றுநோயுடன் தொடர்பில்லாத இரண்டாவது வகை புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கு ஒரு மொத்த தொகை காப்பீடு வழங்கப்படுகிறது.

purple essential logo 3

ஹாஸ்பிஸ் கேர்

புற்றுநோய் தீவிரம் காரணமாக, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கு வழங்கப்படும் அக்கறையான சிகிச்சை.

Detailed List

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

பிரிவு I

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம்.

நுழைவு வயது

5 மாதங்கள் முதல் 65 வயது வரை உள்ள புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்கள் இந்த பாலிசியைப் பெறலாம்.

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான விருப்பங்கள் ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- மற்றும் ரூ. 10,00,000/-.

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும்.

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 2% வரை கவர் செய்யப்படும்.

சாலைவழி ஆம்புலன்ஸ்

பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் கவராகின்றன.

அறை வாடகை

தனி ஏ/சி அறை, உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும்.

ICU கட்டணம்

இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும்.

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.

நவீன சிகிச்சை

நவீன சிகிச்சை செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.

டே கேர் சிகிச்சை நடைமுறைகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் கவராகின்றன.

மறுவாழ்வு & வலி மேலாண்மை

மறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவுகள், ஒரு பாலிசி ஆண்டில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில், குறிப்பிட்ட துணை வரம்பு வரை அல்லது அதிகபட்சமாக 10% வரை என இவை இரண்டில் எது குறைவான தொகையோ அது கவராகும்.

ஹாஸ்பிஸ் கேர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு, 12 மாத காத்திருப்பு காலம் முடிந்த பிறகு, நெட்வொர்க் மருத்துவமனைகளில் கருணையுடன் கூடிய பராமரிப்புக்காக, காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% கவர் செய்யப்படும்.

கோ - பேமண்ட்

பாலிசிதாரர் தனது 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளைம் தொகைக்கும் 10% இணை-தொகை செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த போனஸ்

ஒட்டுமொத்த போனஸ் முறையை பொறுத்தவரை, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், காப்பீட்டுத் தொகையில் 5% முதல் அதிகபட்சம் 50% வரை ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது.

2வது மருத்துவ ஆலோசனை

பாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறலாம்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனைக்கு ஆகும் செலவுகள் ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், ரூ. 2500/- வரை கவராகிறது.

வெல்னஸ் சேவைகள்

இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

தவணை விருப்பங்கள்

இந்த பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

பிரிவு II

புற்றுநோய்க்கான மொத்த தொகை கவரேஜ் - ஆப்ஷனல் கவரேஜ்

புற்றுநோய், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும்/அல்லது முதல் புற்றுநோயுடன் தொடர்பில்லாத இரண்டாவது புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில் மொத்தத் தொகை வழங்கப்படுகிறது. பிரிவு I இன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக இந்த நன்மை வழங்கப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகையானது பிரிவு I காப்பீட்டுத் தொகையில் 50% ஆகும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

அனைத்து திட்டங்களையும் பார்க்க
உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

கூடுதல் தகவல்கள் தேவையா?
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
ஸ்டார் கேன்சர் கேர் பிளாட்டினம் இன்ஷூரன்ஸ் பாலிசி
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in