New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024

ஸ்டார் ஸ்டூடண்ட் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

India +91✓

IRDAI UIN: IRDA/NL-HLT/SHAI/P-T/V.I/142/13-14

HIGHLIGHTS

Plan Essentials

ஸ்டூடண்ட் பயணக் காப்பீடு

ஸ்டூடண்ட் பயணக் காப்பீடு

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான பிரத்யேக பாலிசி. பயணத்தின் போது அல்லது வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது ஏதேனும் மருத்துவ அவசரநிலைகள், பயண சிரமங்கள் மற்றும் படிப்பில் இடையூறு போன்ற காரணங்களால் ஏற்படும் செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.

கவரேஜ் விருப்பங்கள்

கவரேஜ் விருப்பங்கள்

இந்த பாலிசியில் USD 50,000/-, USD 100,000/- மற்றும் USD 250,000/- ஆகிய மூன்று காப்பீட்டுத் தொகை விருப்பங்கள் உள்ளன.

நுழைவு வயது

நுழைவு வயது

15 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபரும், படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல இந்த பாலிசியைப் பெறலாம்.

திட்ட விருப்பங்கள்

திட்ட விருப்பங்கள்

இந்த பாலிசியானது கோல்டு, சில்வர் மற்றும் ஸ்டாண்டர்டு ஆகிய மூன்று திட்ட விருப்பங்களின் கீழ் கிடைக்கிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவிற்குப் பயணம் செய்வதற்கும், அது தவிர உலகெங்கிலும் பயணம் செய்வதற்கும் தனித்தனியான கவரேஜ் வழங்குகிறது.

Detailed List

Understand what’s included

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி காலம்

இந்த பாலிசி 365 நாட்களுக்கு கவரேஜ் வழங்குகிறது. பாலிசி காலாவதியாகும் முன், காப்பீடு செய்த நபரின் வேண்டுகோளின் பேரில், ஒருமுறை மேலும் 365 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

பயண சிரமங்களுக்கான கவரேஜ்

விமான தாமதம், பயணத்தை ரத்து செய்தல், பாஸ்போர்ட் இழப்பு, செக்-இன் பேக்கேஜ் இழப்பு அல்லது தாமதம், தவறவிட்ட விமானம்/இணைப்பு விமானம் மற்றும் விமானம் கடத்தப்படுவதால் ஏற்படும் துயரம் போன்ற பயணச் சிரமங்களால் ஏற்படும் இழப்பை இந்த பாலிசி கவர் செய்கிறது.

அவசர மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு

இந்த பாலிசி காப்பீடு செய்த நபர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது மருத்துவ அவசர நிலைக்காக ஏற்படும் செலவுகளை கவர் செய்கிறது.

மருத்துவ அவசரநிலைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றுதல்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காப்பீடு செய்த நபரின் மருத்துவ அவசர நிலை காரணமாக, வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது. இது போக்குவரத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகளையும் கவர் செய்கிறது.

மருத்துவ அவசரநிலைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றுதல்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காப்பீடு செய்த நபரின் மருத்துவ அவசர நிலை காரணமாக, வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது. இது போக்குவரத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகளையும் கவர் செய்கிறது.

பற்களுக்கான அவசரநிலை கவரேஜ்

இந்த பாலிசியானது, பயணத்தின் போது காயத்தால் ஏற்படும் பல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் வீரியமிக்க மயக்க மருந்து சிகிச்சைக்கான செலவுகளை கவர் செய்கிறது.

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

விபத்து காரணமாக காப்பீடு செய்த நபர் இறந்தாலோ அல்லது செயலிழந்தாலோ, குறிப்பிட்ட வரம்புகள் வரை அவருக்கோ அல்லது அவருடைய சட்டப் பிரதிநிதிகளுக்கோ காப்பிட்டு நிறுவனம் மொத்தத் தொகையை வழங்கும்.

லக்கேஜ் இழப்புக்கான கவரேஜ்

செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ் (காப்பீடு செய்யப்பட்ட நபருடையது) ஒரு விமான நிறுவனத்தால் அல்லது விமானத்தால் தொலைந்து விட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு செய்த நபருக்கு ஏற்படும் இழப்பை நிறுவனம் கவர் செய்யும்.

பாஸ்போர்ட் இழப்பு

பயணத்தின் போது காப்பீடு செய்த நபர் தனது பாஸ்போர்ட்டை இழக்கும் பட்சத்தில், புதிய பாஸ்போர்ட் அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களைப் பெறுவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும்.

தனிப்பட்ட பொறுப்புக்கான கவரேஜ்

காப்பீடு செய்தவர் மூலம் வேறொரு நபருக்கு ஏற்படும் நோய்/காயம் (உயிரிழந்தாலும் அல்லது உயிர் பிழைத்தாலும்) அல்லது காப்பீட்டுக் காலத்தில் அவரது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால், காப்பீட்டு நிறுவனம் அவர் சட்டப்படி செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளுக்கும் இழப்பீடு வழங்கும்.

ஜாமீன் பத்திரம்

முன்மொழிவுப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் காவல்துறை அல்லது அதிகாரிகள் காப்பீடு செய்த நபரை தவறாகக் கைது செய்தாலோ அல்லது தவறாகக் காவலில் வைத்தாலோ, காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகையை ஜாமீன் பத்திரத்தின் கட்டணத்துக்கு ஏற்ப செலுத்தும்.

கம்பாஷ்னேட் பயணம்

காப்பீடு செய்த நபர் தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தால், உடனடியாக குடும்ப உறுப்பினர் ஒருவர் விமானம்/ரயில் மூலம் செல்ல ஏற்படும் செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஈடு செய்யும்.

உடல்நலப் பிரச்சனைகளால் படிப்பு தடைபடுதல்

காயம், நோய் அல்லது குணப்படுத்தவே முடியாத நோய் காரணமாக, காப்பீடு செய்தவர் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதனால் படிப்பை நிறுத்தினால், காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே செலுத்திய கல்விக் கட்டணத்தை கவர் செய்யும்.

குடும்பத்தின் அவசரநிலை காரணமாக படிப்பு தடைபடுதல்

பாலிசி காலத்தில், குடும்ப உறுப்பினரோ அல்லது ஸ்பான்சரோ விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்து, அதனால் காப்பீடு செய்த நபரின் படிப்பு தடைபட்டால், காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே செலுத்திய கல்விக் கட்டணத்தை கவர் செய்யும்.

ஸ்பான்சருக்கான பாதுகாப்பு

காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஸ்பான்சர் விபத்து காரணமாக இறக்க நேர்ந்தால், இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு, காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட வரம்புகள் வரை காப்பீடு செய்தவரின் மீதமுள்ள கல்விக் காலத்திற்கான கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும்.
Mobile Banner
Disclaimer:

The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in