வாங்குக
டவுன்லோட்
Star health iOS appStar health iOS app
Star Health Logo

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

We have the answer to your happy and secure future

IRDAI UIN: SHAHLIP22032V052122

முக்கியமானவை

அவசியமானவற்றை திட்டமிடுக

essentials

தனித்துவமான கவர்

இதய நோய்களின் பாதிப்புகள் கொண்ட 10 முதல் 65 வயது வரையிலான தனிநபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி.
essentials

ஏதுவான கவரேஜ்

இந்த பாலிசியானது இதயம் மற்றும் இதயம் அல்லாத நோய்களுக்கான அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்கான கட்டணங்களை கவர் செய்கிறது. இதய நோய்கள் 90 நாட்களுக்குப் பிறகு கவர் செய்யப்படும்.
essentials

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.
essentials

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான விருப்பங்கள் ரூ. 3,00,000/- மற்றும் ரூ. 4,00,000/- ஆகும்.
essentials

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

பாலிசி காலத்தில் விபத்துகளால் இறக்க நேரிட்டால் உலகளாவிய தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
essentials

வெளிநோயாளருக்கான கவரேஜ்

இந்தியாவில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் தேவையான மற்றும் அவசியமான வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
essentials

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இது ஆண்டுதோறும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
விரிவான பட்டியல்

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

பிரிவு I - விபத்து & இதயம் சாராத நோய்

பாலிசி விவரம்கோல்டு பிளான்சில்வர் பிளான்

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும்.
yesyes

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும்.
yesyes

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளில் 7% வரை கவராகும். அதாவது அதிகபட்சமாக ஒருமுறை மருத்துவமனையில் பெறும் சிகிச்சையில் அதிகபட்சம் ரூ.5000 வரை கவராகும்.
yesyes

அறை வாடகை

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 2% வரை கவராகும். அதாவது, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.5000/- வரை கவராகும்.
yesyes

சாலைவழி ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் கட்டணம் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க ரூ. 750/- வரை கவராகும். மேலும், பாலிசிதாரரை தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ.1500/- வரை பாலிசி காலத்தில் கவராகும்.
yesyes

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன.
yesyes

நவீன சிகிச்சை

வாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
yesyes

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும்.
yesyes

கோ - பேமண்ட்

பாலிசிதாரர் தனது 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளைம் தொகைக்கும் 10% இணை-தொகை செலுத்த வேண்டும்.
yesyes

பிரிவு II - இதய நோய்கள்

இதய நோய்கள் (அறுவை சிகிச்சை / வலியை குறைக்கும் சிகிச்சை, மருத்துவ மேலாண்மை)

பிரிவு I இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும், கோல்ட் பிளானில் உள்நோயாளராக மருத்துவமனையில் இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான கட்டணங்களுடன் இந்த பாலிசியின் கீழ் கவராகும்.

இதய நோய்கள் (அறுவை சிகிச்சை / வலியை குறைக்கும் சிகிச்சை மட்டும்)

பிரிவு I இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும், இந்த பாலிசியின் கீழ் சில்வர் பிளானில் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் தேவைப்படும் அறுவை சிகிச்சை அல்லது இதர சிகிச்சைக்கான செலவுகளுடன் சேர்த்து கவர் செய்யப்படும்.

பிரிவு III - வெளி நோயாளருக்கான பலன்கள்

கோல்டு பிளான்சில்வர் பிளான்

வெளிநோயாளர் செலவுகள்

இந்தியாவில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில், வெளிநோயாளருக்கு அவசியம் ஏற்படும் தேவையான செலவுகள் ஒரு நிகழ்வுக்கு ரூ. 500/ வரையும், ஒரு பாலிசி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 1500/- வரை கவராகும்.
yesyes

பிரிவு IV - தனிப்பட்ட விபத்து இறப்புக்கான பலன்

கோல்டு பிளான்சில்வர் பிளான்

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

பாலிசி காலத்தில் விபத்துகளால் பாலிசிதாரருக்கு துரதிர்ஷ்டவசமான இறப்பு ஏற்பட்டால் உலகளாவிய தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
yesyes
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

star-health
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
star-health
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
star-health
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
star-health
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
star-health
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us

கூடுதல் தகவல்கள் தேவையா?

Get Insured

உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இந்தியாவில் இதய நோய்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. இதய நோய்களுக்கான சிகிச்சை விலையும் அதிகமாக உள்ளது. இந்த நோய்த் தொற்று சூழல் மற்றும் மருத்துவத்தில் அதிகரித்து வரும் செலவுகள், இதயம் தொடர்பான நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை பலருக்கு உணர்த்தியுள்ளன. எனவே இதய நோய்களின் அபாயத்திலிருந்து உங்களை பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பது இன்றியமையாதது. இந்த நோக்கத்திற்காக, ஸ்டார் ஹெல்த், ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. இது இதய அறுவை சிகிச்சை, பைபாஸ் அல்லது ஸ்டென்டிங் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தனிநபர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும்.

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் என்ன?

கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் என்பது, கார்டியாக் மற்றும் கார்டியாக் அல்லாத சிகிச்சைகளுக்கு முழுமையான காப்பீட்டை வழங்கும் பாலிசிகளில் ஒன்றாகும். இது இதய நோயாளிகளுக்கு மருத்துவ  காப்பீட்டை வழங்குகிறது, மேலும், அவர்களின் அனைத்து இருதயத் தேவைகளுக்குமான கவரேஜை உறுதி செய்கிறது. இது கார்டியோ வாஸ்குலர் மற்றும் வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவைகளின் கலவையான பாலிசியாகும்.
 

 

இது மீண்டும் மீண்டும் வரும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற சூழ்நிலையில் உள்ளவர்களின் பொருளாதார சுமையை எளிதாக்க உதவுகிறது மற்றும் செலவுகளை சமாளிக்க போதுமான காப்பீட்டை வழங்குகிறது.
 

 

இந்த பாலிசி பல்வேறு இதயம் தொடர்பான சிகிச்சைகளுக்காக பல க்ளைம்ஸ்களை கவர் செய்கிறது. இருப்பினும், இந்த க்ளைம்ஸ் காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டவை. அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் மற்றும் நவீன சிகிச்சைகளுக்கான பாதுகாப்பு, வெளிநோயாளருக்கான பாதுகாப்பு மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் இறப்புக்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடு போன்ற பலன்களை கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குகிறது.

உள்ளடக்கம்அளவுகோல்
நுழைவு வயது10 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரை
புதுப்பித்தல்வாழ்நாள் முழுவதும்
பாலிசி காலம்1 வருடம் / 2 ஆண்டுகள் / 3 ஆண்டுகள்
பிளான் வகைகள்கோல்டு மற்றும் சில்வர்
காப்பீட்டுத் தொகை₹3 லட்சம் மற்றும் ₹4 லட்சம்
இணை கட்டணம்நுழைவு வயது 61 மற்றும் அதற்கு மேல் இருந்தால், ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து க்ளைமஸ்களுக்கும் 10%
இதயம் அல்லாத நோய்களுக்கான காத்திருப்பு காலம்PED-48 மாதங்கள்குறிப்பிட்ட நோய்கள் - 24 மாதங்கள்ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி கோல்டு பிளான் மற்றும் சில்வர் பிளான் கீழ் கிடைக்கும் கவரேஜ்

 

பிரிவுகோல்டு பிளான்சில்வர் பிளான்
1விபத்து மற்றும் இதயம் சாராத நோய்களுக்கு பொருந்தும்விபத்து மற்றும் இதயம் சாராத நோய்களுக்கு பொருந்தும்
2இதய நோய்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பொருந்தும். அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சை ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் கிடைக்கிறது.இதய நோய்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பொருந்தும். அறுவை சிகிச்சைக்கு மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.
3நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான செலவுகள்நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான செலவுகள்
4தனிப்பட்ட விபத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை, விபத்தால் ஏற்படும் இறப்பின் போது கிடைக்கும்.தனிப்பட்ட விபத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை, விபத்தால் ஏற்படும் இறப்பின் போது கிடைக்கும்.
இதய சிகிச்சைகளுக்கு 90 நாட்கள் மட்டுமே காத்திருப்பு காலம் பொருந்தும்,

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவர் ஆகுபவை

 

கார்டியாக் இன்ஷூரன்ஸ், இதயம் மற்றும் இதயம் அல்லாத நோய்களின் சிகிச்சைக்கான காப்பீட்டை வழங்குகிறது. இந்த பாலிசியின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஏற்கனவே இதய நோய் அல்லது அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் இது பொருந்தும். கடந்த 7 ஆண்டுகளில் நீங்கள் இதய அறுவை சிகிச்சை அல்லது அதன் நடைமுறைகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில், இதய நோய்களுக்கான அதிக ஆபத்து இருப்பதால், இந்த கார்டியாக் கேர் பாலிசியை வாங்குவது நல்லது.

 

இதயம் அல்லாத நோய் மற்றும் விபத்துகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்

 

காப்பீடு செய்யப்பட்ட நபர், பாலிசி காலத்தில் குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் இருந்தால், ஸ்டார் கார்டியாக் கேர் பாலிசி மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளை கவர் செய்கிறது. இந்தத் திட்டம் பின்வருவனவற்றிற்காக ஏற்படும் செலவுகளை ஈடு செய்யும்:

 

  • அறை வாடகை, தங்கும் வசதி மற்றும் நர்சிங் செலவுகள் ஒரு நாளைக்கு ரூ.5000 வரை வழங்கப்படும்.
  • எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் கட்டணம் ஒருமுறை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ₹750 வரை கவராகும். மேலும், பாலிசி காலத்தில் ₹1500 வரை கவராகும்.
  • மருத்துவமனையில் சேர்க்கப்படும் தேதிக்கு முன்பாக 30 நாட்களுக்கு மிகாமல் ஏற்பட்ட மருத்துவமனை செலவுகள் கவராகும்.
  • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 60 நாட்களுக்கு மிகாமல் ஏற்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பான செலவுகள் கவராகும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவில் 7% தொகைக்கு மிகாமல், அதாவது ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க அதிகபட்சம் ₹ 5000 வரை கவராகும்.

 

டே கேர் சிகிச்சைகள்/செயல்முறைகள்

 

பாலிசி விதிமுறைகளின்படி 24 மணிநேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து டே கேர் சிகிச்சை நடைமுறைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகளை பாலிசி கவர் செய்கிறது.

 

கண்புரை சிகிச்சை

 

முழு பாலிசி காலத்திலும் ₹30,000 வரை கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளை பாலிசி கவர் செய்கிறது.

 

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

 

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. முன்மொழிவு படிவத்துடன் சமீபத்திய சிகிச்சையின் விவரங்கள் உட்பட முந்தைய மருத்துவ பதிவுகளை சமர்ப்பித்தால் போதும்.

 

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்: ஸ்டார் ஹெல்த் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் உலகளாவிய கவரேஜை வழங்குகிறது. மேலும், விபத்தால் ஏற்படும் இறப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமாக கவர் செய்கிறது.

 

கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் நவீன சிகிச்சைகள் கவர் ஆகின்றன

 

சில நவீன சிகிச்சைகள் ஸ்டார் கார்டியாக் இன்ஷூரன்ஸ் கீழ் கவர் செய்யப்படுகிறது. கவரேஜ் விவரங்கள் பின்வருமாறு: வரம்புகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

  • கருப்பை தமனி எம்போலைசேஷன் மற்றும் HIFU (அதிக தீவிர அல்ட்ராசவுண்ட்)
  • பலூன் சைனப்ளாஸ்டி
  • ஆழ்மூளை தூண்டுதல்
  • வாய்வழி கீமோதெரபி
  • இம்யூனோதெரபிகள் - மோனோக்ளோனல் ஆன்டிபாடி ஒரு ஊசியாக கொடுக்கப்பட வேண்டும்
  • இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள்
  • ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்
  • ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சைகள்
  • மூச்சுக்குழாய் தெர்மோபிளாஸ்டி
  • புரோஸ்டேட் ஆவியாதல் சிகிச்சை
  • ION M இன்ட்ரா ஆபரேட்டிவ் நியூரோ கண்காணிப்பு
  • ஸ்டெம் செல் சிகிச்சை

 

பின்வருபவை பாலிசியில் கவர் ஆகாத சிகிச்சைகளின் பட்டியலாகும். பாலிசி ஆவணத்தில் கவர் ஆகாத அனைத்து சிகிச்சை சிகிச்சைகளின் விரிவான பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ஸ்டார் ஹெல்த் கார்டியாக் கேர் பாலிசி இதயம் மற்றும் இதயம் அல்லாத நோய்களுக்கு விரிவான கவரேஜை வழங்கும் அதே வேளையில், சில விதிவிலக்குகள் இந்த பாலிசியின் கீழ் வருகின்றன. இந்த விலக்குகள் பின்வருமாறு:

 

  • தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்க்கான சிகிச்சைத் தவிர மற்ற நோய் கண்டறிதலுக்கான செலவுகள் கவர் ஆகாது
  • குணப்படுத்தவே முடியாத நோயாளிகளுக்கான காப்பக பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கான செலவுகள்
  • பாலின மாற்று நடைமுறைகள்
  • காஸ்மெட்டிக்/பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள்
  • ஆபத்தான சாகச விளையாட்டுகள்/செயல்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தல் அல்லது சிகிச்சை பெறுதல்
  • எந்தவொரு குற்றச் செயலிலும் ஏற்படும் சிகிச்சைக்கான செலவுகள்
  • ஆல்கஹால், மருந்துகள் மற்றும் பிற போதைப்பொருள் பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான செலவுகள்
  • மகப்பேறு சிகிச்சைக்கான செலவுகள்
  • மகப்பேறு செலவுகள் மற்றும் கருச்சிதைவுக்கான செலவுகள் (விபத்து காரணமாக)
  • பாலியல் தொடர்பாக பரவும் நோய்களுக்கான சிகிச்சை
  • போர் அல்லது போர் போன்ற சூழ்நிலையில் ஏற்படும் உடல் பாதிப்பு அல்லது நோய்

FAQ's

61 வயதில் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் ஒருவர் புதிதாக பாலிசி எடுக்கிறார் என்றாலோ மற்றும் பாலிசியை புதுப்பிக்கிறார் என்றாலோ, பாலிசி வாங்கும் போதும் புதுப்பிக்கும் போதும் 10% இணை-தொகை வழங்க வேண்டும்.