பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

Health Insurance Plans Starts at Rs.44/day*

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

Verified By Star Health Doctors  

Verified By Star Health Doctors
Health & Wellness

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

முகவுரை

பெண்கள் அனுபவிக்கக்கூடிய அடிவயிற்று வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். அந்த வலி தொப்புளுக்கு கீழே ஏற்படக்கூடியது. சில நேரங்களில், அந்த வலி இடுப்பு உள்ள பகுதிக்கும் பரவக்கூடும். அடிவயிற்று வலி பல காரணங்களால் ஏற்படுவது உண்டு. அந்த காரணங்கள், பொதுவாக மாதவிடாய் முதல் குடல் கோளாறுகள் வரை என பல வகையை சேர்ந்தது ஆகும். அனைத்து வயது பெண்களுக்கும் அந்த வலியை அனுபவத்திருப்பார்கள். முக்கியமாக பூப்படைந்த பெண்கள் அதிகம் பாதிப்படைந்திருப்பார்கள்.  

இதனால், இந்த வலி பொதுவாக பிரச்சனையாக கருதினாலும் கூட, சில நேரங்களில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கூட, இந்த வலிக்கு காரணமாக இருக்கலாம்.

ஆகையால், கடுமையான வலி இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மனித உடலில் அடி வயிறு ஆனது, பல உள் உறுப்புகளை கொண்ட பகுதியாகும். அதனால் தான், வயிற்று வலி பல உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய உடல் பிரச்சனையாக இருக்கக் கூடும். எனவே, அதை பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது சிறந்ததாகும். 

 

அடிவயிற்றில் ஏற்படும் வலி

சில நேரங்களில் இந்த அடிவயிற்று வலியானது முதுகு வரை பரவக்கூடும். மேலும், அதனால் தலைவலி, குமட்டல், மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகலாம். குறிப்பாக பெண்களின் அடிவயிற்றில் குடல் மற்றும் கருப்பை ஆகிய முக்கிய உறுப்புகள் இருப்பதால், வலி ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்வது அவசியம் ஆகும். 

இதையும் படிக்கவும்: வயிற்று வலியின் வகைகள்

1. சிறுநீர் பாதை தொற்று (UTI)

நமது சிறுநீரக பாதை பொதுவாக நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் வகையில் வடிவத்தைக் கொண்டுள்ளது. எனினும், சில நேரங்களில், சிறுநீரகத்திற்குள் சில பாக்டீரியாக்கள் நுழைந்து சென்று நோய் தொற்றினை ஏற்படுத்தலாம்.

இக்கிருமிகள் சுலபமாக தொற்று நோயினை ஏற்படுத்தி ஒருவரின் அடிவயிற்றில் வலியை உண்டாக்கும். தொற்று குறைவாக இருக்கும் நேரத்தில், தண்ணீர் எடுத்துக் கொண்டால், அவை தானாகவே சரியாக விடும்.

சில நேரங்களில் இது கடுமையாகவும் மாறக்கூடும். எனினும், சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய தேவையற்ற நிலையையும் உருவாக்கலாம்.

கடுமையான சிறுநீரகத் தொற்று என்பது அடிவயிற்றின் இருபுறமும் பொதுவாக நாள்பட்ட வலிக்கு வழிவகுக்கிறது.

யுடிஐ(UTI) ஐ கீழ்கண்ட வகைகளில் கட்டுப்படுத்தலாம் மற்றும் தடுக்கலாம் :

1. தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ளுவது.

2. குருதிநெல்லி சாறு குடிப்பது (முடிவான ஆய்வு இல்லை என்றாலும், பல பெண்கள் இதைப் பரிந்துரைத்தனர்). 

3.டியோடரண்டுகள், பவுடர்கள் போன்ற தோல் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

2. இடுப்பு அழற்சி நோய்

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் தொற்று காரணமாக இடுப்பு அழற்சி நோய் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருந்து கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களுக்கு, பாலியல் ரீதியாக பரவும் பாக்டீரியாக்களே இதற்கு காரணம் ஆகும்.  

லேசான தொற்று எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே அதிகமானால், அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான வலி ஏற்படலாம். தீவிரமடைவதற்கு முன், மருத்துவரை அணுகுவது நல்லது.

3. கீழ் இடது வயிற்றில் வலி

சிலருக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் தொடர்ந்து வலி ஏற்படும். அடிவயிற்றின் இடது புறத்தில் பெருங்குடல் மற்றும் கருப்பை உள்ளது. பெரும்பாலும், செரிமான பிரச்சனைகள் அடிவயிற்றின் கீழ் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், அடிவயிற்று வலிக்கு மேலும் சில விசித்திரமான காரணங்கள் இருக்கலாம்.

4. வாயு (வாய்வு)

தற்செயலாக அதிகப்படியான காற்றை விழுங்கும் போது, அது அடிவயிற்றின் கீழ் இடது பக்கத்தை வந்தடையும். மேலும், செரிமான செயல்பாட்டின் போது, குடல் பாக்டீரியாவானது உணவை உடைக்கும்போது, ஒரு துணை உற்பத்தியாக வாயு வெளியிடப்படுகிறது. வாயுவை உருவாக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது வாயுவும் சேரும்.

சிறிய அளவு வாயு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. இருப்பினும், வரம்பினை மீறும் போது, வயிற்றின் இடது பக்கத்தில் சில விரும்பத்தகாத வலியை  உணரலாம்.

5. டைவர்டிகுலர் நோய்

பெருங்குடல் சுவரில் ஏற்படும் சிறிய வீக்கம் டைவர்டிகுலர் நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டிகள், வளரும் போது, வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இது வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

நீண்ட காலமாக அடிவயிற்று வலி மற்றும் மலத்தில் இரத்தம் அல்லது மலத்தின் நிறத்தில் வித்தியாசத்தினை கண்டால், நீங்கள் மருத்துவரிடம் அணுக வேண்டியது அவசியம்.

இதையும் படிக்கவும்: வயிற்று வலி என்றால் என்ன?

 

அடிவயிற்று வலியினை ஏற்படுத்தும் வேறு சில காரணங்கள்:

தசை வலி

சில சமயங்களில் வயிற்று வலி, வயிற்று தசைகள் அழுத்தப்படுவதால் ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் வயிற்று தசைகள் இருக்கமடைந்து இதுபோன்ற வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்ப வலி

கர்ப்ப காலம் என்பது எல்லா பெண்களுக்கும் மறக்க முடியாத ஒரு அழகான நிகழ்வு ஆகும். அந்நேரத்தில், பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் போது அடிவயிற்றில், அவ்வப்போது வலி ஏற்படும்.

ஒரு பெண்ணின் வயிற்று தசைகள் பிரசவத்திற்காக கர்ப்பத்தின் பிற்பகுதியில், தங்களை சரிப்படுத்திக் கொள்கின்றன. இது தசைகளை அழுத்தவும் மற்றும் சுருங்கவும் செய்கிறது. அதனால் வலி ஏற்படுகிறது

பெரும்பாலான நேரங்களில், இது தீவிரமானதாக இருக்காது. ஆனால், கடுமையான வலி அல்லது பிறப்புறுப்பில் திரவ வெளியேறுவது/இரத்தப்போக்கு போன்றவற்றை உணர்ந்தால், விரைவில் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

இடம் மாறிய கர்ப்பம்

பெண்ணின் கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உள்ள உறுப்புகளில் நிலைபடுவது, எக்டோபிக் கர்ப்பம் எனப்படும். பெரும்பாலும், முட்டை ஃபலோபியன் குழாய்களில் நிலைப்படும்.  

அத்தகைய சூழ்நிலையில் முட்டை ஒரு குழந்தையாக உருவாகாது. 

ஆனால் அது உருவாகினால், அது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இது பெண்ணின் அடிவயிற்றுப் பகுதியில், லேசான முதல் நாள்பட்ட வலியை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், விரைவில் ஒரு மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையைப் பெறுவது மிகவும் நல்லது.

 

முடிவுரை 

பொதுவாக, பெண்களுக்கு வயிற்று வலி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எதனால் அடி வயிற்றில் வலி ஏற்படுகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.  

பெரும்பாலான காரணங்களை எளிய வீட்டு வைத்தியம் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை மூலம் சமாளிக்க முடியும். வலி கடுமையாகும் போது, மருத்துவ உதவி தேவைப்படும். எனவே, வலியின் தன்மையை தெரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். நீடித்த வயிற்று வலியாக இருப்பின், உடனே மருத்துவரை தொடர்பு கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது ஆகும்.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.