கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம், புதிதாக திருமணம் செய்த மனைவி/கணவர், பிறந்த குழந்தை மற்றும்/அல்லது சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆகியோர் பாலிசியில் சேர்க்கப்படலாம். காத்திருப்பு காலம் அவர்கள் சேரும் தேதியில் இருந்து பொருந்தும்.
நுழைவு வயது
18 முதல் 40 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 91 நாட்கள் முதல் 25 வயது வரை உள்ள மூன்று குழந்தைகள் வரை காப்பீடு பெறுவார்கள்.
சிறப்பு தள்ளுபடி
36 வயதுக்கு முன் பாலிசியை பெறுவதற்கும், தொடர்ந்து 40 வயது வரை பிரீமியம் செலுத்துபவருக்கும், 41 வயதில் இருந்து பிரீமியத்தில் 10% தள்ளுபடி பொருந்தும்.
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெறப்படும் வெல்னஸ் புள்ளிகள், பாலிசி புதுப்பித்தலின் போது 2-10% வரை தள்ளுபடி பெறுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
சாலை விபத்துக்கான கூடுதல் கவரேஜ் தொகை
அடிப்படைக் காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால், சாலை விபத்துகள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில், கவரேஜ் தொகை 25% அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ. 10,00,000/- வரை கவர் செய்யப்படும்.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், ஆண்டுக்கு 1 முறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும் செலுத்தலாம்.
உடல்நல பரிசோதனை
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை இதில் அவசியமில்லை.
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
DETAILED LIST
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
கோல்டு திட்டம்
சில்வர் திட்டம்
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்
நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.
டிஸ்சார்ஜுக்கு பின்பு
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும்.
அறை வாடகை
மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.
சாலை வழி ஆம்புலன்ஸ்
காப்பீடு செய்யப்பட்ட நபரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும், சிறந்த சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் ஏற்படும் கட்டணங்கள் கவராகும்.
டே கேர் நடைமுறைகள்
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான கட்டணம் கவராகிறது.
நவீன சிகிச்சை
வாய்வழி கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
சாலை போக்குவரத்து விபத்துக்கான கூடுதல் அடிப்படைத் தொகை (RTA)
அடிப்படை கவரேஜ் தொகை தீர்ந்துவிட்டால், சாலை விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், கவரேஜ் 25% அதிகரித்து அதிகபட்சமாக ரூ. 10,00,000/ வரை கவர் செய்யப்படும்.
அடிப்படை கவரேஜ் தொகை ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் கவரேஜ் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தினால், அதே பாலிசி காலத்தில் 100% கவரேஜ் தொகை ரீஸ்டோர் செய்யப்படும்.
ஒட்டுமொத்த போனஸ்
ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் கவரேஜ் தொகையில் 20% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படும். இது அதிகபட்சமாக 100% வரை வழங்கப்படும்.
ஆன்லைன் தள்ளுபடி
ஆன்லைன் மூலம் முதல் முறையாக பாலிசியை வாங்குவதற்கு பிரீமியத்தில் 5% தள்ளுபடி கிடைக்கும்.
சிறப்பு தள்ளுபடி
36 வயதுக்கு முன் பாலிசியை பெறுவதற்கும் 40 வயதுக்குப் பிறகு புதுப்பிப்பதற்கும் பிரீமியத்தில் 10% தள்ளுபடி பொருந்தும்.
ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன்
நிறுவனத்தின் வல்லுநர் குழுவிடமிருந்து, ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன் பெறும் வசதி காப்பீடு செய்யப்பட்ட நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.
உடல்நல பரிசோதனை
நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனைச் செலவுகள், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவர் செய்யப்படும்.
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்
பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. மேலும், தான் பெற்ற வெல்னஸ் போனஸ் புள்ளிகள் மூலம் அதிகபட்சம் 10% வரை பாலிசி புதுப்பித்தல் போது தள்ளுபடிகளைப் பெறலாம்.
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்
இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் ஆப்ஷனை வழங்குகிறது.
மகப்பேறு செலவுகள்
ஒரு பிரசவத்திற்கு அதிகபட்சம் ரூ. 30,000/- என்று மொத்தம் 2 டெலிவரி வரை சிசேரியன் உட்பட பிரசவ செலவுகள் கவராகும்.
ஹாஸ்பிடல் கேஷ் பலன்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 வழங்கப்படும். இது ஒவ்வொரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகபட்சம் 7 நாட்களுக்கும், பாலிசி காலத்தில் 14 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் நடவடிக்கைகள், காப்பீடு செய்த நபருக்கு வெல்னஸ் வெகுமதி புள்ளிகளைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை நிறுவனத்தால் கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த நபர் பெற்ற வெல்னஸ் புள்ளிகள், பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஸ்டார் வெல்னஸ் பிளாட்ஃபார்ம் (டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்) மூலம் ஆன்லைனில் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்பு: கீழே உள்ள அட்டவணையில் (வரிசை எண் 1 முதல் 5 வரை) குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் செயல்பாடுகள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்த நபருக்கு மட்டுமே பொருந்தும்.
வெல்னஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் புள்ளிகள் மூலம், பாலிசி புதுப்பிக்கும் போது கிடைக்கும் ப்ரீமியம் தள்ளுபடி விவரத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:
ஈட்டிய வெல்னஸ் புள்ளிகள்
ப்ரீமியத்தின் தள்ளுபடி
200 to 350
2%
351 to 600
5%
601 to 750
7%
751 to 1000
10%
*ஃப்ளோட்டர் பாலிசியில், பின்வரும் அட்டவணை மற்றும் குறிப்பிடப்பட்ட புள்ளிகளின்படி வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது
குடும்பத்தினரின் எண்ணிக்கை
வெயிட்டேஜ்
தனிநபர், மனைவி
1:1
தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (18 வயது வரை)
1:1:0:0:0
தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (18 வயதுக்கு மேல்)
2:2:1:1:1
குறிப்பு: இரண்டு வருட பாலிசியை பொறுத்தவரை, நீங்கள் பெற்ற மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டால் வகுக்கப்படும்.
காப்பீடு செய்தவருக்கு லாகின் வசதி வழங்கப்படும், அது அவருடைய பாலிசியுடன் இணைக்கப்படும்.
*இரண்டு வருட பாலிசியை பொறுத்தவரை, பிரீமியத்தில் கிடைக்கும் தள்ளுபடி, வெயிட்டேஜ் ஆகியவற்றை புரிந்துகொள்ள விளக்கப்படங்களைப் பார்க்கவும்.
வெல்னஸ் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வரிசை எண்
செயல்பாடு
பாலிசி ஆண்டில் ஒவ்வொரு பாலிசியின் கீழும் பெறக்கூடிய அதிகபட்ச வெல்னஸ் புள்ளிகள்
1.
உடல்நலத்தை நிர்வகிப்பது மற்றும் கண்காணிப்பது
a) ஆன்லைன் சுகாதார இடர் மதிப்பீடு (HRA)
50
b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு
200
2.
வெல்னஸ் செயல்பாடுகள் பட்டியல்
a) மாரத்தான் நடை, மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
b) ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்)
100
3.
ஸ்டே ஆக்டிவ் - காப்பீடு செய்தவர் மொபைல் ஆப்-ல் நடை எண்ணிக்கை இலக்கை எட்டுதல்
200
4(a).
a) எடை மேலாண்மை திட்டம் (அதிக எடை / பருமன் கொண்ட காப்பீடு எடுத்தவர்களுக்கு)
100
4(b).
ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்தவர் தனது மேம்பட்ட உடற்தகுதி வெற்றிக் கதையைப் பகிர்தல் (அதிக எடை அல்லது பருமனாக இல்லாத காப்பீடு எடுத்தவர்களுக்கு)
50
5(a).
நாள்பட்ட நோய்களை களையும் மேலாண்மை திட்டம் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள காப்பீடு எடுத்தவர்களுக்கு)
250
5(b).
மன அழுத்தம் மற்றும் மன நிலையை சரி செய்யும் புரோகிராமை முடிக்கும் பட்சத்தில் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படாத காப்பீடு எடுத்தவர்களுக்கு)
125
கூடுதல் வெல்னஸ் சேவைகள்
6.
விர்ச்சுவல் கன்சல்டேஷன் சர்வீஸ்
7.
முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்
8.
மாதவிடாய் காலம் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்
9.
டிஜிட்டல் ஹெல்த் வால்ட்
10.
வெல்னஸ் கன்டென்ட்
11.
ஆரோக்கிய வினாடிவினா & கேமிஃபிகேஷன்
12.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
13.
நெட்வொர்க் வழங்குநர்கள் அளிக்கும் தள்ளுபடிகள்
1. ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்:
(a) சுகாதார இடர் மதிப்பீட்டை நிறைவு செய்தல் (HRA):
ஹெல்த் ரிஸ்க் அசெஸ்மென்ட் (எச்ஆர்ஏ) கேள்வித்தாள் என்பது காப்பீடு செய்தவரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் கருவியாகும். இது காப்பீட்டாளர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை சுயபரிசோதனை செய்ய உதவுகிறது. காப்பீடு செய்தவர் www.starhealth.in என்ற இணையதளத்தில் தனது கணக்கில் உள்நுழைந்து HRA கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யலாம். பாலிசி வருடத்திற்கு ஒருமுறை இதை மேற்கொள்ளலாம். ஆன்லைன் HRA கேள்வித்தாளை முடித்தவுடன், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
குறிப்பு: HRA இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் புள்ளிகளைப் பெற, காப்பீடு செய்தவர் HRA செயல்பாட்டைத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் முழு HRAயையும் முடிக்க வேண்டும்.
(b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு:
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் நோய் கண்டறிதல் / தடுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம். இந்த சோதனைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்டாய சோதனைகள் இருக்க வேண்டும். காப்பீடு செய்தவரின் சொந்த செலவில் எந்த நோய் கண்டறியும் மையத்திலும் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட சோதனை அறிக்கைகளின் அனைத்து முடிவுகளும் சாதாரண வரம்பிற்குள் இருந்தால், காப்பீடு செய்தவர் 200 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏதேனும் ஒரு சோதனையின் முடிவு சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 150 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சோதனை முடிவுகள் சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 100 வெல்னஸ் புள்ளிகளை மட்டுமே பெறுவார்.
முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டாய சோதனைகளின் பட்டியல்
முழுமையான ஹீமோகிராம் சோதனை
இரத்த சர்க்கரை அளவு (உணவுக்கு முன் (FBS) + உணவுக்குப் பின் (PP) [அல்லது] HbA1c)
லிப்பிட் புரஃபைல் (மொத்த கொழுப்பு, HDL, LDL, ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்)
சீரம் கிரியேட்டினின்
குறிப்பு: இந்த டெஸ்ட் அறிக்கைகள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்.ஒன்றாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2. வெல்னஸ் நன்மைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உடல்தகுதி மற்றும் உடல்நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்வதற்காக காப்பீடு செய்தவர் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். உடற்தகுதிக்கான முன்னெடுப்பு மற்றும் வெல்னஸ் புள்ளிகளின் பட்டியல்:
முன்னெடுப்பு
வெல்னஸ் புள்ளிகள்
a.
நடை மாரத்தான், மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
- நிகழ்வில் பங்கேற்க எடுக்கப்பட்ட நுழைவுச் சீட்டின் விவரங்களுடன் BIB எண்ணைச் சமர்ப்பித்தல்
b.
ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்) - ஜிம் / யோகா மையம் / ஜூம்பா வகுப்புகள் / ஏரோபிக் உடற்பயிற்சி / விளையாட்டு கிளப் / பைலேட்ஸ் வகுப்புகள் / நீச்சல் / டாய் சி / தற்காப்பு கலை / ஜிம்னாஸ்டிக்ஸ் / நடன வகுப்புகள்
100
குறிப்பு:
காப்பீடு செய்யப்பட்டவர் ஏதேனும் ஹெல்த் கிளப்பில் உறுப்பினராக இல்லாவிட்டால், பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அவர்/அவள் கிளப்பில் சேர வேண்டும். மேலும் அவர் ஹெல்த் கிளப் உறுப்பினர் ஸ்டேட்டஸை உறுதி செய்ய வேண்டும்.
3. ஸ்டே ஆக்டிவ்
கீழே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்டார் மொபைல் செயலியில் நடை எண்ணிக்கை இலக்கை எட்டுவதன் மூலம் காப்பீடு செய்தவர் வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியான நடை எண்ணிக்கை
வெல்னஸ் புள்ளிகள்
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 5000 மற்றும் 7999 க்கு இடையில் இருந்தால்
100
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 8000 மற்றும் 9999 க்கு இடையில் இருந்தால்
150
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை இருக்க வேண்டியது - 10000 மற்றும் அதற்கு மேல்
200
குறிப்பு:
ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் முதல் மாதம் மற்றும் கடைசி மாதம் ஸ்டே ஆக்டிவ் என்பதன் கீழ் தினசரி மேற்கொள்ளப்படும் சராசரியான நடை எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
இந்த பலனைப் பெற பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மொபைல் ஆப் பதிவிறக்கப்பட்டிருக்க வேண்டும்.
காப்பீட்டாளர் முடித்த சராசரி நடை எண்ணிக்கை, ஸ்டார் வெல்னஸ் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும்.
4. (a) எடை மேலாண்மை திட்டம்:
a) அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ள காப்பீட்டாளர்களுக்கு, எடையைக் குறைப்பதற்கும், பிஎம்ஐயை பராமரிப்பதற்கும் நிபுணர்கள் மூலம் அவர்களின் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) நிர்வகிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
எடை மேலாண்மை திட்டத்தை ஏற்கும் பட்சத்தில், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
கீழே குறிப்பிட்டுள்ளபடி, காப்பீட்டாளர் தனது இலக்கை எட்டினால் கூடுதலாக 50 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
(b) காப்பீடு செய்தவர் அதிக எடை / பருமனாக இல்லாவிட்டால், அவர் ஸ்டார் வெல்னஸை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவரது வெற்றிக் கதையை எங்களிடம் சமர்ப்பிக்கலாம். மேலும், "சுறுசுறுப்பான/ஆரோக்கியமான வாழ்க்கை முறையை" எப்படித் தொடங்கினார் / மேம்படுத்தப்பட்டார் / தன்னை பராமரித்தார் போன்ற அவரது உடற்தகுதி செயல்பாடுகள் மற்றும் ஸ்டார் வெல்னஸ் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது ஃபிட்னஸ் வெற்றிக் கதையைச் சமர்ப்பித்தால், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
5. (a). நாள்பட்ட நோய்கள் கொண்ட நிலைகளுக்கான மேலாண்மை திட்டம்:
காப்பீடு செய்தவர்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க உதவும் எம்பேனல் செய்யப்பட்ட வெல்னஸ் நிபுணர்கள் மூலம் காப்பீடு செய்தவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது.
நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்யப்பட்டவர் 100 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் ஒரு பாலிசி ஆண்டில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அதிகபட்சம் 3 முறை டெஸ்ட் முடிவு மதிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்
டெஸ்ட் முடிவு மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளின் +/- 10% வரம்பிற்குள் இருந்தால், பாலிசி ஆண்டில் குறைந்தது 2 முறையாவது, கூடுதலாக 150 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்..
இந்த டெஸ்ட் அறிக்கைகள், உடல்நல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 1 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
Sr. No.
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய சோதனை
கூடுதல் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான மதிப்பின் அளவுகோல்கள்
1.
நீரிழிவு நோய் (காப்பீடு செய்தவர் HbA1c சோதனை மதிப்பு (அல்லது) உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பின் சோதனை மதிப்பை சமர்ப்பிக்கலாம்)
HbA1c
≤ 6.5
உணவுக்கு முந்தைய சர்க்கரை (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பிறகான சோதனை மதிப்பு
160 mg/dl க்கு கீழே 100 முதல் 125 mg/dl
2.
உயர் இரத்த அழுத்தம்
பிபி கருவி உடன் அளவிடப்படுகிறது
சிஸ்டாலிக் வரம்பு - 110 முதல் 140 மிமீ ஹெச்ஜி, டயஸ்டாலிக் வரம்பு - 70 முதல் 90 மிமீஹெச்ஜி
3.
இருதய நோய்
LDL கொழுப்பு மற்றும் மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்
100 முதல் 159 mg/dl ≤ 4.0
4.
ஆஸ்துமா
PFT (நுரையீரல் செயல்பாடு சோதனை)
FEV1 (PFC) 75% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. FEV1/ FVC 70% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.
(b) காப்பீடு செய்தவர் நாள்பட்ட நோய்களுக்கான நிலை/கள் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா) பாதிக்கப்படவில்லை என்றால், அவர் "டி-ஸ்ட்ரெஸ் & மைண்ட் பாடி ஹீலிங் திட்டத்தை" தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் காப்பீடு எடுத்தவர்களுக்கு உள் (சுயமாக உருவாக்கப்பட்ட) மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறனை அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்..
மனஅழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராம் முடிந்த பிறகு, காப்பீடு செய்தவர் கூடுதலாக 75 வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
குறிப்பு: இது ஒரு 10 வார திட்டமாகும். இதனை காப்பீடு செய்தவர் எந்த இடைவெளியும் இல்லாமல் முடிக்க வேண்டும்.
6. விர்ச்சுவல் கன்சல்டேஷன் சர்வீஸ்:
'மருத்துவ ஆலோசனையானது' எங்களுடைய மருத்துவர்கள் / எம்பானல்டு சேவை வழங்குநர்கள் மூலம், ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும், மொபைல் ஆப் மூலம் சாட் செய்வதன் மூலமும், வாய்ஸ் கால் அல்லது பயனாளர்களுக்கு திரும்ப அழைக்கும் முறையிலும் காப்பீடு செய்தவருக்கு வழங்கப்படுகிறது. மேலும், 'டயட் & நியூட்ரிஷன்' மற்றும் 'செகண்ட் மெடிக்கல் ஒப்பீனியன்' உள்ளிட்ட ஆலோசனைகளும் கிடைக்கின்றன.
7. முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்:
பின்வரும் சேவைகளைப் பெற, காப்பீடு செய்தவர் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தையும் தொடர்பு கொள்ளலாம்:
அருகிலுள்ள ஆம்புலன்ஸ் / மருத்துவமனை / இரத்த வங்கி போன்ற அவசர உதவித் தகவல்களுக்கு.
8. மாதவிடாய் காலம் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்:
எளிதான ஆன்லைன் கண்காணிப்பு திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் கருவுறுதல் பராமரிப்புக்கு உதவுகிறது. அதாவது இது கருத்தரிப்பு தடுப்புக்கான திட்டமிடலுக்கு உதவும் அதே வேளையில், கருவுற முடிவு செய்யும் பட்சத்தில், உச்சபட்ச ஓவியூலேஷன் காலத்தையும் டிராக் செய்கிறது.
9. டிஜிட்டல் ஹெல்த் வால்ட்:
காப்பீடு செய்தவர் அவரது தனிப்பட்ட உடல்நல மருத்துவ தகவல்களை சேமிக்க/அணுக மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு பாதுகாப்பான நம்பகமான பெறுநராக இது உள்ளது. இந்த போர்ட்டலைப் பயன்படுத்தி, காப்பீடு செய்தவர்கள் தங்கள் மருத்துவ ஆவணங்களை (மருந்துகள், ஆய்வக அறிக்கைகள், டிஸ்சார்ஜ் அறிக்கைகள் போன்றவை) சேமிக்கலாம், மேலும், இதில் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம், மருத்துவ தரவுகளையும் கண்காணிக்கலாம்.
10. வெல்னஸ் கன்டென்ட்:
இந்த வெல்னஸ் தளம் ஹெல்த் கட்டுரைகள், வலைப்பதிவுகள், உதவிக்குறிப்புகள், இதர உடல்நலம் மற்றும் உயர்தர வெல்னஸ் கட்டுரைகளின் சேகரிப்புகளை வழங்குகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு உடல்நல அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், நேர்மறையான உடல்நல மாற்றங்களைச் பெறுவதற்கும் ஒரு நம்பகமான மூலதனத்தை கொண்டிருப்பதன் மூலம் காப்பீடு செய்யப்பட்டவர் பயனடைவார்.
11. ஆரோக்கிய வினாடிவினா & கேமிஃபிகேஷன்:
வெல்னஸ் போர்டல் ஆரோக்கியம் மற்றும் வெல்னஸ் வினாடி வினா போன்றவற்றை வழங்குகிறது. வெல்னஸ் வினாடி வினாக்கள், பல்வேறு உடல்நலத் தேர்வுகள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க, காப்பீடு செய்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
கேமிஃபிகேஷன் என்பது கேளிக்கை மற்றும் உடல்நலம் & ஆரோக்கிய அனுபவங்களை உருவாக்க உதவுகிறது. இது பயனர்களிடையே சாதனை உணர்வை உருவாக்க உதவி செய்து, அவர்களை ஊக்குவிக்கிறது.
12. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு:
இது அவர்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை, தொலைபேசி அழைப்புகள் (முதன்மையாக அறுவை சிகிச்சை நிகழ்வுகளுக்கு) மூலம் ஃபாலோ அப் செய்து தீர்த்து வைக்கப்படுகிறது.
13. நெட்வொர்க் வழங்குநர்கள் தரும் தள்ளுபடிகள்:
எங்கள் இணையதளத்தில் காட்டப்படும் எங்கள் `நெட்வொர்க் வழங்குநர்கள் அளிக்கும் சேவைகளில், காப்பீடு செய்தவர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம்.
வெல்னஸ் செயல்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
காப்பீடு செய்தவர் வழங்கிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
வெல்னஸ் வெகுமதி புள்ளிகளுக்கு பதிலாக பணம் எதுவும் கொடுக்கப்படாது.
காப்பீடு செய்தவர், வெல்னஸ் செயல்பாடு/சோதனையை மேற்கொண்ட 1 மாதத்திற்குள் அது தொடர்புடைய ஆவணங்கள், ரிப்போர்ட்ஸ், ரசீதுகள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாலிசி ஆண்டின் கடைசி மாதத்தில் எந்தவொரு வெல்னஸ் செயல்பாட்டின் ரிப்போர்ட், ஆவணம், ரசீது என எதுவும் சமர்ப்பிக்க முடியாது.
எம்பேனல்டு சேவை வழங்குநர் மூலம் வழங்கப்படும் சேவைகளை எளிதாக்கும் பணிகளை மட்டுமே ஸ்டார் ஹெல்த் செய்கிறது. எனவே அதிகரிக்கும் செலவுகள் அல்லது சேவைகளுக்கு பொறுப்பாகாது.
அனைத்து மருத்துவ சேவைகளும் எம்பேனல்டு ஹெல்த் கேர் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைகள்/சேவைகளைப் பெறுவதற்கு முன் காப்பீடு செய்தவர் தனது மருத்துவரை அணுக வேண்டும். இந்த ஆலோசனைகள்/சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முடிவு காப்பீடு செய்யப்பட்ட நபரின் விருப்பப்படி மட்டுமே.
வெல்னஸ் புள்ளிகள் நியாயமற்ற முறையில் பெற்றது கண்டறியப்பட்டால், புள்ளிகளை நீக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
வெல்னஸ் திட்டத்தின் மூலம் மற்றும் / அல்லது அதன் காரணமாக, பாதிக்கப்பட்டதாகவோ, பாதிப்பு ஏற்படுவதாகவோ பயனாளர் க்ளைம் செய்யும் பட்சத்தில் ஸ்டார் ஹெல்த், அதன் குழு நிறுவனங்கள், அல்லது துணை நிறுவனங்கள், அந்தந்த இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், எந்தவொரு செயல்கள், உரிமைகோரல்கள், கோரிக்கைகள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.
வழங்கப்படும் சேவைகள் IRDA வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.”
காட்சி – 1
24 வயதுடைய ரமேஷ், 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கினார். இதன் கவரேஜ் தொகை ரூ.25 லட்சம். பல்வேறு ஆரோக்கிய செயல்பாடுகள் மூலம் அவர் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ரமேஷ் தனது உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25 என்று தெரிவித்தார். அவர் ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தார்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
பெறப்பட்ட வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை (இரண்டு சோதனை முடிவுகள் இயல்பான அளவுகளில் இல்லை)
100
3
நடை மாரத்தானில் பங்கேற்றார்
100
4
யோகா வகுப்புகளில் கலந்து கொண்டார்
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்
200
6
ரமேஷ் எடை மேலாண்மை திட்டத்தை ஏற்றுக்கொண்டு 23 எனும் பிஎம்ஐ நிலையை அடைந்தார்
100
7
ரமேஷ் மன அழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளார்
125
மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
825
ரமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர் ஆகிறார்.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
காட்சி – 2
26 வயதான சுரேஷ் மற்றும் 25 வயதுடைய அவரது மனைவி லட்சுமி ஆகியோர் யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியை (ஃப்ளோட்டர் சம் இன்சூரன்ஸ்) ஜூலை 10, 2019 அன்றுவாங்கினார்கள். அவர்களது கவரேஜ் தொகை ரூ.50 லட்சம். இங்கு ஃப்ளோட்டர் பாலிசியின் கீழ் அவர்கள் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம். சுரேஷ் தனது உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 26 என்றும், லட்சுமி தனது பிஎம்ஐ 25 என்றும் தெரிவித்துள்ளனர். சுரேஷ் மற்றும் லட்சுமி ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தனர்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
சுரேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
மாரத்தானில் பங்கேற்றார்
100
0
4
ஏரோபிக் உடற்பயிற்சியில் கலந்து கொண்டார்
100
100
5
நடை எண்ணிக்கை இலக்கை அடைந்தது
200
150
6
சுரேஷ் எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று 24 எனும் பிஎம்ஐ நிலையை அடைந்தார். லட்சுமி எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று 23 எனும் பிஎம்ஐ நிலையை பெற்றார்.
100
100
7
சுரேஷ் & லக்ஷ்மி மனஅழுத்தம் மற்றும் மனம் & உடலை குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளனர்
125
125
மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
875
825
வெயிட்டேஜ் அடிப்படையில் வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை - 1:1
437
(875X1/2)
412
(825X1/2)
சுரேஷ் மற்றும் லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 849 (437+412)
வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சுரேஷ் & லட்சுமி பிரீமியம் புதுப்பிக்கும் போது 10% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
காட்சி –3
35 வயதான தனி நபர் உமேஷ், யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியை இரண்டு வருட காலத்திற்கு வாங்கினார். அவரது கவரேஜ் தொகை ரூ.1 கோடி. பல்வேறு ஆரோக்கியமான செயல்பாடுகள் மூலம் அவர் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம். அவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் ஆரோக்கிய நடவடிக்கைகளை உமேஷ் முடித்தார்.
Sr.No
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
முதல் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
இரண்டாம் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
நடை மாரத்தானில் பங்கேற்றார்
100
100
4
யோகா வகுப்புகளில் கலந்து கொண்டார்
100
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்.
200
200
6
அவரது ஃபிட்னஸ் வெற்றிக் கதையை சமர்ப்பித்துள்ளார்
50
50
7
மன அழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளார்
125
125
வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை
950
850
உமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 1800 (950+850)
இரண்டு வருட பாலிசி நிபந்தனையின்படி வெல்னஸ் புள்ளிகளின் கணக்கீடு = 900 (500+388)
பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெற உமேஷ் தகுதியுடையவர் ஆகிறார்.
காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 12 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள் / நடைமுறைகளுக்கு - 12 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜூக்கு இங்கே கிளிக் செய்யவும்
பிரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் பலன்/பிரீமியம் விளக்கப்படத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்,
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசி தொடங்கும் போது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், ஏற்க முடியாத பட்சத்தில் பாலிசியை திரும்பப் பெறுவதற்கும் பாலிசி எடுத்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவருக்கு அனுமதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், பிரீமியம் தொகை திருப்பி கொடுக்கும் நடைமுறைகள் தொடங்கும் :
ஃப்ரீ லுக் பீரியடில் காப்பீடு செய்தவர் க்ளைம் செய்யவில்லை என்றால், காப்பீடு செய்தவருக்கு பின்வரும் உரிமைகள் உண்டு –
1. காப்பீடு செய்த நபரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணங்கள் நீங்கலாக மற்ற தொகையினை திரும்பப் பெற முடியும் அல்லது
2. பாலிசியை திரும்பப் பெற முடிவு எடுக்கும் பட்சத்தில், அதற்கு முன்பு பாலிசிதாரர் க்ளைம் செய்திருந்தால், க்ளைம் தொகை நீங்கலாக மீதமுள்ள பிரீமியம் திரும்பக் கிடைக்கும் அல்லது
3. பாலிசி புதுப்பித்தலின் போது ஃப்ரீ லுக் பீரியட் சலுகை பொருந்தாது
ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
24*7 வாடிக்கையாளர் சேவை
காப்பீடு பெறுவதற்கு, தொலைபேசி மூலம் மருத்துவ உதவி, சந்தேகங்களுக்கு 1800-425-2255 என்ற எண்ணை அழைக்கலாம்.
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மண்ட்
எந்தவித 3ம் நபரின் ஒப்புதலும் இன்றி அதிவேகமாக பாலிசிதாரர்களுக்கு காப்பீட்டு தொகையை அளிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் தான்
மருத்துவமனைகள்
எங்களிடம் உள்ள தரமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே உங்களை சிகிச்சைப்பெற பரிந்துரைக்கிறோம்.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
க்ளைம் செட்டில்மண்ட்
எங்களின் 90% க்ளைம்ஸ் 2 மணி நேரத்திற்குள் செட்டில் செய்யப்படும். மேலும், 92% க்ளைம்ஸ் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் முறையில் செட்டில் செய்யப்படுகிறது.
நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஸ்டார் ஹெல்த் உடன் இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட மருத்துவமனைகள் தடையற்ற பணமில்லா வசதிகளை வழங்குகின்றன. இதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவானது மற்றும் வசதியானது.
ஒப்புக்கொண்ட நெட்வொர்க் மருத்துவமனைகள்
அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கான செலவு குறைந்த பேக்கேஜ் கட்டணங்களை ஸ்டார் ஹெல்த் உடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் வழங்குகின்றன.
மதிப்புமிக்க சேவை வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகள் ஸ்டார் ஹெல்த் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முயற்சிகள், சேவைகள் மற்றும் தரம் ஆகியவற்றிற்காக சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பில் இல்லாத மருத்துவமனைகள்
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெறுவதற்கு (ஸ்டார் ஹெல்த் உடன்படிக்கையில் இல்லாத), நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்ட் பெறலாம்
விலக்கப்பட்ட வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகளில் க்ளைம் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்/விபத்துச் செலவுகள் உடல் சீரான நிலையை எட்டும் வரை கவர் செய்யப்படும்.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
Disclaimer: Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in