
ஸ்டார் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி
IRDAI UIN: IRDA/NL-HLT/SHAI/P-T/V.I/140/13-14
HIGHLIGHTS
Plan Essentials
பிளான் வகை
இந்த பாலிசியை தனிநபர் அடிப்படையில் பெறலாம்.
டிராவல் பாலிசி
இந்த பாலிசி உங்கள் பயணத்தின் போது அல்லது வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது ஏதேனும் மருத்துவ அவசரநிலைகள் மற்றும் பயண சிரமங்கள் காரணமாக ஏற்படும் செலவுகளை கவர் செய்கிறது.
அனைத்திற்குமான கவரேஜ்
இந்த பாலிசி வெளிநாட்டில் நோய் அல்லது நலமின்மை காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. கூடுதலாக, பாலிசிதாரரின் சொந்த நாட்டில் அதே நோய்க்கான சிகிச்சை தொடர்ந்து பெறுகையில் அதற்கான கட்டணங்களையும் கவர் செய்கிறது.
பயண சிரமங்களுக்கான கவரேஜ்
விமான தாமதம், பயணத்தை ரத்து செய்தல், பாஸ்போர்ட் இழப்பு, செக்-இன் செய்யப்பட்ட பேக்கேஜ் இழப்பு அல்லது தாமதம், தவறவிடப்பட்ட விமானம் / இணைப்பு விமானம் மற்றும் விமான கடத்தல் காரணமாக ஏற்படும் துயரம் போன்ற இழப்புகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
Detailed List
Understand what’s included
முக்கியமான சிறப்பம்சங்கள்
நுழைவு வயதுஇந்திய நாட்டைச் சேர்ந்த 6 மாதங்கள் முதல் 70 வயதுடையவர்கள் வரை, தொழில் ரீதியிலோ அல்லது விடுமுறைக்காகவோ இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்யும் எவரும் இந்த பாலிசியை பெறலாம். |
நீட்டிக்கப்படும் கவரேஜ்இந்த பாலிசி 70 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களை 50% கூடுதல் பிரீமியத்துடன் கவர் செய்கிறது. 75 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, இந்த பாலிசியானது 25% கூடுதல் பிரீமியத்துடன், USD 10000/- வரை அவசர மருத்துவப் பிரிவின் கீழ் அதிகபட்ச காப்பீட்டை வழங்குகிறது. |
தகுதிஇந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற 6 மாத வயதுக்கு மேல் உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். |
திட்ட விருப்பங்கள்இந்த பாலிசி இரண்டு கவரேஜ் தேர்வுகளை வழங்குகிறது. அமெரிக்கா & கனடாவிற்குப் பயணம் செய்ய இதைப் பெறலாம்; மேலும் அமெரிக்கா & கனடாவைத் தவிர உலகம் முழுவதும் பயணம் செய்யவும் பெறலாம். |
காப்பீட்டுத் தொகை விருப்பங்கள்இந்த பாலிசி இரண்டு திட்ட விருப்பங்களின் கீழும் நான்கு காப்பீட்டுத் தொகை வரம்புகளை வழங்குகிறது. அவை USD 50,000/-, USD 100,000/-, USD 250,000/- மற்றும் USD 500,000/-. |
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைஇந்த பாலிசிக்கு காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இக்கட்டான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் ECG, சாப்பிடுவதற்கு முன்பு எடுக்கப்படும் டெஸ்ட் மற்றும் உணவுக்குப் பிறகான இரத்த சர்க்கரை சோதனை, கொலஸ்ட்ரால் விவரம் மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றின் ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். |
அவசரகால மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடுஇந்த பாலிசி காப்பீடு செய்யப்பட்ட நபர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது மருத்துவ அவசர நிலைக்காக ஏற்படும் செலவுகளை ஈடுசெய்கிறது. |
மருத்துவ அவசர நிலைக்காக வேறு இடத்துக்கு மாற்றுதல்மருத்துவரின் ஆலோசனையின் பேரில், காப்பீடு செய்யப்பட்ட நபரின் மருத்துவ அவசர நிலைக்காக, வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது. இதனுடன் தொடர்புடைய போக்குவரத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகளையும் இது கவர் செய்கிறது. |
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்விபத்து காரணமாக காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தாலோ அல்லது உடல் செயலிழந்தாலோ, குறிப்பிட்ட வரம்புகள் வரை அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ காப்பீட்டு நிறுவனம் கவரேஜுக்கான மொத்தத் தொகையை வழங்கும். |
பற்களின் அவசர நிலைக்கான கவரேஜ்பயணத்தின் போது ஏற்படும் காயத்தால் உண்டாகும் பல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும், வீரியமிக்க மயக்க மருந்து சிகிச்சைக்கான செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது. |
இறந்தவர்களின் உடலை கொண்டுச் செல்லுதல்வெளிநாட்டில் காப்பீடு செய்த நபர் இறக்கும் பட்சத்தில், இந்த பாலிசி அவரின் உடலை கொண்டுச் செல்வதற்கான செலவை கவர் செய்கிறது அல்லது அவர் இறந்த நாட்டிலேயே அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான சமமான தொகையை கவர் செய்கிறது. |
விலக்குகள்இந்த பாலிசி விலக்குகளுக்கு உட்பட்டது. அதாவது, ஒவ்வொரு க்ளைம் போதும் நிறுவனம் செலுத்த வேண்டியில்லாத தொகையை இது குறிக்கிறது. |
லக்கேஜ் இழப்புக்கான கவரேஜ்செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ் (காப்பீடு செய்யப்பட்ட நபருடையது) ஒரு விமான நிறுவனத்தால் அல்லது விமானத்தால் தொலைந்து விட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீடு செய்த நபருக்கு ஏற்படும் இழப்பை நிறுவனம் கவர் செய்யும். |
பாஸ்போர்ட் இழப்புபயணத்தின் போது காப்பீடு செய்த நபர் தனது பாஸ்போர்ட்டை இழக்கும் பட்சத்தில், புதிய பாஸ்போர்ட் அல்லது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களைப் பெறுவதற்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
லக்கேஜ் தாமதம்பயணத்தின் போது காப்பீடு செய்த நபரின் செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ், 12 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை தாமதத்திற்கான இழப்பீட்டை நிறுவனம் செலுத்தும். |
விமான தாமதம்காப்பீடு செய்தவரின் விமானம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டால், கூடுதல் தங்குமிடம், பயணம் மற்றும் பிற நியாயமான செலவுகளுக்கு குறிப்பிட்ட வரம்புகள் வரை காப்பீட்டு நிறுவனம் கவரேஜ் வழங்கும். |
விமானம்/இணைப்பு விமானத்தை தவறவிடுதல்குறிப்பிட்ட காரணங்களால் காப்பீடு செய்த நபர் தான் முன்பதிவு செய்த விமானத்தையோ அல்லது இணைப்பு விமானத்தையோ தவறவிட்டால், தங்குமிடம் மற்றும் பயணத்தில் ஏற்படும் நியாயமான கூடுதல் செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஈடுசெய்யும். |
பயணத்தை ரத்து செய்தல்/இடர்பாடுவிபத்து காரணமாக காப்பீடு செய்தவருக்கு உடல் காயங்களோ அல்லது இறக்க நேரிட்டாலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அவரிடமோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளிடமோ குறிப்பிட்ட தொகை வரை இழப்பீடு வழங்கும். |
தனிப்பட்ட பொறுப்புக்கான கவரேஜ்காப்பீடு செய்தவர் மூலம் வேறொரு நபருக்கு ஏற்படும் நோய்/காயம் (உயிரிழந்தாலும் அல்லது உயிர் பிழைத்தாலும்) அல்லது காப்பீட்டுக் காலத்தில் அவரது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால், காப்பீட்டு நிறுவனம் அவர் சட்டப்படி செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளுக்கும் குறிப்பிட்ட வரம்புகள் வரை இழப்பீடு வழங்கும். |
விமானம் கடத்தப்பட்டதால் நேரும் துயரம்காப்பீடு செய்த நபர் பயணிக்கும் விமானம் கடத்தப்பட்டு, பயணத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் தடங்கல் அல்லது இடையூறு ஏற்பட்டால், குறிப்பிட்ட வரம்புகளின்படி ஒவ்வொரு நாளும் தாமதத்திற்கு சமமான இந்திய ரூபாயை நிறுவனம் செலுத்தும். |
க்ளைம் நடைமுறைக்கு முன்பு:
க்ளைம்ஸ்களை பதிவு செய்ய எங்கள் க்ளைம் உதவி நிறுவனத்திற்குத் தெரிவிக்கவும்.
க்ளைம் நடைமுறை:
பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்
| மையத்தின் இடம் | உலக பயணத்துக்கான உதவி - USA | உலக பயணத்துக்கான உதவி - ஐரோப்பா | உலக பயணத்துக்கான உதவி – சிங்கப்பூர் | ஹெரிடேஜ் ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட். - இந்தியா |
|---|---|---|---|---|
முகவரி | டபிள்யூ.டி.ஏ. டிராவல் சர்வீசஸ், INC. 1571 Sawgrass கார்ப்பரேட் Pkwy சூட் 110 சன்ரைஸ், Fl, 33323-2862, யு.எஸ்.ஏ. | டபிள்யூ.டி.ஏ. டிராவல் சர்வீசஸ், INC. கால் பார்காஸ் 2, பிளாண்டா 2, ஆஃபிசினா 302, ரெகஸ், 46002, வலென்சியா. ஸ்பெயின் | டபிள்யூ.டி.ஏ. டிராவல் சர்வீசஸ், INC. 75 கிம் யான் சாலை சிங்கப்பூர் 239372 | ஹெரிடேஜ் ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட். சாம்பியன் கட்டிடம், Gr.Flr, 15, பார்சி பஞ்சாயத் சாலை, அந்தேரி (E), மும்பை - 400069. இந்தியா. |
டோல் - உதவிக்கான இலவச எண் | +1 877 822 7386 | +34 900 804 116 | +65 3163 2058 | 1800 22 4004 (இந்தியாவிற்குள் கட்டணமில்லா அழைப்பு) |
பிற தொலைபேசி எண்கள் | +1 305 328 3897 | +34 911 881 617 | +65 315 80234 | +91-22-61273891 (24 hrs) +91-22-61273892/ 93 |
ஃபேக்ஸ் நம்பர்(கள்) | +1 877 395 1784 | +34 915 932 577 |
| +91-22-6127 3890 |
மின்னஞ்சல் முகவரி | assistance@wtabyhas.com | assistance@wtabyhas.com | assistance@wtabyhas.com | heritagehealthomp@bajoria.in |
இணையதளம் | www.wta-heritage.com | www.wta-heritage.com | www.wta-heritage.com | www.wta-heritage.com |
அதிகார வரம்பு எல்லை | வடக்கு, மத்திய & தென் அமெரிக்கா | ஐரோப்பா, இங்கிலாந்து & அயர்லாந்து, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் | சிங்கப்பூர் | தெற்கு & தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா & நியூசிலாந்து |

The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



