ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பிளான்

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

IRDAI UIN: SHAHLIP23164V072223

HIGHLIGHTS

Plan Essentials

essentials

ஏதுவான பிரிமீயம்

இந்த திட்டத்தில் தனிநபர், மனைவி, சார்ந்திருக்கும் 3 குழந்தைகள், பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர்களையும் கவர் செய்ய முடியும்.
essentials

உடல்நலப் பரிசோதனை

நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனைச் செலவுகள் ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்பு வரை கவராகும்.
essentials

உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்

காப்பீடு செய்த நபர் பெறுநராக இருக்கும் பட்சத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும்.
essentials

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்

பாலிசி காலத்தில் கவரேஜ் வரம்புத் தொகை முழுவதுமாகப் பெற்றுவிட்டாலும், அதே பாலிசி ஆண்டிற்குள் 100% காப்பீட்டுத் தொகையை மீண்டும் 3 முறை புதுப்பிக்க முடியும்.
essentials

ரீசார்ஜ் நன்மைகள்

பாலிசி வரம்புத்தொகை முழுவதுமாக பெற்றுவிட்டால், ரீசார்ஜ் செய்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகையை அதே மருத்துவமனையில் சிகிச்சையை தொடருவதற்கோ அல்லது நோய்/உடல் நலமின்மை /காயத்தின் சிகிச்சைக்கு கூட பாலிசியின் விதிமுறைகளுக்கு கீழ் பயன்படுத்தலாம்.
essentials

மகப்பேறு சிகிச்சைக்கான உதவி

பாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மகப்பேறு சிகிச்சைகளுக்கு, குறிப்பிட்ட வரம்பிற்குள் காப்பீடு பெற முடியும்
essentials

பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவுகள்

குழந்தை பிறந்த 16வது நாளிலிருந்து காப்பீடு தொடங்குகிறது. காப்பீட்டுத் தொகையில் 10% அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் என இவ்விரண்டில் குறைவான தொகை, தொடர்ந்து 12 மாதங்களுக்கு இடைவெளியின்றி அந்த தாய் காப்பீடு செய்திருந்தால் வழங்கப்படும்.
essentials

மருத்துவப் பரிசோதனை

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இக்கட்டான மருத்துவ நிலையில் இருப்பவர்கள், காப்பீடு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மையங்களில் சிகிச்சைக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையை எடுக்க வேண்டும். இதன் செலவில் 100% நிறுவனமே ஏற்கும்.
essentials

பாலிசி காலம்

1 வருடம் அல்லது 2 வருடங்களுக்கு பாலிசி எடுக்கலாம்
essentials

வெல்னஸ்

வெல்னஸ் வெகுமதி திட்டம்
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி வகை

இந்த பாலிசி ஃப்ளோட்டர் அடிப்படையில் மட்டுமே பலன்களை வழங்குகிறது.

நுழைவு வயது

18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டோர் இந்த பாலிசியில் இணையலாம். காப்பீடு செய்தவரை சார்ந்திருக்கும் 16 நாள் குழந்தை முதல் 25 வயது பிள்ளை வரை பலனை பெற முடியும்.

குடும்பத்தின் அளவு

இந்த பாலிசியின் கீழ் பாலிசிதாரர், மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் (அதிகபட்சம் 3 பேர்), பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறலாம்.

உள்நோயாளருக்கான சிகிச்சைகள்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க நேர்ந்தால், அதற்கான செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 60 நாட்கள் முன்பு வரை செய்யும் மருத்துவ செலவுகளை காப்பீட்டில் பெறலாம்.

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்கள் வரை ஆகும் மருத்துவ செலவுகள் கவராகும்.

அறை பகிர்ந்து தங்கியிருத்தல்

மருத்துவமனையில் காப்பீடு செய்தவர் பகிர்ந்து தங்கும் அறைகளில் தங்கியிருக்கும் செலவுகள் பாலிசியில் வரம்புக்கு ஏற்ப கவராகும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

பாலிசிதாரரை ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்வதற்கான கட்டணம் ரூ.750 வரை கவராகும். பாலிசி காலத்தில் மொத்தமாக ரூ.1500 வரை பெற முடியும்.

ஏர் ஆம்புலன்ஸ்

ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை கவராகும்.

கவரேஜ் தொகை தாமாக மீட்டமைத்தல்

பாலிசி காலத்தில் வரம்புத்தொகை முழுவதுமாக பெற்றுவிட்டாலும், அதே பாலிசி ஆண்டிற்குள் 100% காப்பீட்டுத் தொகையை மீண்டும் 3 முறை புதுப்பிக்க முடியும்.

ஒட்டுமொத்த போனஸ்

ரூ. 3,00,000 அல்லது அதற்கும் மேற்பட்ட கவரேஜ் தொகை விருப்பங்களைப் பொறுத்தவரை, காலாவதியான கவரேஜ் தொகையில் 25% ஒட்டுமொத்த போனஸாக சேர்க்கப்படும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாக 10% சேர்ந்துகொண்டே இருக்கும். எனினும், அதிகபட்ச போனஸ் 100% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது,

சாலை விபத்திற்கான கூடுதல் தொகை காப்பீடு (RTA)

பாலிசிதாரர் சாலை விபத்து காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்பட்டால், அடிப்படைக் காப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.5,00,000/-க்கு உட்பட்டு 25% அதிகரிக்கப்படும். இந்த பலனைப் பெற, பாலிசிதாரர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை இயக்கியோ அல்லது பின்பக்கம் அமர்ந்தோ சென்றிருக்க வேண்டும்.

கருவுறும் சிகிச்சைக்கான உதவி

கருவுறுதலுக்கான சிகிச்சைக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் ரீஇம்பர்ஸ்மெண்ட் முறையில் திருப்பிச் செலுத்தும். 1. இந்த பாலிசியின் முதல் தேதியிலிருந்து 36 மாதங்கள் காத்திருக்கும் காலம் பொருந்தும். 2. அத்தகைய சிகிச்சையின் போது, 36 மாதங்கள் கடந்திருக்கும் பட்சத்தில், ரூ.5 லட்சம் கவரேஜ் எடுத்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், ரூ.10 லட்சத்துக்கு கவரேஜ் எடுத்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையும் வழங்கப்படும்.

பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவுகள்

குழந்தை பிறந்த 16வது நாளிலிருந்து காப்பீடு தொடங்குகிறது. காப்பீட்டுத் தொகையில் 10% அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் என இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அந்த தொகை, குழந்தையை பெற்றெடுத்த தாய் தொடர்ந்து 12 மாதங்களுக்கு இடைவெளியின்றி காப்பீடு செய்திருந்தால் வழங்கப்படும். குறிப்பு: விதிவிலக்குகள் எண்.1(குறியீடு Excl 01), விலக்கு எண்.2(குறியீடு Excl 02), விலக்கு எண்.3(குறியீடு Excl 03) மற்றும் மேற்கூறிய தொகையானது பிறந்த குழந்தைக்கு பிறவி நோய்/குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பான சிகிச்சைக்கு பொருந்தாது.

ஆயுஷ் சிகிச்சை

ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் கவராகும்.

உள்நாட்டில் அவசரகால மருத்துவ இடமாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிசிதாரர் அவசர காரணங்களுக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டால் குறிப்பிட்ட வரம்பிற்குள் காப்பீடு வழங்கப்படும்.

கம்பாஷ்னேட் டிராவல்

உயிருக்கு ஆபத்தான அவசர நிலையில், காப்பீடு செய்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை தூரத்தில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு நெருக்கமான குடும்பத்தினர் ஒருவர் விமானத்தில் பயணிக்கும் செலவில் ரூ.5000/- வரை கவர் செய்யப்படும்.

2வது மருத்துவ ஆலோசனை

காப்பீடு செய்த நபர், காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறலாம்.

நவீன சிகிச்சை

நவீன முறை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை பாலிசி வரம்புக்கு உட்பட்டு காப்பீடாக பெறலாம்.

ரீசார்ஜ் பலன்

குறிப்பிட்ட வரம்புகள் வரை கிடைக்கும்.

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கவர் செய்யப்படுகிறது.

வீட்டில் இருந்தபடி சிகிச்சை

மூன்று நாட்களுக்கு மேல் ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் ஆலோசனையின் பேரில் வீட்டில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேதம் உட்பட மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும்.

உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகள் வரம்புகளுக்கு உட்பட்டு, கவரேஜ் தொகையில் 10% வரை, அதாவது அதிகபட்சம் ரூ.1,00,000 வரை கவராகும். எனினும், இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அது கவர் செய்யப்படும்.

இறந்த உடலை சொந்த இடத்துக்கு கொண்டுச் செல்லுதல்

காப்பீடு செய்த நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது உடல் சொந்த இடத்துக்கு கொண்டுச் செல்வதற்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ரூ.5,000/-. வரை கவர் செய்யப்படும்.

கண் புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.

மதிப்புமிக்க சேவை வழங்குநர்களிடம் பெறும் சிகிச்சை

காப்பீட்டு நிறுவனம் பரிந்துரைத்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், காப்பீட்டுத் தொகையில் 1% மொத்தமாக அதிகபட்சமாக ரூ. ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.5,000/- செலுத்தப்படும்.

உடல்நலப் பரிசோதனை

நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனைச் செலவுகள், ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவர் செய்யப்படும்.

கோ-பேமண்ட்

காப்பீடு செய்த நபர் 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளெய்ம் தொகைக்கும் 20% இணை தொகை செலுத்த வேண்டும்.

தவணை முறை

பிரீமியத்தை காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், பிரீமியத்தை ஆண்டுதோறும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் செலுத்தலாம். குறிப்பு: தவணை வசதியை 2 வருடங்கள் கொண்ட பாலிசிகளுக்குத் தேர்வுசெய்தால், 2 வருட காலத்திற்குப் பொருந்தக்கூடிய முழு பிரீமியத்தையும், முதல் வருடம் முடிவதற்குள் காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்த வேண்டும்.

முன்கூட்டியே பெறும் தள்ளுபடி

இந்த பாலிசியின் தொடக்கத்தில் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பட்சத்தில் 5% தள்ளுபடி கிடைக்கும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?