இருமலின் வகைகள், அது ஏற்படக் காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் பல

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பொதுவாக ஏற்படும் ஒன்று தான் இந்த இருமல். பல காரணங்களால் எண்ணற்ற முறை நாம் இரும நேர்ந்திருக்கும். தூசி துகள்கள், மாசு, ஜலதோஷம் (சளித்தொல்லை) மற்றும் பிற நோய்கள் மற்றும் தொற்றுகள் காரணமாக இருமல் ஏற்பட்டிருக்கலாம்.

சுவாசப்பாதையில் சளி, மற்றும் தூசி அல்லது புகை போன்ற உடல் சாராத வெளிப் பொருட்கள் தடை ஏற்படுத்தும் போது, சுவாசிப்பதற்காக அத்தடைகளை விலக்கிட உதவும் ஒரு அனிச்சை செயலே இருமல் ஆகும். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் இருமல் ஒரு தீவிரமான பிரச்சினை கிடையாது.

இருமல் என்றால் என்ன?

இருமல் என்பது மிகவும் பொதுவாக முன்வைக்கப்படும் உடல் நலப் புகார்களில் ஒன்றாகும். இருமலின் காரணமாக  மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் முறை மருத்துவரை நாடுகிறார்கள்.

தொண்டை அல்லது சுவாசப்பாதையில் ஏதாவது ஒன்று எரிச்சல் உண்டாக்கினால், உடல் அதற்கு காட்டும் பதில் வினையே இருமலாகும்.  இருமல் என்பது ‘மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய கதவு போன்ற எபிக்லோட்டிஸ் என்கிற பாகம் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றும் ஒரு செயலாகும்.’

காற்றை வலுவான ஆற்றலுடன் வெளியிடும் இருமல், வியக்கத்தக்க வேகத்தில் சுவாசப் பாதைகளில் உள்ள எரிச்சலூட்டும் தேவையற்ற காரணிகளை அகற்ற உதவுகிறது.

இருமலில் பொதுவாக வலி ஏற்படுவதில்லை, ஆனால் இருமுவதற்கு ஒருவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரைச் சோர்வடைய வைக்கலாம்.

எப்போதாவது இருமல் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும், அதற்காக கவலைபடத் தேவையில்லை. பல வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருமல் நீடித்தால், அல்லது நிறம் மாறிய சளி அல்லது இரத்தம் கலந்த சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால், அது ஏதேனும் உடல்நல பாதிப்பினைக் குறிக்கலாம்.

பெரும்பாலான இருமல்கள் மூன்று வாரங்களுக்குள் குணமாகிவிடும், அவற்றிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படாது.

வறட்டு இருமல் – ஃப்ளெம் அல்லது கெட்டியான சளியை உருவாக்காது. நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் இருமலானது, சுவாசப்பாதைகளில் உள்ள தடைகளை நீக்க உதவுவதற்காக சளியை உற்பத்தி செய்யப்படுவதைக் குறிக்கிறது.

இருமலின் வகைப்பாடு

எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொருத்து இருமல் வகைப்படுத்தப்படுகிறது.

கடும் இருமல்

மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் இருமல் – கடும் இருமல் என வரையறுக்கப்படுகிறது. நோயாளர்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கு இருமல் மிகப் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.

வைரஸ் தொற்றின் காரணமாக மேல் சுவாசப் பாதையில் ஏற்படுகையில் ஜலதோஷம் (சளித்தொல்லை) என்று அழைக்கப்படுகிறது, அல்லது கீழ் சுவாசப் பாதையில் ஏற்பட்டால் அக்யூட் பிரான்கைட்டிஸ் எனப்படுகிறது.

சப்அக்யூட் (சற்று கடுமையான) இருமல்

குறைந்தது மூன்று வாரங்கள் நீடிக்கும் ஆனால், எட்டுக்கு வாரங்களுக்கு மேல் நீடிக்காத இருமல் – சப்அக்யூட் இருமல் என வகைப்படுத்தப்படுகிறது.

தி அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிஷியன்ஸ் (ACCP) வெளியிட்டுள்ள தகவலின்படி, சப்அக்யூட் இருமல் என்பது 8 வாரங்களுக்கு மேல் நீடிக்காத இருமல் என வரையறுக்கப்படுகிறது.

நெஞ்சு பகுதியை ரேடியோகிராஃபி பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டறியப்படும் முடிவுகள் எதிர்மறையாக இருந்தால், ​​அது நிமோனியா அல்ல என்று உறுதிசெய்யபடுகிறது மற்றும், இருமலும் பின்பு குணமடையும்; இது சப்அக்யூட் இருமலைக் குறிக்கிறது.

சப்அக்யூட் இருமல் உள்ள நோயாளருக்கான சிகிச்சையின் முதல் படி, அவர்களுக்கு தொற்றுக்குப் பிந்தைய இருமல் இருக்கிறதா என்பதை தீர்மானிப்பதாகும்.

நாட்பட்ட இருமல்

நாட்பட்ட இருமல் என்பது குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் நீடிக்கும்; பெரும்பாலும் அதற்கு மேலும் கூட நீடிக்கும்.

இருமல் பல்வேறு நுரையீரல் நோய்களின் பொதுவான அறிகுறியாக இருந்த போதும், நாட்பட்ட இருமல் என்பது எப்போதும் வேறொரு நோய் அல்லது உடல்நல பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்பட்ட இருமல் பொதுவாக சிகிச்சைக்கு குணமாகாது.

போதிய தூக்கம் இல்லாமை, உடற்சோர்வு, மற்றும் மன சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும் நாட்பட்ட இருமல் ஒருவரது வாழ்க்கைத் தரத்தினை பாதிக்கக்கூடும்.

கட்டுப்படாத இருமல்

நாட்பட்ட கட்டுப்படாத இருமல் (CRC – கிரானிக் ரிஃப்ராக்டரி காஃப்) என்பது சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்கும் ஒரு தொடர்ச்சியான இருமலாகும்.

இருமலுக்கான சிறப்பு கிளினிக்குகளுக்கு வரும் 20 முதல் 46% நோயாளிகளை இது பாதிக்கிறது. இது ஒருவரது  வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இருமலின் வகைகள்

வறட்டு இருமல்

சளி இல்லாத காரணத்தால் சுவாசப்பாதையில் உள்ள தடைகளை நீக்கும் திறன் இல்லாமல் போவதால் வறட்டு இருமல், ‘பலனற்ற இருமல்’ என்று அழைக்கப்படுகிறது. வறட்டு இருமல் ஏற்பட குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை; இது பலருக்கும் ஏற்படலாம்.

எரிச்சல், உடற்தொய்வு, வறண்ட சுவாச பிரச்சனைகள் அல்லது இன்ஃப்ளமேஷன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வறட்டு இருமல் ஏற்படலாம்.

சளியுடன் கூடிய  (ஈர) இருமல்

இவ்வகை இருமல் திரவமான சளி அல்லது கேட்டியானா சளியை (ஃப்ளெம்) உருவாக்குவதால்,  இது சுவாசப்பாதை தடைகளை நீக்க ஏற்படுகிறது, எனவே ‘பலனளிக்கும் இருமல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் கீழிருந்து ஏற்படும், மற்றும் கனமானதாகவும் இருக்கும்.

நுரையீரலிலிருந்து சளி வெளியேற்றப்படுவதால், நெஞ்சு வலி மற்றும் தொடர் இருமல் ஏற்படுகிறது. ஒவ்வாமை, நிமோனியா, சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை சளியுடன் கூடிய இருமலை உண்டாக்கும்.

கக்குவான் இருமல்

நுரையீரலில் இருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால்  கக்குவான் (வூப்பிங்) இருமல் ஆபத்தான இருமலாகக் கருதப்படுகிறது.

இது பலரை பாதிக்கக்கூடிய ஒரு வகை பாக்டீரியா தொற்றாகும். இது ஆஸ்துமா அடைப்பு, நிமோனியா மற்றும் காசநோய் ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம். ஒருவருக்கு கக்குவான் இருமல் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சை துவங்கப்பட வேண்டும்.

எரிச்சலுடன் கூடிய இருமல்

இவ்வகையான இருமலுடன் தொண்டையில் எரிச்சல் உணர்வும் சேர்ந்து ஏற்படுகிறது. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (எதிர்க்களித்தல்) மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை எரிச்சலுடன் கூடிய இருமலின் அறிகுறிகளாகும்.

எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டு, அது இருமலாக மாறும். நம் வயிற்றில் அமிலத்தைக் குறைக்க உதவும் மருந்துகள், வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவலாம். அவை எரியும் உணர்வை குறைக்கும்.

தீவிர இருமல்

தீவிர இருமலுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தீவிர இருமலின் அறிகுறிகள்: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தோல் வெளிர்தல், 3 – 4 நாட்களுக்கு உயர் வெப்பக் காய்ச்சல் மற்றும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்கும்.

இந்த அறிகுறிகள் கடுமையான நோயை சுட்டிக்காட்டுவதில்லை, ஆனால் இருமல் தொடர்ந்து நீடிக்கும் போதும், அசௌகரியமாக இருக்கும்போதும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

இருமலின் காரணங்கள்

இருமல் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. தூசி துகள்கள் காரணமாகவோ அல்லது நோய்களின் அறிகுறியாகவோ தற்காலிகமாக இருமல் ஏற்படலாம். அதுவே நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் ஒரு நீண்டகால நோய் பாதிப்பினையும் குறிக்கலாம்.

நாட்பட்ட பிரான்கைட்டிஸ் (மூச்சுக்குழாய் அழற்சி)

ஒரு தொற்று காரணமாக வழக்கத்தை விட அதிக சளி உருவாகும் போது, சுவாசப்பாதையில் எரிச்சல் மற்றும் இன்ஃப்ளமேஷன் உண்டாகும் போது, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது பிரான்கைட்டிஸ் பொதுவாக ஏற்படுகிறது. 

அதிகப்படியான சளியை அகற்றுவதற்கான உடலின் முயற்சியே இருமலாகும். காற்று மாசுபாடு போன்ற காரணிகளும் இத்தகைய இருமலை ஏற்படுத்தும்.

உடல்நல பாதிப்புகள் கூட ஒருவருக்கு இருமல் சளி, மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சில் அசௌகரியத்தை உண்டாக்குகிறது.

ஆஸ்துமா

சுவாசப்பாதை சுருங்குவதாலும், சளி சுரப்பது அதிகரிப்பதாலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருமல் ஏற்படுகிறது.

நாட்பட்ட இருமலை மட்டுமே அறிகுறியாகக் கொண்ட ஒருவகை ஆஸ்துமா உள்ளது. இது இருமல்-வகை ஆஸ்துமா என்று குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வாமை

சுற்றுச்சூழலில் உள்ள ஒவ்வாமை காரணிகளுக்கு எதிரான வினையால் அலர்ஜிக் ரைனைட்டிஸ் (நாசியழற்சி) ஏற்படுகிறது. இது நாசி சளிச்சுரப்பியில் (நேசல் மியூக்கோஸா) ஏற்படும் இன்ஃப்ளமேஷன் ஆகும்.

இந்த எரிச்சல் சளி சுரப்பை அதிகரிக்கிறது மற்றும் மூக்கின் உள்பகுதியில் சளி தொண்டைக்குள் செல்லுமாறு சொட்டச்செய்கிறது. இதனால், அத்திரவம் சுவாசப்பாதையில் இடையூறு ஏற்படுத்த, இருமல் ஏற்படுகிறது.

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் (COPD – க்ரோனிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ்) காரணமாக நுரையீரல் அதிகப்படியான சளியை உற்பத்தி செய்கிறது, இதன் விளைவாக அடிக்கடி இருமல் ஏற்படுகிறது.

நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை இருமலால் அகற்ற முடியாது. மோசமான அல்லது கட்டுப்படுத்த முடியாத இருமல் சுவாசப்பாதைகளை நிலைகுலையச் செய்து, சளியை ஆங்காங்கே ஒட்டிக்கொள்ள வைக்கும்.

GERD

கேஸ்ட்ரோ ஈசோஃபேகல் ரிஃப்ளக்ஸ் நோயினால் (GERD) 40% நாட்பட்ட இருமல்கள் ஏற்படுகின்றன. GERD பாதிப்பின் போது, வயிற்றிலிருந்து குரல்வளை மற்றும் தொண்டைக்கு அமிலத்தன்மை உள்ளவை மேல்நோக்கி கொண்டு வரப்படுகிறது.

அடிக்கடி இருமலை ஏற்படுத்தும் இந்த உடல்நல பாதிப்பு, மாலை நேரங்களில் நோயாளர் சமதளத்தில் படுத்திருக்கும் போது மோசமாகும். அதன் காரணமாக வயிற்றிலிருந்து எளிதாக எதிர்க்களிப்பு (ரிஃப்ளக்ஸ்) நிகழ்கிறது.

புகைபிடித்தல்

புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி இருமல் உண்டாகும். புகையிலை பயன்பாட்டினால் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் உட்புகும் இரசாயனங்களை வெளியேற்ற முயலும் உடல், இருமலைத் தூண்டும்.

புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் இருமல் என்பது மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும். வறண்ட இருமலாகத் தொடங்கி இறுதியில் அடர் சளியை ஏற்படுத்தும்.

தொண்டை பிரச்சினைகள்

லேரஞ்சைட்டிஸ், குரல்வளையில் ஏற்படும் இன்ஃப்ளமேஷன் போன்ற தொண்டை பிரச்சினைகள் ஏற்பட்டால், தொண்டையைச் சீர்படுத்த வேண்டியது அவசியம் என்கிற உணர்வு ஒருவருக்கு உண்டாகி கரகரப்பான குரலையும், தொடர்ந்து வறட்டு இருமலும் ஏற்படுகிறது.

மருந்துகள்

இருமல் மருந்தினால் தூண்டப்படும் நாட்பட்ட இருமல் என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இது மற்ற உடல்நல பாதிப்புகளுக்காக எடுத்துக்கொண்ட சில மருந்துகளால் ஏற்படுகிறது.

இருமலுடன் தொடர்புடைய மருந்துகள்

  • ஆஞ்சியோடென்சினை-மாற்றும் என்சைம் தடுப்பு இன்ஹிபிட்டர் (ACEs)
  • லோடென்சின் (பெனாஸபிரில்)
  • வாசோடெக் (எனாலாபிரில்)
  • அக்யூப்ரில் (குயினாபிரில்)
  • அல்டேஸ் (ரமிபிரில்)
  • பிரினிவில் (லிசினோபிரில்)
  • ஆஞ்சியோடென்சின் ரிசெப்டார் பிளாக்கர்ஸ் (ARBs)
  • ஓமேபிராசோல் மற்றும் லெஃப்ளுமைடு போன்ற பிற மருந்துகள்

இருமலின் அறிகுறிகள்

மூக்கு ஒழுகுதல், தொண்டையை சீர் செய்தல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளால் இருமல் இருப்பது அறியப்படுகிறது. சில சமயங்களில் இருமல் வேறு பல உடல்நல பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கும்.

ஒழுகும் மூக்கு அல்லது மூக்கு அடைப்பு

நாசிப் பாதையில் அதிகப்படியான சளி உற்பத்தியின் காரணமாக மூக்கு ஒழுகுகிறது.

மூக்கின் உட்புறமாக சளி வடிதல் (போஸ்ட்நேசல் டிரிப்)

போஸ்ட்நேசல் டிரிப் என்பது தொண்டையின் பின்பகுதியில் திரவம் வடிவதாகும். சளி தொண்டையின் பின்பகுதியில் சென்று விழுங்கப்படும் போது, ​​இருமல் அல்லது தொண்டை வலி ஏற்படுகிறது.

அடிக்கடி தொண்டையை கரகரத்தல்

அடிக்கடி தொண்டையை கரகரக்க செய்வது சில நேரங்களில் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையைக் குறிக்கலாம். ஆசிட் ரிஃப்ளக்ஸ், நாசியில் ஏற்படும் ஒவ்வாமை, நடுக்கப் பிரச்சினைகள் மற்றும் குரல்வளை வளர்ச்சிகள் போன்றவற்றினால் தொண்டையை கரகரக்கத் தூண்டப்படலாம். இதன் காரணமாக இருமல் ஏற்படுகிறது.

இந்த அறிகுறி தொடர்ந்தால் அல்லது தொந்தரவாக இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது உதவும்.

கரகரப்பான குரல்

போஸ்ட்நேசல் ட்ரிப் பாதுப்பு ஏற்பட்டால், மூக்கின் பின்பகுதியில் இருந்து தொண்டைக்குள் சளி வடியும். ஜலதோஷம், புகைபிடித்தல் அல்லது ஒவ்வாமை காரணமாக இப்படி நேரலாம. போஸ்ட்நேசல் ட்ரிப் இருமல் மற்றும் கரகரப்பான குரலை ஏற்படுத்தலாம்.

மூச்சுத் திணறல்

இருமலால் தற்காலிகமாக மூச்சுத் திணறல் மற்றும் தொண்டை புண் ஆகியவை ஏற்படலாம். ஒருவரது நுரையீரலால் இருமலை உண்டாக்கும் துகள்களை வெளியேற்ற முடியாதபோது, ஆஸ்பிரேஷன் நிமோனியா ஏற்படுகிறது. இதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

நெஞ்செரிச்சல்

அமில ரிஃப்ளக்ஸ் (எதிர்க்களித்தல்) அல்லது GERD-இன் மிகப் பொதுவான ஒரு அறிகுறி – நெஞ்செரிச்சல். இது ஒரு நாட்பட்ட இருமலாகவும் தீவிரமடையலாம்..

இரத்தத்துடன் கூடிய இருமல்

இரத்த இருமல் ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான ஒரு காரணம் – நாட்பட்ட பிரான்கைட்டிஸ் (மூச்சுக்குழாய் அழற்சி), இது ஹீமோப்டைசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. COPD அதிகரிப்பதால் அறிகுறிகள் மோசமாகி, இரத்த இருமலும் ஏற்படும். இது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் காரணமாகவும் இரத்த இருமல் ஏற்படலாம்.

இருமலுக்கான சிகிச்சை

இருமல் பொதுவாக 3 முதல் 4 வாரங்களில் தாமாகவே சரியாகிவிடும். இருமல் நாட்பட்டதாகவும், தொடர் இருமலாகவும் இல்லாவிட்டால், அதற்காக எல்லா நேரங்களிலும் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

நீர்ச்சத்தினை பெறுதல்

நிறைய தண்ணீர் குடிப்பதால், நீர்ச்சத்து கிடைத்து தொண்டையில் உள்ள சளியை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் இருமலுக்கு நிவாரணம் கிடக்கிறது. உடல் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும்போது, ​​​​சுவாசப்பாதையில் இருக்கும் தடைகளை அகற்ற ஒருவர் இரும வேண்டிய அவசியம் குறைவாகவே ஏற்படும்.

தூங்கும் விதம்

புவியீர்ப்பு விசையின் காரணமாக ஒருவர் படுத்திருக்கும் போது மூக்கிற்குப் பின் தொண்டையில் சளி வடிவது (போஸ்ட்நேசல் டிரிப்) மோசமாகலாம். படுத்திருக்கும் போது இருமல் மோசமாகிவிட்டால், தலை மற்றும் கழுத்தை சற்று உயரமாக வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

தலையணைகளைப் பயன்படுத்துவது, உடலின் மற்ற பகுதிகளுக்கு மேல் தலையை உயர்த்துவது ஆகியவற்றினால் இருமல் குறையும். இது பெரியவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், இளம் குழந்தைகளுக்கு இம்முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.

இருமல் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துங்கள்

இருமல் சிரப் மற்றும் சொட்டு மருந்துகள் இருமலுக்கு நிவாரணம் தருவதில் சிறப்பாக செயல்படும். அவை இருமலை கட்டுப்படுத்தும் அல்லது வாயில் மயக்க உணர்வை ஏற்படுத்தும் மருந்தாக வேலை செய்கின்றன. இருமல் சொட்டு மருந்துகளை உட்கொள்வதால், இருமல் நீங்கி, தொண்டையில் ஏற்படும் லேசான தொற்றுநோய்களும் குணமடைகின்றன.

இருமல் சொட்டும் மருந்துகளில் பின்வரும் OTC மருந்துகளின் கலவை உள்ளடங்கியிருக்கலாம்:

  • டெக்ஸ்ட்ரோமெத்தோர்ஃபன்
  • மூக்கடைப்பினை நீக்கும் டீகன்ஜசன்ட்களில் சூடோஃபீட்ரைன் இருக்கும்.
  • எச்சில் உற்பத்தியை தூண்டும் ஒரு எக்ஸ்பெக்டோரண்ட் மருந்தான குவாயீஃபெனெசின் – சளி சுரப்புகளை தளர்த்தும் திறன் கொண்டது. இது மிகவும் பாதுகாப்பான தேர்வாக இருக்கும்.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்கவும்

இருமலின் போது ஏற்படும் தொண்டை புண் மற்றும் சளிக்கு சிகிச்சையளிப்பதற்கு உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

தொண்டையின் பின்பகுதியில் உள்ள சளி மற்றும் கெட்டியான சளியை அகற்றும் உப்பு நீர், இரும வேண்டியதன் அவசியத்தைக் குறைக்க உதவுகிறது.

எரிச்சலைத் தூண்டும் காரணிகளைத் தவிர்க்கவும்

சில நபர்களுக்கு இருமலைத் தூண்டும் எரிச்சலூட்டும் காரணிகள் எனப்படும் சில பொருட்களால் ஒவ்வாமை இருக்கலாம். பின்வரும் சில பொதுவான ஒவ்வாமை காரணிகளை தவிர்த்திடவும்.

  • தூசி
  • மகரந்தத்துகள்கள்
  • பூஞ்சை
  • புகை
  • வாசனை திரவியங்கள், மற்றும் பிற கடுமையான நாற்றங்கள்
  • செல்லப்பிராணிகளின் மீதிருந்து விழும் பொடுகு
  • ஆஞ்சியோடென்சினை-மாற்றும் என்சைம் தடுப்பு இன்ஹிபிட்டர்கள் (ACEs) போன்ற மருந்துகள்

சூடான தேநீரில் தேன் அல்லது இஞ்சி சேர்க்கவும்

இஞ்சி மற்றும் தேனுடன் கூடிய தேநீர் இருமல் மற்றும் தொண்டை புண்களுக்கு நிவாரணம் தரும். தொண்டை புண் காரணமாக ஏற்படும் இன்ஃப்ளமேஷனை இஞ்சி குறைக்கிறது; அதேவேளையில் தேன் பாதிப்பை தணிக்கிறது மற்றும் கரகரப்பான இருமலை சமாளிக்கிறது.

மூக்கடைப்பை நீக்கும் டீகன்ஜசன்ட் ஸ்ப்ரேவைப் பயன்படுத்தவும்

போஸ்ட் நேசல் ட்ரிப் பாதிப்பு ஏற்பட்டால், இருமல் மற்றும் தொண்டை வலி மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். டீகன்ஜசன்ட் மருந்துகள் போஸ்ட் நேசல் ட்ரிப்பினை குறைக்கின்றன. இதனால் ஒருவருக்கு அடிக்கடி இரும வேண்டிய அவசியம் நீங்கி, வலி மற்றும் அசௌகரியமும் குறைகிறது.

நோயறியும் பரிசோதனைகள்

நெஞ்சு வலி, காய்ச்சல், மயக்கம், குழப்பம், தலைவலி, இரத்த இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற கூடுதல் அறிகுறிகளுடன் இருமல் வந்தால், மேற்கொண்டு  பரிசோதனைகள் அவசியமாகிறது.

நெஞ்சு பகுதியின் எக்ஸ்ரே

இருமல் மற்றும் மூச்சுத் திணறலின் மூல ஆதாரத்தைக் கண்டறிய நெஞ்சு பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்ரே, மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏதேனும் காயத்திற்குப் பிறகு ஏற்படும் நிமோனியா, நுரையீரல் பாதிப்பு, உடைந்த விலா எலும்புகள் மற்றும் இதயப் பிரச்சனைகளின் அறிகுறிகளை நெஞ்சுப் பகுதியின் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.

இரத்தப் பரிசோதனை

இருமல் குறித்து அறிவதற்கு பொதுவாக இரத்தப் பரிசோதனைகளை யாரும் பயன்படுத்துவதில்லை; ஆனால் சில பரிசோதனைகள் நிமோனியா அல்லது இருமலை உண்டாக்கும் சில ஆட்டோ-இம்யூன் உடல்நல பாதிப்புகள் இருப்பதை வெளிப்படுத்தலாம்.

  • வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை – அதிக அளவு வீக்கம் அல்லது தொற்றுநோயைக் குறிக்கிறது.
  • ஸ்பூட்டம் பகுப்பாய்வு
  • இருமல் & சலியின் புரோஃபைல் பரிசோதனை

CT ஸ்கேன்

நாட்பட்ட இருமலை ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகளைக கண்டறியவும், சைனஸ் கேவிட்டிகளில் உள்ள தொற்றுநோய்களைக் கண்டறியவும் CT ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உணவுக்குழாயின் pH கண்காணிப்பு

உணவுக்குழாயின் (Oesophageal) pH கண்காணிப்பு என்பது GERD சார்ந்த இருமலைக் கண்டறிந்து, உறுதிப்படுத்தும் ஒரு நோயறிதல் முறையாகும்.

ஈசோஃபேகல் pH கண்காணிப்பு என்பது உணவுக்குழாய் எந்தளவிற்கு அமிலத்திற்கு வெளிப்படுகிறது என்பதை குறிக்கும் சரியான அளவீடாகும்; மேலும் இது அமில ரிஃப்ளக்ஸ் (எதிர்க்களிப்பு) ஏற்படும் போது உண்டாகும் இருமலோடு தொடர்புபடுத்தி ஆய்வு செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூச்சுத்திணறல் அல்லது சுவாச பாதிப்பின் அறிகுறிகள் உள்ள நோயாளிகளை அடையாளம் காணவும் இந்த முறை உதவுகிறது, இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு GERD, நிலைமையை மோசமாக்கும் ஒரு காரணியாகும்.

இருமல் பரவாமல் தடுப்பது

இருமல் உள்ளவர்கள் தங்களுடன் இருப்பவர்களுக்கு அதனைப் பரப்ப விரும்புவதில்லை. அதைத்தான் நாம் மற்றவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். நபருக்கு-நபர் அல்லது பொருட்களிலிருந்து ஒருவருக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான சில அடிப்படையான மற்றும் பயனுள்ள வழிமுறைகளை கீழே காணவும்:

கைகளை சுத்தமாக வைத்திருக்கப் பழகவும்

நோய்த்தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் பல்வேறு மேற்பரப்புகளையும், பொருட்களையும் நமது கைகள் தொடுகின்றன. எனவே, கைகளை சுத்தமாக வைத்திருக்கப் பழகுவதுஅவசியம்.

இருமல் அல்லது தும்மலை மூடிக்கொள்ள கைகளைப் பயன்படுத்திய பிறகு, கைகளை நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் கக்குவான் இருமல், நிமோனியா மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் பிறருக்குப் பரவாமல் தடுக்கலாம்.

வாயை மூடி இருமப் பழகவும்

இருமல் அல்லது தும்மலின் போது வாயை மூடிக்கொள்வது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.

எரிச்சலை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்க்கவும்

சில புகைகள் மற்றும் நீராவிகளை சுவாசித்தால் தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் கடுமையான இன்ஃப்ளமேஷனை ஏற்படுத்தும்; இதன் விளைவாக இருமல் ஏற்படுகிறது. இருமலை ஏற்படுத்தும் தூசி, வாசனை திரவியங்கள் மற்றும் மாசுகள் போன்ற எரிச்சலூட்டும் காரினகளை சுவாசிப்பதைத் தவிர்க்கவும்.

தொண்டை எரிச்சல் மற்றும் இருமலைப் போக்க இஞ்சி தேநீர் பருகுவது உதவும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றப் பழகவும்

அருகருகே இருக்கும் நபர்களுக்கிடையே இருமல் எளிதாகப் பரவும். இருமல் உள்ளவர்கள், கிருமிகள் பரவுவதைத் தடுக்க குறைந்தபட்சம் 2 முதல் 6 மீட்டர் வரை சமூக இடைவெளியைக் கடைபிடிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

தமைத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்

எப்போதாவது ஏற்படும் இருமல் மற்றும் சாதாரண இருமலுக்கு பொதுவாக எவரும் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோயின் அறிகுறியாக இருமல் ஏற்படும் போது, ​​தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாகிறது.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பின்வரும் அறிகுறிகளுடன் ஒருவருக்கு தொடர் இருமல் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது அவசியமாகும்

  • இருமலின் போது அதிக சளி வெளியாவது.
  • சளி சிவப்பு நிறத்தில் இருந்தால்.
  • மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது நெஞ்சுப்பகுதியில் இறுக்கமாக உணர்ந்தால்.
  • 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால்.
  • குளிர் நடுக்கம் அல்லது இரவுநேர தொடர் இருமல்
  • 7 நாட்கள் மற்றும் அதற்கு மேல் தொடர் இருமல் நீடித்தால்.

முடிவுரை

மருத்துவர்களிடம் அதிகமாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றான இருமல் – சுவாசப்பாதையில் சளி, மற்றும் இதர  வெளிப் பொருட்கள் தடை ஏற்படுத்தும் போது, சுவாசிப்பதற்காக அத்தடைகளை விலக்கிட உதவும் ஒரு அனிச்சை செயலாகும்.  இருமலில் பல வகைகள் உள்ளன; இருமல் வேறு சில உடல் நல பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இருமல் பொதுவாக தானாகவே குணமாகிவிடும், ஆனால் அது தொடர் இருமலாக நீடிக்கும் போது, ​​உரிய சிகிச்சை மற்றும் மருத்துவ கவனிப்பு அவசியமாகிறது. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, தேன் மற்றும் இஞ்சியுடன் கூடிய தேநீர் பருகுவது, மற்றும் போதுமான நீர்ச்சத்தினை எடுத்துக்கொள்வது போன்ற வீட்டு வைத்தியங்களை முதற்கட்ட சிகிச்சையாக வழங்கலாம்.

அறிகுறிகள் குறையவில்லை என்றால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. இருமல் ஏற்படுவதைத் தவிர்க்க, , சுகாதாரமான நடைமுறைகளுக்குத் தயாராக இருக்கவும், அவற்றை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. எனக்கு ஏற்பட்ட இருமலை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி?

இயற்கையான முறையில் இருமலைக் கட்டுப்படுத்த பின்வரும் வீட்டு நிவாரணிகள் உதவுகின்றன:u003cbru003e1. வெந்நீரில் தேன் கலந்து பருகுவது                                                          u003cbru003e2. இஞ்சி தேநீர்                                                                                   u003cbru003e3.மஞ்சள் தூள்                                                                                                    u003cbru003e4. புரோமிலெயின் – அன்னாசிப்பழத்தில் உள்ள ஒரு என்ஸைம்u003cbru003e5. உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்                                                         u003cbru003e6. பெப்பர்மின்ட் மற்றும்                                                                             u003cbru003e7. நீராவிபிடித்தல்

2. இருமலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்க முடியுமா?

ஆம். பல சந்தர்ப்பங்களில், பல்வேறு காரணங்களால் இருமல் ஏற்படுகிறது. அவற்றில் சில பின்வருமாறு:                                      u003cbru003e1.ஆஸ்துமா                                                                                                                    u003cbru003e2. போஸ்ட்நேசல் ட்ரிப் (மூக்கின் உள்ளாக தொண்டையில் சளி வடிதல்)u003cbru003e3. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPDu003cbru003e4. கேஸ்ட்ரோ-ஈசோஃபேகல் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD)                        u003cbru003e5. நோய்த்தொற்றுகள்

3. எனக்கு ஏற்பட்டுள்ள இருமல் தீவிரமானது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், ஒருவருக்கு ஏற்பட்ட இருமல் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது.u003cbru003e1. மூச்சுத்திணறல்                                                                                                     u003cbru003e2. வேகமாக சுவாசித்தல்                                                                                            u003cbru003e3. இரத்த இருமல்                                                                                                    u003cbru003e4. நாட்பட்ட இருமல்                                                                                               u003cbru003e5. நெஞ்சு வலி                                                                                                            u003cbru003e6. மூச்சுவிடுவதில் சிரமம்                                                                                                      u003cbru003e7. கால்கள் வீங்குதல்

4. இருமலை நிறுத்துவது எப்படி?

பின்வரும் வழிமுறைகளின் மூலம் இருமலை நிறுத்தலாம்u003cbru003e1.இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துதல் u003cbru003e2.தொண்டைக்கான மருந்து மிட்டாய்களை பயன்படுத்துதல்                               u003cbru003e3.நிறைய திரவ உணவுகளை உட்கொள்தல்u003cbru003e4.ஆன்ட்டிபயாட்டிக் மருதுகளை எடுத்துக்கொள்தல்u003cbru003e5.வேப்பரைசர்களை பயன்படுத்துதல்u003cbru003e6.உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்                                                   u003cbru003e7.தேன், இஞ்சி சேர்த்த சூடான பானங்களை அருந்துதல்

5. இருமலுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் யாவை?

இருமலுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள்,                                                                                                      u003cbru003e1. எக்ஸ்பெக்டோரண்ட்ஸ் – குவாயீஃபெனெசின் u003cbru003e2. சப்ரசென்ட்ஸ் – டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன், யூகலிப்டஸ் எண்ணெய், மெந்த்தால்                                      u003cbru003e3.டீகன்ஜஸ்டெண்ட்ஸ்                          u003cbru003e4.ஆண்டிஹிஸ்டாமின்ஸ்                              u003cbru003e5.வலி நிவாரணிகள்u003cbru003e6.இருமல் சொட்டு மருந்துகள்

6.இருமும் போது ஏன் மூடிக்கொள்ள வேண்டும்?

ஒருவர் இருமும் போது, ​​கிருமிகள் மற்றும் வைரஸ்கள் திரவத் துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவலாம். எனவே, தொற்று பரவாமல் தடுக்க மூடிக்கொண்டு இருமுவது அவசியமாகும்.

7.எனக்கு ஏற்பட்டுள்ள இருமல் இயல்பானதா என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

எப்போதாவது ஏற்படும் இருமல் சாதாரணமானது, மற்றும் ஆரோக்கியமானதும் கூட. பல வாரங்கள் நீடிக்கும் அல்லது நிறமாரிய சளி அல்லது இரத்தம் கலந்த சளியை உருவாக்கும் இருமலாக இருப்பின், அது உடனடியாக மருத்துவர் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தீவிர பாதிப்பாக இருக்கலாம்.

8. இருமலை போக்க மருத்துவரால் மருந்து தர முடியுமா?

ஆம், இருமலை வேகமாக போக்கும் மருந்துகளை மருத்துவரால் பரிந்துரைக்க முடியும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top