Star Health Logo

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

IRDAI UIN : SHAHLIP23132V022223

 

 

முக்கியமானவை

அவசியமானவற்றை திட்டமிடுக

essentials

தனித்துவமான பாலிசி

பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவ தேவைகளுக்கான பிரத்யேக பாலிசி.
essentials

இடைக்கால சேர்க்கை

கூடுதல் பிரீமியத்துடன், புதிதாக திருமணம் செய்த மனைவி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும்/அல்லது சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பாலிசியில் சேர்க்கலாம். புதியவர்களுக்கு அவர்கள் சேர்ந்த தேதி முதல் இன்சூரன்ஸின் காத்திருப்பு காலம் தொடங்கும்
essentials

மகப்பேறு நன்மைகள்

சாதாரண மற்றும் சிசேரியன் பிரிவு உட்பட (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய) செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை.
essentials

கருத்தரிப்பு சிகிச்சைக்கான உதவி

நிரூபிக்கப்பட்ட செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.
essentials

எடை குறைப்பு அறுவை சிகிச்சை

எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் ரூ. 2,50,000/- மற்றும் ரூ. 5,00,000/- வரை கவர் செய்யப்படும். இது மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பும், பின்பும் ஆகும் செலவுகளையும் உள்ளடக்கியது.
essentials

புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கான செலவுகள்

புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளுடன் 12 மாதங்கள் வரையிலான தடுப்பூசிக்கான செலவுகளும் கவர் செய்யப்படும்.
essentials

குழந்தை பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு (கர்ப்ப கால பராமரிப்பு)

இந்த பாலிசியானது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு, குறிப்பிட்ட வரம்புகள் வரை பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சை எடுக்கும் செலவுகளை உள்ளடக்குகிறது.
essentials

உங்கள் விருப்ப பாலிசி (புற்றுநோயைக் கண்டறிவதற்கான மொத்த செலவு)

இந்த பாலிசியானது புற்றுநோய் பாதிப்பை முதல் முறையாக கண்டறிவதற்கான மருத்துவ செலவை மொத்தமாக ஒரே தவணையில் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டு வழங்குகிறது.
விரிவான பட்டியல்

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.

பாலிசி டெர்ம்

இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் 12வது மற்றும் 20வது வாரத்தில் ஸ்டார் ஹெல்த்தின் குறிப்பிட்ட ஸ்கேன் மையங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஸ்கேன் செலவுகளை காப்பீடு செய்தவர் ஏற்க வேண்டும்.

தனிப்பட்ட நபரின் நுழைவு வயது

18 முதல் 75 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த பாலிசியை தனிநபர் காப்பீட்டுத் தொகையாகப் பெற முடியும்.

ஃப்ளோட்டர் நுழைவு வயது

ஃப்ளோட்டர் காப்பீட்டுத் தொகையைப் பெற, ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு பெண் 18 முதல் 75 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பாலிசி மூலம், 91 நாட்கள் ஆன குழந்தை முதல் 25 வயது வரையிலான மூன்று பிள்ளைகளுக்கு மட்டுமே கவர் செய்ய முடியும். இந்த பாலிசியின் கீழ், காப்பீடு செய்தவரின் மகள் திருமணமாகாத மற்றும்/அல்லது வேலையில்லாமல் இருந்தால், அதிகபட்சம் 30 வயது வரை காப்பீடு பெறலாம்.

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகை ஆப்ஷன்ஸ் ரூ.5,00,000/-, ரூ.10,00,000/-, ரூ.15,00,000/-, ரூ.20,00,000/-, ரூ.25,00,000/-, ரூ. 50,00,000/- மற்றும் ரூ.1,00,00,000/-.

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் காப்பீடு செய்யப்படும்.

அறை வாடகை

ரூ.5 லட்சம் காப்பீடு எடுத்தவர், உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மருத்துவமனை செலவுகள் அவரது மொத்த இன்சூரன்ஸ் தொகையில் இருந்து தினமும் 1% வரை கவர் செய்யப்படும். ரூ.10/15/25 லட்சங்களுக்கு காப்பீடு எடுத்தவர்கள், சூட் அறைகள் தவிர மற்ற அறைகளுக்கான செலவுகள் கவர் ஆகும். ரூ.50/100 லட்சங்களுக்கு காப்பீடு எடுத்தவர்களுக்கு அனைத்துவித அறைகளும் பொருந்தும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

இந்த பாலிசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாறுதல் மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவதற்கான கட்டணம் ஆகியவை கவராகும்.

ஏர் ஆம்புலன்ஸ்

ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை கவர் செய்யப்படும்.

நவீன சிகிச்சை

வாய்வழியாக செய்யப்படும் கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை.

ஆயுஷ் சிகிச்சை

ஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகை உள்ள வரை செலுத்தப்படும்.

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள்ளாகவே மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவுகளும் இதில் கவர் செய்யப்படும்.

ஸ்டார் மதர் கவர்

காப்பீடு செய்யப்பட்ட நபர் 12 வயதுக்குட்பட்டவராக இருந்து, அவர் ICUவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அவரது தாயார் ஒரு தனி ஏசி அறையில் தங்குவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும்.

அறை பகிர்ந்து தங்கியிருத்தல்

காப்பீடு செய்த நபர் பலரும் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை பயன்படுத்தி இருந்தாலும், அதன் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும்.

மறுவாழ்வு & வலி மேலாண்மை

மறுவாழ்வு சேவை மற்றும் முழுமையான உடல் சிகிச்சைக்கான செலவினங்கள் குறிப்பிட்ட வரம்பு வரை அல்லது காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 10% வரை கவர் செய்யப்படும். காப்பீடுக்கான வருடங்களை பொறுத்து எந்த தொகை குறைவாக உள்ளதோ அது கவர் செய்யப்படும்.

உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள்

பாலிசிதாரர் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில், அதன் சிகிச்சை செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக, உறுப்பு தானம் அளிப்பவரின் அறுவை சிகிச்சை மற்றும் இக்கட்டான நேரத்தில் அவரை ஐசியு-வில் அனுமதிக்க நேர்ந்தாலோ அதன் செலவுகளும் கவர் செய்யப்படும்.

யூட்ரோ ஃபீட்டல் சர்ஜரி

கருப்பையில் உள்ள கருவின் குறைபாடுகளை களையும் அறுவை சிகிச்சைகள் மற்றம் அதன் நடைமுறைகளுக்கு ஆகும் செலவு, இன்சூரன்ஸ் தொகைக்கான காத்திருப்பு காலத்தில் கிடைக்கும். இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறவி நோய்/குறைபாடுகள் தொடர்பான சிகிச்சைக்கு காத்திருப்பு காலம் பொருந்தாது.

ஒப்புதலுடன் கூடிய கருத்தடைக்கான செலவுகள்

விருப்பத்துடன் செய்த கருத்தடைக்கான (டியூபெக்டமி / வாசெக்டமி) செலவுகள், காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, காப்பீடு செய்யப்பட்ட நபர் திருமணமாகி, 22 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருந்தால் வழங்கப்படும்.

விபத்து காரணமாக கருச்சிதைவு

பாலிசியின் வரம்புகளின்படி விபத்து காரணமாக ஏற்படும் கருச்சிதைவுக்கு, காத்திருப்பு காலத்திற்கு உட்பட்டு மொத்த பாலிசி தொகை வழங்கப்படுகிறது.

மருத்துவம் அல்லாத நுகர் பொருட்களுக்கான கவரேஜ்

பாலிசியின் கீழ் மருத்துவமனை சிகிச்சையின் செலவுகளுக்கான க்ளைம் இருக்கும் பட்சத்தில், மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளிநோயாளருக்கான ஆலோசனைகள்

ஒரு வெளிநோயாளராக மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்படும் செலவுகள், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.

பாதுகாப்பான உடல்நலப் பரிசோதனை

பாலிசி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் நலப் பரிசோதனைகளுக்கான செலவுகள், குறிப்பிட்ட வரம்புகள் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டிற்கும் வழங்கப்படும்.

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்

பாலிசி காலத்தில் காப்பீட்டுத் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தினால், காப்பீட்டுத் தொகையின் 100%, அதே பாலிசி ஆண்டில் ஒருமுறை மீட்டெடுக்கப்படும். இதனை அனைத்து க்ளைம்ஸ் மற்றும் அடுத்தடுத்த தருணங்களில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.

ஒட்டுமொத்த போனஸ்

காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது.

ஸ்டார் வெல்னஸ் திட்டம்

பல்வேறு ஆரோக்கியமான நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்த நபரின் நலமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற வெல்னஸ் போனஸ் புள்ளிகளை, பாலிசி புதுப்பித்தலின் போது தள்ளுபடி பெற பயன்படுத்தலாம்.

நீண்ட கால தள்ளுபடி

2வது வருட பிரீமியத்தில் 10% தள்ளுபடியும், 2வது மற்றும் 3வது வருட பிரீமியத்தில் இரண்டையும் சேர்த்து 11.25% தள்ளுபடி கிடைக்கும்.

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுக்கு 1 முறை, 2 ஆண்டுகளுக்கு 1 முறை, 3 ஆண்டுகளுக்கு 1 முறை என்றும் கூட செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

star-health
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
star-health
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
star-health
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
star-health
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
star-health
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us

கூடுதல் தகவல்கள் தேவையா?

Get Insured

உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?