New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
DND Registration

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

India +91✓

IRDAI UIN: SHAHLIP20046V011920

HIGHLIGHTS

Plan Essentials

purple essential logo 3

வழங்கப்பட்டுள்ள திட்டங்கள்

இந்த பாலிசி பிரத்யேக நன்மைகளுடன் அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் ஆப்ஷன்களை வழங்குகிறது.

purple essential logo 3

பாலிசி காலம்

இந்த பாலிசியை 1 ஆண்டு, 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் வரை பெறலாம்.

purple essential logo 6

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.

purple essential logo 6

நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 91 நாட்கள் குழந்தை முதல் 25 வயதுடையோர் என மூன்று பேர் வரை காப்பீடு பெறலாம்.

purple essential logo 3

ஹாஸ்பிடல் கேஷ் டேஸ்

பேஸிக் ப்ளான் கீழ் 30 முதல் 180 நாட்கள் வரையிலும், மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 90 முதல் 180 நாட்கள் வரையிலும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

purple essential logo 3

டே கேர் நடைமுறைகள்

பாலிசி பிரிவில் உள்ளபடி, குறிப்பிட்ட டே கேர் சிகிச்சைக்கான செலவுகள், பாலிசி ஆண்டில் ஐந்து முறை வரை காப்பீடு செய்யப்படும்.

purple essential logo 3

ஹாஸ்பிடல் கேஷ் தொகை (ஒரு நாளைக்கு)

அடிப்படைத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தினசரி ஹாஸ்பிடல் கேஷ் தொகை ரூ. 1000, 2000 மற்றும் 3000/- மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் ரூ. 3000, 4000 மற்றும் 5000/- கிடைக்கும்.

Detailed List

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

உடல்நலமின்மைக்கான ஹாஸ்பிடல் கேஷ்

நோயின் காரணமாக காப்பீடு செய்தவர் தேர்வு செய்த அதிகபட்ச நாட்களுக்கு, ஹாஸ்பிடல் கேஷ் தொகை காப்பீட்டாளரால் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்தின் கீழ், ஒரு நாளுக்கு மட்டும் இதில் விலக்கு பொருந்தும்.

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்

விபத்துக்கள் காரணமாக, காப்பீடு செய்தவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு, காப்பீடு செய்தவரால் எடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 150% வரை வழங்கப்படுகிறது.

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்

நோய் அல்லது காயம் காரணமாக ICU செலவினங்களுக்காக, காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வரை வழங்கப்படுகிறது. தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்தவரை, காப்பீடு செய்தவர் தேர்வு செய்யும் அதிகபட்ச ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கும்.

கன்வல்சென்ஸ் ஹாஸ்பிடல் கேஷ்

தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளுக்கான கூடுதல் ஹாஸ்பிடல் கேஷ் தொகை, கன்வல்சென்ஸ் கேஷ் பலனாக வழங்கப்படும்.

குழந்தை பிறப்புக்கான ஹாஸ்பிடல் கேஷ்

இந்த பாலிசி எடுத்ததில் இருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் முடிந்த பிறகு, காப்பீடு செய்த பெண் தனது பிரசவத்திற்காக தினசரி ஹாஸ்பிடல் கேஷ் பலனைப் பெறத் தகுதி பெறுவார்.

உலகளாவிய ஹாஸ்பிடல் கேஷ்

இந்தியாவிற்கு வெளியே நோய் அல்லது காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு தினசரி ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வழங்கப்படுகிறது.

டே கேர் நடைமுறைகள்

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளும் பராமரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ஐந்து முறை வரை காப்பீடு செய்யப்படும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

அனைத்து திட்டங்களையும் பார்க்க
உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

கூடுதல் தகவல்கள் தேவையா?
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இன்று மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகளாலும், காற்றினாலும் நீரின் மூலமும் பரவும் நோய்த்தொற்றுகள், ஒரு நபரின் முழு மாதாந்திர சேமிப்பையும் எளிதில் கரைத்துவிடும். உங்கள் மருத்துவமனை செலவை ஈடுகட்ட நீங்கள் வழக்கமான மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பல இதர செலவுகளையும் தவிர்க்க முடியாத செலவுகளையும் சந்திக்க நேரிடும்.

 

அப்படியொரு சூழலில், ஒரு ஹாபிஸ்டல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி சில நிவாரணங்களை வழங்க முடியும். மேலும் இந்த பாலிசியின் சிறந்த அம்சங்களில் ஒன்று, சிறிய விஷயங்கள் கூட உங்களுக்காகக் காப்பீடு செய்யப்படும். இந்த திட்டம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்கள் அன்றாட தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும். ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியானது, உங்களுடைய தற்போதைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் கூடுதலாக ஒரு பயனளிக்கும் திட்டமாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு வழங்க உதவும். நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் பல்வேறு செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படலாம். தவிர, இந்த பாலிசியானது, பெட்ரோல் செலவு, நோயாளரை பார்த்து கொள்பவர்களுக்கான உணவு போன்ற வேறு செலவினங்களை ஈடுசெய்யவும் பயனளிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியின் கவரேஜ் ஒரு நாளைக்கு ரூ.1000 என்றால், காப்பீட்டாளர் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ரூ.1000 வழங்க வேண்டும். அந்த தொகையை எப்படி செலவிட வேண்டும் என்ற முடிவு உங்களுடையது.

 

உங்களின் தற்போதைய ஹெல்த் மெடிக்கல் பாலிசியின் கூடுதல் அம்சமாகவும் இவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதற்கு நீங்கள் தினசரி கேஷ் லிமிட் மற்றும் பாலிசியின் படி நாட்களின் எண்ணிக்கையை தேர்வு செய்ய வேண்டும்.

 

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவருக்கு அவர் மருத்துவமனையில் இருக்கும் காலக்கட்டத்தில் தினமும் கேஷ் வழங்குகிறது. இந்த பாலிசியானது, ஸ்டார் ஹெல்த் வழங்கும் அனைத்து ஹெல்த் பிளான்களுக்கும் கூடுதல் உதவித் திட்டமாக இருக்கும்.

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள்

 

தகுதி

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் வாங்கலாம். இது உங்கள் மனைவி மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது உள்ள உங்களை சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் கவராகும்.

 

கவர் வகை

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில், ஒரு அடிப்படை பிளான் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் என்று இரண்டு பிளான்ஸ் கிடைக்கின்றன. இந்த இரண்டு பிளான்களின் கீழ்,  பாலிசிதாரர் ஒவ்வொரு நாளுக்கான ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் கலவையைத் தேர்வு செய்யலாம். கீழே உள்ள அட்டவணை, ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகிய ஆப்ஷன்களை விளக்குகிறது.

 

பிளான் வகைஹாஸ்பிடல் கேஷ் தொகைஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை
அடிப்படை பிளான்ரூ. 1000, ரூ. 2000, ரூ. 300030/60/90/120/180 நாட்கள்
மேம்படுத்தப்பட்ட பிளான்ரூ. 3000, ரூ. 4000, ரூ. 500090/120/180 நாட்கள்

 

பாலிசி காலம்

1 வருடம் / 2 ஆண்டுகள் / 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும்

 

காத்திருப்பு காலங்கள்

பாலிசி தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட நோய்க்கு காப்பீடு கவராகாது. விபத்து ஏற்பட்டால் இதில் விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட நோய்கள்/ அறுவை சிகிச்சைகளுக்கான கவரேஜ் 24 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்கள் (அடிப்படைத் திட்டம்) மற்றும் 24 மாதங்கள் (மேம்படுத்தப்பட்ட திட்டம்) காத்திருப்பு காலத்திற்குப் பிறகு முன்பே இருக்கும் நோய்களுக்குக் காப்பீடு வழங்கப்படும்.

 

போர்ட்டபிலிட்டி

போர்ட்டபிலிட்டி குறித்த IRDAI வழிகாட்டுதல்களின்படி, காப்பீடு எடுத்தவர் முழு பாலிசியையும் போர்ட் செய்ய, காப்பீட்டாளரிடம் விண்ணப்பிப்பதன் மூலம் மற்றொரு காப்பீடு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்ற ஏற்பாடு செய்ய முடியும். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் புதுப்பித்தல் தேதிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்யலாம், ஆனால்  புதுப்பித்தல் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்ய முடியாது.

 

ஃப்ரீ லுக் பீரியட்

பாலிசியின் டெர்ம்ஸ் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்வதற்கு, பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஃப்ரீ லுக் பீரியட் உள்ளது. காப்பீடு செய்தவர் பாலிசியில் திருப்தி அடையவில்லை என்றால், குறிப்பிட்ட காலத்திற்குள் பாலிசியை ரத்து செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. இருப்பினும், பாலிசி புதுப்பிப்புகளுக்கு இந்த அம்சம் பொருந்தாது.

 

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியில் (அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டம்) என்ன கவர் செய்யப்படுகிறது?

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவர் தேர்ந்தெடுத்த அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, தினசரி பணப் பலன்களை வழங்கும். பாலிசியின் விதிமுறைகளின்படி பின்வருவனவற்றிற்கு ஏற்படும் செலவுகளை இந்த பிளான் ஈடு செய்யும்.

 

  • உடல்நலமின்மைக்கான ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கான ஹாஸ்பிடல் தொகை (ஒரு நாளைக்கு). இது அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பொருந்தும்.

 

  • ஆக்சிடன்ட் ஹாஸ்பிடல் கேஷ்- காப்பீடு எடுத்தவர் தேர்ந்தெடுத்த அதிகபட்ச நாட்களுக்கு, ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 150% கிடைக்கும்.

 

  • ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% கிடைக்கும். பாலிசி தனிநபர் அடிப்படையில் வழங்கப்பட்டால், பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு மட்டுமே ICU ஹாஸ்பிடல் கேஷ் செலுத்தப்படும். ஃப்ளோட்டர் அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டால், பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மட்டுமே ICU ஹாஸ்பிடல் கேஷ் செலுத்தப்படும்.

 

  • கன்வல்சென்ஸ் ஹாஸ்பிடல் கேஷ் - தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளுக்கான கூடுதல் ஹாஸ்பிடல் கேஷ் தொகை, கன்வல்சென்ஸ் கேஷ் பலனாக வழங்கப்படும். எனினும், அடிப்படை திட்டத்திற்கு இது பொருந்தாது.

 

  • சைல்டு பர்த் ஹாஸ்பிடல் கேஷ் - ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் பாலிசியின் தொடக்கத்திலிருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலத்திற்கு பிறகு இதன் பலன்கள் பொருந்தும். பெண் பாலிசிதாரர்கள் மட்டுமே இந்த நன்மைக்கு தகுதியுடையவர்கள். இது அடிப்படை திட்டத்திற்கு பொருந்தாது.

 

  • வேர்ல்டுவைட் ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரர் இந்தியாவிற்கு வெளியே நோய் அல்லது காயத்தின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்ந்தெடுத்த 200% ஹாஸ்பிடல் கேஷ் தொகை (ஒரு நாளைக்கு) 200% செலுத்தப்படும். எனினும், அடிப்படை திட்டத்துக்கு இது பொருந்தாது.

 

  • டேகேர் நடைமுறைகள் - எலும்பு முறிவுகள் (ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் தவிர), கண்புரை, D&C, ஹீமோடையாலிசிஸ், பேரன்டெரல் கீமோதெரபி, ரேடியோ தெரபி, கரோனரி ஆஞ்சியோகிராபி, லித்தோட்ரிப்சி, ஜென்ரல் அனஸ்தீசியா கொடுத்து மேற்கொள்ளும் முதுகெலும்பு டிஸ்லொகேட் சிகிச்சை. மேலே குறிப்பிட்டுள்ள 1, 2, 3 மற்றும் 6 ஆகியவை இந்த டேகேர் சிகிச்சைகளுக்குப் பொருந்தும். காப்பீடு செய்த நபர், பாலிசி ஆண்டில் ஐந்து முறை மட்டுமே இந்த டேகேர் சிகிச்சைகள் தொடர்பான க்ளைம்களுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸிலிருந்து ஹாஸ்பிடல் கேஷ் ஹெல்த் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

60 வயதுக்குட்பட்ட தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து ரூ.25,000 வரி விலக்குகளைப் பெறலாம்,   மேலும் 1961 இன் வருமான வரிச் சட்டம் பிரிவு 80D இன் படி செலுத்தப்பட்ட பிரீமியத்தில் மூத்த குடிமக்களுக்கு விலக்குத் தொகை ரூ.50,000 வரை நீட்டிக்கப்படலாம். 60 வயது அதற்கு மேல் வயதுடைய  இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இருந்து அவர்கள் ஒரு பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு இருந்தால்,  வரி விலக்கு தொகை ரூ.1 லட்சமாக நீட்டிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, 60 வயதிற்குட்பட்ட குடும்ப  உறுப்பினர் மற்றும் அவரது பெற்றோரும் அதே பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு இருந்தால், அவர்கள் ரூ.75,000 வரி விலக்கு பெறலாம்.

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கான க்ளைமை எவ்வாறு பதிவு செய்வது?

ஸ்டார் ஹெல்த் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் இல்லாத க்ளைம் செட்டில்மென்ட்டை வழங்குகிறது. ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் திட்டத்தில் செலவுத்தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.

ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் என்பது உங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து மருத்துவமனை கட்டணத்தை செலுத்தி, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பித்தல் ஆகும்.. திரும்பப் பெறும் செயல்முறை பின்வருமாறு:

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் க்ளைம் பற்றி தெரிவிக்கப்பட வேண்டும். நெட்வொர்க் அல்லது நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.
  • நீங்கள் சிகிச்சையைப் பெற்ற பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிசெய்து பின்னர் செலவை திரும்பப்பெறுவதற்கு க்ளைம் செய்யலாம்.
  • வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் காப்பீட்டாளர் கோரிக்கையைச் செயல்படுத்துவார், மேலும் நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கில் தொகையைப் பெறுவீர்கள்.
  • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் அறிக்கை.
  • மருத்துவமனை இறுதி பில்லின் நகல்.
  • பான் கார்டின் நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது NEFT விவரங்கள்.
  • ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் காலவரையறை / நிரந்தர விலக்குகளுக்கான கோரிக்கை.
  • முக்கியமான உண்மைகள், வெளிப்படுத்தப்படவில்லை / தவறாக பிரதிநிதித்துவப்பட்டு இருந்தால் / மோசடியான க்ளைம்கள்.
  • விலக்கப்பட்ட வழங்குநரிடமிருந்து க்ளைம்ஸ் (உயிர் அபாயகரமான சூழ்நிலையில் / விபத்தின் போது நிலைப்படுத்தப்படும் நிலை வரை மட்டுமே செலுத்தப்படும்).
  • க்ளைம் செய்வதற்க்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால்.

FAQ's

18 வயது முதல் 65 வயது வரை உள்ள பெரியவர்கள் இந்த பாலிசியை வாங்கலாம்.. 91 நாட்கள் முதல் 25 வயது வரை உள்ள சார்ந்திருக்கும் குழந்தைகளும் காப்பீடு செய்யலாம்.

ஆம். ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் பாலிசியின் அடிப்படைத் திட்டத்தில், ஹாஸ்பிடல் டெய்லி கேஷ் பலனில் ஒரு நாள் கழிக்கப்படுகிறது. காப்பீட்டாளர் காப்பீட்டுத் தொகையை பாலிசி வைத்திருப்பவருக்கு மருத்துவமனையில் சேர்க்கும் பணப் பலன் தொகையை செலுத்தத் தொடங்கும் முன் கழிக்கும் தொகையைக் குறிக்கிறது. எ.கா. 1 நாள் கழித்தல் என்பது, மருத்துவமனையில் நீங்கள் தேர்ந்தெடுத்த மொத்த நாட்களிலிருந்து ஒரு நாளுக்கான தினசரி பணப் பலன் கழிக்கப்படும். தவிர, நீங்கள் மருத்துவமனையில் ஒரு நாள் மட்டும் செலவழித்தால் - உங்கள் மருத்துவமனை பணத் திட்டத்தில் இருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் நீங்கள் மருத்துவமனையில் ஐந்து நாட்கள் செலவழித்தால், 1-நாள் கழிவைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் நான்கு நாட்களுக்குப் பலனைப் பெறத் தகுதியுடையவர்.

உடல்நலம் / நோய் / காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பாலிசிதாரரால்  ஏற்படும் செலவுகளுக்கான மொத்தத் தொகையாக பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனை ரொக்கத் தொகை (ஒரு நாளைக்கு) நோய் / நோய் / காயம் நோய் மருத்துவமனை பணம் / விபத்து மருத்துவமனை பணம் (150% ) / ICU மருத்துவமனை - நோய் மற்றும்/அல்லது காயம் காரணமாக பணம் (200%) / உலகளாவிய மருத்துவமனை பணம் (200%) / குணமடைதல் மருத்துவமனை பணம் / குழந்தை பிறப்பு மருத்துவமனை பணம் கவர் செய்யப்படும்.

ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் பாலிசியானது நிலையான தினசரி பணப் பலனைப் பெறுவதற்குத் தகுதிபெற, பாலிசிதாரர் குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இந்த விதிவிலக்கு, ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் பாலிசியின் அடிப்படைத் திட்டத்தில் நோய்வாய்ப்பட்ட மருத்துவமனையின் தினசரி பணப் பலன்களுக்கானது.

உடல்நலக் குறைவு / நோய் / காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பாலிசிதாரரால் ஏற்படும் செலவினங்களுக்காக மருத்துவமனைப் பணத் தொகை (ஒரு நாளைக்கு) பாலிசிதாரரால் மொத்தத் தொகையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

ஹாஸ்பிடல் கேஷ் தொகை (ஒரு நாளைக்கு) ஆப்ஷன்ஸ்:

அடிப்படை திட்டம் Rs :1,000/- ; 2,000/- ; 3,000/-

மேம்படுத்தப்பட்ட திட்டம் Rs :3,000/- ; 4,000/- ; 5,000/-

உங்களுக்கு தேவையான க்ளைம்க்கான ஆவணங்களின் பட்டியல்:

  1. டிஸ்சார்ஜ் அறிக்கையின் நகல் / டிஸ்சார்ஜ் சான்றிதழ்
  2. மருத்துவமனை இறுதி பில்லின் நகல்
  3. ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகல்கள்
  4. NEFT விவரங்கள்

ஆம். இந்த பாலிசியின் கீழ் தினசரி பணப் பலன்களைப் பெற அனைத்து டே கேர் நடைமுறைகளும் தகுதியுடையவை.

ஆம். ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் அடிப்படைத் திட்டத்தில், தினசரி பணப் பலன்களைப் பெறுவதற்கு 36 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, முன்பே இருக்கும் நோய்கள் (PEDகள்) தகுதியுடையவை. ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மேம்படுத்தப்பட்ட திட்டம் 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு PED களை உள்ளடக்கியது.

நிச்சயமாக. ஹாஸ்பிடல் கேஷ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது உங்களின் தற்போதைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் ஒரு கூடுதல் அம்சமாக இருக்கலாம்.

துரதிருஷ்டவசமாக, இல்லை. ஹாஸ்பிடல் கேஷ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியானது மகப்பேறு செலவுகளை ஈடுசெய்யாது. உங்கள் மகப்பேறு தேவைகளுக்காக எங்களின் அதிகம் விற்பனையாகும் பாலிசிகளில் சிலவற்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஸ்டார் காம்பர்ஹேன்ஸிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி, ஃபேமலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை மகப்பேறு தேவைகளுக்கான எங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in