மோசடிக்கு எதிரான பாலிசி
1.1 இந்த பாலிசியின் நோக்கம் - ஒரு மோசடி அல்லது சந்தேகத்திற்குரிய மோசடி செயலை அடையாளம் காண்பது, கண்டறிவது, தடுப்பது, புகாரளிப்பது மற்றும் மோசடி தொடர்பான விஷயங்களைக் கையாள்வதற்கான ஒரு நடவடிக்கை அமைப்பை வழங்குவதேயாகும்.
1.2. இந்த பாலிசி வழிகாட்டுதல்கள் பின்வரும் காரணங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன
1. மோசடியைக் கண்டறிவது மற்றும் தடுப்பது, மற்றும்/அல்லது மோசடி நிகழும்போது அதைக் கண்டறிவது, மற்றும் மோசடியைத் தடுப்பதற்கான நடைமுறைகளை நிறுவி, அது குறித்த பொறுப்புகளை நிர்வாகம் அறிந்திருப்பதை உறுதிசெய்வதற்காக.
2. ஸ்டார் ஹெல்த் அன்ட் அல்லைட் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற தரப்பினரும் - எந்தவொரு மோசடி சார்ந்த செயலிலும் ஈடுபடாமல் தடுக்கவும், மற்றும் அவர்கள் எங்காவது ஏதேனும் மோசடி சார்ந்த செயல் நடப்பதாக சந்தேகித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் பொருட்டு.
3. மோசடி அல்லது சந்தேகத்திற்குரிய மோசடி நடவடிக்கைகள் பற்றிய விசாரணைகளை நடத்துதல்.
4. எந்தவொரு மற்றும் அனைத்து மோசடி சார்ந்த செயல்/செயல்கள் குறித்த முழு விசாரணை நடத்தப்படும் என்கிற வாக்குறுதியை அளிப்பது; மற்றும்.
5. மோசடியை கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த பயிற்சிகளை வழங்குதல்.
‘ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்’ நிறுவனம் மேற்கொள்ளும் வணிகப் பரிவர்த்தனை(கள்) தொடர்பாக மோசடி அல்லது சந்தேகிக்கப்படும் மோசடிகளில் ஈடுபடும் - ஊழியர்(கள்), முன்னாள் ஊழியர்(கள்), ஆலோசகராகப் பணிபுரிபவர்(கள்), தேவைகேற்ப/ தற்காலிக/ ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடும் நபர்(கள்), விற்பனையாளர்(கள்), சப்ளையர்(கள்), ஒப்பந்ததாரர்(கள்), வாடிக்கையாளர்(கள்), கடன் வழங்குபவர்(கள்), கன்சல்டன்ட்(கள்), சேவை வழங்குநர்(கள்), வெளி ஏஜென்சி(கள்) அல்லது அவர்களின் பிரதிநிதி(கள்), அத்தகைய ஏஜென்சிகளின் ஊழியர்கள் மற்றும்/அல்லது வேறு இதர தரப்பினர் உள்ளிட்டோருக்கு இந்த பாலிசி பொருந்தும்.
"மோசடி" என்பது: ஒரு தனிநபர்(கள்)/நிறுவனம்(கள்) – போலியாக சித்தரித்தல், மறைத்தல், ஏமாற்றுதல் அல்லது வேறு ஏதேனும் மோசடி அல்லது பிற சட்ட விரோதமான வழிமுறைகளை வேண்டுமென்றே மேற்கொள்ளகொண்டு, அதன் காரணமாக தனக்கோ அல்லது பிற நபருக்கோ(நபர்கள்) தவறான ஆதாயம்(கள்) பெறுதல் மற்றும் பிறருக்கு / பிற நிறுவனங்களுக்கு தவறான வழியில் நஷ்டம் ஏற்படுத்துதல் மோசடி எனப்படும்; மற்றவர்களை ஏமாற்றுவது அல்லது தவறாக வழிநடத்தும் செயல்களில் ஈடுபடுத்தி - அதன் மூலம் அவர்களை ஒரு சட்டப்பூர்வ செயலைச் செய்யவோ அல்லது செய்யவிடாமல் தடுக்கவோ வழிவகுப்பது, அல்லது அவர்களை உண்மைத்தன்மையின் அடிப்படையில் அல்லாத சட்டப்பூர்வ முடிவை எடுக்க வைப்பதும் மோசடிக்குள் அடங்கும்.
4.1 மோசடியான அல்லது சந்தேகிக்கப்படும் மோசடிச் செயல்பாடு எண்ணற்றவையாக உள்ள சூழலில், மோசடியாகக் கருதப்படும் சில செயல்(கள்) கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
4.2 கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியல் ஒரு உதாரண நோக்கத்திற்காக மட்டுமே உள்ளது, மற்றும் அது முழுமையானது அல்ல
1. நிறுவனத்திற்குச் சொந்தமான ஆவணம் அல்லது கணக்கு எதையாவது போலியாக உருவாக்குதல் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றம் செய்தல்.
2. காசோலை, வங்கி வரைவோலை, இணைய-வங்கி பரிவர்த்தனை(கள்) அல்லது வேறு ஏதேனும் நிதிசார் பயன்பாடுகள் போன்றவற்றில் போலியை உருவாக்குதல் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றம் செய்தல்.
3. நிதி, பத்திரங்கள், நிறுவன பொருட்கள் அல்லது பிற சொத்துக்களை மோசடி வழிகளில் தவறாகப் பயன்படுத்துதல்.
4. பே-ரோல் (ஊதியப் பட்டியல்) போன்ற பதிவுகளில் தவறான தகவல்களை உள்ளிடுதல், கோப்புகளிலிருந்து ஆவணங்களை அகற்றுதல் மற்றும்/அல்லது மோசடியான குறிப்பால் மாற்றுதல் போன்றவை.
5. பணி நியமனம், வேலை வாய்ப்பு, அறிக்கை சமர்ப்பிப்பு, டெண்டர் கமிட்டி சார்ந்த பரிந்துரைகள் போன்ற விஷயங்களில் வேண்டுமென்றே உண்மைகளை மறைத்தல் / ஏமாற்று வேலைகளில் ஈடுபடுதல்.
6. தனிப்பட்ட அல்லது அலுவல் சார்ந்த நோக்கங்களுக்காக நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்துதல்.
7. நிறுவனத்திற்கு வழங்கப்படாத பொருட்கள் அல்லது பெறப்படாத சேவைகளுக்கான கட்டணங்களை அங்கீகரித்தல் அல்லது பெறுதல்.
8. உண்மைகளை திரித்து மற்றும் தவறாக சித்தரிக்கும் ஒரு உள்நோக்கத்துடன் நிறுவனத்தின் பதிவுகள் அல்லது பிற சொத்துக்களை அழித்து, இடம் மாற்றி வைத்து, அகற்றுவதன் மூலம் - சந்தேகத்தை உருவாக்குதல்/உண்மையை மறைத்தல்/ஏமாற்று செயல்கள் ஆகியவற்றிக்கு வழிவகுத்து – அதன் விளைவாக சரியான மதிப்பீடு/தீர்மானத்தை எட்டவிடாமல் தடுத்தல்.
9. மோசடி சார்ந்த நடவடிக்கையின் வரம்புக்குள் வரும் வேறு எந்த செயலும் மோசடியாக கருதப்படும்.
5.1 ஒவ்வொரு மண்டலம்/பகுதி அலுவலகமும் மேலாளர் பதவி நிலையில் ஒரு நோடல் அலுவலரை கொண்டிருக்க வேண்டும். இந்த அலுவலகங்களுக்கான நோடல் அலுவலரை நியமிக்கும் தகுதி – துணைப் பொது மேலாளர் (DGM) பதவி நிலைக்குக் குறையாத பொறுப்பில் பணியாற்றும் அதிகாரிக்கு உள்ளது. கார்ப்பரேட் அலுவலகத்தில், நிர்வாக இயக்குனரால் நியமிக்கப்பட்ட பொது மேலாளர் (GM) பதவிக்குக் கீழே இல்லாத ஒருவர், ஒரு நோடல் அலுவலராக இருத்தல் வேண்டும், அவர் முழு நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
5.2 நோடல் அலுவலர் விடுப்பில் செல்லும் பட்சத்தில், அவரது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய இணை நோடல் அலுவலரின் பெயர் மற்றும் பதவியை சம்பந்தப்பட்ட, தகுதியுடைய அதிகாரி அறிவிப்பார்.
நோடல் அலுவலர்(கள்) மோசடியைத் தடுப்பது மற்றும் கண்டறிவது, மற்றும் நிறுவனத்தின் "மோசடி தடுப்புக் கொள்கையை" செயல்படுத்துவதற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். மோசடி தடுப்புக் கொள்கையைப் பொருத்தவரை, அதன் செயலமைப்பு முழுவதும் அவரது கட்டுப்பாட்டு வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்துகொள்வது, அனைத்து நோடல் அதிகாரி(களின்) பொறுப்பாகும்:-
1. ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது பகுதியில் நிகழ சாத்தியமுள்ள முறைகேடுகளின் வகைகளை தெளிவுபடுத்த வேண்டும்.
2. மோசடிகளைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குக் கற்பித்தல்.
3. தாம் பாதிக்கப்படுவோம் என்கிற அச்சமின்றி, ஊழியர்கள் தங்களுக்குத் தெரியவரும் எந்தவொரு மோசடி, அல்லது சந்தேகத்திற்கிடமான மோசடி செயல் குறித்து புகாரளிக்க ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
4. நெறிசார் தரநிலைகள் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நிறுவனத்தின் அமைப்பில் செயல்படும் ‘உள்ளார்ந்த தணிக்கை மற்றும் ஆய்வுத் துறை’, மற்றும் விஜிலென்ஸ்(கண்காணிப்பு) துறை ஆகியவை காப்பீட்டு மோசடிகளை அடையாளம் கண்டு, கண்டறிந்து, புகாரளிக்க வேண்டிய முதன்மையான பொறுப்பைக் கொண்டிருக்கும். தணிக்கை மற்றும் ஆய்வுத் துறையானது, அவர்களின் செயல்பாட்டின் போது மோசடி சார்ந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடும், அதேவேளை, விஜிலென்ஸ் துறையானது அவ்வப்போது அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
கீழே உள்ள பட்டியலில் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபரைப் பொறுத்து, மருத்துவக் காப்பீட்டுத் துறையில் நடக்கும் காப்பீட்டு மோசடிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
அ) பாலிசிதாரர் மோசடி
ஒரு காப்பீட்டுத் தயாரிப்பை வாங்குவது, மற்றும் செயல்படுத்துவதில் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிரான மோசடி, கிளைம் செய்யும் நேரத்தில் நடைபெறும் மோசடி உட்பட, காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் போது பொதுவாக அறியப்படும் மோசடி நடவடிக்கைகளில் பின்வரும் செயல்களும் அடங்கும்:
1. நிராகரிக்கப்பட்ட ஆபத்துகள் பற்றிய தகவல்களை மறைத்தல்
2. ஏற்கனவே இருக்கும் நோய்களைப் பற்றிய தகவல்களை மறைத்தல்
3. உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இருத்தல்
4. ஒத்துழைக்காமல் இருத்தல்
5. மருத்துவமனைகளின் அனுசரணையுடனோ அல்லது வேறுவிதமாகவோ போலி பில்கள் / ஆவணங்களை உருவாக்குதல்
பாலிசிதாரரின் மோசடி குறித்த புகார் வரும்போதெல்லாம், அதனை விசாரித்து, ஆதாரங்களை சேகரித்து, பாலிசியை ரத்து செய்ய உரிய முடிவு எடுக்கப்படும். அது மட்டுமில்லாமல், அத்தகைய நிகழ்வுகள் தொடர்புடைய தரவுகள் மற்ற காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சிலுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
b) மருத்துவமனைகளின் மோசடிகள்
1. போலியான பில்கள்/ஆவணங்களைத் தயாரித்தல், காப்பீடு செய்யப்பட்ட பாலிசிதாரர்/நபரின் அனுசரணையுடனோ அல்லது அவரது அனுசரணை இல்லாமலோ மருத்துவக் கட்டணங்களை உயர்த்திக் காட்டுவது.
2. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லாத காரணத்திற்கு சிகிச்சை அளிப்பது
மருத்துவமனைகள் குறித்து பெறப்பட் புகார்கள் விசாரிக்கப்பட்டு புகார்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் - அந்த மருத்துவமனைகளின் எம்பேனல்மெண்ட் ரத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தகைய மருத்துவமனைகள் தொடர்பான விவரங்கள் மருத்துவக் காப்பீட்டு போர்ட்ஃபோலியோவை வைத்திருக்கும் மற்ற காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பப்படும். குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக இருந்தால், நர்சிங் ஹோம் போர்டு, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளிக்கப்படும்.
c) இடைத்தரகர்களால் மோசடி
காப்பீட்டு நிறுவனம் மற்றும்/அல்லது பாலிசிதாரர்களுக்கு எதிராக காப்பீட்டு முகவர்/கார்ப்பரேட் ஏஜென்ட்/இடைத்தரகர்/மூன்றாம் தரப்பு நிர்வாகிகளால் (TPAs) இழைக்கப்படும் மோசடி.
1. பாலிசிதாரர்/காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் தவறான விவரங்களை அளித்தல்
2. கிளைம் அனுபவம் பற்றிய முறையற்ற/தவறான தகவலை அளித்தல்
இடைத்தரகர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் ஆராயப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீதான புகார் உண்மை என கண்டறியப்பட்டால், அவர்களின் சேவைகளை இனி பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு, ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சிலுக்கும், IRDAI-விற்கும் புகார் அளிக்கப்படும்.
ஈ) உள் மோசடி
காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக அதன் இயக்குனரோ, மேலாளரோ மற்றும்/அல்லது வேறு எந்த அதிகாரியோ அல்லது பணியாளரோ ஏதேனும் மோசடி/தவறாக பயன்படுத்தும் செயலில் ஈடுபட்டு, அது நிறுவனத்திற்கு சட்டவிரோதமாகக் (அது எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) கருதப்படும். அதிகாரபூர்வ பதவியை தவறாகப் பயன்படுத்துதல்/துஷ்பிரயோகம் செய்து - பாலிசிதாரருக்கு தேவையற்ற அல்லது நேர்மையில்லாத பலன்களை வழங்கும் செயல் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள நோடல் அலுவலர், ஊழியர்களுக்கு எதிராக பெறப்படும் புகார்கள் விஜிலென்ஸ் துறையால் விசாரிக்கப்பட்டு, வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களைப் பெறுவதை உறுதி செய்வார். முதற்கட்டமாக மோசடி வழக்கின் அறிக்கையை சமர்ப்பித்தவுடன், நோடல் அதிகாரியானவர் நிறுவனத்தின் நடத்தை, ஒழுக்கம் மற்றும் மேல்முறையீட்டு விதிகளின் கீழ் அந்த ஊழியருக்கு எதிராக தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்; இதன் பொருட்டு மனித வள மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
முதற்கட்டத்தில் ஒரு மோசடி குற்றச்சாட்டு உண்மையென கண்டறியப்படும் போதெல்லாம், நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட காவல்துறையிடம் புகார் அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மண்டலம்/பகுதி அலுவலகத்திலும் உள்ள நோடல் அலுவலர், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள நோடல் அலுவலரிடம் காலாண்டு அடிப்படையில் தங்களது அதிகார வரம்பில் நடக்கும் மோசடி வழக்குகளின் பட்டியலை சமர்பிக்க வேண்டும். கார்ப்பரேட் நோடல், அனைத்து அலுவலகங்களிலிருந்தும் பெறப்படும் தகவல்களையும் தொகுத்து அதனை மற்ற அனைத்து நோடல் அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்வார். அதுமட்டுமில்லாமல், முகவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்காக நடத்தப்படும் பயிற்சி அமர்வுகளில் எடுத்துரைப்பதற்காக அந்த தகவல்கள் பயிற்சித் துறைக்கும் அனுப்பப்படும். தணிக்கை மற்றும் ஆய்வுத் துறை, மற்றும் விஜிலென்ஸ் துறையின் வழக்கமான பயிற்சிகளின் போது பயன்படுத்த இந்தத் தகவல் அவர்களுக்கும் அனுப்பப்படும். ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சில் மூலம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களிடமும், மோசடிகள் பற்றிய தேவையான தகவல்களை பரிமாற்றம் செய்வதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் ஊழியர்களை நியமிப்பதற்கு முன், வேலைவாய்ப்பிற்கு முந்தைய சரிபார்ப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், காப்பீட்டு முகவர்/கார்ப்பரேட் முகவர்/இடைத்தரகர்/TPA-களை நியமனம்/ஒப்பந்தம் செய்வதற்கு முன் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிற்சித் துறையானது, தேவைப்படும் போதும், வழக்கமான அடிப்படையிலும் நிறுவனத்தின் மோசடி எதிர்ப்புக் கொள்கை பற்றிய அறிவைப் பகிரும். கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் மண்டல/பகுதி அலுவலகங்களில் உள்ள துறைத் தலைவர்கள், நிறுவனத்தில் நிகழும் எந்தவொரு மோசடி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஊழியர்கள் அளிக்கும் புகார்களை ஏற்றுக்கொள்வார்கள். புகார் எழும்போது, அவர்கள் அதை நோடல் அலுவலரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்; அவர் 3 மாதங்களுக்குள் அதுகுறித்த மேற்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் அவர் ஒரு தவறு இருப்பதாக சந்தேகிக்கும் போதெல்லாம், அல்லது நடக்கும் போதும் அதனைத் தெரிவிப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், அல்லது ஒரு தவறான செயலில் பங்கேற்குமாறு கோரப்பட்டால், உரிய அதிகாரியிடம் உடனடியாகப் புகாரளிப்பது அந்த ஊழியரின் மிக முக்கியமான கடமையாகும். நல்லெண்ண அடிப்படையில் அளிக்கப்படும் புகார்கள், தவறு நடந்துள்ளது அல்லது நடக்க வாய்ப்புள்ளது என்ற நியாயமான நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அடுத்த கட்ட விசாரணையில் எந்த தவறும் இல்லை என்று தெரியவந்தால், புகாரளித்த அந்த ஊழியர் நல்லெண்ணத்துடனே செயல்பட்டிருந்தால், அவர் எந்தவிதமான எதிர்வினை அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒரு ஊழியர் விசாரணையில் ஒத்துழைக்கத் தவறினால், அல்லது விசாரணையின் போது வேண்டுமென்றே தவறான தகவலை வழங்கினால், பணிநீக்கம் உட்பட ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவார். நிறுவனத்தின் எந்தவொரு ஊழியரும் நல்லெண்ணத்தில் புகாரை எழுப்புகையில், அதற்காக அந்த ஊழியர் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும், தண்டனைக்கும் அல்லது பழிவாங்குதலையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு உறுதி செய்யும் என்கிற தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் அவ்வாறு புகாரளிக்கலாம்.
கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள நோடல் அலுவலர், நிறுவனத்தின் மோசடி எதிர்ப்புக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்து, பின்வருவனவற்றிற்கும் பொறுப்பேற்பார்:
1. மோசடி புகார்களை விசாரிப்பதற்கும் தேவையான வாய்வழி/ஆவண ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் விஜிலென்ஸ் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
2. CDA விதிகளின் கீழ் ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித வள மேலாண்மைத் துறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
3. காப்பீட்டு மோசடிகளை எதிர்கொள்ள ஊழியர்கள் / இடைத்தரகர்கள் / பாலிசிதாரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
4. இது சம்பந்தமாக நிர்ணயிக்கப்பட்ட மோசடிகள் பற்றிய பல்வேறு அறிக்கைகளை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்; மற்றும்
5. போர்டின் மறுஆய்விற்காக அவ்வப்போது அறிக்கைகளை வழங்க வேண்டும்.
வெளியே தெரியவரும் வரும் பல்வேறு மோசடி வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை நிறுவனம் ஆணையத்திடம் அளிக்க வேண்டும், மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை வெளிக்காட்டும் FMR 1 மற்றும் FMR 2 படிவங்களை பூர்த்தி செய்து ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
1. நிலுவையில் உள்ள மோசடி வழக்குகள்; மற்றும்
2. ஒவ்வொரு நிதியாண்டும் நிறைவடைந்த 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட மோசடி வழக்குகளை தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளராகும் சாத்தியமுள்ளவர்கள், மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடம் நிறுவனத்தின் மோசடி எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து நிறுவனம் தெரிவிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனமானது -காப்பீட்டு ஒப்பந்தங்கள் / தொடர்புடைய ஆவணங்களில், பாலிசிதாரர்கள், உரிமைகோருபவர்கள் மற்றும் பயனாளிகளின் நலனுக்காக, தவறான அறிக்கை மற்றும்/அல்லது முழுமையற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பதால் ஏற்படும் விளைவுகளை முறையாக எடுத்துக்காட்டி, தேவையான முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை சரியான முறையில் செயலமைப்பில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனம் ஒவ்வொரு அலுவலகத்திலும் நோடல் அலுவலரின் பெயர், தொலைபேசி எண் மற்றும் அதிகாரப்பூர்வ முகவரி ஆகியவற்றைக் தெரிவிக்கும் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மோசடி கண்டறிதல், வகைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அறிக்கை வெளியிடுதல் தொடர்பான நிபந்தனைகள் 2013-14 நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. பொருத்தமான நடைமுறைகள் வகுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் சட்டபூர்வ இணக்கச் சான்றிதழ் 30 ஜூன் 2013-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இந்தக் கொள்கையை மாற்றலாம். காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்/அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதற்காகவும்; உள்ளூர், மாநில மற்றும் மத்திய விதிமுறைகளின் காரணமாகவும்; மற்றும் / அல்லது நிறுவனத்திற்குள் நிகழும் நிர்வாக அமைப்பு மாற்றங்களுக்கு இடமளிப்பது போன்ற இதர காரணங்களுக்காகவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.