New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024

பணமில்லா மருத்துவக் காப்பீடு

India +91✓

பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் நன்மைகள்

 

பணமில்லா மருத்துவக் காப்பீடு என்பது, கையில் இருந்து முன்பணம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் மருத்துவச் செலவுகளை சுலபமாகச் சமாளிக்கவும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும், ஒரு சிறந்த வசதியாகும். மிகச்சிறந்த பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம், இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுடைய மருத்துவமனை கட்டணங்களை, அதனுடன் இணைக்கப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனையில் நேரடியாகச் செலுத்திவிடுகிறது. இதனால் பாலிசிதாரர்கள் பணப் பற்றாக்குறை குறித்த கவலைகள் ஏதுமின்றி, தங்களின் உடல்நலன் தேறுவதில் மட்டும் முழு கவனம் செலுத்த முடிகிறது. இவ்வகை மருத்துவக் காப்பீடு குறிப்பாக அவசரக் காலங்களில் பெரும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அவசரத்திற்குப் பணம் திரட்டும் அலைச்சலையோ அல்லது சிகிச்சைக்குப் பின் தொகையைத் திரும்பப் பெறும் சிக்கலான நடைமுறைகளையோ முழுமையாகத் தவிர்க்கிறது. இந்த பாலிசிகள் பொதுவாக மருத்துவமனையில் அனுமதிப்புச் செலவுகள், ஒரே நாளில் முடியும் சிறு அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள் போன்ற பலதரப்பட்ட மருத்துவச் செலவுகளை உள்ளடக்குகின்றன. இந்த பாலிசியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உடனடி நிதிச் சுமைகளின் மனஅழுத்தம் இல்லாமல் தரமான உயர்தர மருத்துவச் சிகிச்சையை, நீங்கள் உறுதி செய்ய முடியும்.

 

இந்த வழிகாட்டி பணமில்லா மருத்துவக் காப்பீடு என்றால் என்ன, அதன் வகைகள், நன்மைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய, ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

 

எங்கும் பணமில்லா சிகிச்சை: இதன் பொருள் மற்றும் இது எப்போது பொருந்தும்

 

இந்தியாவின் "எங்கும் பணமில்லா சிகிச்சை" (Cashless Everywhere) என்ற புதிய வசதி, பாலிசிதாரர்கள் தங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இல்லாத வெளி மருத்துவமனைகளிலும் கூட பணமில்லா சிகிச்சையைப் பெற அனுமதிக்கிறது; ஆனால், இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகளை நிறைவு செய்து, முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். நடைமுறையில் இதன் பொருள் என்னவென்றால், பணமில்லா சிகிச்சையைப் பெறுவதற்கு நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதில்லை. தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி, தகுதி வரம்புகளை நிறைவு செய்வதன் மூலம், இந்தச் சலுகையை நீங்கள் இன்னும் கூடுதலான மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

இது ஏன் முக்கியமானது: அவசரக் காலங்களில் நீங்கள் முன்பணமாகப் பணம் திரட்ட வேண்டிய அவசியமில்லை, அதோடு உங்களுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக மருத்துவமனை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. உங்கள் பாலிசி நிபந்தனைகளின்படி, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனை கட்டணங்களை நேரடியாக மருத்துவமனையிடமே செலுத்திவிடும்.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டின் வகைகள்

 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பல்வேறு வகைகளாகும்:

 

  1. தனிநபர் மருத்துவக் காப்பீடு: இந்த பாலிசி, நோய், காயம் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்து, ஒரு தனிநபரை மட்டும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை அனுமதிப்புச் செலவுகள், அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் போன்ற நன்மைகள் அடங்கும்.
  2. குடும்பக் காப்பீட்டுத் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே ஒரு பாலிசி ஒட்டுமொத்த குடும்பத்தையும் உள்ளடக்குகிறது. இதில் பாலிசிதாரர், துணவி/துணைவர், குழந்தைகள் மற்றும் சில சமயங்களில் அவர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர்களும் அடங்குவர். மொத்தக் காப்பீட்டுத் தொகையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானதாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.
  3. முதியோர் மருத்துவக் காப்பீடு: குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் இதுவாகும். இந்தத் திட்டம் முதியவர்களின் தனித்துவமான ஆரோக்கியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள நோய்களுக்கான பாதுகாப்பு, கூடுதல் மருத்துவமனை சலுகைகள் மற்றும் தீவிர நோய்களுக்கான காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
    குழு மருத்துவக் காப்பீடு: பொதுவாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு, இந்தத் திட்டத்தை வழங்குகின்றன. இந்தத் திட்டம் ஒரு குழுவாக உள்ள பலரை ஒரே பாலிசியின் கீழ் பாதுகாப்பதோடு, மருத்துவமனை அனுமதிப்புச் செலவுகள், அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் மற்றும் சில சமயங்களில் மகப்பேறு காலச் செலவுகளையும் வழங்குகிறது.
  4. தீவிர நோய் காப்பீடு: காப்பீடு செய்யப்பட்டவருக்குப் புற்றுநோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கடுமையான நோய் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த பாலிசி ஒரு குறிப்பிட்ட மொத்தத் தொகையை (Lump sum) அப்படியே வழங்கிவிடுகிறது. இந்தத் தொகையைச் சிகிச்சைக்கோ, உடல்நலம் தேறுவதற்கோ அல்லது வேறு எந்தச் செலவுகளுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
  5. மகப்பேறு மருத்துவக் காப்பீடு: பிரசவக் கட்டணங்கள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்புச் செலவுகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட மகப்பேறு தொடர்பான அனைத்துச் செலவுகளையும் இது உள்ளடக்குகிறது. சில திட்டங்கள் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் மருத்துவச் சிக்கல்களுக்கான செலவுகளையும் ஏற்கின்றன. மகப்பேறு காப்பீடு பற்றிய முழுமையான தகவல்களை, இங்கே சரிபார்க்கலாம்.

 

நெட்வொர்க் மருத்துவமனைகள்

 

இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இணைந்துள்ள மருத்துவமனைகள் நெட்வொர்க் மருத்துவமனைகள் என்று அழைக்கப்படுகின்றன; இங்கு காப்பீடு பெற்றவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பணமில்லா வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். பணமில்லா இன்சூரன்ஸ் பாலிசியின் மிக முக்கியமான அங்கமே, இந்த நெட்வொர்க் மருத்துவமனைகள் தான். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளன. பாலிசிதாரர் தமக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை, இத்தகைய நெட்வொர்க் மருத்துவமனைகளில், எந்தவொரு பணச்சுமையும் இல்லாமல் பணமில்லா முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

 

பணமில்லா கிளைம்கள் மற்றும் ரீஇம்போர்ஸ்மென்ட் கிளைம்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்

 

அம்சங்கள்பணமில்லா கிளைம்கள் ரீஇம்போர்ஸ்மென்ட்
பணம் செலுத்தும் முறைஇன்சூரன்ஸ் நிறுவனமே மருத்துவமனை பில்லை நேரடியாகச் செலுத்துதல்.பாலிசிதாரர் முதலில் மருத்துவமனை பில்லைச் செலுத்திவிட்டு, பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
அணுகுமுறை எளிமைமிக விரைவானது மற்றும் சிரமமில்லாதது, குறிப்பாக அவசரக் காலங்களுக்கு ஏற்றது.கணிசமான ஆவணப் பணிகளும் காத்திருப்பும் தேவைப்படும்.
முன்பணம் செலுத்துதல்பாலிசிதாரர் கையில் இருந்து எந்தவொரு முன்பணமும் செலுத்தத் தேவையில்லை.பாலிசிதாரர் முழு பில் தொகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
பணப்புழக்கம்இது பாலிசிதாரரின் தற்போதைய பணப்புழக்கத்தைப் பாதிக்காது.ஆரம்பத்தில் பாலிசிதாரரின் பணப்புழக்கத்தைப் பாதிக்கும்.
மருத்துவமனை நெட்வொர்க்இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.நெட்வொர்க் அல்லது நெட்வொர்க் அல்லாத எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்.
ஆவணங்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகக் குறைவான ஆவணங்களே போதுமானது.கிளைம் செய்யும் நடைமுறையின் போது விரிவான ஆவணங்கள் தேவைப்படும்.
கிளைம் ஒப்புதல்சிகிச்சைக்கு முன்பே முன்-அனுமதி பெற வேண்டியது அவசியம்.சிகிச்சைக்குப் பிறகு ஆவணங்களைச் சமர்ப்பித்த, பின்னரே கிளைம் ஒப்புதல் அளிக்கப்படும்.
நேரம்முன்-அனுமதி ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கலாம்.ஆவணங்களைச் சரிபார்த்துப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொருத்தம்நெட்வொர்க் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அவசரக் கால மற்றும் திட்டமிட்ட சிகிச்சைகளுக்கு இது மிகவும் சிறந்தது.நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அல்லது பாலிசிதாரரிடம் கையில் போதிய பணம் இருக்கும்போது, இது பொருத்தமானது.

 

இந்தியாவில் பணமில்லா மருத்துவக் காப்பீட்டின் நன்மைகள்

 

ஒரு மருத்துவ அவசரநிலை உங்கள் பொருளாதார நிலையைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அது ஏற்படுத்தும் மனவேதனையோடு மட்டுமில்லாமல், மருத்துவமனை மற்றும் சிகிச்சைச் செலவுகளுக்காக, உங்களது சேமிப்பையும் கரைத்துவிடும். இதுபோன்ற மருத்துவ அவசரக் காலங்களில் தான் பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், உங்களுக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுகின்றன.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டின் பொருளையும் அதன் நன்மைகளையும், நீங்கள் புரிந்துகொள்ளும்போது, உங்களுக்கான சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எளிதாகிவிடும். உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும், இந்தியாவில் ஒரு பணமில்லா மருத்துவக் காப்பீட்டை வாங்குவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் இதோ:

 

  1. உடனடி மருத்துவச் சிகிச்சை: இந்த பாலிசியின் மூலம் மருத்துவமனை பில்களை முன்கூட்டியே செலுத்த வேண்டுமே என்ற கவலையின்றி, நீங்கள் உடனடியாகச் சிகிச்சை பெற முடியும். ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்த அவசரக் காலங்களில் இது மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
  2. பொருளாதார நிம்மதி: மருத்துவச் சிகிச்சைகள் அதிக செலவு வைக்கக்கூடியவை. பணமில்லா காப்பீடு என்பது மருத்துவமனையில் முன்பணம் கட்டுவதற்கோ அல்லது உடனடித் தேவைகளுக்கோ பணம் திரட்ட வேண்டிய மனஅழுத்தத்தைத் தவிர்க்கிறது, இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்படும் நிதிச் சுமை குறைகிறது.
  3. சிரமமில்லாத நடைமுறை: முழு செயல்முறையையும் எளிமையாக்குவதுதான் பணமில்லா மருத்துவக் காப்பீட்டை வாங்குவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனமே மருத்துவமனை பில்லை நேரடியாகச் செலுத்திவிடுவதால், மிகக் குறைந்த அளவிலான ஆவணங்களைத் தவிர்த்து, நீங்கள் பெரிய அளவில் ஆவணப் பணிகளுக்காக அலைவேண்டியதில்லை.
  4. விரிவான நெட்வொர்க் மருத்துவமனைகள்: பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் எண்ணற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் பொருள், உங்களுக்குத் தேர்ந்தெடுப்பதற்குப் பல மருத்துவமனை வாய்ப்புகள் உள்ளன என்பதாகும்; இதனால் நீங்கள் எங்கிருந்தாலும் தரமான சிகிச்சையைப் பெறுவது உறுதியாகிறது.
  5. செலவு குறைந்த சிறந்த தேர்வு: பணமில்லா பாலிசிகள் வெறும் மருத்துவமனை கட்டணங்களை மட்டும் ஏற்பதில்லை, அதையும் தாண்டி மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளையும் உள்ளடக்குவதால், இது ஒரு விரிவான மற்றும் சிக்கனமான தேர்வாக அமைகிறது.
  6. மன அமைதி: பண விஷயங்களை இன்சூரன்ஸ் கவனித்துக் கொள்ளும் என்ற நிம்மதி, செலவுகளைப் பற்றிய தொடர் கவலைகள் ஏதுமின்றி, நீங்கள் முழுமையாக உடல்நலம் தேறுவதிலும் ஆரோக்கியத்திலும் மட்டும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

 

விரிவான பணமில்லா மருத்துவக் காப்பீட்டின் நன்மைகள்

 

மிகச்சிறந்த பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்று கீழ்வரும் நன்மைகளை வழங்கும்:

 

  • புற்றுநோய் அபாயத்தைக் கண்டறிவதற்கான மரபணுப் பரிசோதனை செலவுகள்
  • வெளிநாடுகளில் உள்ள ஒப்பந்த மருத்துவமனைகளில் சர்வதேச அளவிலான பணமில்லா சிகிச்சை வசதி
  • மனநல சிகிச்சைக்கான பாதுகாப்பு, இதில் ஆலோசனைக் கட்டணங்களும் அடங்கும்
  • வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும்போதும் பணமில்லா வசதியைப் பயன்படுத்தும் சலுகை

 

மறைந்திருக்கும் பெருந்தொற்று: மருத்துவப் பில்களால் ஏற்படும் நிதி நெருக்கடி

 

சமீபத்திய ஆண்டுகளில், மருத்துவச் செலவுகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை என்பது இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத பெருந்தோற்றாக மாறியுள்ளது. அவசர மருத்துவத்தின் போது 60%-க்கும் அதிகமான, இந்தியர்கள் தங்களின் சேமிப்பைக் கரைக்கிறார்கள் அல்லது கடன் வாங்குகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பல வருடங்களாக இன்சூரன்ஸ் இருந்தாலும், எளிமையான மற்றும் நம்பகமான ஒரு காப்பீட்டின் அத்தியாவசியத் தேவை இப்போதுதான் ஒவ்வொரு வீட்டிற்கும் புரியத் தொடங்கியுள்ளது.

 

இன்று லட்சக்கணக்கான குடும்பங்களின் கேள்வி 'இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா' என்பது அல்ல, நெருக்கடி நேரத்தில் கை கொடுக்கும்‘சரியான இன்சூரன்ஸ் எது’ என்பதுதான். இங்குதான் பணமில்லா காப்பீடு முக்கியத்துவம் பெறுகிறது. வெறும் வசதிக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களின் நிதித் திட்டமிடலில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.

 

மருத்துவச் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 

பணமில்லா மருத்துவக் காப்பீடு என்பது வெறும் ஒரு தயாரிப்பு அல்ல; அது ஆரோக்கியத்தைப் பற்றிய நம் சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய புரட்சிகர மாற்றம் ஆகும். பொதுவாக, பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் அல்லது கடுமையான மருத்துவமனை அனுமதிகளுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் உதவும் என்று பலர் நினைத்து வந்தனர். ஆனால், தற்போதைய பெருந்தொற்றுகளும் நாள்பட்ட நோய்களின் அதிகரிப்பும், இந்த எண்ணத்தை மாற்றியுள்ளன. இன்று இன்சூரன்ஸ் என்பது ஏதோ ஒரு பெரிய ஆபத்திற்கான பாதுகாப்பு மட்டுமல்ல, உங்களது எதிர்கால ஆரோக்கியத்தை எந்தவொரு அலைச்சலும் இல்லாமல் சீராகப் பாதுகாப்பதாகும்.

 

கொரோனா பேரிடரின் போது, பண நெருக்கடியானது உடல்நலப் பாதிப்புகளால் ஏற்படும் துயரத்தை எவ்வாறு பல மடங்கு அதிகரித்தது என்பதை நாம் நேரடியாகவே பார்த்தோம். பொதுவாக, மருத்துவச் செலவுகளுக்காக யாரும் தனியாகப் பணம் ஒதுக்கித் திட்டமிடுவதில்லை. அப்படியிருக்கும் போது, அவசரச் சிகிச்சைக்காக முன்கூட்டியே கையில் இருந்து பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவது, பலருக்குச் சிகிச்சை தாமதமாவதற்கோ அல்லது சிகிச்சையே கிடைக்காமல் போவதற்கோ, ஒரு பெரும் தடையாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில்தான் பணமில்லா மருத்துவக் காப்பீட்டின் உண்மையான முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

பணமில்லா மருத்துவக் காப்பீடு மருத்துவத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது

 

பணமில்லா மருத்துவக் காப்படு என்பது மிகவும் எளிதான மற்றும் நேரடியான ஒரு நடைமுறைதான், அதாவது மருத்துவமனை பில்களை இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நெட்வொர்க் மருத்துவமனைகளிடம் செலுத்திவிடுகிறது. இருப்பினும், தற்போதைய நவீன மாற்றங்களுக்கு ஏற்ப இந்தத் திட்டம் புதிய பரிமாணங்களை எடுத்து வருவதுதான் இதில் ஏற்பட்டுள்ள உண்மையான புரட்சியாகும்:

 

  1. டிஜிட்டல் மயமாக்கப்படும் மருத்துவத் துறை: மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தங்களின் மருத்துவ ஆவணங்கள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை விவரங்களை இணையம் மூலமாக எளிதாகப் பெற வழிவகுத்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பணமில்லா இன்சூரன்ஸ் திட்டங்கள், கிளைம் செய்யும் நடைமுறைகளை, இன்னும் எளிமையாக்குகின்றன. மருத்துவமனைகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் டிஜிட்டல் தளங்கள் மூலம் கிளைம்களை மிக விரைவாக முடிப்பதால், ஆவணப் பணிகள் குறைவதோடு வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கிறது. இதனால் பாலிசிதாரர்கள் பணத்தைப் பற்றிய கவலைகளின்றி, இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி மருத்துவச் சிகிச்சை பெற முடிகிறது.
  2. தொலைதூர மருத்துவம் மற்றும் கண்காணிப்பு: கொரோனா பேரிடர் டெலிமெடிசின் எனப்படும் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளின் வளர்ச்சியை வேகப்படுத்தியது மட்டுமின்றி, மருத்துவக் காப்பீட்டின் எல்லையையும் விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக, தற்போதைய பல பணமில்லா பாலிசிகளில் டெலிமெடிசின் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், நாள்பட்ட நோயாளிகள் பயன்படுத்தும் நவீன உடலநலக் கண்காணிப்பு சாதனங்களின் (இதயத் துடிப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் கருவிகள் போன்றவை) வருகையால், பணமில்லா இன்சூரன்ஸ் என்பது வெறும் மருத்துவமனை அனுமதிச் செலவுகளோடு நின்றுவிடாமல், உடனுக்குடன் உடல்நிலையைக் கண்காணிக்கும், ஒரு முழுமையான தீர்வாக மாறியுள்ளது.
  3. மனநல விழிப்புணர்வு: முந்தைய காலங்களில் பெரும்பாலான இன்சூரன்ஸ் திட்டங்கள் மனநலச் சிகிச்சைகளைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் பணமில்லா திட்டங்களில் மனநலச் சிகிச்சைக்கான பாதுகாப்பையும் சேர்க்கத் தொடங்கியுள்ளன. பாரம்பரிய இன்சூரன்ஸ் முறைகளில் இருந்து மாறுபட்டு வந்துள்ள, இந்த மாற்றம், பாலிசிதாரர்கள் கையில் இருந்து முன்பணம் செலுத்த வேண்டிய சுமையின்றி, தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மனநலச் சிகிச்சைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
  4. ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுடன் இணைவு: வெறும் மருத்துவமனை அனுமதிச் செலவுகளைத் தாண்டி, சில பணமில்லா பாலிசிகள் நோய்த்தடுப்புச் சேவைகளையும் வழங்குகின்றன; தடுப்பூசிகள், பொதுவான உடல் பரிசோதனைகள் மற்றும் ஹெல்த் ஸ்கிரீனிங் போன்றவைகளும், இப்போது பல இன்சூரன்ஸ் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்சூரன்ஸ் திட்டங்களை இத்தகைய ஆரோக்கிய மேம்பாட்டுடன் இணைப்பதன் மூலம், பணமில்லா காப்பீடு என்பது நோய் வந்த பின் கை கொடுக்கும் ஒரு திட்டமாக மட்டுமில்லாமல், பாலிசிதாரர்களுக்கு நோய் வராமல் முன்கூட்டியே பாதுகாக்கும், ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் மாறி வருகிறது.

 

இந்தியாவின் எதிர்காலத்திற்கு பணமில்லா மருத்துவக் காப்பீடு ஏன் மிகவும் அத்தியாவசியமானது?

 

  1. கிராமப்புறங்களுக்கான மருத்துவச் சேவை: கடந்த காலங்களில், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சிகிச்சைக்கான அதிக செலவு காரணமாக, இந்தியாவின் கிராமப்புற மக்கள் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பல சவால்களை எதிர்கொண்டனர். ஆனால், தற்போதைய விரிவடைந்து வரும் மருத்துவமனை நெட்வொர்க் மூலமாக, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களும் கையில் இருந்து முன்பணம் செலுத்த வேண்டிய சுமையின்றி தரமான சிகிச்சையைப் பெற முடிகிறது. இன்று முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நெட்வொர்க்கில் 70%-க்கும் அதிகமான மருத்துவமனைகள் இணைந்துள்ளன; இதனால் கிராமப்புற மக்கள் தங்களால் சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியுமா என்ற கவலையின்றி நிம்மதியாக இருக்க முடிகிறது. இது அனைவருக்கும் சமமான மற்றும் எளிதான மருத்துவ வசதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள, ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
  2. மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை உள்கட்டமைப்பு: பணமில்லா சிகிச்சைக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள் தங்களது உள்கட்டமைப்பையும் செயல்முறைகளையும் மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நேரடித் தொடர்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளின் பொறுப்புணர்வும் கூடியுள்ளது. இது பில்லிங் முறையில் வெளிப்படைத்தன்மையையும், கிளைம்களுக்கு விரைவான அனுமதியையும் வழங்க மருத்துவமனைகளை ஊக்குவிக்கிறது. இதன் பலனாக, பாலிசிதாரர்கள் எந்தவொரு அலைச்சலும் இல்லாத மிகச் சிறந்த சேவையை தடையின்றிப் பெற முடிகிறது.
  3. கொரோனாவுக்குப் பிந்தைய மருத்துவத் தேவைகளுக்கேற்ப மாறுதல்: பொது சுகாதார அமைப்புகளில் உள்ள குறைபாடுகளையும், ஒரு மாற்று ஏற்பாடாகத் தனியார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பதன் அவசியத்தையும் கொரோனா பேரிடர் நமக்கு உணர்த்தியுள்ளது. அந்தச் சமயத்தில், நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், மக்கள் பெரிய அளவிலான பில்களையும் சந்திக்க நேர்ந்தது. அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் வராத மக்களுக்கு, பணத்தைப் பற்றிய கவலையின்றி உடனடிச் சிகிச்சை கிடைக்கச் செய்வதில், இந்த பணமில்லா காப்பீடு ஒரு மிக முக்கியப் பங்கை ஆற்றியது.
  4. நிதித் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு: இன்றைய நிச்சயமற்ற சூழலில், ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஏதோ ஒரு கூடுதல் சலுகை அல்ல, அது ஒரு அத்தியாவசியமான நிதித் தேவையாகும். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர், பணமில்லா மருத்துவக் காப்பீடு வழங்கும் நீண்ட காலப் பாதுகாப்பை நன்கு உணர்ந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கூடியுள்ளதைக் கருத்தில் கொண்டு, இளைஞர்கள் தங்களின் வயதான காலத்திலும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர், இது அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பையும் மன அமைதியையும் தருகிறது.

 

எதில் மேம்பாடு தேவை?

 

பல நன்மைகள் இருந்தபோதிலும், பணமில்லா காப்பீட்டுத் துறையில் இன்னும் சில மேம்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதில் விழிப்புணர்வு இல்லாததே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது, பலருக்குத் தங்களது பாலிசியில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது இன்னும் முழுமையாகப் புரிவதில்லை. இரண்டாவதாக, நெட்வொர்க் மருத்துவமனைகளை விரிவுபடுத்தப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கிராமப்புறங்களில் இன்னும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மட்டுமே இன்சூரன்ஸ் பட்டியலில் இருப்பது, ஒரு தடையாகவே உள்ளது. இறுதியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவது மற்றும் வெளிநோயாளி சிகிச்சை போன்றவற்றுக்கும், இந்த பணமில்லா வசதியை முழுமையாகக் கொண்டு வருவதே, இத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், ஒரு முழுமையான தீர்வாக அமையும்.

 

எதிர்காலப் பாதை

 

பணமில்லா காப்பீட்டுத் திட்டங்களின் எதிர்காலம், அதன் தொடர்ச்சியான அடுத்தகட்ட நவீன வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது. மருத்துவக் கட்டமைப்பு என்பது நாளுக்கு நாள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து வருவதால், இன்சூரன்ஸ் நடைமுறைகளும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளுடன் மேலும் ஒன்றிணைந்து, நோயாளிகளுக்கு இன்னும் விரைவான மற்றும் முழுமையான மருத்துவச் சேவையை வழங்கும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிளைம்களைச் சரிபார்ப்பதாக இருக்கட்டும் அல்லது வெளிநோயாளி (Outpatient) சிகிச்சைகளையும், இதனுள் கொண்டு வருவதாக இருக்கட்டும், இந்தியாவின் மருத்துவப் புரட்சியின் மையப்புள்ளியாக, இந்த பணமில்லா காப்பீட்டுத் திட்டம் உருவெடுத்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய தற்போதைய சூழலில், அரசு மற்றும் தனியார் துறைகள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில், இந்த பணமில்லா மருத்துவக் காப்பீடு என்பது வெறும் தற்காலிகப் போக்கு அல்ல. நம் ஆரோக்கியப் பாதுகாப்பைக் கருதும் சிந்தனையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய புரட்சியாகும்.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கான வழிகள்

 

மருத்துவமனையிலுள்ள இன்சூரன்ஸ் பிரிவில், உங்களது பாலிசி நகலையும் அடையாள அட்டையையும் சமர்ப்பித்தவுடன், மருத்துவமனை நிர்வாகம் உங்களுக்கான சிகிச்சை விவரங்களை முன்-அனுமதிப் படிவத்தில் பூர்த்தி செய்து, பணமில்லா ஒப்புதலுக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். பாலிசிதாரர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட சிகிச்சைகளுக்கும் மற்றும் அவசரக் கால மருத்துவ அனுமதிக்கும், இந்த பணமில்லா கிளைம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

  1. திட்டமிட்ட மருத்துவ அனுமதி: எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும்போது, காப்பீடு பெற்றவர் சம்பந்தப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைக்குச் சென்று தங்களது பாலிசி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இன்சூரன்ஸ் பிரிவில் சமர்ப்பிக்கலாம். மருத்துவமனை நிர்வாகம், அந்த ஆவணங்களுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட முன்-அனுமதிப் படிவத்தையும் இணைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பும். பாலிசி நிபந்தனைகளின்படி கிளைம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தால், பணமில்லா சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்படும். இந்த ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
  2. அவசரக் கால மருத்துவ அனுமதி: எதிர்பாராத ஏதேனும் ஒரு உடல்நலக் குறைவு அல்லது விபத்து காரணமாகக் காப்பீடு பெற்றவர் திடீரென நெட்வொர்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவர் தங்களது பாலிசி விவரங்களையும் தேவையான ஆவணங்களையும் இன்சூரன்ஸ் பிரிவில் பகிர வேண்டும். மருத்துவமனை நிர்வாகம், இந்த ஆவணங்களுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட, முன்-அனுமதிப் படிவத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். பாலிசி நிபந்தனைகளின்படி கிளைம் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில், பணமில்லா சிகிச்சைக்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும்.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டில் பொதுவாக விலக்கப்படும் அம்சங்கள்

 

அனைத்து மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளும், குறிப்பிட்ட சில நோய்கள் அல்லது உடல்நலப் பாதிப்புகளுக்கு 1 வருடம் அல்லது 2 வருடங்கள் வரையிலான காத்திருப்பு காலத்திற்கு உட்பட்டவை ஆகும். மேலும், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த பாலிசிக்கு ஏற்ப 36 மாதங்கள், 24 மாதங்கள், 12 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் மாறுபடும். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் பாலிசியில் குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

 

பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பின்வருபவை பணமில்லா காப்பீட்டின் கீழ் வராது:

 

  1. ஏற்கனவே உள்ள நோய்கள்: பல பாலிசிகள், பாலிசி எடுக்கப்பட்ட உடனேயே ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான செலவுகளை ஏற்பதில்லை. அதற்கான காத்திருப்பு காலம் முடிந்த பிறகே, இந்த நோய்களுக்கான பாதுகாப்பு தொடங்கும்.
  2. அழகு சிகிச்சை சார்ந்த நடைமுறைகள்: காஸ்மெடிக் சர்ஜரி, உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள், முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் விபத்தினால் ஏற்படாத பல் சிகிச்சைகள் போன்றவை பொதுவாக, இதில் சேர்க்கப்படுவதில்லை.
  3. மருத்துவம் சாரா இதர செலவுகள்: மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் பதிவுக் கட்டணம், அட்மிஷன் கட்டணம், சோப்பு, பிரஷ் போன்ற தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பிற மருத்துவம் சாரா செலவுகளுக்குக் காப்பீடு கிடைக்காது.
  4. சுயக்காயங்கள் (Self-Inflicted Injuries): தற்கொலை முயற்சி அல்லது தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் காயங்களால் ஏற்படும் சிகிச்சைச் செலவுகள், இதில் விலக்கப்பட்டுள்ளன.
  5. மது அல்லது போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் காயங்கள்: போதைப்பொருள் அல்லது மதுப் பழக்கத்தினால் ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்களுக்கான, எந்தவொரு மருத்துவச் செலவுகளும் பொதுவாக, இதில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  6. போர் மற்றும் பயங்கரவாதச் செயல்கள்: போர், பயங்கரவாதச் செயல்கள் அல்லது உள்நாட்டுக் கலவரங்களால் ஏற்படும் காயங்கள் அல்லது நோய்கள் பெரும்பாலான பாலிசிகளில் சேர்க்கப்படுவதில்லை.
  7. ஆபத்தான விளையாட்டுகளில் பங்கேற்பது: சாகச விளையாட்டுகள் அல்லது அதிக ஆபத்துள்ள செயல்பாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் காயங்களுக்குக் காப்பீடு வழங்கப்படாது.
  8. குழந்தியின்மை சிகிச்சைகள்: ஐ.வி.எஃப் (IVF) போன்ற குழந்தையின்மை மற்றும் மகப்பேறின்மைக்கான சிகிச்சைச் செலவுகள் பொதுவாக பணமில்லா காப்பீட்டுத் திட்டங்களில் வராது.
  9. கர்ப்ப காலம் மற்றும் பிரசவம்: பாலிசியில் பிரத்யேகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் ஒழிய, சாதாரண பிரசவம், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், இதில் வராது. இருப்பினும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில மருத்துவச் சிக்கல்களுக்குச் சில திட்டங்கள் காப்பீடு வழங்கலாம்.
  10. ஆராய்ச்சி அளவிலான சிகிச்சைகள்: மருத்துவத் துறையில் இன்னும் பரிசோதனை நிலையிலுள்ள அல்லது நிலையான மருத்துவ நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிகிச்சைகள், இதில் விலக்கப்படலாம்.
  11. மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகள்: மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் நேரடியாகக் கடைகளில் வாங்கும் பொதுவான மருந்துகள் பொதுவாக, இதில் சேர்க்கப்படுவதில்லை.
  12. மாற்று மருத்துவ முறைகள்: பாலிசியில் தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் ஒழிய ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பிற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் பெரும்பாலும், இதில் சேர்க்கப்படுவதில்லை.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

 

  1. உங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்: பணமில்லா சலுகைகளைப் பெற எப்போதும், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிலுள்ள மருத்துவமனைகளிலேயே சிகிச்சையைத் தேர்ந்தெடுங்கள்.
  2. முன்-அனுமதி: மருத்துவமனையிலுள்ள இன்சூரன்ஸ் பிரிவிடம் தெரிவித்து, முன்-அனுமதிப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். திட்டமிட்ட சிகிச்சையாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்போ, அல்லது அவசரக் காலமாக இருந்தால் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளோ, இதை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள்: உங்களது அடையாள அட்டை, பாலிசி கார்டு, முன்-அனுமதிப் படிவம் மற்றும் முந்தைய மருத்துவ ஆவணங்கள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்குத் தயாராக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  4. பாலிசி பாதுகாப்பைச் சரிபார்க்கவும்: நீங்கள் பெறப்போகும் சிகிச்சை, உங்கள் பாலிசியின் கீழ் வருகிறதா என்பதைச் சரிபார்க்கவும். சில சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்குக் காத்திருப்பு காலம் இருக்கலாம் அல்லது முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியிருக்கலாம்.
  5. டி.பி.ஏ (TPA) உடன் இணைந்து செயல்படுங்கள்: தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர் (Third-Party Administrator - TPA) எனப்படும் மூன்றாம் தரப்பு நிர்வாகியின் பங்கைப் புரிந்துகொண்டு, எவ்வித தடையுமின்றி ஒப்புதல்களைப் பெற அவர்களுடன் தொடர்பில் இருங்கள்.
  6. பாலிசி வரம்பிற்குள் இருங்கள்: கையில் இருந்து கூடுதல் பணம் செலவழிக்க நேரிடுவதைத் தவிர்க்க, உங்களுடைய மொத்த காப்பீட்டுத் தொகை (Sum Insured) மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான உள்-வரம்புகள் (Sub-limits) குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
  7. பாலிசி விதிமுறைகளைப் படியுங்கள்: உங்கள் பாலிசியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்துப் பாருங்கள். எவையெல்லாம் பாலிசியில் சேரும், எவையெல்லாம் விலக்கப்படும் மற்றும் பாலிசியின் வரம்புகள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பின்னாளில் ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சிகளைத் தவிர்க்க உதவும்.
  8. தொடர்பு மற்றும் பின்தொடர்தல்: உங்கள் கிளைம் நடைமுறையில் எந்தவொரு தாமதமோ அல்லது சிக்கலோ ஏற்படாமல் இருக்க, மருத்துவமனையின் இன்சூரன்ஸ் பிரிவு மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய இருதரப்பிடமும் தொடர்ந்து பேசி பின்தொடர்ந்து வாருங்கள்.
  9. வெளிப்படையான செலவுகள்: சிகிச்சைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் கண்காணித்து, அவை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பில் தொகையுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்யுங்கள்.

 

பணமில்லா மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகள்

 

ஒரு பணமில்லா இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் பல உள்ளன. அதில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் இதோ:

 

  1. நெட்வொர்க் மருத்துவமனைகள்: நீங்கள் வழக்கமாகச் செல்ல விரும்பும் மருத்துவமனைகள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்து பாலிசியைத் தேர்ந்தெடுங்கள். அவசரக் காலங்களில் எளிதாக அணுக ஏதுவாக, அந்த மருத்துவமனைகள் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ளனவா என்று பாருங்கள். தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய, நல்ல பெயர் பெற்ற மற்றும் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மருத்துவமனைகள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  2. காப்பீட்டுத் தொகை: நீங்கள் தேர்வு செய்யும் மொத்த காப்பீட்டுத் தொகை, வருடம் முழுவதும் உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த மருத்துவத் தேவைகளையும் எவ்வித தடையுமின்றி முழுமையாகப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. காத்திருப்பு காலம்: உங்களுக்குத் தேவையான மருத்துவச் சலுகைகளை மிக விரைவாகப் பெறுவதற்கு ஏதுவாக, மிகக் குறைவான காத்திருப்பு காலத்தைக் கொண்ட பணமில்லா இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  4. கோ-பேமெண்ட்: பில் தொகையில், நீங்கள் உங்கள் கையிலிருந்து செலுத்த வேண்டிய பங்கின் சதவீதத்தைக் குறிப்பிடும் 'கோ-பேமெண்ட்' நிபந்தனையைத் தெளிவாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
  5. விலக்கப்படும் அம்சங்கள்: பணமில்லா இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் விலக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும்; இதன் மூலம், எந்தெந்த சிகிச்சைகள் அல்லது நோய்களுக்கு, இந்த பாலிசியில் காப்பீடு கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
  6. குடும்ப மருத்துவ வரலாறு: உங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள நோய் அபாயங்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  7. விரிவான பாதுகாப்பு: மருத்துவமனை அனுமதிச் செலவுகள், அனுமதிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஒரே நாளில் முடியும் சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிர நோய்களுக்கான காப்பீடு போன்ற அனைத்தும், அந்த பாலிசியில் முழுமையாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  8. கூடுதல் நன்மைகள்: வருடாந்திர இலவச உடல் பரிசோதனைகள், மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகள் போன்ற கூடுதல் பலன்கள் பாலிசியில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.
  9. இதர காரணிகள்: ஒரு பணமில்லா இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் போது வாடிக்கையாளர் சேவை, பிரீமியம் கட்டணம், பாலிசியைப் புதுப்பிக்கக்கூடிய அதிகபட்ச வயது வரம்பு, பிற வாடிக்கையாளர்களின் கருத்துக்கள், கிளைம் செய்யும் முறை, நோ-கிளைம் போனஸ் மற்றும் காப்பீட்டுத் தொகை தானாகவே மீண்டும் நிரம்பும் வசதி போன்ற பிற காரணிகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

 

முடிவுரை

 

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியா முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைக் கொண்ட, ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து, நீங்கள் ஒரு ஹெல்த் பிளானை வாங்கும்போது, இந்தியா முழுவதிலும் உள்ள அதன் எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு பணமில்லா(Cashless) வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இங்கு 97%-க்கும் அதிகமான பணமில்லா சிகிச்சைக்கான, இறுதி ஒப்புதல்கள் வெறும் 3 மணி நேரத்திற்குள்ளாகவே வழங்கப்பட்டுவிடுகின்றன.

 

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் "எங்கும் பணமில்லா சிகிச்சை" (Cashless Everywhere) வசதியுடன் இனி எப்போதும் நிம்மதியாக இருங்கள். பணமில்லா மருத்துவக் காப்பீட்டைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வது, உங்களுக்கான ஒரு மிகச் சிறந்த முடிவை எடுக்க, உங்களுக்கு உதவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணமில்லா மருத்துவக் காப்பீடு என்பது, பாலிசிதாரர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை நெட்வொர்க் மருத்துவமனைகளில் கையில் இருந்து முன்பணம் ஏதும் செலுத்தாமல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஒரு வசதியாகும். இதற்கான மருத்துவமனை பில்களை இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்திவிடும்.

விரிவான மருத்துவமனை நெட்வொர்க் மற்றும் மிக வேகமான கிளைம் ஒப்புதல்களை வழங்கும் காப்பீடே பணமில்லா சிகிச்சைக்குச் சிறந்த மருத்துவக் காப்பீடாகும்.

பணமில்லா இன்சூரன்ஸ் வசதியைப் பெற பாலிசிதாரர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மருத்துவமனையில் அனுமதித்த உடனே அதுகுறித்த தகவலை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டும்.

அடுத்ததாக, முன்-அனுமதிப் படிவம், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்களைச் சரிபார்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்ததும், பில் தொகை நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தப்படும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது பாலிசிதாரர்களுக்கு எந்தவொரு மருத்துவமனையிலும் (நெட்வொர்க் பட்டியலில் இல்லாத மருத்துவமனையாக இருந்தாலும்) பணமில்லா சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது; ஆனால், அதற்குச் சம்பந்தப்பட்ட சிகிச்சை பாலிசியின் கீழ் வருவதாகவும், மருத்துவக் கட்டணங்கள் இன்சூரன்ஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

நன்மைகள்: கையில் இருந்து முன்பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, விரைவான சிகிச்சை கிடைக்கும், மற்றும் சிரமமில்லாத கிளைம் நடைமுறை.


குறைபாடுகள்: இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் (புதிய விதிமுறைகளின்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது), முன்-அனுமதி பெறுவதில் சில சமயம் தாமதம் ஏற்படலாம், மற்றும் பாலிசியில் சில சிகிச்சைகள் விலக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

மிகச்சிறந்த பணமில்லா மருத்துவக் காப்பீடு என்பது, கையில் இருந்து முன்பணம் ஏதும் செலுத்தாமல் நெட்வொர்க் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் பில்களைக் கையாள வேண்டிய அவசியமின்றி, இன்சூரன்ஸ் நிறுவனமே மருத்துவச் செலவுகளை நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்துவிடும். இதன் மூலம், பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய கவலையின்றி உங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் முழு கவனம் செலுத்த முடியும். இந்தச் சிறந்த வசதி, நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள பெரிதும் உதவுகிறது.

முன்பணம் செலுத்தத் தேவையில்லை, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனை பில்களை நேரடியாக நெட்வொர்க் மருத்துவமனைக்குச் செலுத்துதல், தரமான உயர்தர மருத்துவமனைகளின் விரிவான நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் வசதி, குறைவான ஆவணப் பணிகள், மருத்துவ அவசரக் காலங்களில் நிதி நெருக்கடி இல்லாதிருத்தல் மற்றும் உடல்நலம் தேறுவதில் மட்டும் கவனம் செலுத்த வைக்கும் எளிய செயல்முறை ஆகியவை இதன் முக்கிய நன்மைகளாகும்.

முன்பணம் செலுத்தாமல் சிகிச்சையை மிக விரைவாகவும் எளிதாகவும் அணுகுவதற்கும், பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளைக் குறைத்து பொருளாதார ரீதியாகப் பக்கபலமாக இருப்பதற்கும், வேகமான கிளைம் தீர்வுகளுக்கும் மற்றும் பெரிய நெட்வொர்க் மருத்துவமனைகளின் சலுகைகளைப் பயன்படுத்துவதற்கும் பணமில்லா மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது. இது அவசரக் காலங்களில் பண நெருக்கடியைத் தவிர்த்து, பாலிசிதாரர்கள் மன அமைதியுடன் உடல்நலம் தேறுவதில் கவனம் செலுத்த உதவுகிறது.

குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் கையில் இருந்து முன்பணம் செலுத்தாமல் மருத்துவச் சிகிச்சை பெற அனுமதிப்பதே, இதன் சிறந்த அம்சமாகும். மருத்துவப் பில்களை நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமின்றி, இன்சூரன்ஸ் நிறுவனமே அந்தச் செலவுகளை நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்திவிடுகிறது. இதனால், பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய கவலையின்றி, உங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

சிறந்த பணமில்லா மருத்துவக் காப்பீட்டைக் கண்டறிய பல காரணிகள் உதவுகின்றன. சிறந்த பாலிசியைப் பெற, மருத்துவமனைகளின் நெட்வொர்க் பட்டியல், பாலிசி வழங்கும் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காத்திருப்பு காலம் போன்ற காரணிகளின் அடிப்படை திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உங்கள் குறிப்பிட்ட ஆரோக்கியத் தேவைகளுக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்துவதுடன், எளிய கிளைம் அனுபவத்தைத் தரும் திட்டமே சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்தியாவின் டாப் 5 பணமில்லா மருத்துவக் காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல காரணிகள் உதவுகின்றன. வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுதல் மற்றும் தனியார்த் துறை மருத்துவம், மாற்று மருத்துவ முறைகள், இன்சூரன்ஸ் சார்ந்திருத்தல், மருத்துவச் செலவுகள், மருத்துவ சுற்றுலா, நெட்வொர்க் மருத்துவமனைகள், காப்பீட்டுத் தொகை (Sum insured), பணமில்லா சிகிச்சை, டே-கேர் சிகிச்சைகள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை, இதில் அடங்கும்.

ஆம், பணமில்லா இன்சூரன்ஸ் மிகவும் நல்லது; ஏனெனில் இது நெட்வொர்க் மருத்துவமனைகளில் முன்கூட்டியே பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற, உங்களை அனுமதிக்கிறது. இது அவசரக் காலங்களில் நிதி மனஅழுத்தத்தைக் குறைப்பதுடன் கிளைம் செயல்முறையையும் எளிதாக்குகிறது.

எங்களது நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதியை எளிமையான 6 செயல்முறையில் விரைவாகப் பெற்றிடுங்கள்:

  • நெட்வொர்க் மருத்துவமனையிலுள்ள இன்சூரன்ஸ் பிரிவை அணுகி, கிளைம் குறித்த தகவலைத் தெரிவிக்கக் கோரவும்.
  • இந்தத் தகவலை 044 6900 6900 / 044 4674 5800 ஆகிய எண்களை அழைத்தோ அல்லது support@starhealth.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம்.
  • அடையாளச் சரிபார்ப்பிற்காக உங்கள் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அடையாள அட்டை (ID card), மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைச் சீட்டுகள் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றை மருத்துவமனையில் சமர்ப்பிக்கவும்.
  • நெட்வொர்க் மருத்துவமனை, உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட முன்-அனுமதிப் படிவத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு அனுப்பும்.
  • எங்கள் மருத்துவர்கள் குழு, பாலிசி விதிமுறைகளின்படி கிளைமைச் செயல்படுத்துவதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார்கள். (கூடுதல் விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, எங்கள் நிறுவனத்தின் கள மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து நோயாளியைப் பார்வையிடுவார்).
  • டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, மருத்துவமனை நிர்வாகம் கிளைம் ஆவணங்களை நிறுவனத்திற்கு அனுப்பும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொகை நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தப்படும்.


    குறிப்பு: இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொகைக்கும், உண்மையான பில் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையைக் காப்பீடு பெற்றவரே ஏற்க வேண்டும்.

பணமில்லா மருத்துவமனை அனுமதி என்பது, மருத்துவமனைச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவமனைச் சேவைகளைப் பயன்படுத்த, உங்களை அனுமதிக்கிறது. உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின்படி அந்தச் செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்திவிடும்.

இந்த வசதி முன்கூட்டியே திட்டமிட்ட மற்றும் எதிர்பாராத அவசர மருத்துவ அனுமதி ஆகிய இரண்டிற்குமே பொருந்தும். திட்டமிட்ட சிகிச்சையின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பணமில்லா அனுமதிக்கான கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்பாராத அவசர அனுமதியின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம். பாலிசி விதிகளின்படி, இன்சூரன்ஸ் நிறுவனம், இந்த இரண்டு வகையான மருத்துவ அனுமதிகளுக்குமே பாதுகாப்பு வழங்கும்.

பணமில்லா மருத்துவமனை அனுமதி என்பது, தகுதியான மருத்துவமனை பில்களை இன்சூரன்ஸ் நிறுவனம் நேரடியாக நெட்வொர்க் மருத்துவமனையுடன் தீர்த்துக் கொள்ள அனுமதிப்பதாகும்; எனவே நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டியதில்லை (பாலிசியில் சேர்க்கப்படாத இதர செலவுகள் தவிர). இதற்கான ஒப்புதல் மருத்துவத் தேவை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

பணமில்லா சிகிச்சை என்றால், தகுதியான மருத்துவமனை பில்களை ஸ்டார் ஹெல்த் (STAR Health) நிறுவனம் நேரடியாக நெட்வொர்க் மருத்துவமனையிடம் செலுத்தி, உங்களது முன்பணச் சுமையைக் குறைப்பதாகும். உதாரணமாக, உங்கள் பணமில்லா கிளைம் அங்கீகரிக்கப்பட்டால், நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது பாலிசியில் சேர்க்கப்படாத இதர பொருட்களுக்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.

ஆம். அவசரக் காலங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் பணமில்லா சிகிச்சைக்கான தகவலைத் தெரிவிக்கலாம். நோயாளியின் உடல்நிலை சீரானதும், நீங்களோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடைமுறைகளைத் தொடரலாம்.

வாய்மொழி உறுதிமொழி மட்டுமே இறுதியானது அல்ல. முறையான எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் கிடைத்த பிறகே பணமில்லா அனுமதி உறுதி செய்யப்படுகிறது.

முன்-அனுமதி என்பது, சிகிச்சைக்கு முன்பே உங்களுக்கான பாலிசி பாதுகாப்பு மற்றும் தகுதியை உறுதிப்படுத்த, எங்களுக்கு உதவுகிறது. இது பின்நாட்களில் பில்லிங் முறையில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கிறது.

Still choosing the right health plan?

We're here to guide you.

பணமில்லா மருத்துவக் காப்பீடு
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in