ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்ஷூரன்ஸ் பாலிசி
IRDAI UIN : SHAHLIP23131V022223
முக்கியமானவை
அவசியமானவற்றை திட்டமிடுக
எல்லா சிகிச்சைக்குமான பாலிசி
இந்த பாலிசியானது தனிநபர், மனைவி, குழந்தைகள் (அதிகபட்சம் 3), பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் என அனைவருக்கும் கவர் ஆகிறது.
இடைக்கால சேர்க்கை
கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் புதிதாக திருமணமான/சட்டப்படி திருமணம் செய்த மனைவி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆகியோருக்கு பாலிசியின் கீழ் கவர் செய்யப்படும்.
மகப்பேறு செலவுகள்
சிசேரியன் (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய) உட்பட பிரசவ செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 10% வரை கவராகும்.
பிறந்த குழந்தைக்குமான பாலிசி
குழந்தை பிறந்த நாளில் இருந்து, பாலிசியின் காலாவதி தேதி வரை வரம்புகளுக்கு உட்பட்டு, மருத்துவமனை செலவுகள் கவர் செய்யப்படும். புதிதாக பிறந்த குழந்தைக்கு பிறவி நோய் / குறைபாடுகள் சிகிச்சைக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் பகுதித் தொகை வசதி பொருந்தாது.
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் காப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தினால், பாலிசி ஆண்டில் 100% காப்பீட்டுத் தொகை ஒவ்வொரு முறையும் மீண்டும் ரீஸ்டோர் செய்யப்படும். அதனை அனைத்து க்ளைம்ஸ்களுக்கும் பயன்படுத்தலாம்.
வீட்டில் தரப்படும் சிகிச்சை
சில மருத்துவ நிலைகளில் வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு, காப்பீட்டில் 10% கவராகும். அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பாலிசி ஆண்டில் கவராகும். காப்பீடு செய்த நபர் இந்த சேவையை பணமில்லா முறையிலோ அல்லது தொகையை ரீஇம்பர்ஸ்மெண்ட் முறையிலோ பெறலாம்.
நாள்பட்ட கடுமையான ஆஸ்துமா
நாள்பட்ட கடுமையான ஆஸ்துமாவுக்கு மருத்துவமனையில் பெறும் சிகிச்சை, டே கேர், வீட்டில் பெறும் சிகிச்சை, வெளிநோயாளியாக பெறும் சிகிச்சை ஆகிய செலவுகளுக்கு பாலிசி தொகையில் 10% வரை கவர் செய்யப்படும். பாலிசி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 5,00,000/-. வரை கவராகும்.
கர்ப்பம் தரிக்க உதவும் சிகிச்சைக்கான உதவி
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.
விரிவான பட்டியல்
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி வகைஇந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். |
தனிப்பட்ட நுழைவு வயது91 நாட்கள் முதல் 75 வயது வரை உள்ள எந்தவொரு நபரும் இந்த பாலிசியை தனிநபர் அடிப்படையில் பெறலாம். |
ஃப்ளோட்டர் நுழைவு வயது18 முதல் 75 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 16 நாட்கள் முதல் 17 வயது வரையில் அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் வரை காப்பீடு பெறுவார்கள். |
மருத்துவ பரிசோதனைஇந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. எவ்வாறாயினும், இக்கட்டான மருத்துவ நிலையில் இருப்பவர்கள் நிறுவனத்தின் செலவில் முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். |
மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட செலவுகள் ஈடுசெய்யப்படும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும். |
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்புமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 180 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் ஈடுசெய்யப்படும். |
அறை வாடகைரூ.5 லட்சம் வரை பாலிசி எடுத்திருப்பவர்கள், உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றுக்கு பாலிசி தொகையில் 1% கவர் செய்யப்படும். ரூ. 10/15/20/25 லட்சம் காப்பீடு செய்தவர்கள் சூட் அறைகள் தவிர மற்ற அறைகளில் தங்கினால் காப்பீடு பெறலாம். ரூ. 50/75/100/200 லட்சங்களில் காப்பீடு எடுத்தவர்கள் எந்த அறையில் வேண்டுமானாலும் தங்கி காப்பீடு தொகையை பெறலாம். |
அறை பகிர்ந்து தங்கியிருத்தல்காப்பீடு செய்த நபர், அறையை பகிர்ந்து தங்கியிருக்கும் பட்சத்தில் ஏற்படும் செலவுகள், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ்பாலிசியின் வரம்புகளுக்கு உட்பட்டு க்ளைம் இருந்தால், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவம் அல்லாத பொருட்களுக்கும் கவர் செய்யப்படும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்இந்த பாலிசி படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாறுதல் மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லுதல் (ஒரே நகரத்தில் இருந்தால்) ஆகிய செலவுகள் கவர் செய்யப்படும். |
ஏர் ஆம்புலன்ஸ்ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள், பாலிசி ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையில் 10% வரை கவர் செய்யப்படும். காப்பீடு செய்தவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழலில் இது பயன்படும். எனினும், தரைவழிப் போக்குவரத்துக்கு இதில் அனுமதியில்லை. |
வீட்டில் இருந்தபடி சிகிச்சைமூன்று நாட்களுக்கு மேல் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேதம் உட்பட மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும். |
24 மணி நேரத்திற்குள்ளான சிகிச்சைதொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கவர் செய்யப்படுகிறது. |
நவீன சிகிச்சைநவீன சிகிச்சைகளான வாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றுக்கு ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை செலுத்தப்படும். |
உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள், அறுவை சிகிச்சை செலவுகள் க்ளைம் செய்யப்படும் பட்சத்தில் உறுப்பு தானம் செய்பவருக்கு கவர் செய்யப்படும். மேலும், நன்கொடையாளருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தாலோ, ICU-வில் அனுமதிக்கும் சூழல் ஏற்பட்டாலோ அந்த செலவுகளும் கவர் செய்யப்படும். |
மறுவாழ்வு & வலி மேலாண்மைமறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவினங்களுக்கு குறிப்பிட்ட தொகையோ அல்லது காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 20% வரை உள்ள தொகை ஆகிய இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அது கவர் செய்யப்படும். |
ஆயுஷ் சிகிச்சைஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் கீழ் செய்யப்படும் சிகிச்சைக்கான செலவுகள் காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டு கவர் செய்யப்படும். |
இக்கட்டான நேரத்தில் உதவும் பயணம்உயிருக்கு ஆபத்தான நிலையில், காப்பீடு செய்த நபர் அவரது வீட்டிலிருந்து அதிக தொலைவில் உள்ள மருத்துவமனையில், இக்கட்டான சூழலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் மேற்கொள்ளும் விமான பயண செலவில் ரூ.10,000 வரை கவர் செய்யப்படும். |
இறந்த உடலை சொந்த இடத்துக்கு கொண்டு செல்லுதல்காப்பீடு செய்த நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது உடல் சொந்த இடத்துக்கு கொண்டுச் செல்வதற்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ரூ.15,000/-. வரை கவர் செய்யப்படும். |
யூட்ரோ ஃபீட்டல் சர்ஜரிஇந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்படும் செலவுகள் காத்திருப்பு காலம் முடிந்த பிறகு கவர் செய்யப்படும். குறிப்பு: குழந்தை பிறப்பதற்கு முன்பு கண்டறியப்படும் குறைபாடுகள் / பிறவி குறைபாடுகள் தொடர்பான சிகிச்சைக்கு மேற்கூறிய காத்திருப்பு காலங்கள் பொருந்தாது. |
மதிப்புமிக்க சேவை வழங்கும் மருத்துவமனைகளில் பெறும் சிகிச்சைமதிப்புமிக்க சேவை வழங்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீட்டுத் தொகையில் 1% மொத்த தொகையாக, அதாவது அதிகபட்சமாக ஒரு பாலிசி காலத்தில் ரூ.5,000/- வழங்கப்படுகிறது. |
ஒட்டுமொத்த போனஸ்காப்பீட்டுத் தொகையின் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 25% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது. |
விலக்கு - விருப்பத் தேர்வுஇந்த பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி ஏதேனும் விலக்குகளைத் தேர்ந்தெடுத்தால், காப்பீடு செய்த நபர் பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறலாம். |
கோ - பேமண்ட்காப்பீடு செய்த நபர் 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளைம் தொகைக்கும் 10% இணை தொகை செலுத்த வேண்டும். |
உறுதியான உடல்நல பரிசோதனைக்ளைம்களை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பாலிசி ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் உடல் நல பரிசோதனைச் செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. |
மாற்று மருத்துவரின் ஆலோசனைகாப்பீடு செய்த நபர், நிறுவனத்துடன் இணைந்து சேவை வழங்கும் மற்ற மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து கூடுதலாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். |
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற வெல்னஸ் புள்ளிகள், புதுப்பித்தலின் போது அதிகபட்சம் 20% வரை தள்ளுபடி பெற பயன்படுத்தப்படலாம். |
காத்திருப்பு காலம்1. ஏற்கனவே உள்ள நோய்களுக்கு (3 வருட காலம்) - 30 மாதங்கள்
2. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு (1 மற்றும் 2 வருட காலம்) - 36 மாதங்கள்
3. குறிப்பிட்ட நோய்கள்/நடைமுறைகளுக்கு - 24 மாதங்கள் ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் |
தவணை ஆப்ஷன்கள்பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். அதுமட்டுமின்றி, இதனை வருடாந்திர அடிப்படையிலும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும் செலுத்தலாம். இந்த வசதி நீண்ட கால (2 & 3 வருட கால) தேர்வுகளுக்கு கிடைக்காது. |
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
பதிவிறக்கங்கள்
பிரீமியம் விளக்கப்படம்
வெல்னஸ் பலன்கள்
பொதுவான டெர்ம்ஸ்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
ஸ்டார் நன்மைகள்
க்ளைம்ஸ்
மருத்துவமனைகள்
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்
ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.