

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.
IRDAI UIN: SHAHLIP26045V042526
HIGHLIGHTS
Plan Essentials
ஏதுவான பாலிசி
காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பால், இந்தியாவில் அனைவருக்கும் ஏற்ற வகையில் சிக்கனமான ப்ரீமியத்துடன் கூடிய ஒரு ஏதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
பாலிசியின் வகை
இந்தப் பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் வகையாக வாங்கலாம்.
காப்பீட்டு நுழைவு வயது
18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியை வாங்கலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 3 மாதங்கள் முதல் 25 வயது வரையிலான, பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் அதிகபட்சம் மூன்று குழந்தைகள் வரை இந்த காப்பீட்டின் பாதுகாப்பினை பெறுவார்கள்.
இலகுவான கொள்கை
18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். ஒரு குடும்பம் சுயமாக, மனைவியாக, சார்ந்திருக்கும் குழந்தைகள் (3 மாதங்கள் முதல் 25 வயது வரை) மற்றும் பெற்றோர்களாக இருக்கலாம்.
டே கேர் சிகிச்சை நடைமுறைகள்
தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சை முறைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆயுஷ் சிகிச்சை
ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
நவீன சிகிச்சை
நவீன சிகிச்சைகளான ஓரல் கீமோதெரபி, இன்ட்ரா விட்ரியல் ஊசிகள், ரோபாடிக் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கான செலவுகள் சம் இன்ஷூர்டு தொகையில் 50% வரை காப்பீடு செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்த போனஸ்
மொத்த காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 50 சதவீதத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் மொத்த காப்பீட்டுத் தொகையின் 5% ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி காலம்இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம். |
ப்ரீ-மெடிக்கல் பரிசோதனை50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன்பு, நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் மையங்களில் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும். |
மொத்த காப்பீட்டுத் தொகை (சம் இன்ஷூர்டு)இந்த பாலிசி ரூ. 50,000/- துவங்கி ரூ. 10,00,000/- வரை (ரூ. 50,000/-த்தின் மடங்குகளாக) மொத்த காப்பீட்டுத் தொகைக்கான வாய்ப்புகளை தேர்வு செய்ய வழங்குகின்றது. |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்உடல்நல பாதிப்பு, காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கான செலவுகள் பாலிசியால் ஈடுசெய்யப்படும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் சேர்த்து, மருத்துவமனையில் சேர்க்கப்படும் தேதிக்கு முன்பு 30 நாட்கள் வரை செய்யப்படும் மருத்துவ செலவுகளும் பாலிசியின் காப்பீட்டின் கீழ் வரும். |
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்புசிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன தேதியிலிருந்து, 60 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும் மருத்துவ செலவுகளும் பாலிசியின் காப்பீட்டின் கீழ் வரும். |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது செய்யப்படும் செலவுகளான அறை வாடகை, தங்கும் செலவுகள் மற்றும் நர்சிங் செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 5000/- வீதம் மொத்த காப்பீட்டுத் தொகையில் 2% வரை வழங்கப்படும்உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது செய்யப்படும் செலவுகளான அறை வாடகை, தங்கும் செலவுகள் மற்றும் நர்சிங் செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 5000/- வீதம் மொத்த காப்பீட்டுத் தொகையில் 2% வரை வழங்கப்படும். |
ICU கட்டணங்கள்மொத்த காப்பீட்டுத் தொகையில் 5% வரை ICU கட்டணத்திற்காக, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 10,000/- வரை பாலிசியின் கீழ் வழங்கப்படும். |
சாலைவழி ஆம்புலன்ஸ்மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.2000/- வரையிலான கட்டணங்கள் காப்பீட்டின் கீழ் வரும். |
டே கேர் சிகிச்சை முறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும். |
ஆயுஷ் சிகிச்சைஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. |
கிராமப்புறத்திற்கான தள்ளுபடி59 வயது வரையிலான காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பிரீமியத்தில் 10% தள்ளுபடி பொருந்தும், அதே நேரத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு 20% தள்ளுபடி பொருந்தும். |
ஆயுள் முழுவதும் புதுப்பிக்கும் வசதிஇந்த பாலிசி ஆயுள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது. |
ஒட்டுமொத்த போனஸ்மொத்த காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 50 சதவீதத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் மொத்த காப்பீட்டுத் தொகையின் 5% ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது. |
கோ-பேமென்ட்பாலிசியின் கீழ் கோரப்படும் ஒவ்வொரு க்ளைமும், முடிவாகும் க்ளைம் தொகையில் 5% கோ-பேமென்ட்டிற்கு உட்படுத்தப்படும் மற்றும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அதனை செலுத்த வேண்டியிருக்கும். |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக செய்யப்படும் செலவுகள், மொத்த சம் இன்ஷூர்டு தொகையில் 25%, அல்லது ஒரு பாலிசி ஆண்டில் ஒரு கண்ணுக்கு ரூ. 40,000/- விதத்தில், எது குறைவாக உள்ளதோ அது செல்லுபடியாகும். |
தவணை முறையில் செலுத்தும் வாய்ப்புகள்இந்த பாலிசியின் ப்ரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், ஆண்டுதோறும் செலுத்தும் வசதியும் உள்ளது. |
காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 48 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள்/ மருத்துவ சிகிச்சைகள் - 24/48 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
மாற்றும் வசதி (போர்ட்)
இந்தக் கொள்கையை மாற்றிக் (போர்ட்) கொள்ளலாம். அதற்கான விருப்பத்தை குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன் தெரியப்படுத்தி, பயன்படுத்த வேண்டும், ஆனால் பாலிசியை புதுப்பித்த தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாக அப்படி செய்ய இயலாது.
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜ் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ப்ரீமியம் குறித்த விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையிலான காப்பீட்டு பலன்/ப்ரீமியம் குறித்த விளக்கப்படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
தகுதி
கிராமப்புற பகுதிகளுக்கு ப்ரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியை பெற நீங்கள் தகுதியானவரா என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஃப்ரீ லுக் (இலவச சோதனை முயற்சி) காலம்
பாலிசியைத் துவங்கும் போது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்கும், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் பாலிசியை திரும்ப அளிப்பதிற்கும் – பாலிசியை பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்கு பாலிசிதாரருக்கு அனுமதி உள்ளது. இத்தகைய சூழலில், ப்ரீமியத்தை திரும்பப் பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகளை காணவும்:
ஃபிரீ லுக் அப் காலத்தில் பாலிசிதாரர் எந்தக் க்ளைமும் செய்யவில்லை என்றால், அவருக்கு பின்வரும் உரிமைகள் வழங்கப்படும் -
1. காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்டாம்ப் டியூட்டி கட்டணம் போன்ற செலவுகள் செய்யப்பட்டிருந்தால், செலுத்திய ப்ரீமியம் தொகையில் அவை கழிக்கப்பட்டு, மீதம் திரும்ப அளிக்கப்படும்; அல்லது
2. ரிஸ்க் ஏற்கனவே துவங்கிய நிலையில், பாலிசியை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை பாலிசிதார் கோரியிருந்தால், காப்பீட்டுக் காலத்திற்கான ரிஸ்க் ப்ரீமியம் விகிதாசார அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்டு மீதம் திரும்ப அளிக்கப்படும்; அல்லது
3. இன்ஷூரன்ஸ் கவரேஜின் ஒரு பகுதி மட்டுமே துவங்கிய நிலையில் இருந்தால், அந்த குறிப்பீட்ட காலத்திற்கான இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகைக்கு ஏற்ப ப்ரீமியம் விகிதாசார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, பிடித்தம் போக மீதம் திரும்ப அளிக்கப்படும்.
காப்பீட்டை புதுப்பிக்கும் போது ஃபிரீ லுக் அப் காலம் பொருந்தாது
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
அனைத்து திட்டங்களையும் பார்க்கஉடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்


உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.
ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருந்தாலும், நாம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் பட்டியலில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் கடைசியாகவே இருக்கும். “காப்பீடு அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா?”, “நான் ஆரோக்கியமாக இருக்கும்போது, ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்?”, “இந்த ப்ரீமியத்தை இதைவிட மதிப்புள்ள வேறு ஏதாவது ஒன்றில் செலவு செய்யலாமா?", என்பன போன்று மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்த கேள்விகள் பலமுறை நம்மிடையே எழுகிறது. இவை மிகவும் சரியான கேள்விகள் தான் என்றாலும், 2020 நமக்குக் கற்பித்த பாடத்தினை நாம் நினைவு கொள்ள வேண்டும்: நம்மால் கணிக்க முடியாதவை, நம் கண்ணுக்குத் தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே அந்த பாடம்!
மருத்துவ சிகிச்சைகளின் விலை உயர்ந்துவிட்டது, குறிப்பாக தனியார் துறையில்; எனவே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது அவசியமாகும். எங்களுக்குத் தெரிந்தவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகை முழுவதையும் செலவிட நேரலாம், மற்றும் உங்கள் நிதிநிலை மோசமாக திசை மாறலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெறுமாறு பரிந்துரைப்பது எதற்கென்றால், இதன் மூலம் ஏதேனும் அவசர மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியும்.
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (IRDAI) அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுப்படியாகக் கூடிய விலையில் முழுமையான கவரேஜ் தேடுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவை மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆரோக்ய சஞ்சீவனி இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம், எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்கையில், பாலிசிதாரருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பினை அளிப்பதில் அது உதவும்.
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி என்பது இழப்பீடு அடிப்படையிலான ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும், இது ரூ.10 லட்சம் வரை உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் செலவுகள், டே கேர் சிகிச்சைகள்/செயல்முறைகள், கோவிட்-19 சிகிச்சை, ஆயுஷ் சிகிச்சை மற்றும் பலவற்றிற்காக தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் காப்பீட்டுப் பாதுகாப்பினை வழங்குகிறது.
தனிநபர், அவரது கணவர்/மனைவி மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது வரையிலான சார்ந்திருக்கும் குழந்தைகளை காப்பீட்டு வரம்பிற்குள் கொண்டுவரும் ஒரு குடும்பத்திற்கான ஃப்ளோட்டர் திட்டமாகவும் தேர்வுசெய்ய, ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் இத்திட்டத்தை உங்களது பெற்றோர்கள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்காவும் வாங்கலாம்.
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியின் கீழ் பெறப்படும் காப்பீட்டு பாதுகாப்பில் (கவரேஜ்) பின்வருபவை உள்ளடங்கும்:
- உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் செலவுகள்
- மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
- கண்புரை சிகிச்சை
- ஆயுஷ் சிகிச்சை
- டே கேர் சிகிச்சைகள்
- ஆம்புலன்ஸ் செலவுகள்
- நவீன சிகிச்சைகள்
- தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான (ICU/ICCU) செலவுகள்
- கோவிட்-19 சிகிச்சைக்கான காப்பீட்டுப் பாதுகாப்பு
- டெலி மெடிசின் சர்வீஸ் - ஸ்டார் நிபுணர்களுடன் பேசும் வசதி
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் திட்ட அம்சங்கள்
| பொருள் | பிரிவு | ||
|---|---|---|---|
| நுழைவு வயது | 18 வயது முதல் 65 வயது வரை | ||
| சார்ந்திருக்கும் குழந்தைகள் – 3 மாதங்கள் முதல் 25 வயது வரை | |||
| புதுப்பித்தல் (ரினீவல் | ஆயுள் முழுவதும் | ||
| பாலிசி காலம் | 1 வருடம் | ||
| மொத்தக் காப்பீட்டுத் தொகை (சம் இன்ஷூர்டு) ரூபாயில் | 0.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை (50,000-த்தின் மடங்குகளாக) | ||
| கோ-பேமென்ட் | செல்லுபடியாகும் அனைத்து க்ளைம்களிலும் 5% | ||
| ப்ரீமியத்தில் தள்ளுபடி | 20% கிராமப்புற தள்ளுபடி | ||
| காத்திருப்பு காலம் | ஏற்கனவே இருக்கும் உடல்நல பாதிப்புகளுக்கு (PED) -48 மாதங்கள் | குறிப்பிட்ட நோய்களுக்கு - 24/48 மாதங்கள் | ஆரம்ப காத்திருப்பு காலம்– 30 நாட்கள் (விபத்துகள் தவிர) |
| பலன்கள் | காப்பீட்டு வரம்பு (கவரேஜ் லிமிட்) | காப்பீட்டு பாதுகாப்பின் விவரம் |
|---|---|---|
| உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் | மொத்த காப்பீட்டுத் தொகை (S.I) மற்றும் போனஸ் (ஏதாவது இருப்பின்) | உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெறும் சிகிச்சைகளுக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்கும். |
| மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு | மொத்தக் காப்பீட்டுத் தொகை (S.I.) வரை | அவசியத்தின் பேரில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் தேதிக்கு முன்பு – நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்கள் என்கிற காலகட்டத்திற்குள் பெறப்படும் அட்மிஷனுக்கு முந்தைய சிகிச்சைகள் காப்பீட்டின் கீழ் வரும். |
| மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பின்பு | மொத்தக் காப்பீட்டுத் தொகை (S.I.) வரை | மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பின்பு, நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்கள் என்கிற காலகட்டத்திற்குள் அளிக்கப்படும் சிகிச்சைகள் காப்பீட்டின் கீழ் வரும். |
| டேகேர் சிகிச்சைகள் / மருத்துவ செயல்முறைகள் | காப்பீட்டின் கீழ் வரும் | 24 மணிநேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறப்படும் அனைத்து டேகேர் மருத்துவ செயல்முறைகள், அறுவைசிகிச்சைகள், மற்றும் சிகிச்சைகளும் காப்பீட்டின் கீழ் வரும். |
| கோவிட்-19 சிகிச்சைகள் | காப்பீட்டின் கீழ் வரும் | மற்ற நோய்களுடன் சேர்த்து கோவிட்-19=க்கான சிகிச்சையும் இதில் உள்ளடங்கியுள்ளது. இருப்பினும், இந்த பாலிசியின் கீழ் கோவிட்-19 தொடர்பான செலவுகளுக்கு 30 நாட்கள் ஆரம்பக் காத்திருப்பு காலம் உள்ளது. |
| நவீன சிகிச்சைகள் | காப்பீட்டின் கீழ் வரும் | பலூன் சைனுப்ளாஸ்டி, இம்யூனோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி உள்ளிட்ட 12 நவீன சிகிச்சைகள் காப்பீட்டின் கீழ் வரும் . மொத்தக் காப்பீட்டு தொகையில் 50% வரை இதற்காக வழங்கப்படும். |
| கண்புரை அறுவைசிகிச்சை | காப்பீட்டின் கீழ் வரும் | மொத்த காப்பீட்டுத் தொகையில் 25% அல்லது ரூ.40,000/- என எது குறைவாக இருக்கிறதோ அது வரை - கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளை பாலிசி ஏற்கும். பாலிசி ஆண்டில் ஒவ்வொரு கண்ணுக்கும் இது பொருந்தும். |
- தகுதி
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் வாங்கலாம். ஆரோக்ய சஞ்சீவனி ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான் – பாலிசிதாரருக்கு – கணவர், மனைவி ஆகிய இரண்டு பெரியவர்கள், மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது வரை உள்ள சார்ந்திருக்கும் மூன்று குழந்தைகள், மற்றும் பாலிசிதாரரின் பெற்றோர் மற்றும் மாமனார் மாமியார் ஆகியோரை காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு பெற அனுமதிக்கிறது.
- காப்பீட்டுத் தொகை
இத்திட்டம், தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 50,000 முதல் அதிகபட்சம் ரூ. 10 லட்சம்.வரையிலான மொத்த காப்பீட்டுத் தொகையை (சம் இன்ஷூர்டு) வழங்குகிறது.
- காப்பீட்டுக் காலம்
1 வருடத்திற்கு கிடைக்கும்.
- கோ-பேமென்ட்
செல்லுபடியாகும் க்ளைம் தொகையில் 5% கோ-பேமென்ட் வசதி உள்ளது, அதாவது, தகுதியான க்ளைமை கோரும் போது பாலிசிதாரர் (காப்பீடு செய்யப்பட்டவர்) 5% தொகையை செலுத்த, மீதமுள்ள 95% தொகையை காப்பீட்டு நிறுவனம் (காப்பீட்டாளர்) செலுத்தும். அதாவது, ஒவ்வொரு முறையும் நிறுவனத்திடம் க்ளைம் கோரி விண்ணப்பிக்கும் போதும், பாலிசிதாரர் அந்த க்ளைமில், நிர்ணயிக்கப்பட்ட 5% சதவீதத்தை செலுத்த வேண்டும், அதன் பிறகு ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீதமுள்ள க்ளைமை முறையாக செயல்படுத்தும்.
- ஒட்டுமொத்த போனஸ்
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி அதன் பாலிசிதாரர்களுக்கு மொத்த காப்பீட்டுத் தொகையில் 5% சதவீதத்தை போனஸாக ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், அதிகபட்சமாக 50% மொத்த காப்பீட்டுத் தொகையின் வரம்பு வரை வழங்குகிறது.
- காத்திருப்பு காலம்
1.பாலிசி துவங்கிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ஏற்படும் எந்தவொரு நோய்க்கும் காப்பீடு கிடையாது. விபத்து ஏற்பட்டால் விதிவிலக்கு அளிக்கப்படும்.
2.குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகள்/ அறுவை சிகிச்சைகளுக்கான கவரேஜ் 24/48 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
3.பாலிசி துவங்கிய தேதியிலிருந்து 48 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு தான், ஏற்கனவே இருக்கும் நோய்கள் காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வரும்.
- மாற்றும் வசதி (போர்ட்)
இந்த பாலிசியை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (போர்ட் செய்யலாம்) இந்த வாய்ப்பை குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன் பயன்படுத்திட வேண்டும், ஆனால், பாலிசியை புதுப்பிக்கும் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாக இருக்கக்கூடாது.
- காப்பீட்டுத் திட்டத்தை பெறுவதற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை
50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முந்தைய மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
- வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி
இந்த பாலிசியை வாங்குவதற்கான தகுதி 18 முதல் 65 வயது வரையிலான நபர்களுக்கு மட்டுமே உள்ளது என்றாலும், இந்த பாலிசியை சரியான நேரத்தில் தொடர்ந்து புதுப்பித்து வரும் பட்சத்தில், வாழ்நாள் முழுவதும் இதனை புதுப்பித்து பயன்படுத்தும் அம்சத்தை வழங்குகிறது. அப்படி செய்வதால், காப்பீட்டின் கீழ் வரும் நபர்கள் – ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான கவரேஜ், ஒட்டுமொத்த போனஸ் போன்ற பலன்களை தொடர்ந்து பெற முடியும்.
ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியின் கீழ் பல்வேறு செலவுகள் ஈடு செய்யப்படுகின்றன.
- மருத்துவமனை செலவுகள்
1.அறை வாடகை, போர்டிங் மற்றும் நர்சிங் செலவுகள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5000/-க்கு உட்பட்டு, மொத்த காப்பீட்டுத் தொகையில் 2% வரை வழங்கப்படும்.
2.தீவிர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் தீவிர இருதய சிகிச்சை பிரிவு (ICCU) ஆகியவற்றிற்கான செலவுகள் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.10000/-க்கு உட்பட்டு, மொத்த காப்பீட்டுத் தொகையில் 5% வரை வழங்கப்படும்.
3.அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவப் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களுக்கான கட்டணங்களும் காப்பீட்டின் கீழ் வருகின்றன.
4.மயக்க மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள், நோயறியும் பரிசோதனைகள், நோயறியும் இமேஜிங் முறைகளுக்கான செலவுகள் காப்பீட்டின் கீழ் வரும்.
- ஆயுஷ் சிகிச்சை
ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ், உள்நோயாளராக சேர்ந்து பெறும் சிகிச்சைகளுக்கு மொத்த காப்பீட்டுத் தொகையின் வரம்பு வரை காப்பீட்டின் கீழ் வரும். இதுவும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் செலவுகள்
இந்த பாலிசியானது சாலைவழி ஆம்புலன்ஸ் கட்டணமாக ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ரூ.2000 வரை காப்பீடு வழங்குகிறது.
- விபத்துக்கான காப்பீடு
விபத்தினால் ஏற்படும் காயம் காரணமாக உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ந்து பெறப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கான செலவுகளும் ஆரோக்ய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படுகின்றன.
- நவீன சிகிச்சைகள்
இந்த பாலிசியின் மொத்த காப்பீட்டுத் தொகையில் 50% வரை பன்னிரண்டு நவீன சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
1.யூட்டரின் ஆர்டெரி எம்பாலைசேஷன் மற்றும் HIFU (ஹை இன்டென்சிட்டி ஃபோக்கஸ்டு அல்ட்ராசவுண்ட்)
2.பலூன் சைனுப்ளாஸ்டி
3.டீப் பிரைன் ஸ்டிமுலேஷன்
4.வாய்வழி கீமோதெரபி
5.இம்யூனோதெரபிகள் - ஒரு ஊசி வழியாக கொடுக்கப்பட வேண்டிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி
6.இன்ட்ரா விட்ரியல் ஊசிகள்
7.ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்
8.ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சைகள்
9.மூச்சுக்குழாய் தெர்மோபிளாஸ்டி
10.புரோஸ்ட்ரேட் வேப்பரைசேஷன்
11.ION M இன்ட்ரா ஆப்பரேட்டிவ் நியூரோ மானிட்டரிங்
12.ஸ்டெம் செல் சிகிச்சை
13. ICU/ICCU செலவுகள்
ICU / ICCU-இல் அனுமதிப்பதால் ஏற்படும் செலவுகளுக்கு, பாலிசியின் உட்பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள தொகை வரம்பு வரை காப்பீடு வழங்கப்படும். ICU/ICCU விற்கான ஒரு நாளுக்கான அசல் கட்டணத்திற்கும், அனுமதிக்கப்பட்ட ஒரு நாள் கட்டணத்திற்கும் இடையேயான வித்தியாசத்திற்கு ஏற்ப; இதர மருந்துகளுக்கான செலவுகள் தவிர்த்து, மற்ற அனைத்து மருத்துவமனை செலவுகளையும் ரீஇம்பர்ஸ் செய்வது (திரும்ப அளித்தல்) / செலுத்துவதும் இதில் உள்ளடங்கும்.
14. கோவிட்-19 சிகிச்சைக்கான காப்பீடு
ஆரோக்ய சஞ்சீவனி மெடிகிளைம் பாலிசியில் மற்ற நோய்களுடன் சேர்த்து கோவிட்-19-க்கான சிகிச்சையும் காப்பீட்டின் கீழ் வரும். இருப்பினும், இந்த பாலிசியின் கீழ் COVID-19 தொடர்பான செலவுகளுக்கு 30 நாட்கள் ஆரம்பக் காத்திருப்பு காலம் உள்ளது.
குறைந்த ப்ரீமியங்கள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியின் ப்ரீமியங்கள் மார்கெட்டில் கிடைக்கும் மற்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.
குறைந்த கோ-பேமென்ட்
இந்த பாலிசியில் செல்லுபடியாகும் க்ளைம் கோரப்படும் போது பாலிசிதாரர் குறைந்தபட்சம் 5% கோ-பேமென்ட் செலுத்த வேண்டும்.
தவணைமுறையில் ப்ரீமியம் செலுத்தும் வாய்ப்பு
பாலிசிதாரர் அவரது ப்ரீமியங்களை அரையாண்டு அல்லது காலாண்டுத் தவணைகளில் செலுத்தும் வாய்ப்பினை தேர்வு செய்யலாம்.
வரி சலுகைகள்
1961-இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D இன் படி, வருமான வரி செலுத்தும், 60 வயதுக்குட்பட்ட தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவதில் ரூ. 25,000 வரி விலக்கினை பெறலாம்; மேலும், இந்த தள்ளுபடித் தொகையானது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000/- வரை வரி விலக்கு கிடைக்கும். 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு குடும்ப உறுப்பினர்கள், ஒரே பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் வரி விலக்கு தொகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கும். மாறாக, ஒரு குடும்ப உறுப்பினர் 60 வயதுக்குட்பட்டவராகவும், அவரது பெற்றோர் அதே பாலிசியின் கீழ் இணைக்கப்பட்டிருந்தால், அவர்கள் ரூ.75,000 வரி விலக்கினைப் பெறலாம்.
பாலிசியின் காப்பீட்டு வரம்பிற்குள் வராதவை குறித்து பின்வரும் பட்டியல், ஒரு பகுதி மட்டுமேயாகும், அது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. பாலிசியின் உட்பிரிவுகளில் உள்ள வரம்பிற்குள் வராதவை அனைத்தையும் படித்து தெரிந்து கொள்வதை நீங்கள் உறுதிசெய்யவும்.
- பாலிசி உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள காத்திருப்பு காலம் முடிவடைவதற்கு முன்பாக, ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான (PED) சிகிச்சை பெறும் செலவுகள் மற்றும் அதன் நேரடி சிக்கல்கள் தொடர்பான செலவுகள் குறித்து படிக்கவும்.
- காப்பீட்டுத் திட்டத்தின் உட்பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்கள் பொருந்தக்கூடிய தன்மைக்கேற்ப 24 மாத, அல்லது 48 மாத காத்திருப்பு காலத்திற்கு முன் காப்பீட்டின் கீழ் வராது என்பதை அறியவும்.
- ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியின் கீழ் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் நோய் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு, இந்த பாலிசி காப்பீடு வழங்காது; விபத்துக்கான மருத்துவ செலவுகள் மட்டுமே பாலிசி வாங்கிய நாளிலிருந்து காப்பீட்டின் கீழ் வரும்.
- ஏதேனும், பாலினம் மாற்றுவது தொடர்பான சிகிச்சைகள்
- வீட்டில் பெறும் சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளராக (OPD) பெறும் சிகிச்சைகள்
இந்த பாலிசியை எப்படி வாங்குவது?
ஆன்லைனில் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியை வாங்குவது மிகவும் எளிதானது:
நிலை 1: ஸ்டார் ஹெல்த் வலைதளம் அல்லது மொபைல் செயலியில், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியைக் கண்டறியவும். உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்.
நிலை 2: சில முக்கிய விவரங்களை உரிய இடங்களில் நிரப்பவும், நீங்கள் பாலிசி எடுக்க விரும்பும் நபர்களின் எண்ணிக்கை (குடும்பத்திற்காக வாங்கினால்), பிறந்த தேதி, பாலிசி காலம் போன்றவை.
நிலை 3: இந்தத் தகவலைப் பகிர்ந்தவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்த மொத்த காப்பீட்டுத் தொகைக்கான உங்களது ப்ரீமியத்தின் இறுதிக் கட்டணம் காண்பிக்கப்படும்; பின்னர், நீங்கள் அதற்கான பணத்தை செலுத்திய சில நிமிடங்களில், உங்கள் மின்னஞ்சலின் இன்பாக்ஸில் உங்களது பாலிசி உங்களை வந்து சேரும்.
உங்கள் பாலிசியை புதுப்பிப்பது மேலும் எளிமையானது. பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுடன் (அல்லது பாலிசி விவரங்கள்) உள்நுழைந்து, உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தி, பணம் செலுத்துங்கள். அவ்வளவு தான்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆரோக்ய சஞ்சீவனி என்பது தேசிய காப்பீட்டு கட்டுப்பாட்டு ஆணையத்தால் (IRDAI) வடிவமைக்கப்பட்ட ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டமாகும். ஆனால் சில காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் ப்ரீமியத்தைக் கோருவதன் மூலம் மிகத்தீவிர நோய்களுக்கான காப்பீட்டை விருப்பத்தின் பேரில் வழங்குகிறார்கள். ஆனால் ஸ்டார் ஹெல்த் நிறுவனம், ரெகுலேட்டரால் (IRDAI) வடிவமைக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது, மேலும், பாலிசிதாரர்கள் இந்தியா முழுவதும் சிறந்த கேஷ்லெஸ் மருத்துவ வசதியைப் பெறலாம்.
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி காலம் ஒரு வருடம். ப்ரீமியங்களை காலாண்டு, அரையாண்டு & ஆண்டுதோறும் செலுத்தலாம்.
செல்லுபடியாகும் அனைத்து க்ளைம்களுக்கும் 5% கோ-பே முறையில் செலுத்த வேண்டும்.
இந்தக் பாலிசியின் கீழ் வழங்கப்படும் மொத்த காப்பீட்டுத் தொகையானது ஐம்பதாயிர ரூபாயின் மடங்குகளாக ₹50000 முதல் ₹10,00,000 வரை வழங்கப்படும்.

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



