மருத்துவப் பரிசோதனை தொகுப்புகள்

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

 

 

வீட்டிலேயே பெறும் மருத்துவப் பரிசோதனை


பாலிசிதாரர்கள் உடல்நலப் பரிசோதனைப் பலனைப் பெறுவதற்காக "வீட்டிற்கு சென்று சேகரிக்கும் வசதி"யை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம். அவர்கள் தங்கள் மருத்துவ காப்பீட்டின் கீழ் உள்ள தகுதியான தொகையின் அளவிற்கு உடல்நலப் பரிசோதனை பேக்கேஜ்களைப் பெறலாம். இந்த வசதியின் கீழ் 15 பேக்கேஜ்கள் உள்ளன. ஒவ்வொரு பேக்கேஜூம் வெவ்வேறு சோதனை வகைகளை உள்ளடக்கியுள்ளது. நோயியல் சோதனை பேக்கேஜ்களை (12 சோதனைகளை கொண்டவை) காப்பீடு செய்தவரின் வீட்டிலேயே பெறலாம், மற்றும் மீதமுள்ள பேக்கேஜ்கள் ஒப்பந்தத்திலுள்ள நோய் கண்டறிதல் மையங்களில் பெறலாம். வீட்டில் சேகரிக்கும் பணியை எங்கள் சேவை வழங்குநர்கள் மேற்கொள்வார்கள். அவர்களின் தொடர்பு விவரங்கள் எங்கள் இணையதளத்தில் கிடைக்கும்.

 

இது எவ்வாறு செயல்படுகிறது (செயல்முறை ஓட்டம்):

 

  • பாலிசிதாரர் எங்கள் இலவச தொலைபேசி எண்: 1800 102 4477 - க்கு தொடர்பு கொண்டு அவரது தகுதியை அறியலாம் மற்றும் உடல்நலப் பரிசோதனை பேக்கேஜை பதிவு செய்யலாம்.
  • சரிபார்த்தல் மற்றும் முன்பதிவு செயல்முறை முடிந்ததும், எங்கள் சேவை வழங்குநர் பாலிசிதாரரை தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்டை உறுதிப்படுத்துவார்
  • சேவை வழங்குநர் காப்பீடு செய்தவரின் வீடுகளுக்கு சென்று மாதிரிகளை சேகரிப்பார்.
  • காப்பீடு செய்தவருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கைகள் அனுப்பப்படும்.

 

அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பற்றியும் சேவை வழங்குநர் அறிவுறுத்துவார். தகுதியுள்ள அனைத்து பாலிசிதாரர்களும் 19 ஆகஸ்ட் 2019 முதல் இந்த வசதியைப் பெறலாம்.