மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு என்பது மூத்த குடிமக்கள் தங்கள் முதுமைப் பருவத்தில் அவர்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் நிதிச் செலவுகளை ஈடுகட்ட வடிவமைக்கப்பட்ட, ஒரு வகையான சுகாதார காப்பீடு ஆகும். மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பல நன்மைகளை வழங்கக்கூடும்.
பாலிசி காலம்இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம். |
காப்பீட்டுத் தொகைரூ. 1,00,000/-, ரூ. 2,00,000/-, ரூ. 3,00,000/-, ரூ. 4,00,000/-, ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- , ரூ. 10,00,000/-, ரூ. 15,00,000/-, ரூ. 20,00,000/- மற்றும் ரூ. 25,00,000/- ஆகியவை இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான ஆப்ஷன்களாகும். அதுமட்டுமின்றி, காப்பீட்டுத் தொகை ரூ. 10,00,000/- முதல் ரூ. 25,00,000/- வரை ஃப்ளோட்டர் அடிப்படையில் கிடைக்கிறது. |
உள்நோயாளராக அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் கவர் செய்யப்படும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவர் செய்யப்படும். |
டிஸ்சார்ஜூக்கு பிறகுபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகான மருத்துவச் செலவுகள் 7% வரை கவராகும். |
அறை வாடகைதேர்வு செய்யப்பட்ட அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு, உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை வாடகை , தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 10,000/- வரை கவர் செய்யப்படும். |
ஐசியூ கட்டணங்கள்ரூ.10 லட்சம் வரை எடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில், 2% வரை ICU கட்டணமாக கவர் செய்யப்படும். மேலும் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு ICU கட்டணங்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வரை கவர் செய்யப்படும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் கவர் செய்யப்படும். |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது. |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை 24 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவர் செய்யப்படும். |
கோ-பேமண்ட்இந்த பாலிசியானது அனைத்து க்ளைம்ஸ்களுக்கும் 30% கோ-பேமண்ட் செலுத்துதலுக்கு உட்பட்டது. |
உடல்நலப் பரிசோதனைஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், நெட்வொர்க் மருத்துவமனைகளில் வருடாந்திர உடல்நல பரிசோதனைக்காக ஏற்படும் செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும். |
தவணை முறைகள்பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுதோறும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
முதுமை - இது ஒரு இயற்கையான செயல்முறை. நமது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதுவொரு தனித்துவமான சவாலாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் மூத்த குடிமக்களாகக் கருதப்படுவார்கள். இந்தியாவின் முதல் லாங்கிட்யூடினல் ஏஜிங் ஆய்வின் (LASI) படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று மூத்த குடிமக்களில் இருவர் சில நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்படும் நோய்களில் இருதய நோய்கள் (CVD), நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் மற்றும் பல அடங்கும். உடல்நலப் பாதுகாப்புத் தேவைகள் என்பவை ஓய்வு பெற்றவர்கள் அறியாத மிகப் பெரிய விஷயமாக உள்ளது. மூத்த குடிமக்களாகிய உங்கள் நிதி நிலைமையில் இருந்து, இத்தகைய நாள்பட்ட நோய்களுக்கான நிலையான சிகிச்சையைப் பெறுவது, அதிகரித்து வரும் மருத்துவச் செலவு காரணமாக உங்கள் சேமிப்பை வீணாக்கலாம். மேலும் இது நீங்கள் வகுத்திருந்த ஓய்வூதிய திட்டத்தை கடினமாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட உடல்நல தேவைகளைப் பூர்த்தி செய்ய மருத்துவ காப்பீடு தேவைப்படுகிறது. எனவே, உங்கள் உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளைத் தணிக்கும் சரியான மற்றும் பயனுள்ள மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டத்துடன் உடனடியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு பயனுள்ள அணுகுமுறையுடன் வழங்குகிறது. இந்தத் திட்டம் 60 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டமானது, மூத்த குடிமக்களுக்கான சிறந்த பலன்களுடன் உள்ளது. இதில், நவீன சிகிச்சை மூலம் பெறும் பெரும்பாலான டே கேர் நடைமுறைகள் கவராகும். இரண்டாவது பாலிசி ஆண்டிலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும். இதன் பிரீமியம் தொகை நிலையானது, வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த பாலிசி தனிநபர்/ஃப்ளோட்டர் தொகை காப்பீடு அடிப்படையில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் சிறந்த பிரீமியம் கொண்ட பாலிசி இது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பாலிசியை வாங்கும் போது காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. அதேபோல், பிரிவு 80டியின் கீழ் வரி விலக்கின் பலனையும் நீங்கள் பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான காப்பீடு ஏன் தேவைப்படுகிறது, என்று சிலர் யோசிக்கலாம். அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடு அவசியம், ஆனால் மூத்த குடிமக்களுக்கான காப்பீடு தேவை என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளுக்கு எதிரான நிதிப் பாதுகாப்பிற்காகவும், வயது தொடர்பான நோய்கள் மற்றும் நாள்பட்ட நிலைமைகளுக்கு தரமான சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதை உறுதிசெய்யவும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சுகாதாரக் காப்பீடு தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு ஏன் தேவைப்படுகிறது, என்பதற்கான சில காரணங்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
வயதுக்கு ஏற்ப மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, சிகிச்சைகள், மருத்துவமனையில் தங்குதல் மற்றும் ஆலோசனைகளுக்கான அதிக செலவுகளுக்கு எதிராக, மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
ஒரு மூத்த குடிமக்களுக்கான சிறந்த சுகாதார காப்பீடு என்பது பொதுவாக, வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை நிர்வகிக்க உதவும், பல மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான அணுகலை வழங்குகிறது.
வயதுக்கு ஏற்ப பொதுவாகக் காணப்படும் வாழ்க்கை முறை நோய்கள் போன்ற நிலைமைகளுக்கு, மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டங்கள் ஒரு காப்பீடு தொகையை வழங்க உதவக்கூடும்.
பல மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடுத் திட்டங்கள், வழக்கமான சுகாதார பரிசோதனைகள் போன்ற நன்மைகளை வழங்குகின்றன, இது உடல்நல அல்லது சுகாதாரப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவி செய்து, சிகிச்சைக்கான ஒட்டுமொத்த செலவைக் குறைக்கக்கூடும். எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டத்தில், நோய் தடுப்பு பராமரிப்பு அம்சம் உள்ளதா என்பதை கண்டறிந்து உங்கள் காப்பீட்டை தேர்ந்தெடுக்கவும்.
மூத்த குடிமக்களுக்கான சிறந்த சுகாதார காப்பீடு திட்டங்கள் சிலவற்று , மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், நவீன சிகிச்சைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் ஒரு சில மாற்று மருத்துவ சிகிச்சைகள் (ஆயுஷ் சிகிச்சைகள்) உட்பட பல்வேறு செலவுகளை ஈடுகட்ட உதவுகின்றன.
ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது, அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்பை தரக்கூடும் என்ற உறுதியை அளிக்கிறது. மேலும், இந்த 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு ஆண்டுகளில் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்த நேரம் அளிக்கிறது.