New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation - Click Here to Know More | BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI - Click here to know more | Click here to link your KYC | Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024

ஸ்டார் கார்ப்பரேட் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

India +91

IRDAI UIN: IRDA/NL-HLT/SHAI/P-T/V.I/143/13-14

HIGHLIGHTS

Plan Essentials

கார்ப்பரேட் பயணக் காப்பீடு

கார்ப்பரேட் பயணக் காப்பீடு

இந்த பாலிசியானது உங்கள் பயணத்தின் போது அல்லது வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது ஏற்படும் மருத்துவ அவசர நிலை மற்றும் பயண இடர்பாடுகள் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது.

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு

வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி பயணம் செய்யும் கார்ப்பரேட் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பாலிசி.

காப்பீட்டுத் தொகை

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசி மூன்று காப்பீட்டுத் தொகை தேர்வுகளை வழங்குகிறது. அவை USD 100,000, USD 250,000 மற்றும் USD 500,000.

அவசர மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு

அவசர மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு

காப்பீடு செய்த நபர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது, மருத்துவ அவசர நிலைகளில் ஏற்படும் செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.

Detailed List

Understand what’s included

முக்கியமான சிறப்பம்சங்கள்

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை

இந்த பாலிசிக்கு காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பாதகமான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் ECG, சாப்பிடுவதற்கு முந்தைய சோதனை மற்றும் உணவுக்குப் பிறகான சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால் விவரம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

நுழைவு வயது

இந்தியாவில் வசிக்கும் 6 மாதங்கள் முதல் 70 வயது வரை உள்ள எவரும், விடுமுறை அல்லது வணிகப் பயணத்திற்காக இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்தால், இந்த பாலிசியைப் பயன்படுத்தலாம்.

பிளான் ஆப்ஷன்ஸ்

இந்த பாலிசியானது அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட உலகளாவிய பயணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பயண நாட்கள்

இந்த பாலிசியானது 30 நாட்கள் மற்றும் 45 நாட்கள் ஆகிய இரண்டு பயண நாட்கள் தேர்வுகளின் கீழ் காப்பீட்டை வழங்குகிறது.

மருத்துவ அவசரநிலைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றுதல்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காப்பீடு செய்த நபரின் மருத்துவ அவசர நிலை காரணமாக, வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது. இது போக்குவரத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகளையும் கவர் செய்கிறது.

பயண நீட்டிப்புக்கான கவரேஜ்

காப்பீடு செய்த நபர் பாலிசியின் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்தால், பாலிசியின் காலாவதி தேதியிலிருந்து 30 அல்லது 45 நாட்களுக்குள் பயணம் முடியும் வரை அல்லது காப்பீடு செய்த நபர் இந்தியா திரும்பும் வரை பாலிசி தானாகவே நீட்டிக்கப்படும்.

பற்களுக்கான அவசரநிலை கவரேஜ்

இந்த பாலிசியானது, பயணத்தின் போது காயத்தால் ஏற்படும் பல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் வீரியமிக்க மயக்க மருந்து சிகிச்சைக்கான செலவுகளுக்கு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு வழங்குகிறது.

பயண சிரமங்களுக்கான கவரேஜ்

விமானம் தாமதம், பயணத்தை ரத்து செய்தல், பாஸ்போர்ட் இழப்பு, செக்-இன் பேக்கேஜ் இழப்பு அல்லது தாமதம், தவறவிட்ட விமானம்/இணைப்பு விமானம் மற்றும் விமான கடத்தலால் ஏற்படும் துயரம் போன்ற பயணச் சிரமங்களால் ஏற்படும் இழப்பை இந்த பாலிசி கவர் செய்கிறது.

பாஸ்போர்ட் இழப்பு

பயணத்தின் போது காப்பீடு செய்த நபர் தனது பாஸ்போர்ட்டை இழக்கும் பட்சத்தில், புதிய பாஸ்போர்ட் அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களைப் பெறுவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும்.

விமானம் கடத்தப்பட்டதால் நேரும் துயரம்

காப்பீடு செய்த நபர் பயணிக்கும் பொது விமானம் கடத்தப்பட்டு, பயணத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் தடங்கல் அல்லது இடையூறு ஏற்பட்டால், குறிப்பிட்ட வரம்புகளின்படி ஒவ்வொரு நாளும் தாமதத்திற்கு சமமான இந்திய ரூபாயை நிறுவனம் செலுத்தும்.

லக்கேஜ் தாமதம்

பயணத்தின் போது காப்பீடு செய்த நபரின் செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ், 12 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை தாமதத்திற்கான இழப்பீட்டை நிறுவனம் செலுத்தும்

லக்கேஜ் இழப்புக்கான கவரேஜ்

செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ் (காப்பீடு செய்யப்பட்ட நபருடையது) விமான நிறுவனத்தால் தொலைந்து விட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு செய்த நபருக்கு ஏற்படும் இழப்பு கவர் செய்யப்படும்

விமான தாமதம்

காப்பீடு செய்த நபரின் விமானம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டால், குறிப்பிட்ட வரம்புகள் வரை தங்குமிடம், பயணம் மற்றும் பிற நியாயமான கூடுதல் செலவுகளுக்கு கவர் செய்யப்படும்.

பயணத்தை ரத்து செய்தல்/இடர்பாடு

விபத்து காரணமாக காப்பீடு செய்தவருக்கு உடல் காயங்களோ அல்லது இறக்க நேரிட்டாலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ குறிப்பிட்ட தொகை வரை இழப்பீடு வழங்கும்.

விமானம்/இணைப்பு விமானத்தை தவறவிடுதல்

குறிப்பிட்ட காரணங்களால் காப்பீடு செய்த நபர் தான் முன்பதிவு செய்த விமானத்தையோ அல்லது இணைப்பு விமானத்தையோ தவறவிட்டால், தங்குமிடம் மற்றும் பயணத்தில் ஏற்படும் நியாயமான கூடுதல் செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஈடுசெய்யும்.

தனிப்பட்ட பொறுப்புக்கான கவரேஜ்

காப்பீடு செய்தவர் மூலம் வேறொரு நபருக்கு ஏற்படும் நோய்/காயம் (உயிரிழந்தாலும் அல்லது உயிர் பிழைத்தாலும்) அல்லது காப்பீட்டுக் காலத்தில் அவரது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால், காப்பீட்டு நிறுவனம் அவர் சட்டப்படி செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளுக்கும் இழப்பீடு வழங்கும்.

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

விபத்து காரணமாக காப்பீடு செய்த நபர் இறந்தாலோ அல்லது செயலிழந்தாலோ, குறிப்பிட்ட வரம்புகள் வரை அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ காப்பீட்டு நிறுவனம் மொத்தத் தொகையை வழங்கும்.

இறந்தவர்களின் உடலை கொண்டுச் செல்லும் போக்குவரத்து

வெளிநாட்டில் காப்பீடு செய்த நபர் இறக்க நேரிட்டால், அவரது உடலை எடுத்துச் செல்வதற்கான செல்வதை இந்த பாலிசி கவர் செய்கிறது அல்லது அவர் இறந்த நாட்டிலேயே அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு சமமான தொகையை ஈடுசெய்கிறது.

மாற்று ஊழியருக்கான கவரேஜ்

காப்பீடு செய்த ஊழியர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயமடைந்தாலோ, அவருக்கு பதிலாக ஒரு மாற்று ஊழியரை அனுப்புவதில் ஏற்படும் பயணச் செலவுகளுக்கு இந்தக் பாலிசி காப்பீடு வழங்குகிறது.

விலக்குகள்

இந்த பாலிசி விலக்குகளுக்கு உட்பட்டது. ஒவ்வொரு க்ளைம் போதும் நிறுவனம் பெறுப்பேற்காத தொகையை இது குறிக்கிறது.
STAR HEALTH

Why Choose Star Health Insurance?

As a Health Insurance specialist, we extend our services from offering tailor-made products to fast in-house claim settlements. With our growing network of hospitals, we ensure easy access to fulfill your medical needs.

Wellness Program

Take part in our wellness programs and earn rewards for staying healthy. Redeem those rewards to avail renewal discounts.

Diagnostic Centres

Get access to 1,635 diagnostic centres across India with home pickup of lab samples and health checkups at your doorstep.

E-Pharmacy

Order medicines online at a discounted price. Home delivery and store pick-ups are available across 2780 cities.

Looking for something else?

View all Plans
GET STARTED

Be Assured of the Best

Get your future secured with us.

Want more information?
Want more information?
Mobile Banner