

ஸ்டார் ஸ்பெஷல் கேர்
IRDAI UIN: SHAHLIP21243V022021
HIGHLIGHTS
Plan Essentials
தனித்துவமான பாலிசி
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் சிறப்பு பாலிசி இது.
நுழைவு வயது
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 3 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பாலிசியைப் பெறலாம்.
காப்பீட்டுத் தொகை
இந்த பாலிசியானது ரூ. 3,00,000/- காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை
இந்த பாலிசியைப் பெற பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், சிகிச்சையின் விவரங்கள் உட்பட முந்தைய மருத்துவ பதிவுகள் முன்மொழிவுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி வகைஇந்த பாலிசியானது தனிநபர் அடிப்படையில் மட்டுமே பலன்களை வழங்குகிறது. |
பாலிசி காலம்இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம். |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
டிஸ்சார்ஜூக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் அல்லது இதர செலவுகளில் 7% வரை கவர் செய்யப்படும். |
அறை வாடகைஉள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் ஒரு நாளைக்கு ரூ.5,000/- வரை கவர் ஆகும். |
அறை பகிர்ந்து தங்கியிருத்தல்பாலிசிதாரர் பகிர்ந்து தங்கியிருப்பதற்கான செலவுகள், ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஒரு நாளுக்கு ரூ.500 வரை கவர் செய்யப்படும். இது அதிகபட்சமாக ரூ.2,000/- ஆகவும். பாலிசி காலத்தில் ரூ.10,000/ வரையும் கவராகிறது. |
எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்பாலிசிதாரரை ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ. 750/- வரையும், பாலிசி காலத்தில் ரூ.1500/-.வரையும் கவராகிறது.
|
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது. |
கோ-பேமண்ட்இந்த பாலிசி படி, புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாலிசிக்கான ஒவ்வொரு க்ளைம் போதும், 20% தொகையை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். |
நவீன சிகிச்சைவாய்வழியாக செய்யப்படும் கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா விட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
|
துணை வரம்புகள்பாலிசி பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி சில நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் துணை வரம்புகளுக்கு உட்பட்டது.
|
காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 48 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள்/நடைமுறைகளுக்கு - 24 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜ் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
புதுப்பித்தல்
25 வயது வரை புதுப்பிக்கலாம். 25 வயதுக்கு மேல், பாலிசிதாரர்களுக்கு ஏதுவான காத்திருப்பு காலத்துடன் தொடர்ச்சியான பலன்களுடன் கூடிய, வேறு ஏதேனும் தனிநபர் இழப்பீடு அடிப்படையிலான உடல்நலக் காப்பீட்டு பாலிசி வழங்கப்படும்.
புதுப்பித்தலுக்கான கூடுதல் காலம்
பாலிசி காலாவதியான நாளிலிருந்து 30 நாட்கள்.
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறு ஆய்வு செய்ய, காப்பீடு செய்தவர் பாலிசி எடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்ளலாம். அவர் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருப்தி அடையவில்லை என்றால், க்ளைம் ஏதும் எடுக்காத பட்சத்தில் பாலிசியை ரத்து செய்யக் கோரலாம், அப்படியொரு சூழலில், காப்பீடுக்கு முந்தைய மருத்துவ சோதனை, முத்திரைத் தீர்வை கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்த பிறகு, நிறுவனம் பிரீமியம் தொகையை திருப்பிச் செலுத்த அனுமதிக்கும்.
பாலிசியைப் புதுப்பிக்கும் போது ஃப்ரீ லுக் பீரியட் பொருந்தாது.
கவராகும் சிகிச்சைகள்
சில நடைமுறைகள் மற்றும்/அல்லது சிகிச்சைகளின் போது ஏற்படும் செலவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும்:
| நோய் / சிகிச்சை | ஒரு பாலிசி காலத்திற்கான வரம்பு ரூ. |
|---|---|
| அடினோ டான்சிலெக்டோமி | ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.25,000/- |
| வலிப்பு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தல் | ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.30,000/- |
| அறுவை சிகிச்சை தேவைப்படும் எலும்பு முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தல் | ஒரு பாலிசி காலத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% வரை |
| போடோக்ஸ் ஊசி (உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது மட்டுமே செலுத்தப்படும்) | ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.5000/- அதிகபட்சமாக ரூ.20,000/-க்கு உட்பட்டது. |
| பிஹேவியரல் சிகிச்சை, பிசியோதெரபி, ஆக்குபேஷ்னல் தெரபி மற்றும் ஸ்பீச் தெரபி | ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.1,500/- வரை |
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
அனைத்து திட்டங்களையும் பார்க்கஉடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்


உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



