ஸ்டார் க்ரிட்டிக்கல் இல்னஸ் மல்டிபே இன்ஷூரன்ஸ் பாலிசி

ஒரு தீவிர நோய் சுகாதார காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு, அந்த பாலிசியின் கீழ் உள்ள ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடுமையான நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ஒரு மொத்தத் தொகையை வழங்கும் ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல தீவிர நோய்களுக்கான கவரேஜ்களை, பொதுவாக தீவிர நோய் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளடக்கும்.  தீவிர நோய் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வாங்குவது என்பது எதிர்பாராத நேரத்தில் பாலிசிதாரருக்கு உதவக்கூடும்.       

... Read More

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

IRDAI UIN: SHAHLIP22140V012122

HIGHLIGHTS

Plan Essentials

essentials

நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியைப் பெறலாம்.
essentials

தனித்துவமான கவரேஜ்

37 தீவிர நோய்களைக் கண்டறிவதற்கான மொத்தத் தொகையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தனிநபர் சிறப்புப் பாலிசி.
essentials

தவணை வசதி

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், பிரீமியத்தை ஆண்டுதோறும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட செலுத்தலாம்.
essentials

ஸ்டார் வெல்னஸ் திட்டம்

பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இக்கட்டான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 5,00,000/- மற்றும் அதிகபட்சம் ரூ. 25,00,000/- (ரூ. 1,00,000/- மடங்குகளில்). 1) சம்பாதிக்கும் நபர்களுக்கு - 18 முதல் 35 வயது வரையிலான ஆண்டு வருமானத்தில் 12 மடங்கு, 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு. அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 2) சம்பாதிக்காத நபர்களுக்கு - அதிகபட்சம் 15 லட்சம் வரை. முதன்மை உறுப்பினருக்கான காப்பீட்டுத் தொகையை விட வருமானம் ஈட்டாத நபர்களுக்கான காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்க முடியாது.

இக்கட்டான பாதிப்புகளுக்கான பரந்த கவரேஜ்

இந்த பாலிசியானது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்ட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான பரந்த கவரேஜ் வழங்குகிறது.

புற்றுநோய்க்கான கவரேஜ்

இந்த பாலிசி புற்றுநோய் தொடர்பான முக்கிய நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.

இதய நோய்க்கான கவரேஜ்

இந்த பாலிசி இதயம் தொடர்பான முக்கிய நிலைமைகளுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.

மூளை மற்றும் நரம்பு மண்டலம்

இந்த பாலிசி மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான முக்கியமான நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.

முக்கிய உறுப்பு மற்றும் பிற நிலைகள்

இந்த பாலிசி முக்கிய உறுப்புகள் மற்றும் பிற நிலைமைகள் தொடர்பான தீவிர நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். இது ஆண்டுதோரும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

 

தீவிர நோய் சுகாதார காப்பீடு என்றால் என்ன?

 

தீவிர நோய் சுகாதார காப்பீடுத் திட்டம் என்பது எதிர்பாராத போது, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய் கண்டறியப்படும்போது, ஒருவருக்கு பாதுகாப்பையும் நிதியையும் வழங்கும் ஒரு காப்பீடு திட்டமாகும். முன் பட்டியலிடப்பட்ட எந்தவொரு தீவிர நோயையும் முதன்முதலில் கண்டறியும்போது, ​​பாலிசிதாரருக்கு ஒரு மொத்த தொகை கிடைக்கும், இது சிகிச்சையுடன் தொடர்புடைய அதிகப்படியான செலவுகளை ஈடுகட்டும் நோக்கம் கொண்டது.

ஆகையால், தீவிர நோய் மருத்துவ காப்பீடு் திட்டம் என்பது தேவையான சிகிச்சையைப் பெற, உங்கள் இதர சேமிப்பை பயன்படுத்த  வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும், மூன்றாம் நிலை தீக்காயங்கள், வழக்கமான டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக செயலிழப்பு, தலையில் பெரும் அதிர்ச்சி, நிலையற்ற கோமா, அல்சைமர் நோய் போன்ற பிற முக்கியமான மருத்துவ நிலைமைகளும், ஒரு பொதுவான தீவிர நோய் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அடங்கும்.


 

ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே காப்பீட்டு திட்டம்

 

உயிருக்கு ஆபத்தான பெரிய நோய்களுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பைத் தேடும், அனைத்து மக்களுக்கும் ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே காப்பீட்டு திட்டம் அவசியம் ஆகும். அதன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
 

தனித்துவமான காப்பீடு

எங்கள் தீவிர நோய் சுகாதார காப்பீடு திட்டம், பொதுவாக புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற 37 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்றைக் கண்டறிந்தவுடன், ஒரு மொத்தத் தொகையை வழங்குவதன் மூலம், உங்களுக்கு மன அமைதியை உறுதி செய்கிறது.   

 

நெகிழ்வான கட்டண விருப்பங்கள்

இந்த தீவிர நோய் சுகாதார காப்பீடு திட்டத்தில், ஒருவர் தங்கள் பிரீமியத்தை எளிதாக செலுத்தலாம். இந்த மருத்துவ காப்பீடு பொதுவாக காலாண்டு, அரை ஆண்டு, ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு, ஒரு முறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை செலுத்தத் தேர்ந்தெடுக்கும் தவணை வசதியை வழங்குகிறது.

 

மருத்துவத்திற்கு முந்தைய பரிசோதனை

50 வயதுக்குட்பட்டவர்களுக்கு, முன்-ஏற்றுக்கொள்ளும் மருத்துவ பரிசோதனை தேவைப்படாது. ஆனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது பாதகமான மருத்துவ வரலாற்றைக் கொண்டவர்கள், பொதுவாக முன்-மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

 

மருத்துவ காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ₹5,00,000/- இல் தொடங்குகிறது, அதிகபட்ச வரம்பு ₹25,00,000/-, ரூ. 1,00,000/- இன் மடங்குகளில் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்வாதாரம் ஈட்டும் நபர்களுக்கு, காப்பீட்டுத் தொகை அவர்களின் ஆண்டு வருமானத்தைப் போல, 12 மடங்கு (18–35 வயதுடையவர்களுக்கு) மற்றும் 10 மடங்கு (35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) ஆகும். வருமானம் ஈட்டாத நபர்கள் அதிகபட்சமாக ₹15,00,000/- வரை காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.  

ஒரு தீவிர நோய் காப்பீட்டைக் கொண்ட சுகாதார காப்பீடு திட்டத்தை வாங்குவது என்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.

 

 

தீவிர நோய் காப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?

 

புற்றுநோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிர நோய் நோயறிதலுக்கு உட்பட்டு, பொதுவாக தீவிர நோய் மருத்துவ காப்பீடு ஒரு மொத்த தொகையை வழங்குகிறது.சுகாதார காப்பீட்டுத் துறையில் தீவிர நோய் காப்பீட்டால் வழங்கப்படும் நிதி உதவி, பாலிசிதாரரின் மருத்துவ அல்லது சுகாதாரச் செலவுகள், இழந்த வருமானம் அல்லது பிற வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இதனால் இது, சவாலான நேரத்தில் மன அமைதியையும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

சுகாதார காப்பீட்டில் கடுமையான நோய் காப்பீடு பலருக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். ஏனெனில், ஒருவருக்கு தீவிர நோய் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. தீவிர நோய் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தக்க சமயத்தில், அந்த திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலிசிதாரருக்கு கவரேஜை வழங்கக்கூடும். 


 

ஸ்டார் க்ரிட்டிக்கல் இல்னஸ் மல்டிபே இன்ஷூரன்ஸ் திட்டத்தின் சிறப்பு நிபந்தனைகள்

 

ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே இன்சூரன்ஸ் திட்டம் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் விரிவான காப்பீட்டை வழங்குகிறது. ஆனால் அது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டது : 

 

  • நுழைவு வயது: 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், இந்தத் திட்டத்தைப் பெறலாம்.  
  • காத்திருப்பு காலம்: காப்பீடு தொடங்கியதிலிருந்து எந்தவொரு பெரிய நோயையும் முதன்முதலில் கண்டறிவதற்கு முன்பு வரை, 90 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்.
  • உயிர்வாழும் காலம்: காப்பீடு செய்யப்பட்ட நபர், முக்கிய நோய் கண்டறியப்பட்ட பிறகு 15 நாட்கள் உயிர்வாழ வேண்டும், அப்போதுதான் காப்பீட்டு உரிமைகோரல் செல்லுபடியாகும். 
  • கோரிக்கை வரம்பு: ஒவ்வொரு வகைக்கும் கீழே, ஒரு இன்சூரன்ஸ் கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 400% வரையான மொத்தத் தொகையை மக்கள் பெற்று பயனடையலாம்.
  • நிபந்தனைகளுக்கு இடையே காத்திருப்பு காலம்: ஒவ்வொரு கவர் செய்யப்படும் தீவிர நோய் நிலை ஏற்படுவதற்கும் இடையே 12 மாத காத்திருப்பு காலம் பொருந்தும். 
  • காப்பீடு திட்டம் புதுப்பித்தல்: குறைந்தபட்சம் உரிமைகோரல் செய்யப்படாத ஒரு வகை இருக்கும் வரை,பாலிசியைப் புதுப்பிக்க முடியும். 
  • ஒரு ஆண்டிற்கான உரிமைகோரல் வரம்பு: ஒரு பாலிசி ஆண்டில், அதிகபட்சமாக ஒரு உரிமைகோரல் மட்டுமே பெறக்கூடியது.

 

 

இந்த திட்டத்தின் இதர நன்மைகள்   

 

ஆன்லைன் தள்ளுபடி: நீங்கள் முதல் முறை வாங்குதலுக்கு, 5% ஆன்லைன் தள்ளுபடியைப் பெறலாம். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
 

 

அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் கடுமையான நோய்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். உங்களுக்குத் தேவைப்படும்போது நிதி ரீதியாகப் பாதுகாக்க இந்த திட்டம்  உதவுகிறது, இதனால் இது உங்கள் நல்வாழ்வை உறுதி செய்கிறது.  

உதவி மையம்

குழப்பமா? பதில் எங்களிடம்

உங்கள் உடல்நல காப்பீடு தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு பெறவும்.

Disclaimer:
Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in