ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

IRDAI UIN: SHAHLIP20046V011920

HIGHLIGHTS

Plan Essentials

essentials

வழங்கப்பட்டுள்ள திட்டங்கள்

இந்த பாலிசி பிரத்யேக நன்மைகளுடன் அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் ஆப்ஷன்களை வழங்குகிறது.
essentials

பாலிசி காலம்

இந்த பாலிசியை 1 ஆண்டு, 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் வரை பெறலாம்.
essentials

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
essentials

நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 91 நாட்கள் குழந்தை முதல் 25 வயதுடையோர் என மூன்று பேர் வரை காப்பீடு பெறலாம்.
essentials

ஹாஸ்பிடல் கேஷ் டேஸ்

பேஸிக் ப்ளான் கீழ் 30 முதல் 180 நாட்கள் வரையிலும், மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 90 முதல் 180 நாட்கள் வரையிலும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை மாறுபடும்.
essentials

டே கேர் நடைமுறைகள்

பாலிசி பிரிவில் உள்ளபடி, குறிப்பிட்ட டே கேர் சிகிச்சைக்கான செலவுகள், பாலிசி ஆண்டில் ஐந்து முறை வரை காப்பீடு செய்யப்படும்.
essentials

ஹாஸ்பிடல் கேஷ் தொகை (ஒரு நாளைக்கு)

அடிப்படைத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தினசரி ஹாஸ்பிடல் கேஷ் தொகை ரூ. 1000, 2000 மற்றும் 3000/- மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் ரூ. 3000, 4000 மற்றும் 5000/- கிடைக்கும்.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

உடல்நலமின்மைக்கான ஹாஸ்பிடல் கேஷ்

நோயின் காரணமாக காப்பீடு செய்தவர் தேர்வு செய்த அதிகபட்ச நாட்களுக்கு, ஹாஸ்பிடல் கேஷ் தொகை காப்பீட்டாளரால் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்தின் கீழ், ஒரு நாளுக்கு மட்டும் இதில் விலக்கு பொருந்தும்.

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்

விபத்துக்கள் காரணமாக, காப்பீடு செய்தவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு, காப்பீடு செய்தவரால் எடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 150% வரை வழங்கப்படுகிறது.

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்

நோய் அல்லது காயம் காரணமாக ICU செலவினங்களுக்காக, காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வரை வழங்கப்படுகிறது. தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்தவரை, காப்பீடு செய்தவர் தேர்வு செய்யும் அதிகபட்ச ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கும்.

கன்வல்சென்ஸ் ஹாஸ்பிடல் கேஷ்

தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளுக்கான கூடுதல் ஹாஸ்பிடல் கேஷ் தொகை, கன்வல்சென்ஸ் கேஷ் பலனாக வழங்கப்படும்.

குழந்தை பிறப்புக்கான ஹாஸ்பிடல் கேஷ்

இந்த பாலிசி எடுத்ததில் இருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் முடிந்த பிறகு, காப்பீடு செய்த பெண் தனது பிரசவத்திற்காக தினசரி ஹாஸ்பிடல் கேஷ் பலனைப் பெறத் தகுதி பெறுவார்.

உலகளாவிய ஹாஸ்பிடல் கேஷ்

இந்தியாவிற்கு வெளியே நோய் அல்லது காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு தினசரி ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வழங்கப்படுகிறது.

டே கேர் நடைமுறைகள்

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளும் பராமரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ஐந்து முறை வரை காப்பீடு செய்யப்படும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இன்று மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகளாலும், காற்றினாலும் நீரின் மூலமும் பரவும் நோய்த்தொற்றுகள், ஒரு நபரின் முழு மாதாந்திர சேமிப்பையும் எளிதில் கரைத்துவிடும். உங்கள் மருத்துவமனை செலவை ஈடுகட்ட நீங்கள் வழக்கமான மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பல இதர செலவுகளையும் தவிர்க்க முடியாத செலவுகளையும் சந்திக்க நேரிடும்.

 

அப்படியொரு சூழலில், ஒரு ஹாபிஸ்டல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி சில நிவாரணங்களை வழங்க முடியும். மேலும் இந்த பாலிசியின் சிறந்த அம்சங்களில் ஒன்று, சிறிய விஷயங்கள் கூட உங்களுக்காகக் காப்பீடு செய்யப்படும். இந்த திட்டம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்கள் அன்றாட தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும். ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியானது, உங்களுடைய தற்போதைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் கூடுதலாக ஒரு பயனளிக்கும் திட்டமாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு வழங்க உதவும். நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் பல்வேறு செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படலாம். தவிர, இந்த பாலிசியானது, பெட்ரோல் செலவு, நோயாளரை பார்த்து கொள்பவர்களுக்கான உணவு போன்ற வேறு செலவினங்களை ஈடுசெய்யவும் பயனளிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியின் கவரேஜ் ஒரு நாளைக்கு ரூ.1000 என்றால், காப்பீட்டாளர் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ரூ.1000 வழங்க வேண்டும். அந்த தொகையை எப்படி செலவிட வேண்டும் என்ற முடிவு உங்களுடையது.

 

உங்களின் தற்போதைய ஹெல்த் மெடிக்கல் பாலிசியின் கூடுதல் அம்சமாகவும் இவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதற்கு நீங்கள் தினசரி கேஷ் லிமிட் மற்றும் பாலிசியின் படி நாட்களின் எண்ணிக்கையை தேர்வு செய்ய வேண்டும்.

 

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவருக்கு அவர் மருத்துவமனையில் இருக்கும் காலக்கட்டத்தில் தினமும் கேஷ் வழங்குகிறது. இந்த பாலிசியானது, ஸ்டார் ஹெல்த் வழங்கும் அனைத்து ஹெல்த் பிளான்களுக்கும் கூடுதல் உதவித் திட்டமாக இருக்கும்.

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள்

 

தகுதி

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் வாங்கலாம். இது உங்கள் மனைவி மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது உள்ள உங்களை சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் கவராகும்.

 

கவர் வகை

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில், ஒரு அடிப்படை பிளான் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் என்று இரண்டு பிளான்ஸ் கிடைக்கின்றன. இந்த இரண்டு பிளான்களின் கீழ்,  பாலிசிதாரர் ஒவ்வொரு நாளுக்கான ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் கலவையைத் தேர்வு செய்யலாம். கீழே உள்ள அட்டவணை, ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகிய ஆப்ஷன்களை விளக்குகிறது.

பிளான் வகைஹாஸ்பிடல் கேஷ் தொகைஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை
அடிப்படை பிளான்ரூ. 1000, ரூ. 2000, ரூ. 300030/60/90/120/180 நாட்கள்
மேம்படுத்தப்பட்ட பிளான்ரூ. 3000, ரூ. 4000, ரூ. 500090/120/180 நாட்கள்

 

பாலிசி காலம்

1 வருடம் / 2 ஆண்டுகள் / 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும்

 

காத்திருப்பு காலங்கள்

பாலிசி தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட நோய்க்கு காப்பீடு கவராகாது. விபத்து ஏற்பட்டால் இதில் விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட நோய்கள்/ அறுவை சிகிச்சைகளுக்கான கவரேஜ் 24 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்கள் (அடிப்படைத் திட்டம்) மற்றும் 24 மாதங்கள் (மேம்படுத்தப்பட்ட திட்டம்) காத்திருப்பு காலத்திற்குப் பிறகு முன்பே இருக்கும் நோய்களுக்குக் காப்பீடு வழங்கப்படும்.

 

போர்ட்டபிலிட்டி

போர்ட்டபிலிட்டி குறித்த IRDAI வழிகாட்டுதல்களின்படி, காப்பீடு எடுத்தவர் முழு பாலிசியையும் போர்ட் செய்ய, காப்பீட்டாளரிடம் விண்ணப்பிப்பதன் மூலம் மற்றொரு காப்பீடு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்ற ஏற்பாடு செய்ய முடியும். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் புதுப்பித்தல் தேதிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்யலாம், ஆனால்  புதுப்பித்தல் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்ய முடியாது.

 

ஃப்ரீ லுக் பீரியட்

பாலிசியின் டெர்ம்ஸ் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்வதற்கு, பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஃப்ரீ லுக் பீரியட் உள்ளது. காப்பீடு செய்தவர் பாலிசியில் திருப்தி அடையவில்லை என்றால், குறிப்பிட்ட காலத்திற்குள் பாலிசியை ரத்து செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. இருப்பினும், பாலிசி புதுப்பிப்புகளுக்கு இந்த அம்சம் பொருந்தாது.

 

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியில் (அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டம்) என்ன கவர் செய்யப்படுகிறது?

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவர் தேர்ந்தெடுத்த அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, தினசரி பணப் பலன்களை வழங்கும். பாலிசியின் விதிமுறைகளின்படி பின்வருவனவற்றிற்கு ஏற்படும் செலவுகளை இந்த பிளான் ஈடு செய்யும்.

 

  • உடல்நலமின்மைக்கான ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கான ஹாஸ்பிடல் தொகை (ஒரு நாளைக்கு). இது அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பொருந்தும்.

 

  • ஆக்சிடன்ட் ஹாஸ்பிடல் கேஷ் - காப்பீடு எடுத்தவர் தேர்ந்தெடுத்த அதிகபட்ச நாட்களுக்கு, ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 150% கிடைக்கும்.

 

  • ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% கிடைக்கும். பாலிசி தனிநபர் அடிப்படையில் வழங்கப்பட்டால், பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு மட்டுமே ICU ஹாஸ்பிடல் கேஷ் செலுத்தப்படும். ஃப்ளோட்டர் அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டால், பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மட்டுமே ICU ஹாஸ்பிடல் கேஷ் செலுத்தப்படும்.

 

  • கன்வல்சென்ஸ் ஹாஸ்பிடல் கேஷ் - தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளுக்கான கூடுதல் ஹாஸ்பிடல் கேஷ் தொகை, கன்வல்சென்ஸ் கேஷ் பலனாக வழங்கப்படும். எனினும், அடிப்படை திட்டத்திற்கு இது பொருந்தாது.

 

  • சைல்டு பர்த் ஹாஸ்பிடல் கேஷ் - ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் பாலிசியின் தொடக்கத்திலிருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலத்திற்கு பிறகு இதன் பலன்கள் பொருந்தும். பெண் பாலிசிதாரர்கள் மட்டுமே இந்த நன்மைக்கு தகுதியுடையவர்கள். இது அடிப்படை திட்டத்திற்கு பொருந்தாது.

 

  • வேர்ல்டுவைட் ஹாஸ்பிடல் கேஷ் - பாலிசிதாரர் இந்தியாவிற்கு வெளியே நோய் அல்லது காயத்தின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்ந்தெடுத்த 200% ஹாஸ்பிடல் கேஷ் தொகை (ஒரு நாளைக்கு) 200% செலுத்தப்படும். எனினும், அடிப்படை திட்டத்துக்கு இது பொருந்தாது.

 

  • டேகேர் நடைமுறைகள் - எலும்பு முறிவுகள் (ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் தவிர), கண்புரை, D&C, ஹீமோடையாலிசிஸ், பேரன்டெரல் கீமோதெரபி, ரேடியோ தெரபி, கரோனரி ஆஞ்சியோகிராபி, லித்தோட்ரிப்சி, ஜென்ரல் அனஸ்தீசியா கொடுத்து மேற்கொள்ளும் முதுகெலும்பு டிஸ்லொகேட் சிகிச்சை. மேலே குறிப்பிட்டுள்ள 1, 2, 3 மற்றும் 6 ஆகியவை இந்த டேகேர் சிகிச்சைகளுக்குப் பொருந்தும். காப்பீடு செய்த நபர், பாலிசி ஆண்டில் ஐந்து முறை மட்டுமே இந்த டேகேர் சிகிச்சைகள் தொடர்பான க்ளைம்களுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸிலிருந்து ஹாஸ்பிடல் கேஷ் ஹெல்த் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கான க்ளைமை எவ்வாறு பதிவு செய்வது?

ஸ்டார் ஹெல்த் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் இல்லாத க்ளைம் செட்டில்மென்ட்டை வழங்குகிறது. ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் திட்டத்தில் செலவுத்தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.

FAQ's