

ஸ்டார் ஹெல்த் கெய்ன் இன்ஷூரன்ஸ் பாலிசி
IRDAI UIN: SHAHLIP21262V032021
HIGHLIGHTS
Plan Essentials
விரிவான கவரேஜ்
வெளிநோயாளராக பெறும் சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இது.
இணக்கமுள்ள பாலிசி
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இதில் தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (91 நாட்கள் முதல் 25 வயது வரை) உள்ளிட்டோர் அடங்குவர்.
காப்பீட்டுத் தொகை
ரூ. 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம், 4 லட்சம் மற்றும் 5 லட்சம் ஆகிய காப்பீட்டு தொகை ஆப்ஷன்கள் இதில் கிடைக்கின்றன.
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
நுழைவு வயது
18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். குழந்தைகளுக்கு 91வது நாளிலிருந்து 25 வயது வரை பாலிசி கவர் ஆகிறது.
ஏதுவான ப்ரீமியம் ஆப்ஷன்ஸ்
இந்த பாலிசியின் கீழ் ஏதுவான பிரீமியம் ஆப்ஷன்கள் ரூ. 15,000/-, ரூ. 20,000/-, ரூ. 25,000/- மற்றும் ரூ.30,000/-( GST கூடுதலாக) என்று கிடைக்கிறது.
வருமான வரிச் சலுகை
ரொக்கமாக செலுத்துவதைத் தவிர வேறு முறையிலும் உடல்நலக் காப்பீட்டிற்குச் செலுத்தப்படும் அனைத்து பிரீமியங்களுக்கும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80D இன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
பிரிவு I - உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்
உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏற்படும் செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு, அட்மிஷன் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவர் செய்யப்படும். |
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை வாடகை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை, ஒவ்வொரு நாளும் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 1% வரை கவர் செய்யப்படும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒருமுறைக்கு, ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ. 750/- வரை கவராகும். மேலும், பாலிசி காலத்தில் காப்பீடு எடுத்த நபரை தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணத்தில், ரூ.1500/-.வரை கவர் செய்யப்படும். |
டே-கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சை செலவுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள் கவர் செய்யப்படுகிறது. |
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
கோ-பேமண்ட்இந்த பாலிசியானது, 61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள், புதிதாக பாலிசி எடுக்கும் போதும், பாலிசி புதுப்பிக்கப்படும் போதும், ஒவ்வொரு அனுமதிக்கப்படும் க்ளைம் தொகையிலும் காப்பீடு செய்தவர்களே 20% தொகை செலுத்திக் கொள்ள வேண்டும். |
பிரிவு II - வெளிநோயாளருக்கான பலன்
வெளிநோயாளருக்கான பலன்இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிங் மருத்துவமனையிலும் ஏற்படும் அவசியமான வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை கவர் செய்யப்படும். |
தொடர்ந்து கிடைக்கும் பலன்கள்பாலிசி ஆண்டில் பயன்படுத்தப்படாத பலன்களை உடனடியாக அடுத்து வரும் புதுப்பிக்க வேண்டிய ஆண்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேற்பட்ட பலன்களை எதுவும், புதிய ஆண்டில் பயன்படுத்த அனுமதி இல்லை. |

காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 48 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள்/செயல்முறைகளுக்கு - 24 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜுக்கு இங்கே க்ளிக் செய்க.
பிரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் பலன்/பிரீமியம் விளக்கப்படம் காண இங்கே கிளிக் செய்யவும்.
வெளி நோயாளருக்கான பலன்
வெளி நோயாளருக்கான பலன் பற்றிய விளக்கப்படத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறு ஆய்வு செய்ய, காப்பீடு செய்தவர் பாலிசி எடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்ளலாம். அவர் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருப்தி அடையவில்லை என்றால், க்ளைம் ஏதும் எடுக்காத பட்சத்தில் பாலிசியை ரத்து செய்யக் கோரலாம், அப்படியொரு சூழலில், காப்பீடுக்கு முந்தைய மருத்துவ சோதனை, முத்திரைத் தீர்வை கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்த பிறகு, நிறுவனம் பிரீமியம் தொகையை திருப்பிச் செலுத்த அனுமதிக்கும்.
பாலிசியைப் புதுப்பிக்கும் போது ஃப்ரீ லுக் பீரியட் பொருந்தாது.
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்
இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் ஆப்ஷனை வழங்குகிறது.
புதுப்பித்தலுக்கான கூடுதல் காலம்
பாலிசி காலாவதியான நாளிலிருந்து 30 நாட்கள்.
குறிப்பு: புதுப்பித்தல் பிரீமியம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் IRDAI-ன் முன் அனுமதியுடன் மாற்றத்திற்கு உட்பட்டவை.
காப்பீட்டுத் தொகையின் திருத்தம்
நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு புதுப்பித்தலின் போது காப்பீட்டுத் தொகையை குறைக்க அல்லது அதிகப்படுத்துவதற்கான ஆப்ஷன் அனுமதிக்கப்படுகிறது.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
அனைத்து திட்டங்களையும் பார்க்கஉடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்


உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



