New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024

இந்தியாவில் NRI-களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ்

India +91✓

இந்தியாவில் NRI ஹெல்த் இன்சூரன்ஸ் (மருத்துவக் காப்பீடு): ஒரு கண்ணோட்டம்

 

தற்போதைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில், பல இந்தியர்கள் வேலைக்காகவோ, படிப்பிற்காகவோ அல்லது நிரந்தரமாகக் குடியேறுவதற்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்வதை விரும்புகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளில் உள்ள சலுகைகளைப் பெற்றாலும், இந்தியாவுடனான அவர்களின் வேர்கள் - குறிப்பாகக் குடும்ப உறவுகள் - மிகவும் ஆழமானவை. இத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியாவில் NRI ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதா வேண்டாமா என்பது மிக முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளில் ஒன்றாகும்.

 

இந்தியாவில் உள்ள NRI-களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் நன்மைகள், தகுதிகள், பாலிசி வகைகள், வரிச் சலுகைகள் மற்றும் சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்த உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும்,இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

 

என்.ஆர்.ஐ மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?

 

என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீடு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (OCIs) ஆகியோருக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்தியாவில் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய அல்லது மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளைக் குறிக்கிறது. நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் கூட, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான நிதிப் பாதுகாப்பை, இந்தத் திட்டங்கள் உறுதி செய்கின்றன.  

 

இத்தகைய பாலிசிகள், இந்தியாவுடன் தொடர்புடைய தனித்துவமான சுகாதாரத் தேவைகளைக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகவே (NRIs) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அவ்வப்போது இந்தியாவிற்கு வருகை தரும் என்.ஆர்.ஐ-களின் தற்காலிகத் தங்குதலின் போது அவர்களுக்கு நம்பகமான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகின்றன.  

 

எதிர்காலத்தில் இந்தியாவிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ள என்.ஆர்.ஐ-களுக்கும் இந்தத் திட்டங்கள் பெரிதும் பயனளிக்கின்றன; அவர்கள் மீண்டும் இந்தியாவிற்குக் குடிபெயரும் காலகட்டத்தில் தொடர்ச்சியான மருத்துவப் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. மேலும், இந்தியாவில் வசிக்கும் தங்களது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீட்டைப் பெற விரும்பும் என்.ஆர்.ஐ-கள், அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட குடும்ப மிதவை (Family floater) அல்லது மூத்த குடிமக்களுக்கான திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

 

குறைந்த செலவிலான, நீண்ட கால மருத்துவக் காப்பீட்டைப் பெற விரும்பும் நபர்களுக்கு, இந்த பாலிசிகள் இந்திய சுகாதாரத் துறையின் கீழ் தரமான சிகிச்சை மற்றும் நிதிப் பாதுகாப்பைப் பெறுவதற்கான ஒரு சிறந்த மூலோபாய முதலீடாக (Strategic investment) அமைகின்றன.  

 

சாதாரண பயணக் காப்பீட்டைப் போலல்லாமல், இந்த பாலிசிகள் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகக் கூடியவை; மேலும் இவை இந்திய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுப் பெறும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் சில குறிப்பிட்ட டே கேர் சிகிச்சைகளுக்கான செலவுகளையும் உள்ளடக்குகின்றன.

 

என்.ஆர்.ஐ (NRI) நபர்கள்ஏன்இந்தியாவில்மருத்துவக்காப்பீடுஎடுப்பதைக்கருத்தில்கொள்ளவேண்டும்?

 

நீங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, யு.ஏ.இ, ஆஸ்திரேலியா அல்லது வேறு எந்த நாட்டில் பணிபுரிந்தாலும், உங்களது வெளிநாட்டு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பொதுவாக இந்தியாவில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யாது. நீங்கள் இந்தியாவில் உள்ள உங்களது குடும்பத்தினரைக் காண வரும்போதோ அல்லது இந்தியாவில் ஏதேனும் திட்டமிடப்பட்ட சிகிச்சையை மேற்கொள்ளும்போதோ, இந்த இடைவெளி உங்களுக்கு ஒரு பெரிய நிதி அபாயமாக மாறக்கூடும். இந்த இடத்தில்தான் என்.ஆர்.ஐ-களுக்கான மருத்துவக் காப்பீடு (Health insurance for NRIs) ஒரு பயனுள்ள மற்றும் அவசியமான தேர்வாக நிரூபிக்கப்படுகிறது:

 

  • இந்தியவருகையின்போதுகாப்பீட்டுப்பாதுகாப்பு: நீங்கள் இந்தியாவிற்கு வரும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது திட்டமிடப்பட்ட ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டாலோ, அதற்கான செலவுகளை உங்களது சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் உள்ள என்.ஆர்.ஐ மருத்துவக் காப்பீட்டு பாலிசி மூலம், நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா (Cashless) மருத்துவமனை அனுமதியைப் பெறலாம், இது உங்களைப் பெரிய மருத்துவச் செலவுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
  • நியாயமானபிரீமியம்கட்டணங்கள்: பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மருத்துவக் காப்பீடுகணிசமான அளவு குறைந்த செலவுடையதாகும். இதன் பிரீமியம் தொகையானது உலகளாவிய பிற காப்பீட்டுத் திட்டங்களை விட 30-50% குறைவாக இருக்கலாம்; மேலும் இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகள் வழக்கமாக மேற்கத்திய நாடுகளை விட 70-90% வரை குறைவாகவே இருக்கும்.
  • குடும்பத்திற்கானகாப்பீட்டுப்பாதுகாப்பு: என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் வசிக்கும் தங்களது பெற்றோருக்காக மருத்துவக் காப்பீட்டைவாங்குகிறார்கள்; இதன் மூலம் பிரீமியம் செலுத்துவதற்காக என்.ஆர்.ஐ நபர் நேரில் வரத் தேவையில்லாமலே, பெற்றோர் பணமில்லாமருத்துவமனை அனுமதிச் சேவையைப் பெற முடியும்.
  • வரிச்சலுகைகள்: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன்படி, என்.ஆர்.ஐ-கள் தங்களுக்காகவோ, தங்களது துணைவி, குழந்தைகள் அல்லது பெற்றோருக்காகவோ செலுத்தும் பிரீமியம் தொகையைத் தங்களின் இந்திய வருமான வரியிலிருந்து கழித்துக் கொள்ளும் தகுதி பெறுகிறார்கள்.
  • காத்திருப்புக்காலத்தின்நன்மைகள்: முன்கூட்டியே ஒரு பாலிசியை வாங்குவதன் மூலம், நீங்கள் நிரந்தரமாக இந்தியாவிற்குத் திரும்புவதற்கு முன்பே, ஏற்கனவே உள்ள நோய்களுக்கானகாத்திருப்புக் காலங்களை, உங்களால் நிறைவு செய்துவிட முடியும்.

 

இந்தியாவில்வசிக்கும்என்.ஆர்.ஐநபர்களுக்கானமருத்துவக்காப்பீட்டுவகைகள்

 

இந்தியாவில் என்.ஆர்.ஐ (NRI) நபர்களுக்கான மருத்துவக் காப்பீடுகளைப் பற்றி ஆராயும்போது, உங்களுடைய தேவைகளைப் பொறுத்து பலவிதமான பாலிசி தெரிவுகளை, நீங்கள் காண முடியும்:

 

  • தனிநபர்மருத்துவக்காப்பீடு - தங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் காப்பீட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் என்.ஆர்.ஐ நபர்களுக்கானது.
  • குடும்பமிதவைத்திட்டம் - இந்தியாவில் தங்களது துணைவி மற்றும் குழந்தைகளைக் கொண்டுள்ள என்.ஆர்.ஐ நபர்களுக்கானது.
  • மூத்தகுடிமக்கள்திட்டம்- இந்தியாவில் வசிக்கும் தங்களது பெற்றோருக்காக மருத்துவக் காப்பீடு வாங்க விரும்பும் என்.ஆர்.ஐ நபர்களுக்கானது.
  • கடுமையானநோய்காப்பீட்டுத்திட்டங்கள் - பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், ஒரே தவணையாகப் பெருந்தொகையைப்பெற விரும்பும் நபர்களுக்கானது.
  • டாப்-அப்மற்றும்சூப்பர்டாப்-அப்திட்டங்கள்- வெளிநாட்டில் அடிப்படை காப்பீட்டைக் கொண்டுள்ள, ஆனால் இந்தியாவில் கூடுதல் காப்பீட்டு வரம்பு தேவைப்படும் என்.ஆர்.ஐ நபர்களுக்கானது.

 

இந்தியாவில்என்.ஆர்.ஐ மருத்துவக்காப்பீட்டின்முக்கியசிறப்பம்சங்கள்

 

என்.ஆர்.ஐ நபர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வழக்கமாக அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பரவலான நன்மைகளை வழங்குகின்றன. இதற்கான காப்பீட்டுத் தொகைபொதுவாக ரூ.3 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும், இது தனிநபர் அல்லது குடும்பத் தேவைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பெரும்பாலான பாலிசிகள் இந்தியா முழுவதும் உள்ள 5,000 முதல் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைக் கொண்ட ஒரு விரிவான பணமில்லாநெட்வொர்க் இணைப்பைக் கொண்டுள்ளன, இது வசதியான சிகிச்சை முறைகளை உறுதி செய்கிறது.

 

ஏற்கனவே உள்ள நோய்களுக்கானகாப்பீட்டுப் பாதுகாப்பானது 1 முதல் 3 ஆண்டுகள் காத்திருப்புக் காலத்திற்குப் பிறகு கிடைக்கிறது, இதனால் நீண்ட காலத் திட்டமிடல் அவசியமான ஒன்றாகிறது. இந்தத் திட்டங்கள் 24 மணி நேர மருத்துவமனை அனுமதி தேவைப்படாத டே கேர் சிகிச்சைகளையும் உள்ளடக்குவதோடு, பெரும்பாலான காப்பீட்டுச் சலுகைகளில் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

மேலும், மருத்துவக் கோரிக்கைக்கான தொகையைத் திரும்பப் பெறுவது (Repatriation of claims) ஃபெமா (FEMA) விதிகளுக்கு இணங்க எளிதாக்கப்பட்டுள்ளது, இது என்.ஆர்.இ (NRE) அல்லது என்.ஆர்.ஓ (NRO) கணக்குகளுக்குப் பணத்தைச் சுமூகமாக மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

 

என்.ஆர்.ஐ (NRI) நபர்கள் ஏன் இந்தியாவில் மருத்துவக் காப்பீடு வாங்க வேண்டும்?

 

  1. நிதிப் பாதுகாப்பு: இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. என்.ஆர்.ஐ-களுக்கான மருத்துவக் காப்பீடு (Health insurance for NRIs), ஏதேனும் அவசர மருத்துவச் சூழ்நிலை ஏற்படும் போது மருத்துவமனை கட்டணங்கள், உங்களது சேமிப்பைக் கரைத்துவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
  2. பெற்றோருக்கான மன அமைதி: இந்தியாவில் வசிக்கும் வயதான பெற்றோருக்கு திடீரென உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். நீங்கள் பல மைல்களுக்கு அப்பால் வசித்தாலும் கூட, ஒரு காப்பீட்டு பாலிசியை வைத்திருப்பது, அவர்களுக்கு எவ்வித நிதி நெருக்கடியுமின்றி சரியான நேரத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கிறது.
  3. செலவு குறைந்த மருத்துவ சுற்றுலா: சில என்.ஆர்.ஐ-கள் தங்களின் விருப்பத்திற்குரிய குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் அல்லது சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு சிகிச்சைகளுக்காக திட்டமிட்டே, இந்தியாவிற்குத் திரும்புகிறார்கள்; ஏனெனில் இதற்கான பயணச் செலவுகளைக் கணக்கில் கொண்டாலும், வெளிநாடுகளை விட இந்தியாவில் சிகிச்சை பெறுவது மிகவும் மலிவானதாகும். என்.ஆர்.ஐ மருத்துவக் காப்பீடு, இந்தச் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது.
  4. வரிச் சலுகைகள் (Tax Benefits): நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் கூட, உங்களது என்.ஆர்.இ (NRE) கணக்கின் மூலம் இந்திய மருத்துவக் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையைச் செலுத்துவது, இந்திய வரி விதிமுறைகளின் கீழ் நீங்கள் வரி விலக்குகளைக் கோருவதற்கு உதவுகிறது. 

 

இந்தியாவில் என்.ஆர்.ஐ நபர்களுக்கான சரியான மருத்துவக் காப்பீட்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

 

இந்தியாவில் என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, விரிவான மற்றும் சிக்கலற்ற காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பல முக்கிய காரணிகளை மதிப்பிடுவது மிகவும் அவசியமாகும்:

 

1. காப்பீட்டு நிறுவனத்தின் நற்பெயர்


சிறந்த பின்னணி மற்றும் அதிக மருத்துவக் கோரிக்கை தீர்வு விகிதங்களை கொண்ட காப்பீட்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள். நற்பெயர் மிக்க ஒரு காப்பீட்டு நிறுவனம் மருத்துவக் கோரிக்கைகளை எளிதாகச் செயலாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியையும் பிரதிபலிக்கிறது. சந்தையில் நன்கு நிலைபெற்ற மற்றும் பாலிசிதாரர்களிடமிருந்து நல்ல மதிப்புரைகளைப் பெற்ற நிறுவனங்களைத் தேடுங்கள்.

 

2. பணமில்லா நெட்வொர்க் மருத்துவமனைகள்


அவசர காலங்களில் வசதியாக இருக்க விரிவான (Cashless) நெட்வொர்க் மருத்துவமனை இணைப்பு அவசியமாகும். நெட்வொர்க் எவ்வளவு விரிவானதாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக முன்கூட்டியே பணம் செலுத்தாமல் தரமான சுகாதாரச் சேவைகளை அணுக முடியும். உள்ளூர் பில்லிங் நடைமுறைகளை நன்கு அறியாத என்.ஆர்.ஐ நபர்களுக்கும் அல்லது தூரத்திலிருந்து தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் என்.ஆர்.ஐ நபர்களுக்கும், இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

3. காப்பீட்டு வரம்புகள்


அறை வாடகை வரம்புகள் (Room rent caps), ஐசியு (ICU) கட்டணங்கள் மற்றும் குறிப்பிட்ட நோய்களுக்கான வரம்புகள் போன்ற பாலிசியின் துணை வரம்புகளைக் (Sub-limits) கூர்ந்து கவனியுங்கள். இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உண்மையில் கிடைக்கப் பெறும் நன்மைகளைக் கணிசமாகக் குறைக்கக் கூடும். மிகக் குறைவான அல்லது துணை வரம்புகளே இல்லாத ஒரு திட்டம், அதிக நிதிப் பாதுகாப்பையும் மற்றும் சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.

 

4. காத்திருப்புக் காலம்


ஏற்கனவே உள்ள நோய்களுக்கான (Pre-existing conditions) காத்திருப்புக் காலம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குறைவான காத்திருப்புக் காலம் என்பது, ஏற்கனவே இருக்கும் நீண்ட கால நோய்கள் அல்லது உடல்நலப் பாதிப்புகளுக்கான காப்பீட்டுப் பாதுகாப்பை விரைவாக அணுகுவதைக் குறிக்கிறது. இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கோ அல்லது ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கோ மிக முக்கியமானதாகும்.

 

5. புவியியல் கட்டுப்பாடுகள்


பாலிசியானது எந்தவொரு பிராந்தியக் கட்டுப்பாடுகளும் இன்றி, இந்தியா முழுவதற்கும் (Pan-India coverage) காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுள்ள என்.ஆர்.ஐ நபர்களுக்கு, இது மிகவும் இன்றியமையாதது ஆகும். நாடு தழுவிய காப்பீடு என்பது தேவைப்படும் இடத்தில் எல்லாம் சுகாதாரச் சேவையைப் பெறுவதை உறுதி செய்கிறது.

 

6. பாலிசி புதுப்பித்தல் வசதி


உங்களுக்கு வயதாகும்போது காப்பீட்டுப் பாதுகாப்பில் எந்தவித தடங்கலும் ஏற்படுவதைத் தவிர்க்க, வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி (Lifetime renewability) கொண்ட பாலிசியைத் தேர்வு செய்யவும். இந்த அம்சம் உங்களது வயது அல்லது ஆரோக்கிய நிலையைப் பொருட்படுத்தாமல் உங்களது மருத்துவக் காப்பீடு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்கிறது, மேலும் இது நீண்ட கால மன அமைதியையும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

 

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு வாங்கும் என்.ஆர்.ஐ (NRI) நபர்களுக்கான சிறந்த நடைமுறைகள்

 

  • உங்களது என்.ஆர்.ஐ (NRI) நிலையைத் தெரிவிக்கவும்: நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவர் என்பதை எப்போதும் காப்பீட்டு நிறுவனத்திற்குத் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்.
  • பிரீமியம் செலுத்த என்.ஆர்.இ/என்.ஆர்.ஓ கணக்குகளைப் பயன்படுத்தவும்: இது ஃபெமா (FEMA) விதிகளுக்கு இணங்க உதவுவதோடு, ஜிஎஸ்டி விலக்கு போன்ற வரிச் சலுகைகளையும் எளிதாக்குகிறது.
  • உள்ளூர் தொடர்பு விவரங்களை வழங்கவும்: மருத்துவக் கோரிக்கைகளை (Claims) விரைவாகவும் திறம்படவும் செயலாக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
  • இந்தியாவில் ஒரு வாரிசுதாரரை நியமிக்கவும்: நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, மருத்துவக் கோரிக்கைகளைத் தடையின்றி நிர்வகிக்க, இவர்கள் உதவ முடியும்.
  • சூப்பர் டாப்-அப் திட்டங்களைக் கருத்தில் கொள்ளவும்: பெரிய தொகையிலான மருத்துவக் கோரிக்கைகளுக்கு, குறைந்த செலவில் உங்களது காப்பீட்டுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான, ஒரு சிறந்த வழிமுறை இதுவாகும்.

 

என்.ஆர்.ஐ (NRI) நபர்களுக்கான வெளிநாட்டு நாணய மேலாண்மைச் சட்ட (FEMA) விதிமுறைகள் யாவை?

 

வெளிநாட்டு நாணய மேலாண்மைச் சட்டம் (FEMA) என்பது என்.ஆர்.ஐ-கள் எவ்வாறு பிரீமியம் செலுத்த வேண்டும் மற்றும் மருத்துவக் கோரிக்கைக்கான தொகையைப் பெற வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்துகிறது:

 

  • பிரீமியம் தொகைகளை என்.ஆர்.இ (NRE) அல்லது என்.ஆர்.ஓ (NRO) கணக்குகளிலிருந்து செலுத்தலாம்.
  • வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை வரம்பிற்கு உட்பட்டு, மருத்துவக் கோரிக்கைக்கான தொகையை, உங்களது என்.ஆர்.இ (NRE) கணக்கில் வெளிநாட்டு நாணயமாகவே வரவு வைக்க முடியும்.
  • மருத்துவக் கோரிக்கைக்கான தொகையை ரெசிடென்ட் ஃபாரின் கரன்சி (RFC - Resident Foreign Currency) கணக்குகளிலும் பெறலாம்.
     

என்.ஆர்.ஐ (NRI) நபர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்களது பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு வாங்க முடியுமா?

 

என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் மருத்துவக் காப்பீடு வாங்குவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று தங்களது பெற்றோரைப் பாதுகாப்பதாகும். மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

 

  • இதய நோய், நீரிழிவு போன்ற வயது முதிர்வு தொடர்பான நோய்கள் மற்றும் பிற பாதிப்புகள்.
  • ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச ஆரோக்கியப் பரிசோதனைகள்.
    சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வழங்கப்படும் வீட்டுப் பராமரிப்புச் சிகிச்சை நன்மைகள்.
  • வயதானவர்களுக்கான மருத்துவச் சிகிச்சைச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வசிக்கும் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது, எவ்வித நிதிச் சுமையுமின்றி அவர்களுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்கிறது.

 

இந்தியாவில் வாங்கும் மருத்துவக் காப்பீட்டின் மூலம் என்.ஆர்.ஐ நபர்கள் வரிச் சேமிப்பு பெற முடியுமா?

 

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ், என்.ஆர்.ஐ (NRI) நபர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தினருக்காகவும் செலுத்தும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு மதிப்புமிக்க வரிச் சலுகைகளைப் பெற முடியும். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதன் விரிவான விவரம் இதோ:

 

  • என்.ஆர்.ஐ-கள் தங்களுக்காகவோ, தங்களது துணைவி அல்லது குழந்தைகளுக்காகவோ செலுத்தும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு, ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சமாக ரூ. 25,000 வரை வரி விலக்குக் கோரலாம். இது மருத்துவச் செலவுகளுக்கு எதிரான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  • முதியோர்களான (60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட) தங்களது பெற்றோருக்கு என்.ஆர்.ஐ நபர் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால், கூடுதலாக ரூ. 50,000 வரை வரி விலக்குக் கோர முடியும். இந்தியாவில் வசிக்கும் தங்களது வயதான பெற்றோரை ஆதரிக்கும் நபர்களுக்கு, இது ஒரு சிறந்த நன்மையாகும்; ஏனெனில் இது குறிப்பிடத்தக்க வரிச் சலுகையை வழங்குவதோடு, முன்கூட்டியே சுகாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறது.
  • பிரிவு 80D-ன் கீழ், இந்த வரி விலக்குகளைப் பெற தகுதி பெற வேண்டுமானால், அனைத்து பிரீமியம் செலுத்துதல்களும் டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் அல்லது மின்னணு பரிமாற்றங்கள் (Electronic transfers) போன்ற வங்கி வழிமுறைகளின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையையும் கண்காணிப்பையும் உறுதி செய்வதற்காக, ரொக்கமாக (Cash) செலுத்தப்படும் தொகைகளுக்கு, இந்த வரிச் சலுகைகள் பொருந்தாது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

என்.ஆர்.ஐ நபர் இந்தியாவில் வசிக்காதவராக இருந்தாலும் கூட, பிரீமியம் தொகையானது தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்காகவும், முறையான வங்கி வழிமுறைகளின் மூலமாகவும் செலுத்தப்படும் வரை, இந்த வரி விலக்குச் சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும்.

 

என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீடு வாங்குவதற்கான படிப்படியான வழிமுறை

 

என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீட்டை வாங்குவதற்கான படிப்படியான வழிமுறை இதோ:

 

  1. ஒப்பிட்டுத் தேர்ந்தெடுங்கள்: NRI-களுக்குப் பொருத்தமான பாலிசி விருப்பங்களை ஆய்வு செய்து, தொடர்புடைய பாலிசி விதிமுறைகளில் உள்ள தகுதி வரம்புகள், இருப்பிடத் தேவைகள், காப்பீட்டு வரம்பு மற்றும் காப்பீட்டில் அடங்காதவை ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
  2. ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்: உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மருத்துவத் தகவல்களுடன் கூடிய டிஜிட்டல் விருப்ப விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.
  3. ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்: உங்களது பாஸ்போர்ட் அல்லது ஓ.சி.ஐ (OCI) கார்டு போன்ற கே.ஒய்.சி (KYC) ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

 

இறுதிச் சிந்தனைகள்

 

வெளிநாடு வாழ் இந்தியர்களைப் (NRIs) பொறுத்தவரை, இந்தியாவில் ஒரு மருத்துவக் காப்பீட்டைப் பெறுவது என்பது வெறும் சிகிச்சைச் செலவைச் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது உங்களுடைய மற்றும் உங்களது அன்பிற்குரியவர்களின் ஆரோக்கியத்தையும் நிதிநிலையையும் பாதுகாப்பதாகும். இந்தியாவில் வசிக்கும் பெற்றோருக்கான மருத்துவக் காப்பீடாக இருந்தாலும், உங்களது இந்திய வருகைகளின் போதான பாதுகாப்பாக இருந்தாலும், அல்லது என்றாவது ஒருநாள் நீங்கள் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் திட்டமாக இருந்தாலும், என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீடு உங்களுக்கு ஒரு சிறந்த மன அமைதியை வழங்குகிறது.

 

சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது, வாழ்க்கை உங்களை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாலும், மிகப்பெரிய மருத்துவமனை கட்டணங்களின் அதிர்ச்சி ஏதுமின்றி உங்களது ஆரோக்கியமும், உங்களது குடும்பத்தின் நல்வாழ்வும் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

 

நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக (NRI) இருந்தால், இன்றே இந்தியாவில் உங்களுக்குப் பொருத்தமான, ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் இப்போதும் உங்களது சொந்த நாடாகக் கருதும் இந்திய மண்ணில், குறைந்த செலவிலான விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பையும், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற நிம்மதியான உணர்வையும் பெற முடியும்.

 

வாசகர்களுக்கான தகவல்: இதில் விவாதிக்கப்பட்டுள்ள பிரிவு 80D வரிச் சலுகைகள், நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பழைய வரி விதிப்பு முறையின் கீழ் மட்டுமே பொருந்தும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களது வெளிநாட்டுப் பாலிசியானது இந்தியாவில் மிகக் குறைந்த காப்பீட்டுப் பாதுகாப்பைக் கொண்டிருக்கலாம் அல்லது அதைப் பயன்படுத்துவது அதிகச் செலவுடையதாக இருக்கலாம். ஆனால், ஓர் இந்தியப் பாலிசி உங்களுக்குப் பணமில்லா (Cashless) சிகிச்சைக்கான ஒரு பெரிய மருத்துவமனை நெட்வொர்க் இணைப்பை வழங்குவதோடு, இந்தியாவில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை மிகவும் குறைந்த செலவில் ஈடுசெய்ய உதவுகிறது. மேலும், இது இந்தியாவில் வசிக்கும் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்குக் காப்பீடு வழங்கவும் உங்களுக்கு வழிவகை செய்கிறது.

ஆம். என்.ஆர்.ஐ (NRIs), பி.ஐ.ஓ (PIOs) மற்றும் ஓ.சி.ஐ (OCIs) ஆகிய அனைவரும் ஆன்லைனில் மருத்துவக் காப்பீடு வாங்கத் தகுதி உடையவர்கள் ஆவர். ஃபெமா (FEMA) விதிகளின்படி பிரீமியம் தொகையை இந்திய ரூபாயில் செலுத்துவதற்கும், ஜிஎஸ்டி (GST) விலக்குப் பெறுவதற்கும், உங்களுக்கு ஒரு என்.ஆர்.இ/என்.ஆர்.ஓ (NRE/NRO) கணக்கு தேவைப்படும். இப்பாலிசியானது, உங்களது இந்திய வருகைகளின் போது உங்களுக்குத் தேவையான முழுப் பாதுகாப்பை வழங்கும்.

உங்களது காப்பீட்டுப் பாதுகாப்பு எந்தவொரு தடையுமின்றித் தொடர்ந்து நீடிக்கும். நீங்கள் ஏற்கனவே நிறைவு செய்த காத்திருப்புக் காலம் மற்றும் ஈட்டிய நோ கிளைம் போனஸ் (NCB) போன்ற அனைத்து நன்மைகளும் அப்படியே தொடரும். நீங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய முதல் நாளிலிருந்தே காப்பீட்டுச் சலுகைகள் எவ்விதச் சிரமமுமின்றிச் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய, உங்களது இருப்பிட மாற்றக் குறிப்பை உங்களது காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவித்தால் மட்டும் போதுமானது.

என்.ஆர்.ஐ (NRI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் என்பவை என்.ஆர்.ஐ நபர்கள் வாங்கக்கூடிய சாதாரண ஸ்டார் ஹெல்த் பாலிசிகளே ஆகும். இவை இந்தியாவின் எல்லைக்குள் ஏற்படும் மருத்துவமனைச் செலவுகளை மட்டுமே ஈடுசெய்கின்றன. மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பாலிசியைப் பொறுத்து மாறுபடும்.

இந்தத் திட்டங்கள் வழக்கமாக மருத்துவமனை அனுமதி, மருத்துவர் கட்டணம், அறை வாடகை, ஐசியு (ICU) கட்டணங்கள், அறுவை சிகிச்சைச் செலவுகள், டே கேர் நடைமுறைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் போன்ற முக்கிய மருத்துவச் செலவுகளை உள்ளடக்குகின்றன. சில திட்டங்கள் மாற்று மருத்துவச் சிகிச்சைகள் (AYUSH) மற்றும் தடுப்பு ஆரோக்கியப் பரிசோதனைகளுக்கான (Preventive health checkups) காப்பீடுகளையும் கொண்டிருக்கலாம். இதற்கான துல்லியமான நன்மைகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் மாறுபடலாம்.

ஆம், என்.ஆர்.ஐ நபர்கள் இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரிச் சலுகைகளைக் கோரலாம், ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. உங்களுக்கென இந்தியாவில் வரி விதிக்கப்படக்கூடிய வருமானம் (Taxable income) இருந்து, நீங்கள் பழைய வரி முறையைத் (Old tax regime) தேர்ந்தெடுத்திருந்தால், உங்களுக்காகவோ, உங்களது துணைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்காகவோ (IRDAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பாலிசிகளுக்கு) செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு, இந்தியாவில் வசிப்பவர்களுக்குப் பொருந்தும் அதே வரம்புகளுக்கு உட்பட்டு பிரிவு 80D-ன் கீழ் வரி விலக்குகளைக் கோரலாம்.

இல்லை, பெரும்பாலான இந்திய மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் அமெரிக்காவில் (USA) மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சைகளுக்குச் செல்லுபடியாகாது. உலகளாவிய காப்பீட்டுச் சலுகை (Global coverage add-ons) கொண்ட ஒரு சில அரிய பாலிசிகளைத் தவிர, மற்ற அனைத்து பாலிசிகளின் காப்பீட்டுப் பாதுகாப்பும் பொதுவாக இந்தியாவின் எல்லைக்குள் பெறப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆம், எடுக்கலாம். இருப்பினும், பாலிசி காலத்திற்குள் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீட்டாளர் மருத்துவக் கோரிக்கைகளைச் (Claims) சமர்ப்பிக்க முடியும்.

ஆம், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம். இருப்பினும், இந்த காப்பீட்டுப் பாதுகாப்பானது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கும்.

ஆம், இந்தியாவில் என்.ஆர்.ஐ (NRI) நபர்களுக்கென மருத்துவக் காப்பீடுகள் உள்ளன. என்.ஆர்.ஐ நபர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போதோ அல்லது டிஜிட்டல் ஆன்லைன்போர்டிங் (Digital onboarding) மூலமாக இணையவழியிலோ இந்தியாவில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதற்குத் முழுத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்தியாவில் NRI-களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ்
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in