கூடுதல் பிரீமியத்தைச் செலுத்தினால், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை 3 வருடங்களில் இருந்து 1 வருடமாக குறைக்கலாம், இது பாலிசிதாரரின் விருப்பத்தைப் பொறுத்தது.
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவினங்கள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
மகப்பேறு பலன்
நார்மல் மற்றும் சிசேரியன் மகப்பேறு (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய உட்பட) செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
வெளிநோயாளருக்கான கவரேஜ்
வெளி நோயாளருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை (பல் மற்றும் கண் மருத்துவம்) செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
ஒட்டுமொத்த போனஸ்
ரூ.5 லட்சம் பாலிசி தொகைக்கு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கு பிறகு, அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 50% முதல் 100% வரை ஒட்டுமொத்த போனஸாக கணக்கிடப்படும். பாலிசி தொகை ரூ.7,50,000/- அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் 100% கணக்கிடப்படுகிறது.
காப்பீடு தொகையின் ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் அடிப்படைக் கவரேஜ் தீர்ந்தால், பாலிசி ஆண்டில் 100% காப்பீட்டுத் தொகை மீண்டும் ஒருமுறை ரீஸ்டோர் செய்யப்படும், இது ஏற்கனவே நோய் அல்லது உடல்நல பாதிப்பு சிகிச்சைக்கு க்ளைம் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு பயன்படுத்தப்படலாம்.
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்
காப்பீடு செய்த நபருக்கு பாலிசி காலத்தில் உலகில் எந்த பகுதியில் விபத்து ஏற்பட்டாலும், அதனால் மரணிக்க நேர்ந்தாலோ அல்லது உடல் உறுப்புகள் முழுவதும் நிரந்தரமாக செயலிழந்தாலோ, கூடுதல் பிரீமியம் இல்லாமல் தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
ஹாஸ்பிடல் கேஷ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை, பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை கொடுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 7 நாட்களுக்கும், பாலிசி காலத்திற்கு 120 நாட்களுக்கும் வழங்கப்படும்.
DETAILED LIST
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி வகை
இந்தக் பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
நுழைவு வயது
18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். குழந்தைகளுக்கு 91வது நாளிலிருந்து 25 வயது வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் பெறும் சிகிச்சை
நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன் ஏற்படும் மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.
டிஸ்சார்ஜூக்கு பிறகு
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவ செலவுகள் கவர் செய்யப்படும்.
அறை வாடகை
இந்த பாலிசியின் கீழ் அறை வாடகை (தனியாக தங்கும் ஒற்றை ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் சிகிச்சை செலவுகளுக்கு பாலிசி வரம்புக்கு உட்பட்டு வழங்கப்படும்.
சாலை வழி ஆம்புலன்ஸ்
மருத்துவமனையில் அனுமதிக்க உதவும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், சிறந்த வசதிகளுக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு மாற்றுதல் போன்றவற்றிற்கான கட்டணங்களை இந்த பாலிசி கவர் செய்கிறது.
ஏர் ஆம்புலன்ஸ்
ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ஏர் ஆம்புலன்ஸுக்கான செலவில் ரூ. 2,50,000/- கவர் செய்யப்படும். பாலிசி ஆண்டில், அதிகபட்சமாக ரூ. 5,00,000/-வரை கவராகும்.
இடைக்கால சேர்க்கை
புதிதாக திருமணமான மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் பாலிசியில் சேர்க்கலாம். அதற்கான காத்திருப்பு காலம், அவர்களை சேர்த்த தேதியிலிருந்து பொருந்தும்.
டே கேர் நடைமுறைகள்
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளும் இதில் கவர் செய்யப்படும்.
நவீன சிகிச்சை
பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின் அளவிற்கு நவீன சிகிச்சைக்கான கட்டணங்கள் செலுத்தப்படும்.
ஹாஸ்பிடல் கேஷ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை, பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை கொடுக்கப்படும். ஒவ்வொரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகபட்சம் 7 நாட்களுக்கும், பாலிசி காலத்தில் மொத்தமாக 120 நாட்களுக்கும் வழங்கப்படும்.
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் எடுக்கப்படும் ஆயுஷ் உட்பட சிகிச்சைக்கான செலவுகள் கவராகும்.
மகப்பேறு செலவுகள்
சிசேரியன் உட்பட பிரசவ செலவுகள் (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய) என அதிகபட்சம் இரண்டு பிரசவங்களுக்கு குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும்.
பிறந்த குழந்தைக்கான கவரேஜ்
புதிதாகப் பிறந்த குழந்தைக்கான மருத்துவமனைச் செலவுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.
தடுப்பூசிக்கான கட்டணங்கள்
புதிதாகப் பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி செலவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவராகும்.
காப்பீடு தொகையின் ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் அடிப்படைக் காப்பீட்டுத் தொகை தீர்ந்தால், பாலிசி ஆண்டில் 100% காப்பீட்டுத் தொகை மீண்டும் உறுதி செய்யப்படும்,
கோ - பேமெண்ட்
இந்த பாலிசி படி, 61 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்தவர்கள், தங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாலிசிக்கான ஒவ்வொரு க்ளைம் போதும், 10% தொகையை அவர்களே செலுத்த வேண்டும்
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளில் ரூ. 2,50,000/- மற்றும் ரூ. 5,00,000/- கட்டணங்கள் கவர் செய்யப்படும். இது மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளையும் உள்ளடக்குகிறது.
ஆயுஷ் சிகிச்சை
ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகை வரை காப்பீடு செய்யப்படுகிறது.
வெளி நோயாளருக்கான சிகிச்சை
பல் மற்றும் கண் மருத்துவ சிகிச்சைகள் தவிர, நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கான செலவுகள், பாலிசியின் வரம்புக்கு உட்பட்டு கவராகும்.
வெளிநோயாளருக்கான மருத்துவ ஆலோசனை - பல் & கண் மருத்துவம்
வெளிநோயாளராக பல் மற்றும் கண் சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும். காப்பீடு செய்த நபர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பலனை பெற முடியும்.
உடல் உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஏற்படும் செலவுகள், க்ளைம் செலுத்தப்படும் பட்சத்தில் நன்கொடையாளருக்கு கவர் செய்யப்படும்.
உடல்நல பரிசோதனை
நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனை செலவுகள், ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவராகும்.
மாற்று மருத்துவரின் ஆலோசனை
காப்பீடு செய்த நபர், நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள வேறு ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். மருத்துவ பதிவுகளை e_medicalopinion@starhealth.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெறும் வெல்னஸ் போனஸ் புள்ளிகளை, புதுப்பித்தலின் போது தள்ளுபடிகளைப் பெறப் பயன்படுத்தலாம்.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
இரண்டாம் ஆண்டு பிரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கிறது.
மூன்றாம் ஆண்டு பிரீமியத்தில் 12.5% தள்ளுபடி கிடைக்கிறது.
PED திரும்ப வாங்குதல் ஏற்றுதல்
ஆண்டுகளில் வயது
முதல் வருடத்திற்கான பிரீமியத்தை ஏற்றுதல்
3m-35
20%
36-45
30%
46-50
35%
Above 50
50%
தவணை வசதி உள்ளது:
பிரீமியத்தை மாதாந்திரம், காலாண்டு மற்றும் அரையாண்டு என செலுத்தலாம். தவணை முறையில் செலுத்துவதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஏற்றுதல் இருக்கும்:
மாதாந்திரம்: 4%
காலாண்டு: 3%
அரை ஆண்டு: 2%
ஸ்டார் வெல்னஸ் திட்டம்
இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் நடவடிக்கைகள், காப்பீடு செய்த நபருக்கு வெல்னஸ் வெகுமதி புள்ளிகளைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை நிறுவனத்தால் கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த நபர் பெற்ற வெல்னஸ் புள்ளிகள், பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறப் பயன்படுத்தலாம்.
இந்த திட்டம் "ஸ்டார் ஹெல்த்" மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்பு: கீழே உள்ள அட்டவணையில் (வரிசை எண் 1 முதல் 5 வரை) குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் செயல்பாடுகள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்த நபருக்கு மட்டுமே பொருந்தும்.
வெல்னஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் புள்ளிகள் மூலம், பாலிசி புதுப்பிக்கும் போது கிடைக்கும் ப்ரீமியம் தள்ளுபடி விவரத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:
ஈட்டிய வெல்னஸ் புள்ளிகள்
ப்ரீமியத்தின் தள்ளுபடி
200 to 350
2%
351 to 600
5%
601 to 750
7%
751 to 1000
10%
*ஃப்ளோட்டர் பாலிசியில், பின்வரும் அட்டவணை மற்றும் குறிப்பிடப்பட்ட புள்ளிகளின்படி வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது
குடும்பத்தினரின் எண்ணிக்கை
வெயிட்டேஜ்
தனிநபர், மனைவி
1:1
தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (17 வயது வரை)
1:1:0:0:0
தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (18 வயது மற்றும் அதற்கு மேல்)
2:2:1:1:1
குறிப்பு: இரண்டு வருட பாலிசியை பொறுத்தவரை, நீங்கள் பெற்ற மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டால் வகுக்கப்படும்.
காப்பீடு செய்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லாகின் வசதி வழங்கப்படும், அது அவருடைய பாலிசியுடன் இணைக்கப்படும்.
*இரண்டு வருட பாலிசியை பொறுத்தவரை, பிரீமியத்தில் கிடைக்கும் தள்ளுபடி, வெயிட்டேஜ் ஆகியவற்றை புரிந்துகொள்ள விளக்கப்படங்களைப் பார்க்கவும்.
வெல்னஸ் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வரிசை எண்
செயல்பாடு
பாலிசி ஆண்டில் ஒவ்வொரு பாலிசியின் கீழும் பெறக்கூடிய அதிகபட்ச வெல்னஸ் புள்ளிகள்
1.
உடல்நலத்தை நிர்வகிப்பது மற்றும் கண்காணிப்பது
a) ஆன்லைன் சுகாதார இடர் மதிப்பீடு (HRA)
50
b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு
200
2.
வெல்னஸ் செயல்பாடுகள்
a) மாரத்தான் நடை, மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
b) ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்)
100
3.
ஸ்டே ஆக்டிவ் - காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் "ஸ்டார் ஹெல்த்" மொபைல் செயலியில் நடை எண்ணிக்கை இலக்கை எட்டுதல்
200
4(a).
a) எடை மேலாண்மை திட்டம் (அதிக எடை / பருமன் கொண்ட காப்பீடு செய்த நபர்களுக்கு)
100
4(b).
ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்தவர் தனது மேம்பட்ட உடற்தகுதி வெற்றிக் கதையைப் பகிர்தல் (அதிக எடை அல்லது பருமனாக இல்லாத காப்பீடு செய்த நபர்களுக்கு)
50
5(a).
நாள்பட்ட நோய்களை களையும் மேலாண்மை திட்டம் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள காப்பீடு செய்த நபர்களுக்கு)
250
5(b).
மன அழுத்தம் மற்றும் மன நிலையை சரி செய்யும் புரோகிராமை முடிக்கும் பட்சத்தில் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படாத காப்பீடு செய்த நபர்களுக்கு
125
கூடுதல் வெல்னஸ் சேவைகள்
6.
மருத்துவரிடம் ஆன்லைனில் பெறும் ஆலோசனை
7.
முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்
8.
மாதவிடாய் காலம் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்
9.
டிஜிட்டல் ஹெல்த் வால்ட்
10.
வெல்னஸ் கன்டென்ட்
11.
ஆரோக்கியம் தொடர்பான வினாடிவினா & கேமிஃபிகேஷன்
12.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
13.
நெட்வொர்க் வழங்குநர்கள் அளிக்கும் தள்ளுபடிகள்
1. ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்:
(a) சுகாதார இடர் மதிப்பீட்டை நிறைவு செய்தல் (HRA):
ஹெல்த் ரிஸ்க் அசெஸ்மென்ட் (HRA) கேள்வித்தாள் என்பது காப்பீடு செய்தவரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் கருவியாகும். இது காப்பீட்டாளர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை சுயபரிசோதனை செய்ய உதவுகிறது. காப்பீடு செய்தவர் www.starhealth.in என்ற இணையதளத்தில் தனது கணக்கில் உள்நுழைந்து HRA கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யலாம். பாலிசி வருடத்திற்கு ஒருமுறை இதை மேற்கொள்ளலாம். ஆன்லைன் HRA கேள்வித்தாளை முடித்தவுடன், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். குறிப்பு:HRA இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் புள்ளிகளைப் பெற, காப்பீடு செய்தவர் HRA செயல்பாட்டைத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் முழு HRAயையும் முடிக்க வேண்டும்.
(b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு:
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் நோய் கண்டறிதல் / தடுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம். இந்த சோதனைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்டாய சோதனைகள் இருக்க வேண்டும். காப்பீடு செய்தவரின் சொந்த செலவில் எந்த நோய் கண்டறியும் மையத்திலும் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட சோதனை அறிக்கைகளின் அனைத்து முடிவுகளும் சாதாரண வரம்பிற்குள் இருந்தால், காப்பீடு செய்தவர் 200 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏதேனும் ஒரு சோதனையின் முடிவு சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 150 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சோதனை முடிவுகள் சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 100 வெல்னஸ் புள்ளிகளை மட்டுமே பெறுவார்.
குறிப்பு: இந்த உடல்நல பரிசோதனை அறிக்கைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்
முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டாய சோதனைகளின் பட்டியல்
1. முழுமையான ஹீமோகிராம் சோதனை
2. இரத்த சர்க்கரை அளவு (உணவுக்கு முன் (FBS) + உணவுக்குப் பின் (PP) [அல்லது] HbA1c)
3. லிப்பிட் புரஃபைல் (மொத்த கொழுப்பு, HDL, LDL, ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்)
4. சீரம் கிரியேட்டினின்
2. வெல்னஸ் நன்மைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உடல்தகுதி மற்றும் உடல்நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்வதற்காக காப்பீடு செய்தவர் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். உடற்தகுதிக்கான முன்னெடுப்பு மற்றும் வெல்னஸ் புள்ளிகளின் பட்டியல்:
முன்னெடுப்பு
வெல்னஸ் புள்ளிகள்
a.
நடை மாரத்தான், மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
- நிகழ்வில் பங்கேற்க எடுக்கப்பட்ட நுழைவுச் சீட்டின் விவரங்களுடன் BIB எண்ணைச் சமர்ப்பித்தல்
b.
ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்) - ஜிம் / யோகா மையம் / ஜூம்பா வகுப்புகள் / ஏரோபிக் உடற்பயிற்சி / விளையாட்டு கிளப் / பைலேட்ஸ் வகுப்புகள் / நீச்சல் / டாய் சி / தற்காப்பு கலை / ஜிம்னாஸ்டிக்ஸ் / நடன வகுப்புகள்
100
குறிப்பு:
காப்பீடு செய்யப்பட்டவர் ஏதேனும் ஹெல்த் கிளப்பில் உறுப்பினராக இல்லாவிட்டால், பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அவர்/அவள் கிளப்பில் சேர வேண்டும். மேலும் அவர் ஹெல்த் கிளப் உறுப்பினர் ஸ்டேட்டஸை உறுதி செய்ய வேண்டும்.
3. ஸ்டே ஆக்டிவ்
கீழே குறிப்பிட்டுள்ளபடி, “ஸ்டார் ஹெல்த்” மொபைல் செயலியில் படி எண்ணிக்கை இலக்கை எட்டுவதன் மூலம் காப்பீடு செய்தவர் வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியான நடை எண்ணிக்கை
Wellness Points
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 5000 மற்றும் 7999 க்கு இடையில் இருந்தால்
100
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 8000 மற்றும் 9999 க்கு இடையில் இருந்தால்
150
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை இருக்க வேண்டியது - 10000 மற்றும் அதற்கு மேல்
200
குறிப்பு:
ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் முதல் மாதம் மற்றும் கடைசி மாதம் ஸ்டே ஆக்டிவ் என்பதன் கீழ் தினசரி மேற்கொள்ளப்படும் சராசரியான நடை எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
இந்த பலனைப் பெற பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் “ஸ்டார் ஹெல்த்” மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
காப்பீட்டாளர் முடித்த சராசரி நடை எண்ணிக்கை “ஸ்டார் ஹெல்த்” மொபைல் செயலியில் கண்காணிக்கப்படும்.
4. எடை மேலாண்மை திட்டம்:
a) அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ள காப்பீட்டாளர்களுக்கு, எடையைக் குறைப்பதற்கும், பிஎம்ஐயை பராமரிப்பதற்கும் நிபுணர்கள் மூலம் அவர்களின் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) நிர்வகிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
எடை மேலாண்மை திட்டத்தை ஏற்கும் பட்சத்தில், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
கீழே குறிப்பிட்டுள்ளபடி, காப்பீட்டாளர் தனது இலக்கை எட்டினால் கூடுதலாக 50 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
வரிசை எண்
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய மதிப்புகள்
கூடுதல் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான மதிப்பின் அளவுகோல்கள்
1.
உடல் பருமன் (BMI 29க்கு மேல் இருந்தால்)
உயரம் மற்றும் எடை (BMI கணக்கிட)
18 மற்றும் 29 க்கு இடையில் BMI-ஐ அடைதல் மற்றும் பராமரித்தல்
2.
அதிக எடை (BMI 25 முதல் 29 வரை இருந்தால்)
உயரம் மற்றும் எடை (BMI கணக்கிட)
பிஎம்ஐ-யில் இரண்டு புள்ளிகள் குறைத்து, பாலிசி ஆண்டில் அதே BMI-யை பராமரித்தல்
- மதிப்புகள் (பிஎம்ஐ-க்கு) ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் (ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் 5 முறை வரை)
(b) காப்பீடு செய்தவர் அதிக எடை / பருமனாக இல்லாவிட்டால், அவர் ஸ்டார் வெல்னஸை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவரது வெற்றிக் கதையை எங்களிடம் சமர்ப்பிக்கலாம். அவரது உடற்தகுதி செயல்பாடுகள் மற்றும் ஸ்டார் வெல்னஸ் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது ஃபிட்னஸ் வெற்றிக் கதையைச் சமர்ப்பித்தால், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
5. நாள்பட்ட நோய்கள் கொண்ட நிலைகளுக்கான மேலாண்மை திட்டம்:
a) காப்பீடு செய்தவர்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க உதவும் எம்பேனல் செய்யப்பட்ட வெல்னஸ் நிபுணர்கள் மூலம் காப்பீடு செய்தவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது.
நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்யப்பட்டவர் 100 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் ஒரு பாலிசி ஆண்டில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அதிகபட்சம் 3 முறை டெஸ்ட் முடிவு மதிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்
டெஸ்ட் முடிவு மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளின் +/- 10% வரம்பிற்குள் இருந்தால், பாலிசி ஆண்டில் குறைந்தது 2 முறையாவது,கூடுதலாக 150 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த டெஸ்ட் அறிக்கைகள், உடல்நல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 1 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
Sr. No.
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய சோதனை
கூடுதல் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான மதிப்பின் அளவுகோல்கள்
1.
நீரிழிவு நோய் (காப்பீடு செய்தவர் HbA1c சோதனை மதிப்பு (அல்லது) உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பின் சோதனை மதிப்பை சமர்ப்பிக்கலாம்)
HbA1c
≤ 6.5
உணவுக்கு முந்தைய சர்க்கரை (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பிறகான சோதனை மதிப்பு
160 mg/dl க்கு கீழே 100 முதல் 125 mg/dl
2.
உயர் இரத்த அழுத்தம்
பிபி கருவி உடன் அளவிடப்படுகிறது
சிஸ்டாலிக் வரம்பு - 110 முதல் 140 மிமீ ஹெச்ஜி, டயஸ்டாலிக் வரம்பு - 70 முதல் 90 மிமீஹெச்ஜி
3.
இருதய நோய்
LDL கொழுப்பு மற்றும் மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்
100 முதல் 159 mg/dl ≤ 4.0
4.
ஆஸ்துமா
PFT (நுரையீரல் செயல்பாடு சோதனை)
FEV1 (PFC) 75% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. FEV1/ FVC 70% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.
(b) காப்பீடு செய்தவர் நாள்பட்ட நோய்களுக்கான நிலை/கள் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா) பாதிக்கப்படவில்லை என்றால், அவர் "டி-ஸ்ட்ரெஸ் & மைண்ட் பாடி ஹீலிங் திட்டத்தை" தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் காப்பீடு எடுத்தவர்களுக்கு உள் (சுயமாக உருவாக்கப்பட்ட) மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறனை அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்..
மனஅழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராம் முடிந்த பிறகு, காப்பீடு செய்தவர் கூடுதலாக 75 வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
குறிப்பு: இது ஒரு 10 வார திட்டமாகும். இதனை காப்பீடு செய்தவர் எந்த இடைவெளியும் இல்லாமல் முடிக்க வேண்டும்.
6. மருத்துவரிடம் ஆன்லைனில் பெறும் ஆலோசனை:
காப்பீடு செய்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ப தகுதி மருத்துவர்களை அணுகலாம். Doctor Chat அம்சமானது, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காப்பீடு செய்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்களுடன் "சாட்" செய்ய அனுமதிக்கிறது, மேலும், இது டயட் & நியூட்ரிஷன் தொடர்பான விரைவான ஆலோசனை பெறவும், இரண்டாம் கருத்துக்கு மாற்று மருத்துவரின் ஆலோசனை பெறவும் உதவுகிறது. எனினும், செகண்ட் ஒப்பீனியன் தரும் மருத்துவர் வேறு எந்த மருந்துகளையும் பரிந்துரைக்க மாட்டார்.
7. முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்:
பின்வரும் சேவைகளைப் பெற, காப்பீடு செய்தவர் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தையும் தொடர்பு கொள்ளலாம்:
அருகிலுள்ள ஆம்புலன்ஸ் / மருத்துவமனை / இரத்த வங்கி போன்ற அவசர உதவித் தகவல்களுக்கு.
8. மாதவிடாய் காலம் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்:
எளிதான ஆன்லைன் கண்காணிப்பு திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் கருவுறுதல் பராமரிப்புக்கு உதவுகிறது. அதாவது இது கருத்தரிப்பு தடுப்புக்கான திட்டமிடலுக்கு உதவும் அதே வேளையில், கருவுற முடிவு செய்யும் பட்சத்தில், உச்சபட்ச ஓவியூலேஷன் காலத்தையும் டிராக் செய்கிறது.
9. டிஜிட்டல் ஹெல்த் வால்ட்:
காப்பீடு செய்தவர் அவரது தனிப்பட்ட உடல்நல மருத்துவ தகவல்களை சேமிக்க/அணுக மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு பாதுகாப்பான நம்பகமான பெறுநராக இது உள்ளது. இந்த போர்ட்டலைப் பயன்படுத்தி, காப்பீடு செய்தவர்கள் தங்கள் மருத்துவ ஆவணங்களை (மருந்துகள், ஆய்வக அறிக்கைகள், டிஸ்சார்ஜ் அறிக்கைகள் போன்றவை) சேமிக்கலாம், மேலும், இதில் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம், மருத்துவ தரவுகளையும் கண்காணிக்கலாம்.
10. வெல்னஸ் கன்டென்ட்:
இந்த வெல்னஸ் தளம் ஹெல்த் கட்டுரைகள், வலைப்பதிவுகள், உதவிக்குறிப்புகள், இதர உடல்நலம் மற்றும் உயர்தர வெல்னஸ் கட்டுரைகளின் சேகரிப்புகளை வழங்குகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு உடல்நல அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், நேர்மறையான உடல்நல மாற்றங்களைச் பெறுவதற்கும் ஒரு நம்பகமான மூலதனத்தை கொண்டிருப்பதன் மூலம் காப்பீடு செய்யப்பட்டவர் பயனடைவார்.
11. ஆரோக்கிய வினாடிவினா & கேமிஃபிகேஷன்:
வெல்னஸ் போர்டல் ஆரோக்கியம் மற்றும் வெல்னஸ் வினாடி வினா போன்றவற்றை வழங்குகிறது. வெல்னஸ் வினாடி வினாக்கள், பல்வேறு உடல்நலத் தேர்வுகள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க, காப்பீடு செய்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
கேமிஃபிகேஷன் என்பது கேளிக்கை மற்றும் உடல்நலம் & ஆரோக்கிய அனுபவங்களை உருவாக்க உதவுகிறது. இது பயனர்களிடையே சாதனை உணர்வை உருவாக்க உதவி செய்து, அவர்களை ஊக்குவிக்கிறது.
12. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு:
இது அவர்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை, தொலைபேசி அழைப்புகள் (முதன்மையாக அறுவை சிகிச்சை நிகழ்வுகளுக்கு) மூலம் ஃபாலோ அப் செய்து தீர்த்து வைக்கப்படுகிறது.
13. நெட்வொர்க் வழங்குநர்கள் தரும் தள்ளுபடிகள்:
எங்கள் இணையதளத்தில் காட்டப்படும் எங்கள் `நெட்வொர்க் வழங்குநர்கள் அளிக்கும் சேவைகளில், காப்பீடு செய்தவர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம்.
வெல்னஸ் செயல்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
காப்பீடு செய்தவர் வழங்கிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
வெல்னஸ் வெகுமதி புள்ளிகளுக்கு பதிலாக பணம் எதுவும் கொடுக்கப்படாது.
காப்பீடு செய்தவர், வெல்னஸ் செயல்பாடு/சோதனையை மேற்கொண்ட 1 மாதத்திற்குள் அது தொடர்புடைய ஆவணங்கள், ரிப்போர்ட்ஸ், ரசீதுகள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாலிசி ஆண்டின் கடைசி மாதத்தில் எந்தவொரு வெல்னஸ் செயல்பாட்டின் ரிப்போர்ட், ஆவணம், ரசீது என எதுவும் சமர்ப்பிக்க முடியாது.
எம்பேனல்டு சேவை வழங்குநர் மூலம் வழங்கப்படும் சேவைகளை எளிதாக்கும் பணிகளை மட்டுமே ஸ்டார் ஹெல்த் செய்கிறது. எனவே அதிகரிக்கும் செலவுகள் அல்லது சேவைகளுக்கு பொறுப்பாகாது.
அனைத்து மருத்துவ சேவைகளும் எம்பேனல்டு ஹெல்த் கேர் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைகள்/சேவைகளைப் பெறுவதற்கு முன் காப்பீடு செய்தவர் தனது மருத்துவரை அணுக வேண்டும். இந்த ஆலோசனைகள்/சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முடிவு காப்பீடு செய்யப்பட்ட நபரின் விருப்பப்படி மட்டுமே.
வெல்னஸ் புள்ளிகள் நியாயமற்ற முறையில் பெற்றது கண்டறியப்பட்டால், புள்ளிகளை நீக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
வெல்னஸ் திட்டத்தின் மூலம் மற்றும் / அல்லது அதன் காரணமாக, பாதிக்கப்பட்டதாகவோ, பாதிப்பு ஏற்படுவதாகவோ பயனாளர் க்ளைம் செய்யும் பட்சத்தில் ஸ்டார் ஹெல்த், அதன் குழு நிறுவனங்கள், அல்லது துணை நிறுவனங்கள், அந்தந்த இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், எந்தவொரு செயல்கள், உரிமைகோரல்கள், கோரிக்கைகள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.
வழங்கப்படும் சேவைகள் IRDA வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.”
காட்சி – 1
40 வயது தனிநபர் ரமேஷ் ஸ்டார் விரிவான காப்பீட்டுக் கொள்கையை வாங்குகிறார். (தனிப்பட்ட காப்பீட்டுத் தொகை)
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
பெறப்பட்ட வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை (இரண்டு சோதனை முடிவுகள் இயல்பான அளவுகளில் இல்லை)
100
3
நடை மாரத்தானில் பங்கேற்றார்
100
4
ஜிம் சென்றார்
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்
200
6
தனது ஃபிட்னஸ் வெற்றிக் கதையைப் பகிர்ந்துள்ளார்
50
7
க்ரோனிக் கண்டிஷன் மேனேஜ்மெண்ட் புரோகிராம் மூலம் நீரிழிவு நோயை நிர்வகித்தார்
250
மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
850
ரமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர் ஆகிறார்.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
காட்சி – 2
42 வயதான சுரேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் (18 வயதுக்குட்பட்ட) ஸ்டார் காம்ப்ரிஹென்சவ் இன்ஷூரன்ஸ் பாலிசியை (ஃப்ளோட்டர் தொகை) வாங்குகிறார்கள்
சுரேஷ் மற்றும் லட்சுமி ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தனர்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
சுரேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
மாரத்தானில் பங்கேற்றார்
100
0
4
ஜிம்மில் கலந்து கொண்டார்
100
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்
200
200
6
சுரேஷ் எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று 27 எனும் பிஎம்ஐ நிலையை அடைந்தார். லட்சுமி எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று 23 எனும் பிஎம்ஐ நிலையை பெற்றார்.
100
100
7
க்ரோனிக் கண்டிஷன் மேனேஜ்மெண்ட் புரோகிராமில் கலந்து கொண்டு, சுரேஷ் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகித்தார்; மன அழுத்தம் மற்றும் மனதை உடல் குணப்படுத்தும் திட்டத்தை லக்ஷ்மி முடித்துள்ளார்
250
125
மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
1000
775
வெயிட்டேஜ் அடிப்படையில் வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை - 1:1
500
(1000X1/2)
388
(775X1/2)
சுரேஷ் மற்றும் லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 888 (500+388)
வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சுரேஷ் & லட்சுமி பிரீமியம் புதுப்பிக்கும் போது 10% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
காட்சி –3
27 வயதான உமேஷ் இரண்டு வருட காலத்திற்கு ஸ்டார் காம்ப்ரிஹென்சவ் இன்ஷூரன்ஸ் பாலிசியை (தனிப்பட்ட காப்பீட்டுத் தொகை) வாங்குகின்றனர். இதன் கவரேஜ் தொகை 25 லட்சம். பல்வேறு வெல்னஸ் செயல்பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அவர் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் புரிந்துகொள்வோம். உமேஷ் தனது பிஎம்ஐ 24 என்றும், எந்த ஒரு நாள்பட்ட நோயாலும் அவர் பாதிக்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், உமேஷ் ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தார்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
முதல் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
இரண்டாம் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
நடை மாரத்தானில் பங்கேற்றார்
100
100
4
யோகா வகுப்புகளில் கலந்து கொண்டார்
100
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்.
200
200
6
அவரது ஃபிட்னஸ் வெற்றிக் கதையை சமர்ப்பித்துள்ளார்
50
50
7
மன அழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளார்
125
125
வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை
825
825
உமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 1650 (825+825)
இரண்டு வருட பாலிசி நிபந்தனையின்படி வெல்னஸ் புள்ளிகளின் கணக்கீடு = 825 (1650/2)
பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெற உமேஷ் தகுதியுடையவர் ஆகிறார்.
காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 36 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள் / நடைமுறைகளுக்கு - 24 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை
பை-பேக் PEDக்கு மட்டும் (ஆப்ஷனல் கவரேஜ்).
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜூக்கு இங்கே கிளிக் செய்யவும்
பிரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் பலன்/பிரீமியம் விளக்கப்படத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்
குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு விபத்தால் ஏற்படும் மரணம் மற்றும் நிரந்தரமாக மொத்த உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும் பட்சத்தில், 10,00,000 வரை கவர் செய்யப்படும்.
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசி தொடங்கும் போது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், ஏற்க முடியாத பட்சத்தில் பாலிசியை திரும்பப் பெறுவதற்கும் பாலிசி எடுத்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவருக்கு அனுமதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், பிரீமியம் தொகை திருப்பி கொடுக்கும் நடைமுறைகள் தொடங்கும் :
ஃப்ரீ லுக் பீரியடில் காப்பீடு செய்தவர் க்ளைம் செய்யவில்லை என்றால், காப்பீடு செய்தவருக்கு பின்வரும் உரிமைகள் உண்டு –
1. காப்பீடு செய்த நபரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணங்கள் நீங்கலாக மற்ற தொகையினை திரும்பப் பெற முடியும் அல்லது
2. பாலிசியை திரும்பப் பெற முடிவு எடுக்கும் பட்சத்தில், அதற்கு முன்பு பாலிசிதாரர் க்ளைம் செய்திருந்தால், க்ளைம் தொகை நீங்கலாக மீதமுள்ள பிரீமியம் திரும்பக் கிடைக்கும் அல்லது
3. பாலிசி புதுப்பித்தலின் போது ஃப்ரீ லுக் பீரியட் சலுகை பொருந்தாது
குறிப்பு: பிரீமியம் புதுப்பித்தல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் IRDAI-ன் முன் அனுமதியுடன் மாற்றத்திற்கு உட்பட்டவை.
ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
24*7 வாடிக்கையாளர் சேவை
காப்பீடு பெறுவதற்கு, தொலைபேசி மூலம் மருத்துவ உதவி, சந்தேகங்களுக்கு 1800-425-2255 என்ற எண்ணை அழைக்கலாம்.
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மண்ட்
எந்தவித 3ம் நபரின் ஒப்புதலும் இன்றி அதிவேகமாக பாலிசிதாரர்களுக்கு காப்பீட்டு தொகையை அளிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் தான்
மருத்துவமனைகள்
எங்களிடம் உள்ள தரமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே உங்களை சிகிச்சைப்பெற பரிந்துரைக்கிறோம்.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
க்ளைம் செட்டில்மண்ட்
எங்களின் 90% க்ளைம்ஸ் 2 மணி நேரத்திற்குள் செட்டில் செய்யப்படும். மேலும், 92% க்ளைம்ஸ் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் முறையில் செட்டில் செய்யப்படுகிறது.
நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஸ்டார் ஹெல்த் உடன் இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட மருத்துவமனைகள் தடையற்ற பணமில்லா வசதிகளை வழங்குகின்றன. இதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவானது மற்றும் வசதியானது.
ஒப்புக்கொண்ட நெட்வொர்க் மருத்துவமனைகள்
அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கான செலவு குறைந்த பேக்கேஜ் கட்டணங்களை ஸ்டார் ஹெல்த் உடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் வழங்குகின்றன.
மதிப்புமிக்க சேவை வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகள் ஸ்டார் ஹெல்த் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முயற்சிகள், சேவைகள் மற்றும் தரம் ஆகியவற்றிற்காக சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பில் இல்லாத மருத்துவமனைகள்
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெறுவதற்கு (ஸ்டார் ஹெல்த் உடன்படிக்கையில் இல்லாத), நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்ட் பெறலாம்
விலக்கப்பட்ட வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகளில் க்ளைம் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்/விபத்துச் செலவுகள் உடல் சீரான நிலையை எட்டும் வரை கவர் செய்யப்படும்.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
Disclaimer: Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in