காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைஇந்த பாலிசிக்கு காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பாதகமான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் ECG, சாப்பிடுவதற்கு முந்தைய சோதனை மற்றும் உணவுக்குப் பிறகான சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால் விவரம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். |
நுழைவு வயதுஇந்தியாவில் வசிக்கும் 6 மாதங்கள் முதல் 70 வயது வரை உள்ள எவரும், விடுமுறை அல்லது வணிகப் பயணத்திற்காக இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்தால், இந்த பாலிசியைப் பயன்படுத்தலாம். |
பிளான் ஆப்ஷன்ஸ்இந்த பாலிசியானது அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட உலகளாவிய பயணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. |
பயண நாட்கள்இந்த பாலிசியானது 30 நாட்கள் மற்றும் 45 நாட்கள் ஆகிய இரண்டு பயண நாட்கள் தேர்வுகளின் கீழ் காப்பீட்டை வழங்குகிறது. |
மருத்துவ அவசரநிலைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றுதல்மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காப்பீடு செய்த நபரின் மருத்துவ அவசர நிலை காரணமாக, வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது. இது போக்குவரத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகளையும் கவர் செய்கிறது. |
பயண நீட்டிப்புக்கான கவரேஜ்காப்பீடு செய்த நபர் பாலிசியின் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்தால், பாலிசியின் காலாவதி தேதியிலிருந்து 30 அல்லது 45 நாட்களுக்குள் பயணம் முடியும் வரை அல்லது காப்பீடு செய்த நபர் இந்தியா திரும்பும் வரை பாலிசி தானாகவே நீட்டிக்கப்படும். |
பற்களுக்கான அவசரநிலை கவரேஜ்இந்த பாலிசியானது, பயணத்தின் போது காயத்தால் ஏற்படும் பல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் வீரியமிக்க மயக்க மருந்து சிகிச்சைக்கான செலவுகளுக்கு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு வழங்குகிறது. |
பயண சிரமங்களுக்கான கவரேஜ்விமானம் தாமதம், பயணத்தை ரத்து செய்தல், பாஸ்போர்ட் இழப்பு, செக்-இன் பேக்கேஜ் இழப்பு அல்லது தாமதம், தவறவிட்ட விமானம்/இணைப்பு விமானம் மற்றும் விமான கடத்தலால் ஏற்படும் துயரம் போன்ற பயணச் சிரமங்களால் ஏற்படும் இழப்பை இந்த பாலிசி கவர் செய்கிறது. |
பாஸ்போர்ட் இழப்புபயணத்தின் போது காப்பீடு செய்த நபர் தனது பாஸ்போர்ட்டை இழக்கும் பட்சத்தில், புதிய பாஸ்போர்ட் அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களைப் பெறுவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
விமானம் கடத்தப்பட்டதால் நேரும் துயரம்காப்பீடு செய்த நபர் பயணிக்கும் பொது விமானம் கடத்தப்பட்டு, பயணத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் தடங்கல் அல்லது இடையூறு ஏற்பட்டால், குறிப்பிட்ட வரம்புகளின்படி ஒவ்வொரு நாளும் தாமதத்திற்கு சமமான இந்திய ரூபாயை நிறுவனம் செலுத்தும். |
லக்கேஜ் தாமதம்பயணத்தின் போது காப்பீடு செய்த நபரின் செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ், 12 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை தாமதத்திற்கான இழப்பீட்டை நிறுவனம் செலுத்தும் |
லக்கேஜ் இழப்புக்கான கவரேஜ்செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ் (காப்பீடு செய்யப்பட்ட நபருடையது) விமான நிறுவனத்தால் தொலைந்து விட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு செய்த நபருக்கு ஏற்படும் இழப்பு கவர் செய்யப்படும் |
விமான தாமதம்காப்பீடு செய்த நபரின் விமானம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டால், குறிப்பிட்ட வரம்புகள் வரை தங்குமிடம், பயணம் மற்றும் பிற நியாயமான கூடுதல் செலவுகளுக்கு கவர் செய்யப்படும். |
பயணத்தை ரத்து செய்தல்/இடர்பாடுவிபத்து காரணமாக காப்பீடு செய்தவருக்கு உடல் காயங்களோ அல்லது இறக்க நேரிட்டாலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ குறிப்பிட்ட தொகை வரை இழப்பீடு வழங்கும். |
விமானம்/இணைப்பு விமானத்தை தவறவிடுதல்குறிப்பிட்ட காரணங்களால் காப்பீடு செய்த நபர் தான் முன்பதிவு செய்த விமானத்தையோ அல்லது இணைப்பு விமானத்தையோ தவறவிட்டால், தங்குமிடம் மற்றும் பயணத்தில் ஏற்படும் நியாயமான கூடுதல் செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஈடுசெய்யும். |
தனிப்பட்ட பொறுப்புக்கான கவரேஜ்காப்பீடு செய்தவர் மூலம் வேறொரு நபருக்கு ஏற்படும் நோய்/காயம் (உயிரிழந்தாலும் அல்லது உயிர் பிழைத்தாலும்) அல்லது காப்பீட்டுக் காலத்தில் அவரது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால், காப்பீட்டு நிறுவனம் அவர் சட்டப்படி செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளுக்கும் இழப்பீடு வழங்கும். |
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்விபத்து காரணமாக காப்பீடு செய்த நபர் இறந்தாலோ அல்லது செயலிழந்தாலோ, குறிப்பிட்ட வரம்புகள் வரை அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ காப்பீட்டு நிறுவனம் மொத்தத் தொகையை வழங்கும். |
இறந்தவர்களின் உடலை கொண்டுச் செல்லும் போக்குவரத்துவெளிநாட்டில் காப்பீடு செய்த நபர் இறக்க நேரிட்டால், அவரது உடலை எடுத்துச் செல்வதற்கான செல்வதை இந்த பாலிசி கவர் செய்கிறது அல்லது அவர் இறந்த நாட்டிலேயே அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு சமமான தொகையை ஈடுசெய்கிறது. |
மாற்று ஊழியருக்கான கவரேஜ்காப்பீடு செய்த ஊழியர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயமடைந்தாலோ, அவருக்கு பதிலாக ஒரு மாற்று ஊழியரை அனுப்புவதில் ஏற்படும் பயணச் செலவுகளுக்கு இந்தக் பாலிசி காப்பீடு வழங்குகிறது. |
விலக்குகள்இந்த பாலிசி விலக்குகளுக்கு உட்பட்டது. ஒவ்வொரு க்ளைம் போதும் நிறுவனம் பெறுப்பேற்காத தொகையை இது குறிக்கிறது. |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்