ஸ்டார் க்ரிட்டிக்கல் இல்னஸ் மல்டிபே இன்ஷூரன்ஸ் பாலிசி
ஒரு தீவிர நோய் சுகாதார காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு, அந்த பாலிசியின் கீழ் உள்ள ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடுமையான நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ஒரு மொத்தத் தொகையை வழங்கும் ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல தீவிர நோய்களுக்கான கவரேஜ்களை, பொதுவாக தீவிர நோய் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளடக்கும். தீவிர நோய் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வாங்குவது என்பது எதிர்பாராத நேரத்தில் பாலிசிதாரருக்கு உதவக்கூடும்.
18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியைப் பெறலாம்.
தனித்துவமான கவரேஜ்
37 தீவிர நோய்களைக் கண்டறிவதற்கான மொத்தத் தொகையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தனிநபர் சிறப்புப் பாலிசி.
தவணை வசதி
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், பிரீமியத்தை ஆண்டுதோறும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட செலுத்தலாம்.
ஸ்டார் வெல்னஸ் திட்டம்
பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது.
DETAILED LIST
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி காலம்
இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை
50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இக்கட்டான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
காப்பீட்டுத் தொகை
இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 5,00,000/- மற்றும் அதிகபட்சம் ரூ. 25,00,000/- (ரூ. 1,00,000/- மடங்குகளில்).
1) சம்பாதிக்கும் நபர்களுக்கு - 18 முதல் 35 வயது வரையிலான ஆண்டு வருமானத்தில் 12 மடங்கு, 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு. அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
2) சம்பாதிக்காத நபர்களுக்கு - அதிகபட்சம் 15 லட்சம் வரை. முதன்மை உறுப்பினருக்கான காப்பீட்டுத் தொகையை விட வருமானம் ஈட்டாத நபர்களுக்கான காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்க முடியாது.
இக்கட்டான பாதிப்புகளுக்கான பரந்த கவரேஜ்
இந்த பாலிசியானது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்ட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான பரந்த கவரேஜ் வழங்குகிறது.
புற்றுநோய்க்கான கவரேஜ்
இந்த பாலிசி புற்றுநோய் தொடர்பான முக்கிய நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.
இதய நோய்க்கான கவரேஜ்
இந்த பாலிசி இதயம் தொடர்பான முக்கிய நிலைமைகளுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.
மூளை மற்றும் நரம்பு மண்டலம்
இந்த பாலிசி மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான முக்கியமான நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.
முக்கிய உறுப்பு மற்றும் பிற நிலைகள்
இந்த பாலிசி முக்கிய உறுப்புகள் மற்றும் பிற நிலைமைகள் தொடர்பான தீவிர நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். இது ஆண்டுதோரும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் மற்றும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் நடவடிக்கைகள், காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு வெல்னஸ் வெகுமதி புள்ளிகளைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை நிறுவனத்தால் கண்காணிக்கப்படும். வெல்னஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் பெற்ற வெல்னஸ் புள்ளிகள், பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வெல்னஸ் திட்டம் ஸ்டார் வெல்னஸ் பிளாட்ஃபார்ம் (டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்) மூலம் ஆன்லைனில் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்பு: கீழே உள்ள அட்டவணையில் (வரிசை எண் 1 முதல் 5 வரை) குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் செயல்பாடுகள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பாலிசிதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
வெல்னஸ் திட்டத்தின் கீழ் பிரீமியம் புதுப்பிக்கும் போது கிடைக்கும் தள்ளுபடியை பின்வரும் அட்டவணை விளக்குகிறது:
ஈட்டிய வெல்னஸ் புள்ளிகள்
பிரீமியத்தில் தள்ளுபடி
200 to 350
2%
351 to 600
5%
601 to 750
7%
751 to 1000
10%
வெல்னஸ் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வரிசை எண்
செயல்பாடு
பாலிசி ஆண்டில் ஒவ்வொரு செயல்பாட்டின் கீழும் பெறக்கூடிய அதிகபட்ச வெல்னஸ் புள்ளிகள்
1.
ஆரோக்கியத்தை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க
a) ஆன்லைன் சுகாதார இடர் மதிப்பீடு (HRA)
50
b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு
200
2.
வெல்னஸ் செயல்பாடுகள் பட்டியல்
a) மாரத்தான் நடை, மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
b) ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்)
100
3.
ஸ்டே ஆக்டிவ் - காப்பீடு செய்தவர் மொபைல் ஆப்-ல் நடை எண்ணிக்கை இலக்கை எட்டுதல்
200
4(a).
எடை மேலாண்மை திட்டம் (அதிக எடை / பருமன் கொண்ட பாலிசிதாரர்களுக்கு)
100
4(b).
ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்தவர் தனது மேம்பட்ட உடற்தகுதி வெற்றிக் கதையைப் பகிர்தல் (அதிக எடை அல்லது பருமனாக இல்லாத பாலிசிதாரர்களுக்கு)
50
5(a).
நாள்பட்ட நோய்களை களையும் மேலாண்மை திட்டம் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள பாலிசிதாரர்களுக்கு)
250
5(b).
b) மன அழுத்தம் மற்றும் மன நிலையை சரி செய்யும் திட்டம் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படாத பாலிசிதாரர்களுக்கு)
125
கூடுதல் வெல்னஸ் சேவைகள்
6.
விர்ச்சுவல் கன்சல்டேஷன் சர்வீஸ்
7.
முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்
8.
மாதவிடாய் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்
9.
டிஜிட்டல் ஹெல்த் வால்ட்
10.
வெல்னஸ் கன்டென்ட்
11.
ஆரோக்கிய வினாடி வினா & கேமிஃபிகேஷன்
12.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
13.
நெட்வொர்க் வழங்குநர்கள் தரும் தள்ளுபடிகள்
1. ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்:
a) சுகாதார இடர் மதிப்பீட்டை நிறைவு செய்தல் (HRA):
ஹெல்த் ரிஸ்க் அசெஸ்மென்ட் (எச்ஆர்ஏ) கேள்வித்தாள் என்பது காப்பீடு செய்தவரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் கருவியாகும். இது பாலிசிதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை சுயபரிசோதனை செய்ய உதவுகிறது. காப்பீடு செய்தவர் www.starhealth.in என்ற இணையதளத்தில் தனது கணக்கில் உள்நுழைந்து HRA கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யலாம். பாலிசி வருடத்திற்கு ஒருமுறை இதை மேற்கொள்ளலாம்.
ஆன்லைன் HRA கேள்வித்தாளை முடித்தவுடன், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
முன்னெடுப்பு
வெல்னஸ் புள்ளிகள்
a.
நடை மாரத்தான், மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
- நிகழ்வில் பங்கேற்க எடுக்கப்பட்ட நுழைவுச் சீட்டின் விவரங்களுடன் BIB எண்ணைச் சமர்ப்பித்தல்.
b.
ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்) - ஜிம் / யோகா மையம் / ஜூம்பா வகுப்புகள் / ஏரோபிக் உடற்பயிற்சி / விளையாட்டு கிளப் / பைலேட்ஸ் வகுப்புகள் / நீச்சல் / டாய் சி / தற்காப்பு கலைகள் / ஜிம்னாஸ்டிக்ஸ் / நடன வகுப்புகள்
100
குறிப்பு:
காப்பீடு செய்யப்பட்டவர் ஏதேனும் ஹெல்த் கிளப்பில் உறுப்பினராக இல்லாவிட்டால், பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அவர்/அவள் கிளப்பில் சேர வேண்டும். மேலும் காப்பீட்டாளர் ஹெல்த் கிளப் உறுப்பினர் நிலையை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பு: HRA இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் புள்ளிகளைப் பெற, காப்பீடு செய்தவர் HRA செயல்பாட்டைத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் முழு HRAயையும் முடிக்க வேண்டும்.
(b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு:
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் நோய் கண்டறிதல் / தடுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம். இந்த சோதனைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்டாய சோதனைகள் இருக்க வேண்டும். காப்பீடு செய்தவரின் சொந்த செலவில் எந்த நோய் கண்டறியும் மையத்திலும் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட சோதனை அறிக்கைகளின் அனைத்து முடிவுகளும் சாதாரண வரம்பிற்குள் இருந்தால், காப்பீடு செய்தவர் 200 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏதேனும் ஒரு சோதனையின் முடிவு சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், பாலிசிதாரர் 150 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சோதனை முடிவுகள் சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 100 வெல்னஸ் புள்ளிகளை மட்டுமே பெறுவார்.
முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டாய சோதனைகளின் பட்டியல்
1. முழுமையான ஹீமோகிராம் சோதனை
2. இரத்த சர்க்கரை (உணவுக்கு முன் (FBS) + உணவுக்குப் பின் (PP) [அல்லது] HbA1c)
3. லிப்பிட் புரஃபைல் (மொத்த கொழுப்பு, HDL, LDL, ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்)
4. சீரம் கிரியேட்டினின்
குறிப்பு: இந்த பரிசோதனை அறிக்கைகள் ஒன்றாகச் சமர்பிக்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2. வெல்னஸ் நன்மைகள்:
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உடல்தகுதி மற்றும் உடல்நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்வதற்காக பாலிசிதாரர் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். உடற்தகுதிக்கான முன்னெடுப்பு மற்றும் வெல்னஸ் புள்ளிகளின் பட்டியல்:
3. ஸ்டே ஆக்டிவ்:
கீழே குறிப்பிட்டுள்ளபடி ஸ்டார் மொபைல் ஆப் படி, நடை எண்ணிக்கை இலக்கை எட்டுவதன் மூலம் பாலிசிதாரர் வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியான நடை எண்ணிக்கை
வெல்னஸ் புள்ளிகள்
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 5000 மற்றும் 7999 க்கு இடையில் இருந்தால்
100
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 8000 மற்றும் 9999 க்கு இடையில் இருந்தால்
150
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை இருக்க வேண்டியது - 10000 மற்றும் அதற்கு மேல்
200
குறிப்பு:
ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் முதல் மாதம் மற்றும் கடைசி மாதம் ஸ்டே ஆக்டிவ் என்பதன் கீழ் தினசரி மேற்கொள்ளப்படும் சராசரியான நடை எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
இந்த பலனைப் பெற பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மொபைல் ஆப் பதிவிறக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாலிசிதாரர் முடித்த சராசரி நடை எண்ணிக்கை, ஸ்டார் வெல்னஸ் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும்.
4. (a) எடை மேலாண்மை திட்டம்:
அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ள காப்பீட்டாளர்களுக்கு, எடையைக் குறைப்பதற்கும், பிஎம்ஐயை பராமரிப்பதற்கும் நிபுணர்கள் மூலம் அவர்களின் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) நிர்வகிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
எடை மேலாண்மை திட்டத்தை ஏற்கும் பட்சத்தில், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
கீழே குறிப்பிட்டுள்ளபடி, காப்பீட்டாளர் தனது இலக்கை எட்டினால் கூடுதலாக 50 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
வரிசை எண்
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய மதிப்புகள்
வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான அளவுகோல்கள்
1.
உடல் பருமன் (பிஎம்ஐ 29 க்கு மேல் இருந்தால்)
உயரம் மற்றும் எடை (பிஎம்ஐ கணக்கிட)
18 மற்றும் 29 க்கு இடையில் பிஎம்ஐ நிலையை எட்டுதல் மற்றும் அதனை தக்க வைத்தல்
2.
அதிக எடை (பிஎம்ஐ 25 முதல் 29 வரை இருந்தால்
உயரம் மற்றும் எடை (பிஎம்ஐ கணக்கிட)
பிஎம்ஐ-யில் இரண்டு புள்ளிகள் குறைத்து, பாலிசி ஆண்டில் அதே பிஎம்ஐயை தக்க வைத்தல்
- மதிப்புகள் (பிஎம்ஐக்கு) ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் (ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் 5 முறை வரை)
(ஆ) காப்பீடு செய்தவர் அதிக எடை / பருமனாக இல்லாவிட்டால், ஸ்டார் வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் அவருடைய "சுறுசுறுப்பான/ஆரோக்கியமான வாழ்க்கை முறையை" எப்படித் தொடங்கினார் / மேம்படுத்தப்பட்டார் / பராமரித்தார் என்பது பற்றிய அவரது உடற்தகுதி வெற்றிக் கதையை எங்களிடம் சமர்ப்பிக்கலாம்.
ஸ்டார் வெல்னஸ் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஃபிட்னஸ் வெற்றிக் கதையைச் சமர்ப்பித்தால், பாலிசிதாரர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்
5. (a). நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மை திட்டம்:
இந்த திட்டம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள காப்பீட்டாளர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க/மேம்படுத்த, மருத்துவ நிபுணர்கள் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவும்.
நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்யப்பட்டவர் 100 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அதிகபட்சம் 3 முறை சோதனை முடிவு மதிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சோதனை முடிவின் மதிப்புகள், பாலிசி ஆண்டில் குறைந்தது 2 முறையாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளில் +/- 10% என்ற வரம்பிற்குள் இருந்தால், கூடுதலாக 150 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்தப் டெஸ்ட் அறிக்கைகள் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 1 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரிசை எண்
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய சோதனைகள்
கூடுதல் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான மதிப்புகளின் அளவுகோல்கள்
1.
நீரிழிவு நோய் (காப்பீட்டாளர் HbA1c சோதனை மதிப்பை சமர்ப்பிக்கலாம் (அல்லது) உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவு (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பிந்தைய சோதனை அளவு)
HbA1c
≤ 6.5
உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவு (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பிந்தைய சோதனை அளவு
100 முதல் 125 mg/d 160 mg/dlக்குக் கீழே
2.
உயர் இரத்த அழுத்தம்
BP கருவி மூலம் அளவிடப்பட்ட சோதனை
சிஸ்டாலிக் வரம்பு - 110 முதல் 140 mmHg டயஸ்டாலிக் வரம்பு - 70 முதல் 90 mmHg
b) பாலிசிதாரர் நாள்பட்ட நோய் நிலைகளால் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா) பாதிக்கப்படவில்லை என்றால், அவர் "டி-ஸ்ட்ரெஸ் & மைண்ட் பாடி ஹீலிங் திட்டத்தை" தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் பாலிசிதாரருக்கு உள் (தானாக உருவாக்கப்பட்ட) மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறனை அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் மற்றும் மனதைக் குணப்படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீட்டாளர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
மனஅழுத்தம் மற்றும் மனதை குணப்படுத்தும் புரோகிராம் முடிந்தவுடன், காப்பீடு செய்தவர் கூடுதலாக 75 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
குறிப்பு: இது ஒரு 10 வார திட்டமாகும். இதனை பாலிசிதாரர் எந்த இடைவெளியும் இல்லாமல் முடிக்க வேண்டும்.
6. விர்ச்சுவல் கன்சல்டேஷன் சர்வீஸ்:
'மருத்துவ ஆலோசனையானது' எங்களுடைய மருத்துவர்கள் / எம்பானல்டு சேவை வழங்குநர்கள் மூலம், ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும், மொபைல் ஆப் மூலம் சாட் செய்வதன் மூலமும், வாய்ஸ் கால் அல்லது பயனாளர்களுக்கு திரும்ப அழைக்கும் முறையிலும் காப்பீடு செய்தவருக்கு வழங்கப்படுகிறது. மேலும், 'டயட் & நியூட்ரிஷன்' மற்றும் 'செகண்ட் மெடிக்கல் ஒப்பீனியன்' உள்ளிட்ட ஆலோசனைகளும் கிடைக்கின்றன.
7. முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்:
பின்வரும் சேவைகளைப் பெற, காப்பீடு செய்தவர் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தையும் தொடர்பு கொள்ளலாம்:
அருகிலுள்ள ஆம்புலன்ஸ் / மருத்துவமனை / இரத்த வங்கி போன்ற அவசர உதவித் தகவல்களுக்கு.
8. மாதவிடாய் காலம் & கருவுறுதலை கண்காணிக்கும் டிராக்கர்:
எளிதான ஆன்லைன் கண்காணிப்பு திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் கருவுறுதல் பராமரிப்புக்கு உதவுகிறது. அதாவது இது கருத்தரிப்பு தடுப்புக்கான திட்டமிடலுக்கு உதவும் அதே வேளையில், கருவுற முடிவு செய்யும் பட்சத்தில், உச்சபட்ச ஓவியூலேஷன் காலத்தையும் டிராக் செய்கிறது.
9. டிஜிட்டல் ஹெல்த் வால்ட்:
காப்பீடு செய்தவர் அவரது தனிப்பட்ட உடல்நல மருத்துவ தகவல்களை சேமிக்க/அணுக மற்றும் பகிர்ந்துகொள்ள ஒரு பாதுகாப்பான நம்பகமான பெறுநராக இது உள்ளது. இந்த போர்ட்டலைப் பயன்படுத்தி, காப்பீடு செய்தவர்கள் தங்கள் மருத்துவ ஆவணங்களை (மருந்துகள், ஆய்வக அறிக்கைகள், டிஸ்சார்ஜ் அறிக்கைகள் போன்றவை) சேமிக்கலாம், மேலும், இதில் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம், மருத்துவ தரவுகளையும் கண்காணிக்கலாம்.
10. வெல்னஸ் கன்டென்ட்:
இந்த வெல்னஸ் தளம் ஹெல்த் கட்டுரைகள், வலைப்பதிவுகள், உதவிக்குறிப்புகள், இதர உடல்நலம் மற்றும் உயர்தர வெல்னஸ் கட்டுரைகளின் சேகரிப்புகளை வழங்குகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு உடல்நல அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், நேர்மறையான உடல்நல மாற்றங்களைச் பெறுவதற்கும் ஒரு நம்பகமான மூலதனத்தை கொண்டிருப்பதன் மூலம் காப்பீடு செய்யப்பட்டவர் பயனடைவார்.
11. ஆரோக்கிய வினாடிவினா & கேமிஃபிகேஷன்:
வெல்னஸ் போர்டல் ஆரோக்கியம் மற்றும் வெல்னஸ் வினாடி வினா போன்றவற்றை வழங்குகிறது. வெல்னஸ் வினாடி வினாக்கள், பல்வேறு உடல்நலத் தேர்வுகள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க, காப்பீடு செய்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
கேமிஃபிகேஷன் என்பது கேளிக்கை மற்றும் உடல்நலம் & ஆரோக்கிய அனுபவங்களை உருவாக்க உதவுகிறது. இது பயனர்களிடையே சாதனை உணர்வை உருவாக்க உதவி செய்து, அவர்களை ஊக்குவிக்கிறது.
12. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு:
இது அவர்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை, தொலைபேசி அழைப்புகள் (முதன்மையாக அறுவை சிகிச்சை நிகழ்வுகளுக்கு) மூலம் ஃபாலோ அப் செய்து தீர்த்து வைக்கப்படுகிறது.
13. நெட்வொர்க் வழங்குநர்கள் தரும் தள்ளுபடிகள்:
எங்கள் இணையதளத்தில் காட்டப்படும் எங்கள் `நெட்வொர்க் வழங்குநர்கள் அளிக்கும் சேவைகளில், காப்பீடு செய்தவர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம்.
வெல்னஸ் செயல்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
காப்பீடு செய்தவர் வழங்கிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
வெல்னஸ் வெகுமதி புள்ளிகளுக்கு பதிலாக பணம் எதுவும் கொடுக்கப்படாது.
காப்பீடு செய்தவர், வெல்னஸ் செயல்பாடு/சோதனையை மேற்கொண்ட 1 மாதத்திற்குள் அது தொடர்புடைய ஆவணங்கள், ரிப்போர்ட்ஸ், ரசீதுகள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாலிசி ஆண்டின் கடைசி மாதத்தில் எந்தவொரு வெல்னஸ் செயல்பாட்டின் ரிப்போர்ட், ஆவணம், ரசீது என எதுவும் சமர்ப்பிக்க முடியாது.
எம்பேனல்டு சேவை வழங்குநர் மூலம் வழங்கப்படும் சேவைகளை எளிதாக்கும் பணிகளை மட்டுமே ஸ்டார் ஹெல்த் செய்கிறது. எனவே அதிகரிக்கும் செலவுகள் அல்லது சேவைகளுக்கு பொறுப்பாகாது.
அனைத்து மருத்துவ சேவைகளும் எம்பேனல்டு ஹெல்த் கேர் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைகள்/சேவைகளைப் பெறுவதற்கு முன் காப்பீடு செய்தவர் தனது மருத்துவரை அணுக வேண்டும். இந்த ஆலோசனைகள்/சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முடிவு காப்பீடு செய்யப்பட்ட நபரின் விருப்பப்படி மட்டுமே.
வெல்னஸ் புள்ளிகள் நியாயமற்ற முறையில் பெற்றது கண்டறியப்பட்டால், புள்ளிகளை நீக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
வெல்னஸ் திட்டத்தின் மூலம் மற்றும் / அல்லது அதன் காரணமாக, பாதிக்கப்பட்டதாகவோ, பாதிப்பு ஏற்படுவதாகவோ பயனாளர் க்ளைம் செய்யும் பட்சத்தில் ஸ்டார் ஹெல்த், அதன் குழு நிறுவனங்கள், அல்லது துணை நிறுவனங்கள், அந்தந்த இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், எந்தவொரு செயல்கள், உரிமைகோரல்கள், கோரிக்கைகள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.
வழங்கப்படும் சேவைகள் IRDA வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.”
Scenario – 1
24 வயதுடைய ரமேஷ், 2021 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கினார். இதன் கவரேஜ் தொகை ரூ.25 லட்சம். பல்வேறு ஆரோக்கிய செயல்பாடுகள் மூலம் அவர் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ரமேஷ் தனது உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25 என்று தெரிவித்தார். அவர் ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தார்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
பெறப்பட்ட வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை (இரண்டு சோதனை முடிவுகள் இயல்பான அளவுகளில் இல்லை)
150
3
நடை மாரத்தானில் பங்கேற்றார்
100
4
யோகா வகுப்புகளில் கலந்து கொண்டார்
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்
200
6
ரமேஷ் எடை மேலாண்மை திட்டத்தை ஏற்றுக்கொண்டு 23 எனும் பிஎம்ஐ நிலையை அடைந்தார்
100
7
ரமேஷ் மன அழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளார்
125
மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
825
ரமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர் ஆகிறார்.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
Scenario – 2
35 வயதான தனிநபர் உமேஷ், 20 லட்சம் இன்சூரன்ஸ் தொகையுடன், இரண்டு வருட காலத்திற்கு ஸ்டார் க்ரிட்டிகல் இல்னஸ் மல்டிபே இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குகிறார். இதில் பல்வேறு ஆரோக்கிய செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் அவர் எப்படி வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் புரிந்துகொள்வோம். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உமேஷ், ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தார்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
முதல் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
இரண்டாம் ஆண்டில் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிவுற்ற ஆன்லைன் ஹெல்த் இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
நடை ஓட்டத்தில் பங்கேற்றார்
100
100
4
டாய் சி வகுப்புகளில் கலந்து கொண்டார்
100
-
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டினார்
200
200
6
அவரது ஃபிட்னஸ் வெற்றிக் கதையை சமர்ப்பித்துள்ளார்
50
50
7
மன அழுத்தம் மற்றும் மனதையும் உடலையும் குணப்படுத்தும் புரோகிராமை முடித்துள்ளார்
250
250
வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை
950
850
உமேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 1800 (950+850) இரண்டு வருட பாலிசி நிபந்தனையின்படி வெல்னஸ் புள்ளிகளின் கணக்கீடு = 900 (1800/2)
பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பித்தலின் போது 10% தள்ளுபடி பெற உமேஷ் தகுதியுடையவர் ஆகிறார்.
கவரேஜ்
கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்க்கான காப்பீட்டுத் தொகைக்கு மிகாமல், பாலிசிதாரருக்கு நிறுவனம் மொத்தத் தொகையை செலுத்தும்:
கவரேஜ் செய்யப்பட்ட முக்கிய நோய்களின் பட்டியல்
குரூப் எண் அல்லது வகை
நோய் வகை
1. தீவிரத்தன்மை கொண்ட குறிப்பிட்ட புற்றுநோய்
1
புற்றுநோய் தொடர்பானது
2. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
3. அப்லாஸ்டிக் அனீமியா
4. மாரடைப்பு
2
இதயம் தொடர்பானது
5. திறந்த இதய அறுவை சிகிச்சை CABG
6. திறந்த இதய மாற்று அல்லது இதய வால்வுகளின் பழுது நீக்கும் சிகிச்சை
7. முதன்மை (இடியோபாடிக்) நுரையீரல் உயர் இரத்த அழுத்தம்
8. இதய மாற்று அறுவை சிகிச்சை
9. பெருநாடி அறுவை சிகிச்சை
10. அயோர்டிக் அனீரிஸம் சிக்கலை பிரித்து எடுத்தல்
11. பிற தீவிர கரோனரி தமனி நோய்
12. குறிப்பிட்ட தீவிரத்தன்மையின் கொண்ட கார்டியோமயோபதி
13. குறிப்பிட்ட தீவிரத்தன்மை கொண்ட கோமா
3
மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான நிலைகள்
14. நிரந்தர அறிகுறிகள் மூலம் அறியப்படும் பக்கவாதம்
15. கைகால்கள் நிரந்தர முடக்கம்
16. நிரந்தர அறிகுறிகளுடன் மோட்டார் நியூரான் நோய்
17. தொடர்ச்சியான அறிகுறிகளுடன் மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
18. தீவிரம் குறைந்த மூளைக் கட்டி
19. பேச்சு இழப்பு
20. தலையில் ஏற்பட்ட கடுமையான காயம்
21. அல்சைமர் நோய்
22. க்ரூட்ஸ்ஃபெல்ட்ட-ஜாகோப் நோய் (CJD)
23. மூளையழற்சி
24. தசைநார் சிதைவு
25. பாக்டீரியா மூளைக்காய்ச்சல்
26. மூளை அறுவை சிகிச்சை
27. முற்போக்கான சூப்பர் நியூக்ளியர் பால்ஸி
28. அபாலிக் சிண்ட்ரோம்
29. முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம்)
4
முக்கிய உறுப்பு மற்றும் பிற நிலைகள்
30. சிறுநீரக செயலிழப்புக்கு வழக்கமான டயாலிசிஸ் தேவைப்படுதல்
31. கண் பார்வை இழத்தல்
32. காது கேளாமை
33. இறுதி நிலை கல்லீரல் செயலிழப்பு
34. மூன்றாம் நிலை தீக்காயங்கள்
35. ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸ்
36. லூபஸ் நெஃப்ரிடிஸ் உடன் சிஸ்டமிக் லூபஸ் எரித்மேட்டஸ்
37. இறுதி நிலை நுரையீரல் செயலிழப்பு
சிறப்பு நிலைமைகள்
1. இந்த பாலிசியின் கீழ் காப்பீடு தொடங்கிய 90 நாட்களுக்குப் பிறகுதான், கவர் செய்யப்பட்ட மிக முக்கிய நோய் கண்டறியப்பட்டிருக்க வேண்டும்.
2. உயிர்வாழும் காலம் 15 நாட்கள் என்பது, அத்தகைய பெரிய நோயைக் கண்டறிந்த தேதியிலிருந்து பொருந்தும்.
3. ஒவ்வொரு நிலைமைக்கும் இடையே 12 மாதங்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்.
ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
24*7 வாடிக்கையாளர் சேவை
காப்பீடு பெறுவதற்கு, தொலைபேசி மூலம் மருத்துவ உதவி, சந்தேகங்களுக்கு 1800-425-2255 என்ற எண்ணை அழைக்கலாம்.
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மண்ட்
எந்தவித 3ம் நபரின் ஒப்புதலும் இன்றி அதிவேகமாக பாலிசிதாரர்களுக்கு காப்பீட்டு தொகையை அளிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் தான்
மருத்துவமனைகள்
எங்களிடம் உள்ள தரமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே உங்களை சிகிச்சைப்பெற பரிந்துரைக்கிறோம்.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
க்ளைம் செட்டில்மண்ட்
எங்களின் 90% க்ளைம்ஸ் 2 மணி நேரத்திற்குள் செட்டில் செய்யப்படும். மேலும், 92% க்ளைம்ஸ் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் முறையில் செட்டில் செய்யப்படுகிறது.
நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஸ்டார் ஹெல்த் உடன் இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட மருத்துவமனைகள் தடையற்ற பணமில்லா வசதிகளை வழங்குகின்றன. இதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவானது மற்றும் வசதியானது.
ஒப்புக்கொண்ட நெட்வொர்க் மருத்துவமனைகள்
அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கான செலவு குறைந்த பேக்கேஜ் கட்டணங்களை ஸ்டார் ஹெல்த் உடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் வழங்குகின்றன.
மதிப்புமிக்க சேவை வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகள் ஸ்டார் ஹெல்த் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முயற்சிகள், சேவைகள் மற்றும் தரம் ஆகியவற்றிற்காக சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பில் இல்லாத மருத்துவமனைகள்
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெறுவதற்கு (ஸ்டார் ஹெல்த் உடன்படிக்கையில் இல்லாத), நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்ட் பெறலாம்
விலக்கப்பட்ட வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகளில் க்ளைம் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்/விபத்துச் செலவுகள் உடல் சீரான நிலையை எட்டும் வரை கவர் செய்யப்படும்.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
தீவிர நோய் சுகாதார காப்பீடு என்றால் என்ன?
தீவிர நோய் சுகாதார காப்பீடுத் திட்டம் என்பது எதிர்பாராத போது, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய் கண்டறியப்படும்போது, ஒருவருக்கு பாதுகாப்பையும் நிதியையும் வழங்கும் ஒரு காப்பீடு திட்டமாகும். முன் பட்டியலிடப்பட்ட எந்தவொரு தீவிர நோயையும் முதன்முதலில் கண்டறியும்போது, பாலிசிதாரருக்கு ஒரு மொத்த தொகை கிடைக்கும், இது சிகிச்சையுடன் தொடர்புடைய அதிகப்படியான செலவுகளை ஈடுகட்டும் நோக்கம் கொண்டது.
ஆகையால், தீவிர நோய் மருத்துவ காப்பீடு் திட்டம் என்பது தேவையான சிகிச்சையைப் பெற, உங்கள் இதர சேமிப்பை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும், மூன்றாம் நிலை தீக்காயங்கள், வழக்கமான டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக செயலிழப்பு, தலையில் பெரும் அதிர்ச்சி, நிலையற்ற கோமா, அல்சைமர் நோய் போன்ற பிற முக்கியமான மருத்துவ நிலைமைகளும், ஒரு பொதுவான தீவிர நோய் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அடங்கும்.
ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே காப்பீட்டு திட்டம்
உயிருக்கு ஆபத்தான பெரிய நோய்களுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பைத் தேடும், அனைத்து மக்களுக்கும் ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே காப்பீட்டு திட்டம் அவசியம் ஆகும். அதன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
தனித்துவமான காப்பீடு
எங்கள் தீவிர நோய் சுகாதார காப்பீடு திட்டம், பொதுவாக புற்றுநோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற 37 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்றைக் கண்டறிந்தவுடன், ஒரு மொத்தத் தொகையை வழங்குவதன் மூலம், உங்களுக்கு மன அமைதியை உறுதி செய்கிறது.
நெகிழ்வான கட்டண விருப்பங்கள்
இந்த தீவிர நோய் சுகாதார காப்பீடு திட்டத்தில், ஒருவர் தங்கள் பிரீமியத்தை எளிதாக செலுத்தலாம். இந்த மருத்துவ காப்பீடு பொதுவாக காலாண்டு, அரை ஆண்டு, ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு, ஒரு முறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை செலுத்தத் தேர்ந்தெடுக்கும் தவணை வசதியை வழங்குகிறது.
மருத்துவத்திற்கு முந்தைய பரிசோதனை
50 வயதுக்குட்பட்டவர்களுக்கு, முன்-ஏற்றுக்கொள்ளும் மருத்துவ பரிசோதனை தேவைப்படாது. ஆனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது பாதகமான மருத்துவ வரலாற்றைக் கொண்டவர்கள், பொதுவாக முன்-மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் தொகை
இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ₹5,00,000/- இல் தொடங்குகிறது, அதிகபட்ச வரம்பு ₹25,00,000/-, ரூ. 1,00,000/- இன் மடங்குகளில் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்வாதாரம் ஈட்டும் நபர்களுக்கு, காப்பீட்டுத் தொகை அவர்களின் ஆண்டு வருமானத்தைப் போல, 12 மடங்கு (18–35 வயதுடையவர்களுக்கு) மற்றும் 10 மடங்கு (35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) ஆகும். வருமானம் ஈட்டாத நபர்கள் அதிகபட்சமாக ₹15,00,000/- வரை காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.
ஒரு தீவிர நோய் காப்பீட்டைக் கொண்ட சுகாதார காப்பீடு திட்டத்தை வாங்குவது என்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.
தீவிர நோய் காப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
புற்றுநோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிர நோய் நோயறிதலுக்கு உட்பட்டு, பொதுவாக தீவிர நோய் மருத்துவ காப்பீடு ஒரு மொத்த தொகையை வழங்குகிறது.சுகாதார காப்பீட்டுத் துறையில் தீவிர நோய் காப்பீட்டால் வழங்கப்படும் நிதி உதவி, பாலிசிதாரரின் மருத்துவ அல்லது சுகாதாரச் செலவுகள், இழந்த வருமானம் அல்லது பிற வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இதனால் இது, சவாலான நேரத்தில் மன அமைதியையும் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
சுகாதார காப்பீட்டில் கடுமையான நோய் காப்பீடு பலருக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். ஏனெனில், ஒருவருக்கு தீவிர நோய் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. தீவிர நோய் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தக்க சமயத்தில், அந்த திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலிசிதாரருக்கு கவரேஜை வழங்கக்கூடும்.
ஸ்டார் க்ரிட்டிக்கல் இல்னஸ் மல்டிபே இன்ஷூரன்ஸ் திட்டத்தின் சிறப்பு நிபந்தனைகள்
ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் மல்டிபே இன்சூரன்ஸ் திட்டம் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் விரிவான காப்பீட்டை வழங்குகிறது. ஆனால் அது கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டது :
நுழைவு வயது: 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
காத்திருப்பு காலம்: காப்பீடு தொடங்கியதிலிருந்து எந்தவொரு பெரிய நோயையும் முதன்முதலில் கண்டறிவதற்கு முன்பு வரை, 90 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்.
உயிர்வாழும் காலம்: காப்பீடு செய்யப்பட்ட நபர், முக்கிய நோய் கண்டறியப்பட்ட பிறகு 15 நாட்கள் உயிர்வாழ வேண்டும், அப்போதுதான் காப்பீட்டு உரிமைகோரல் செல்லுபடியாகும்.
கோரிக்கை வரம்பு: ஒவ்வொரு வகைக்கும் கீழே, ஒரு இன்சூரன்ஸ் கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 400% வரையான மொத்தத் தொகையை மக்கள் பெற்று பயனடையலாம்.
நிபந்தனைகளுக்கு இடையே காத்திருப்பு காலம்: ஒவ்வொரு கவர் செய்யப்படும் தீவிர நோய் நிலை ஏற்படுவதற்கும் இடையே 12 மாத காத்திருப்பு காலம் பொருந்தும்.
காப்பீடு திட்டம் புதுப்பித்தல்: குறைந்தபட்சம் உரிமைகோரல் செய்யப்படாத ஒரு வகை இருக்கும் வரை,பாலிசியைப் புதுப்பிக்க முடியும்.
ஒரு ஆண்டிற்கான உரிமைகோரல் வரம்பு: ஒரு பாலிசி ஆண்டில், அதிகபட்சமாக ஒரு உரிமைகோரல் மட்டுமே பெறக்கூடியது.
இந்த திட்டத்தின் இதர நன்மைகள்
ஆன்லைன் தள்ளுபடி: நீங்கள் முதல் முறை வாங்குதலுக்கு, 5% ஆன்லைன் தள்ளுபடியைப் பெறலாம். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் கடுமையான நோய்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்டார் கிரிட்டிகல் இல்னஸ் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். உங்களுக்குத் தேவைப்படும்போது நிதி ரீதியாகப் பாதுகாக்க இந்த திட்டம் உதவுகிறது, இதனால் இது உங்கள் நல்வாழ்வை உறுதி செய்கிறது.
உதவி மையம்
குழப்பமா? பதில் எங்களிடம்
உங்கள் உடல்நல காப்பீடு தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு பெறவும்.
தீவிர நோய் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் வாங்குவது உடல்நல அபாயங்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. தீவிர நோய் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள், பாலிசிதாரர் அவர்களின் முதன்மை ஆண்டுகளில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இவ்வாறு சுகாதார காப்பீட்டில் கடுமையான நோய் காப்பீடு வாங்குவது என்பது, எதிர்பாராத உடல்நல சவால்களைப் பற்றி கவலைப்படுவதை குறைத்து, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் கவனம் செலுத்த அவர்களை அனுமதிக்கிறது. தீவிர நோய் காப்பீட்டைக் கொண்ட சுகாதார காப்பீடு பலருக்கு உதவக்கூடும்.
Disclaimer: Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in