பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவ தேவைகளுக்கான பிரத்யேக பாலிசி.
இடைக்கால சேர்க்கை
கூடுதல் பிரீமியத்துடன், புதிதாக திருமணம் செய்த மனைவி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும்/அல்லது சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பாலிசியில் சேர்க்கலாம். புதியவர்களுக்கு அவர்கள் சேர்ந்த தேதி முதல் இன்சூரன்ஸின் காத்திருப்பு காலம் தொடங்கும்
மகப்பேறு நன்மைகள்
சாதாரண மற்றும் சிசேரியன் பிரிவு உட்பட (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய) செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை.
கருத்தரிப்பு சிகிச்சைக்கான உதவி
நிரூபிக்கப்பட்ட செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் ரூ. 2,50,000/- மற்றும் ரூ. 5,00,000/- வரை கவர் செய்யப்படும். இது மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பும், பின்பும் ஆகும் செலவுகளையும் உள்ளடக்கியது.
புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கான செலவுகள்
புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளுடன் 12 மாதங்கள் வரையிலான தடுப்பூசிக்கான செலவுகளும் கவர் செய்யப்படும்.
குழந்தை பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு (கர்ப்ப கால பராமரிப்பு)
இந்த பாலிசியானது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு, குறிப்பிட்ட வரம்புகள் வரை பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சை எடுக்கும் செலவுகளை உள்ளடக்குகிறது.
உங்கள் விருப்ப பாலிசி (புற்றுநோயைக் கண்டறிவதற்கான மொத்த செலவு)
இந்த பாலிசியானது புற்றுநோய் பாதிப்பை முதல் முறையாக கண்டறிவதற்கான மருத்துவ செலவை மொத்தமாக ஒரே தவணையில் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டு வழங்குகிறது.
DETAILED LIST
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
பாலிசி டெர்ம்
இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை
இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் 12வது மற்றும் 20வது வாரத்தில் ஸ்டார் ஹெல்த்தின் குறிப்பிட்ட ஸ்கேன் மையங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஸ்கேன் செலவுகளை காப்பீடு செய்தவர் ஏற்க வேண்டும்.
தனிப்பட்ட நபரின் நுழைவு வயது
18 முதல் 75 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இந்த பாலிசியை தனிநபர் காப்பீட்டுத் தொகையாகப் பெற முடியும்.
ஃப்ளோட்டர் நுழைவு வயது
ஃப்ளோட்டர் காப்பீட்டுத் தொகையைப் பெற, ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு பெண் 18 முதல் 75 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பாலிசி மூலம், 91 நாட்கள் ஆன குழந்தை முதல் 25 வயது வரையிலான மூன்று பிள்ளைகளுக்கு மட்டுமே கவர் செய்ய முடியும். இந்த பாலிசியின் கீழ், காப்பீடு செய்தவரின் மகள் திருமணமாகாத மற்றும்/அல்லது வேலையில்லாமல் இருந்தால், அதிகபட்சம் 30 வயது வரை காப்பீடு பெறலாம்.
காப்பீட்டுத் தொகை
இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகை ஆப்ஷன்ஸ் ரூ.5,00,000/-, ரூ.10,00,000/-, ரூ.15,00,000/-, ரூ.20,00,000/-, ரூ.25,00,000/-, ரூ. 50,00,000/- மற்றும் ரூ.1,00,00,000/-.
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்
நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு
உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் காப்பீடு செய்யப்படும்.
அறை வாடகை
ரூ.5 லட்சம் காப்பீடு எடுத்தவர், உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மருத்துவமனை செலவுகள் அவரது மொத்த இன்சூரன்ஸ் தொகையில் இருந்து தினமும் 1% வரை கவர் செய்யப்படும். ரூ.10/15/25 லட்சங்களுக்கு காப்பீடு எடுத்தவர்கள், சூட் அறைகள் தவிர மற்ற அறைகளுக்கான செலவுகள் கவர் ஆகும். ரூ.50/100 லட்சங்களுக்கு காப்பீடு எடுத்தவர்களுக்கு அனைத்துவித அறைகளும் பொருந்தும்.
சாலை வழி ஆம்புலன்ஸ்
இந்த பாலிசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாறுதல் மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவதற்கான கட்டணம் ஆகியவை கவராகும்.
ஏர் ஆம்புலன்ஸ்
ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை கவர் செய்யப்படும்.
நவீன சிகிச்சை
வாய்வழியாக செய்யப்படும் கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை.
ஆயுஷ் சிகிச்சை
ஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகை உள்ள வரை செலுத்தப்படும்.
டே கேர் நடைமுறைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள்ளாகவே மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவுகளும் இதில் கவர் செய்யப்படும்.
ஸ்டார் மதர் கவர்
காப்பீடு செய்யப்பட்ட நபர் 12 வயதுக்குட்பட்டவராக இருந்து, அவர் ICUவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அவரது தாயார் ஒரு தனி ஏசி அறையில் தங்குவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும்.
அறை பகிர்ந்து தங்கியிருத்தல்
காப்பீடு செய்த நபர் பலரும் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை பயன்படுத்தி இருந்தாலும், அதன் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும்.
மறுவாழ்வு & வலி மேலாண்மை
மறுவாழ்வு சேவை மற்றும் முழுமையான உடல் சிகிச்சைக்கான செலவினங்கள் குறிப்பிட்ட வரம்பு வரை அல்லது காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 10% வரை கவர் செய்யப்படும். காப்பீடுக்கான வருடங்களை பொறுத்து எந்த தொகை குறைவாக உள்ளதோ அது கவர் செய்யப்படும்.
உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள்
பாலிசிதாரர் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில், அதன் சிகிச்சை செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதலாக, உறுப்பு தானம் அளிப்பவரின் அறுவை சிகிச்சை மற்றும் இக்கட்டான நேரத்தில் அவரை ஐசியு-வில் அனுமதிக்க நேர்ந்தாலோ அதன் செலவுகளும் கவர் செய்யப்படும்.
யூட்ரோ ஃபீட்டல் சர்ஜரி
கருப்பையில் உள்ள கருவின் குறைபாடுகளை களையும் அறுவை சிகிச்சைகள் மற்றம் அதன் நடைமுறைகளுக்கு ஆகும் செலவு, இன்சூரன்ஸ் தொகைக்கான காத்திருப்பு காலத்தில் கிடைக்கும். இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறவி நோய்/குறைபாடுகள் தொடர்பான சிகிச்சைக்கு காத்திருப்பு காலம் பொருந்தாது.
ஒப்புதலுடன் கூடிய கருத்தடைக்கான செலவுகள்
விருப்பத்துடன் செய்த கருத்தடைக்கான (டியூபெக்டமி / வாசெக்டமி) செலவுகள், காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, காப்பீடு செய்யப்பட்ட நபர் திருமணமாகி, 22 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருந்தால் வழங்கப்படும்.
விபத்து காரணமாக கருச்சிதைவு
பாலிசியின் வரம்புகளின்படி விபத்து காரணமாக ஏற்படும் கருச்சிதைவுக்கு, காத்திருப்பு காலத்திற்கு உட்பட்டு மொத்த பாலிசி தொகை வழங்கப்படுகிறது.
மருத்துவம் அல்லாத நுகர் பொருட்களுக்கான கவரேஜ்
பாலிசியின் கீழ் மருத்துவமனை சிகிச்சையின் செலவுகளுக்கான க்ளைம் இருக்கும் பட்சத்தில், மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளிநோயாளருக்கான ஆலோசனைகள்
ஒரு வெளிநோயாளராக மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்படும் செலவுகள், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.
பாதுகாப்பான உடல்நலப் பரிசோதனை
பாலிசி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் நலப் பரிசோதனைகளுக்கான செலவுகள், குறிப்பிட்ட வரம்புகள் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டிற்கும் வழங்கப்படும்.
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்
பாலிசி காலத்தில் காப்பீட்டுத் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தினால், காப்பீட்டுத் தொகையின் 100%, அதே பாலிசி ஆண்டில் ஒருமுறை மீட்டெடுக்கப்படும். இதனை அனைத்து க்ளைம்ஸ் மற்றும் அடுத்தடுத்த தருணங்களில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.
ஒட்டுமொத்த போனஸ்
காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது.
ஸ்டார் வெல்னஸ் திட்டம்
பல்வேறு ஆரோக்கியமான நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்த நபரின் நலமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற வெல்னஸ் போனஸ் புள்ளிகளை, பாலிசி புதுப்பித்தலின் போது தள்ளுபடி பெற பயன்படுத்தலாம்.
நீண்ட கால தள்ளுபடி
2வது வருட பிரீமியத்தில் 10% தள்ளுபடியும், 2வது மற்றும் 3வது வருட பிரீமியத்தில் இரண்டையும் சேர்த்து 11.25% தள்ளுபடி கிடைக்கும்.
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுக்கு 1 முறை, 2 ஆண்டுகளுக்கு 1 முறை, 3 ஆண்டுகளுக்கு 1 முறை என்றும் கூட செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
இந்த திட்டம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்த நபர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும், வெகுமதி புள்ளிகள் வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள், காப்பீடு செய்த நபருக்கு வெல்னஸ் வெகுமதி புள்ளிகளைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது. வெல்னஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்(கள்) பெற்ற புள்ளிகளை, பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வெல்னஸ் புரோகிராம், ஸ்டார் ஹெல்த் கஸ்டமர் மொபைல் செயலியான “ஸ்டார் பவர்” மூலமும், ஸ்டார் ஹெல்த் கஸ்டமர் போர்டல் (டிஜிட்டல் தளம்) மூலமாகவும் ஆன்லைனில் செயல்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்பு: கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் செயல்பாடுகள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு மட்டுமே பொருந்தும்.
வெல்னஸ் புரோகிராமின் போனஸ் புள்ளிகள் மூலம் பிரீமியம் புதுப்பித்தலின் போது கிடைக்கும் தள்ளுபடியை பின்வரும் அட்டவணை காட்டுகிறது:
தனிநபர், மனைவி மற்றும் குழந்தைகள் (18 வயதுக்கு மேல்)
2:2:1:1:1
குறிப்பு: இரண்டு வருட பாலிசியில், இரண்டு வருட காலத்தில் பெற்ற மொத்த வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டால் வகுக்கப்படும்.
*பிரீமியத்தின் தள்ளுபடி, வெயிட்டேஜ் மற்றும் இரண்டு வருட பாலிசியாக இருப்பின் அதன் கணக்கீடுகளை புரிந்து கொள்ள அட்டவணையை பார்க்கவும்.
வெல்னஸ் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வரிசை எண்
செயல்பாடு
பாலிசி ஆண்டில் ஒவ்வொரு பாலிசியின் கீழும் பெறக்கூடிய அதிகபட்ச வெல்னஸ் புள்ளிகள்
1.
ஆரோக்கியத்தை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க
a) ஆன்லைன் சுகாதார இடர் மதிப்பீடு (HRA)
50
b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு
200
2.
வெல்னஸ் செயல்பாடுகள் பட்டியல்
a) மாரத்தான் நடை, மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
b) ஹெல்த் கிளப்பில் உறுப்பினர் (1 வருடம் அல்லது அதற்கு மேல்)
100
3.
ஸ்டே ஆக்டிவ் - காப்பீடு செய்தவர் மொபைல் ஆப்-ல் நடை எண்ணிக்கை இலக்கை எட்டுதல்
200
4.
a) எடை மேலாண்மை திட்டம் (அதிக எடை / பருமன் கொண்ட காப்பீட்டாளர்களுக்கு)
100
b) ஸ்டார் வெல்னஸ் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்தவர் தனது மேம்பட்ட உடற்தகுதி வெற்றிக் கதையைப் பகிர்தல் (அதிக எடை அல்லது பருமனாக இல்லாத காப்பீட்டாளர்களுக்கு)
50
5.
a) நாள்பட்ட நோய்களை களையும் மேலாண்மை திட்டம் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள காப்பீட்டாளர்களுக்கு)
250
b) மன அழுத்தம் மற்றும் மன நிலையை சரி செய்யும் புரோகிராமை முடிக்கும் பட்சத்தில் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படாத காப்பீட்டாளர்களுக்கு)
125
கூடுதல் வெல்னஸ் சேவைகள்
6.
டெலி ஹெல்த் சேவைகள்:
7.
முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்
8.
டிஜிட்டல் ஹெல்த் வால்ட்
9.
வெல்னஸ் கன்டென்ட்
10.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
11.
வெல்னஸ் குழு அளிக்கும் தள்ளுபடிகள்
1. ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்:
a) சுகாதார இடர் மதிப்பீட்டை நிறைவு செய்தல் (HRA):
ஹெல்த் ரிஸ்க் அசெஸ்மென்ட் (எச்ஆர்ஏ) கேள்விகள் என்பது காப்பீடு செய்தவரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் கருவியாகும். இது காப்பீட்டாளர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை சுயபரிசோதனை செய்ய உதவுகிறது. காப்பீடு செய்தவர் www.starhealth.in என்ற இணையதளத்தில் தனது கணக்கில் உள்நுழைந்து HRA கேள்விகளை பூர்த்தி செய்யலாம். பாலிசி வருடத்திற்கு ஒருமுறை இதை மேற்கொள்ளலாம். ஆன்லைன் HRA கேள்விகளை முடித்தவுடன், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். குறிப்பு: HRA இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வெல்னஸ் புள்ளிகளைப் பெற, காப்பீடு செய்தவர் HRA செயல்பாட்டைத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் முழு HRAயையும் முடிக்க வேண்டும்.
b) முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீடு
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் நோய் கண்டறிதல் / தடுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம். இந்த சோதனைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்டாய சோதனைகள் இருக்க வேண்டும். காப்பீடு செய்தவரின் சொந்த செலவில் எந்த நோய் கண்டறியும் மையத்திலும் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட சோதனை அறிக்கைகளின் அனைத்து முடிவுகளும் சாதாரண வரம்பிற்குள் இருந்தால், காப்பீடு செய்தவர் 200 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏதேனும் ஒரு சோதனையின் முடிவு சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 150 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சோதனை முடிவுகள் சாதாரண வரம்பிற்குள் இல்லை என்றால், காப்பீடு செய்தவர் 100 வெல்னஸ் புள்ளிகளை மட்டுமே பெறுவார்.
குறிப்பு: இந்த டெஸ்ட் அறிக்கைகள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்.ஒன்றாகச் சமர்பிக்கப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கை இடர் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டாய சோதனைகளின் பட்டியல்
1. முழுமையான ஹீமோகிராம் சோதனை
2. இரத்த சர்க்கரை (உணவுக்கு முன் (FBS) + உணவுக்குப் பின் (PP) [அல்லது] HbA1c)
3. லிப்பிட் புரஃபைல் (மொத்த கொழுப்பு, HDL, LDL, ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம்)
4. சீரம் கிரியேட்டினின்
2. வெல்னஸ் நன்மைகள்:
கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உடல்தகுதி மற்றும் உடல்நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்வதற்காக காப்பீட்டாளர் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார். உடற்தகுதிக்கான முன்னெடுப்பு மற்றும் வெல்னஸ் புள்ளிகளின் பட்டியல்:
முன்னெடுப்பு
வெல்னஸ் புள்ளிகள்
a.
நடை மாரத்தான், மாரத்தான் ஓட்டம், மாரத்தான் சைக்கிள் போன்ற செயல்களில் பங்கேற்பது
100
- நிகழ்வில் பங்கேற்க எடுக்கப்பட்ட நுழைவுச் சீட்டின் விவரங்களுடன் BIB எண்ணைச் சமர்ப்பித்தல்.
b.
ஜிம் / யோகா மையம் / ஜூம்பா வகுப்புகள் / ஏரோபிக் உடற்பயிற்சி / விளையாட்டு கிளப் / பைலேட்ஸ் வகுப்புகள் / நீச்சல் / டாய் சி / தற்காப்பு கலை / ஜிம்னாஸ்டிக்ஸ் / நடன வகுப்புகள்
100
குறிப்பு: காப்பீடு செய்யப்பட்டவர் ஏதேனும் ஹெல்த் கிளப்பில் உறுப்பினராக இல்லாவிட்டால், பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அவர்/அவள் கிளப்பில் சேர வேண்டும். மேலும் காப்பீட்டாளர் ஹெல்த் கிளப் உறுப்பினர் நிலையை உறுதி செய்ய வேண்டும்.
3. ஸ்டே ஆக்டிவ்:
கீழே குறிப்பிட்டுள்ளபடி ஸ்டார் மொபைல் ஆப் படி, நடை எண்ணிக்கை இலக்கை எட்டுவதன் மூலம் காப்பீட்டாளர் வெல்னஸ் புள்ளிகளை பெறுவார்.
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியான நடை எண்ணிக்கை
வெல்னஸ் புள்ளிகள்
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 5000 மற்றும் 7999 க்கு இடையில் இருந்தால்
100
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை 8000 மற்றும் 9999 க்கு இடையில் இருந்தால்
150
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரி நடை எண்ணிக்கை இருக்க வேண்டியது - 10000 மற்றும் அதற்கு மேல்
200
குறிப்பு:
ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் முதல் மாதம் மற்றும் கடைசி மாதம் ஸ்டே ஆக்டிவ் என்பதன் கீழ் தினசரி மேற்கொள்ளப்படும் சராசரியான நடை எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது
இந்த பலனைப் பெற பாலிசி ரிஸ்க் தொடங்கும் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மொபைல் ஆப் பதிவிறக்கப்பட்டிருக்க வேண்டும்.
காப்பீட்டாளர் முடித்த சராசரி நடை எண்ணிக்கை, ஸ்டார் வெல்னஸ் மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும்.
4. எடை மேலாண்மை திட்டம்:
a) அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ள காப்பீட்டாளர்களுக்கு, எடையைக் குறைப்பதற்கும், பிஎம்ஐயை பராமரிப்பதற்கும் நிபுணர்கள் மூலம் அவர்களின் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) நிர்வகிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
எடை மேலாண்மை திட்டத்தை ஏற்கும் பட்சத்தில், காப்பீடு செய்தவர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
கீழே குறிப்பிட்டுள்ளபடி, காப்பீட்டாளர் தனது இலக்கை எட்டினால் கூடுதலாக 50 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
வரிசை எண்
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய மதிப்புகள்
ஆரோக்கியப் புள்ளிகளைப் பெறுவதற்கான அளவுகோல்கள்
1.
உடல் பருமன் (பிஎம்ஐ 29 க்கு மேல் இருந்தால்)
உயரம் மற்றும் எடை (பிஎம்ஐ கணக்கிட)
18 மற்றும் 29 க்கு இடையில் பிஎம்ஐ நிலையை எட்டுதல் மற்றும் அதனை தக்க வைத்தல்
2.
அதிக எடை (பிஎம்ஐ 25 முதல் 29 வரை இருந்தால்
உயரம் மற்றும் எடை (பிஎம்ஐ கணக்கிட)
பிஎம்ஐ-யில் இரண்டு புள்ளிகள் குறைத்து, பாலிசி ஆண்டில் அதே பிஎம்ஐயை தக்க வைத்தல்
மதிப்புகள் (பிஎம்ஐக்கு) ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் (ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் 5 முறை வரை)
b) காப்பீடு செய்தவர் அதிக எடை / பருமனாக இல்லாவிட்டால், அவர் எங்களின் ஸ்டார் வெல்னஸ் செயல்பாடுகள் மூலம் மேம்பட்ட அவரது உடற்தகுதிக்கான வெற்றிக் கதையை தெரிவிக்கலாம். ஸ்டார் வெல்னஸ் மூலம் ஃபிட்னஸ் வெற்றிக் கதையைச் சமர்ப்பித்தால், காப்பீட்டாளருக்கு 50 வெல்னஸ் புள்ளிகள் கிடைக்கும்.
5. நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மை திட்டம்:
a)இந்த திட்டம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள காப்பீட்டாளர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க/மேம்படுத்த, மருத்துவ நிபுணர்கள் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவும்.
நாள்பட்ட நோய்களுக்கான மேலாண்மைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீடு செய்யப்பட்டவர் 100 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
காப்பீடு செய்தவர் பாலிசி ஆண்டில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அதிகபட்சம் 3 முறை சோதனை முடிவு மதிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சோதனை முடிவின் மதிப்புகள், பாலிசி ஆண்டில் குறைந்தது 2 முறையாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளில் +/- 10% என்ற வரம்பிற்குள் இருந்தால், கூடுதலாக 150 வெல்னஸ் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்தப் டெஸ்ட் அறிக்கைகள் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாளிலிருந்து 1 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரிசை எண்
நோயின் பெயர்
சமர்ப்பிக்க வேண்டிய சோதனைகள்
கூடுதல் வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவதற்கான மதிப்புகளின் அளவுகோல்கள்
1.
நீரிழிவு நோய் (காப்பீட்டாளர் HbA1c சோதனை மதிப்பை சமர்ப்பிக்கலாம் (அல்லது) உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவு (FBS) வரம்பு மற்றும் உணவுக்குப் பிந்தைய சோதனை அளவு) HbA1c ≤ 6.5
HbA1c
≤ 6.5
உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவு (FBS) வரம்பு
100 முதல் 125 mg/d
உணவுக்குப் பிந்தைய சோதனை மதிப்பு
160 mg/dlக்குக் கீழே
2.
உயர் இரத்த அழுத்தம்
BP கருவி மூலம் அளவிடப்பட்ட சோதனை
சிஸ்டாலிக் வரம்பு - 110 முதல் 140 mmHg டயஸ்டாலிக் வரம்பு - 70 முதல் 90 mmHg
3.
கார்டியோவாஸ்குலர் நோய்
LDL கொழுப்பு
100 முதல் 159 mg/dl
மொத்த கொழுப்பு / HDL கொழுப்பு விகிதம் ≤ 4.0
≤ 4.0
4.
ஆஸ்துமா
PFT (நுரையீரல் செயல்பாடு சோதனை)
FEV1 (PFC) ஆனது 75% அல்லது அதற்கு மேற்பட்ட FEV1/ FVC ஆனது 70% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.
b) காப்பீட்டாளர் நாள்பட்ட நோய் நிலைகளால் (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் அல்லது ஆஸ்துமா) பாதிக்கப்படவில்லை என்றால், அவர் "டி-ஸ்ட்ரெஸ் & மைண்ட் பாடி ஹீலிங் திட்டத்தை" தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் காப்பீட்டாளருக்கு உள் (தானாக உருவாக்கப்பட்ட) மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் திறனை அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் மற்றும் மனதைக் குணப்படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், காப்பீட்டாளர் 50 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
மனஅழுத்தம் மற்றும் மனதை குணப்படுத்தும் புரோகிராம் முடிந்தவுடன், காப்பீடு செய்தவர் கூடுதலாக 75 வெல்னஸ் புள்ளிகளைப் பெறுவார்.
குறிப்பு: இது ஒரு 10 வார திட்டமாகும். இதனை காப்பீட்டாளர் எந்த இடைவெளியும் இல்லாமல் முடிக்க வேண்டும்.
6. டெலிஹெல்த் சேவைகள்:
டெலி-ஹெல்த் சேவை மூலம் இரண்டாவது மருத்துவ ஆலோசனை, மருத்துவ வழிகாட்டல் மற்றும் வெல்னஸ் கிடைக்கிறது. இது ஃபோன் மற்றும் மொபைலில் உள்ள ஆப்ஸ் மூலம் சாட், வாய்ஸ் மற்றும் வீடியோ வாயிலாக வழங்கப்படுகிறது. எங்கள் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு, டெலி-கன்சல்டேஷன் மூலம் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் தேவையிருப்பின் பின்தொடர வேண்டிய மருத்துவ ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்கிறது.
7. முன்கூட்டியே பணம் செலுத்தி பெறும் மருத்துவ சேவைகள்:
காப்பீடு செய்தவர் பின்வரும் சேவைகளைப் பெற ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்:- இதன் மூலம் அருகிலுள்ள ஆம்புலன்ஸ் / மருத்துவமனை / இரத்த வங்கி போன்ற அவசர உதவித் தகவலை பெறலாம்.
8. டிஜிட்டல் ஹெல்த் வால்ட்:
நம்பகமான பெறுநர்களுடன் சுகாதாரத் தரவுகளை சேமிக்க/அணுக மற்றும் பகிர்ந்துகொள்ள காப்பீட்டாளருக்கான பாதுகாப்பான தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலைப் பயன்படுத்தி, காப்பீடு செய்தவர்கள் தங்கள் சுகாதார ஆவணங்கள் (மருந்துகள், ஆய்வக அறிக்கைகள், டிஸ்சார்ஜ் தகவல்களை போன்றவை) பத்திரப்படுத்தலாம். மேலும் சுகாதாரத் தரவைக் கண்காணிக்கலாம்.
9. வெல்னஸ் கன்டென்ட்:
வெல்னஸ் போர்ட்டல் சுகாதார கட்டுரைகள், வலைப்பதிவுகள், உதவிக்குறிப்புகள் மற்றும் பிற உடல்நலம் மற்றும் வெல்னஸ் கன்டென்ட் உள்ளிட்ட முக்கிய சேகரிப்பை வழங்குகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார நிலைகளை அறிந்துகொள்வதற்கும், ஆரோக்கியமான உடல்நல மாற்றத்தை ஏற்படுத்தவும் வெல்னஸ் கன்டென்ட் மூலம் காப்பீட்டாளர் பயனடைகிறார்.
10. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு:
இது அவர்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்கள் தொலைபேசி அழைப்புகள் (முதன்மையாக அறுவை சிகிச்சை நிகழ்வுகளுக்கு) மூலம் தீர்க்கப்படுகிறது.
11. வெல்னஸ் குழு அளிக்கும் தள்ளுபடிகள்:
எங்கள் இணையதளத்தில் காட்டப்படும் எங்களது வெல்னஸ் குழு வழங்கும் சேவைகளில் காப்பீட்டாளர்கள் தள்ளுபடியைப் பெறலாம்.
ஆரோக்கிய செயல்பாட்டின் கீழ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இது தொடர்பாக காப்பீட்டாளரால் வழங்கப்பட்ட எந்த தகவலும் ரகசியமாக வைக்கப்படும்.
வெல்னஸ் வெகுமதி புள்ளிகளுக்கு பதிலாக பணம் எதுவும் பெற முடியாது.
காப்பீடு செய்தவர், அத்தகைய செயல்பாடு/சோதனையை மேற்கொண்ட 1 மாதத்திற்குள் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகளுக்கான தொடர்புடைய ஆவணங்கள், அறிக்கைகள், ரசீதுகள் போன்றவற்றை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
நியாயமற்ற முறையில் வெல்னஸ் புள்ளிகள் பெற்றது கண்டறியப்பட்டால், அந்த புள்ளிகளை அகற்றுவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.
வெல்னஸ் புரோகிராம் மூலம் அல்லது அதன் காரணமாக பாதிக்கப்பட்டால், ஸ்டார் ஹெல்த், அதன் குழு நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள், அந்தந்த இயக்குநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள், எந்தவொரு செயல்கள், க்ளைம்ஸ், கோரிக்கைகள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.
வழங்கப்படும் சேவைகள் அவ்வப்போது IRDAI வழங்கும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
பலன்களின் விளக்கம்:
"ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்" மூலம் காப்பீடு செய்தவர் பிரீமியத்தில் எப்படி தள்ளுபடி பெறலாம் என்று பார்க்கலாம்.
காட்சி - 1
42 வயதான தனி நபர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் (18 வயதுக்குக் குறைவானவர்கள்) 25 லட்சம் இன்சூரன்ஸ் தொகையுடன் ஸ்டார் வுமன் கேர் இன்சூரன்ஸ் பாலிசியை (ஃப்ளோட்டர் சம் இன்சூரன்ஸ்) வாங்குகிறார்கள், அவர்கள் எப்படி ஃப்ளோட்டர் பாலிசி கீழ் வெல்னஸ் புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் புரிந்துகொள்வோம். சுரேஷ் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல், சுரேஷ் தனது உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) 30 ஆகவும், லட்சுமி தனது பிஎம்ஐ 25 ஆகவும் குறிப்பிட்டுள்ளனர். சுரேஷ் மற்றும் லக்ஷ்மி, வெல்னஸ் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து, பின்வரும் வெல்னஸ் நடவடிக்கைகளை முடித்தனர்.
வரிசை எண்
பாலிசி ஆண்டில் எடுக்கப்பட்ட வெல்னஸ் செயல்பாட்டின் பெயர்
சுரேஷ் பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகள்
1
முடிக்கப்பட்ட ஆன்லைன் சுகாதார இடர் மதிப்பீடு (HRA)
50
50
2
சமர்ப்பிக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை அறிக்கை
200
200
3
மாரத்தானில் பங்கேற்றார்
100
0
4
ஜிம்மில் கலந்துகொண்டார்
100
100
5
பாலிசி ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 நடைகளை எட்டியது
200
200
6
உடல் எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று சுரேஷ் 27 என்ற பிஎம்ஐ நிலையை அடைந்தார்
எடை மேலாண்மை திட்டத்தை ஏற்று லட்சுமி 23 என்ற பிஎம்ஐ நிலையை அடைந்தார்
100
100
7
நாள்பட்ட நோய்களின் நிலை மேலாண்மை திட்டத்தின் மூலம் சுரேஷ் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த அளவுகளை நிர்வகித்தார்;
லக்ஷ்மி மன அழுத்தம் மற்றும் மனதை உடல் குணப்படுத்தும் திட்டத்தை முடித்துள்ளார்
250
125
பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை
1000
775
வெயிட்டேஜ் அடிப்படையில் வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கை
500 (1000X1/2)
388 (775X1/2)
சுரேஷ் மற்றும் லட்சுமி பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை = 888 (500+388)
அவர்கள் பெற்ற வெல்னஸ் புள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரீமியம் புதுப்பிக்கப்படும் போது, அதில் சுரேஷ் & லட்சுமி 10% தள்ளுபடியைப் பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
காத்திருப்பு காலம்
ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 24 மாதங்கள்
குறிப்பிட்ட நோய்கள்/செயல்முறைகளுக்கு - 24 மாதங்கள்
ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசி தொடங்கும் போது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், ஏற்க முடியாத பட்சத்தில் பாலிசியை திரும்பப் பெறுவதற்கும் பாலிசி எடுத்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவருக்கு அனுமதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், பிரீமியம் தொகை திருப்பி கொடுக்கும் நடைமுறைகள் தொடங்கும்
ஃப்ரீ லுக் பீரியடில் காப்பீடு செய்தவர் க்ளைம் செய்யவில்லை என்றால், காப்பீடு செய்தவருக்கு பின்வரும் உரிமைகள் உண்டு
காப்பீடு செய்த நபரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணங்கள் நீங்கலாக மற்ற தொகையினை திரும்பப் பெற முடியும்
பாலிசியை திரும்பப் பெற முடிவு எடுக்கும் பட்சத்தில், அதற்கு முன்பு பாலிசிதாரர் க்ளைம் செய்திருந்தால், க்ளைம் தொகை நீங்கலாக மீதமுள்ள பிரீமியம் திரும்பக் கிடைக்கும்
பாலிசி புதுப்பித்தலின் போது ஃப்ரீ லுக் பீரியட் சலுகை பொருந்தாது
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை
இந்த பாலிசியைப் பெறுவதற்கு, முன்னதாக எடுக்கப்படும் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் 12வது மற்றும் 20வது வாரத்தில் ஸ்டார் ஹெல்த் குறிப்பிட்ட ஸ்கேன் மையங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவம் அல்லாத பொருட்கள்
மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ் உள்ளது - விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜ் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பிரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகளுக்கான பலன்கள்/பிரீமியம் விளக்கப்படம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
24*7 வாடிக்கையாளர் சேவை
காப்பீடு பெறுவதற்கு, தொலைபேசி மூலம் மருத்துவ உதவி, சந்தேகங்களுக்கு 1800-425-2255 என்ற எண்ணை அழைக்கலாம்.
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மண்ட்
எந்தவித 3ம் நபரின் ஒப்புதலும் இன்றி அதிவேகமாக பாலிசிதாரர்களுக்கு காப்பீட்டு தொகையை அளிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் தான்
மருத்துவமனைகள்
எங்களிடம் உள்ள தரமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மட்டுமே உங்களை சிகிச்சைப்பெற பரிந்துரைக்கிறோம்.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
க்ளைம் செட்டில்மண்ட்
எங்களின் 90% க்ளைம்ஸ் 2 மணி நேரத்திற்குள் செட்டில் செய்யப்படும். மேலும், 92% க்ளைம்ஸ் 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் முறையில் செட்டில் செய்யப்படுகிறது.
நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஸ்டார் ஹெல்த் உடன் இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட மருத்துவமனைகள் தடையற்ற பணமில்லா வசதிகளை வழங்குகின்றன. இதற்கான ஒப்புதல் செயல்முறை விரைவானது மற்றும் வசதியானது.
ஒப்புக்கொண்ட நெட்வொர்க் மருத்துவமனைகள்
அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கான செலவு குறைந்த பேக்கேஜ் கட்டணங்களை ஸ்டார் ஹெல்த் உடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் வழங்குகின்றன.
மதிப்புமிக்க சேவை வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகள் ஸ்டார் ஹெல்த் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் முயற்சிகள், சேவைகள் மற்றும் தரம் ஆகியவற்றிற்காக சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பில் இல்லாத மருத்துவமனைகள்
நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெறுவதற்கு (ஸ்டார் ஹெல்த் உடன்படிக்கையில் இல்லாத), நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்ட் பெறலாம்
விலக்கப்பட்ட வழங்குநர்கள்
இந்த மருத்துவமனைகளில் க்ளைம் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்/விபத்துச் செலவுகள் உடல் சீரான நிலையை எட்டும் வரை கவர் செய்யப்படும்.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
Disclaimer: Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in