வாய் புற்றுநோயின் அறிகுறிகள், ஆபத்தான காரணிகள், மற்றும் நோய்சிகிச்சைகள் விவரங்கள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

வாய் புற்றுநோய் என்றால் என்ன?

வாய் புற்றுநோய் என்பது வாயின் எந்தப் பகுதியிலும் (ஓரல் கேவிட்டி) ஏற்படக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். இது வாய்வழி (ஓரல் கேன்சர்) புற்றுநோய் என்றும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கும் இந்த வாய் புற்றுநோய் உங்கள் உதடுகள், நாக்கு மற்றும்  வாயின் அண்ணம் (மேற்புறம்) மற்றும் தளப்பகுதி (கீழ் புறம்) ஆகியவற்றை பாதிக்கிறது. இது உங்கள் நாக்கின் கடைசி பகுதியான  ஓரோஃபார்னிக்ஸையும் கூட பாதிக்கிறது.

வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

வாய்வழி புற்றுநோய் 45 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் மிகப் பொதுவாக ஏற்படுகிறது. ஆயினும் இது எந்த வயதிலும் யாரையும் தாக்கலாம். நீங்கள் முறையான பல் பராமரிப்பை வழக்கமாக மேற்கொள்ளாவிட்டாலோ, வாய்பகுதியின் சுகாதாரத்தை நன்கு கடைபிடிக்காவிட்டாலோ வாய் புற்றுநோய் ஏற்படலாம்.

வாய் புற்றுநோய் எனது உடலை எவ்வாறு பாதிக்கிறது?

வாய் புற்றுநோயானது வாய் பகுதியில் அசௌகரியம், சோர்வு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது காய்ச்சல், சொறி அல்லது அதிகரித்த இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

ஓரல் கேவிட்டி எனப்படும் வாய் பகுதியில் உள்ள பாகங்கள் யாவை?

ஓரல் கேவிட்டி எனப்படும் வாய் பகுதியில், வாயின் செயல்பாட்டிற்கு முக்கியமான பின்வரும் பாகங்கள் உள்ளன:

உதடுகள்

உதடுகள் மென்மையான, நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டமைப்பாகும். நாம் உண்ணும் உணவுகளின்  நுழைவாயிலாக உதடுகள் செயல்படுகின்றன. மனித உதடுகள், ஒலி மற்றும் பேச்சினை வெளிப்படுத்த உதவும் ஒரு முக்கியமான உணர்திறன் கொண்ட உறுப்பு ஆகும்.

ஈறுகள்

ஈறுகள், வாயின் மென்மையான திசுப் படலத்தின் ஒரு பகுதியாகும். அவை பற்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. பெரும்பாலான ஈறுகள் வாயின் அடிப்பகுதியில் உள்ள எலும்புடன் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளன; இவை உண்ணும் போது உணவு உராய்வைக் குறைப்பத்தில் உதவுகிறது.

கன்னங்களின் உட்புற படலம்

பக்கல் மியூகோஸா என்கிற கன்னங்களின் உட்புற படலம் வாயின் உள்ளாகவும், பற்களைத் தொடும்படி உதடுகளின் பின்புறத்திலும் அமைந்துள்ளது. இது லீனியா ஆல்பா என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த படலம் பற்களின் மேல் மற்றும் கீழ் பகுதிக்கு இடையில் – கிடைமட்டமாக இயங்கும் உயர்வான வெள்ளை நிற கோடுகளாக காணப்படுகிறது.

உங்கள் நாக்கின் முன்புறத்தின் மூன்றில் இரண்டு பங்கு

உங்கள் நாக்கின் முன்புறத்தின் மூன்றில் இரண்டு பங்கு அளவுள்ள பகுதியே, சுவையை உணர்கிறது. இந்த முக்கியமான பாகம் வாயின் உட்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. சுவை இழைகளை கொண்டுள்ள கார்டா டிம்பனி என்ற நரம்பு, நாக்கின் முன்புறத்தின் மூன்றில் இரண்டு பங்குள்ள பகுதியில் அமைந்துள்ளதால், சுவையை உணர முடிகிறது.

உங்கள் வாயின் அடிப்பகுதி

வாயின் அடிப்பகுதி என்பது நாக்கின் அடியில் காணப்படும் U-வடிவ பகுதியாகும். மியூக்கோசல் மேற்பரப்பிற்கும் மைலோஹாய்டு தசைக்கும் இடையிலான இடைவெளி வாயின் அடிப்பகுதியாக கருதப்படுகிறது.

உங்கள் வாயின் மேல் அண்ணத்தின் முற்பகுதி

பாலட் எனப்படும் அண்ணம், ‘வாயின் ரூஃப்’ என்று அழைக்கப்படுகிறது. பாலட் – முன் பகுதி மற்றும் பின் பகுதி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் அண்ணத்தின் முன் பகுதியில் கடினமான முகடுகள் உள்ளன; இந்த கடினமான பகுதி ‘ஹார்ட் பாலட்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான ‘சாஃப்ட் பாலட்’ என்பது அண்ணத்தின் பின்புற பகுதியைக் குறிக்கிறது.

ஞான (விஸ்டம்) பற்கள்

பெரும்பாலான நபர்களுக்கு டீன்ஏஜ் வயதின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் முற்பகுதியில் ஞான பற்கள் வளரத் தொடங்குகிறது. பொதுவாக ஞான பற்கள் முக்கியமானதாக கருதப்படகின்றன; இருப்பினும், அவை பலமுறை சீரற்ற முறையில் முளைப்பதால், அகற்றப்பட வேண்டியிருக்கிறது.

வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகள்

புகைப்பிடித்தல்

புகையிலை மற்றும் மது ஆகியவை வாய் புற்றுநோயின் முதன்மையான காரணங்களாகும். புகையிலை மற்றும் மது ஆகிய இரண்டும் கார்சினோஜெனிக் எனப்படும் கேன்சர் காரணிகளாகும்; அதாவது, இவற்றில் உயிரணுவின் DNA-விற்கு  தீங்கு ஏற்படுத்தக்கூடிய கூறுகள் இருப்பதால், அவற்றை சிதைத்து புற்றுநோயை உண்டாக்குகின்றன. நீங்கள் மது அருந்துவதால், அல்லது புகைபிடிப்பதால்  வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இரட்டிப்பாகிறது.

புகைக்காமல்  புகையிலையைப் பயன்படுத்துவது

புகைக்காமல் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கன்னத்தின் உட்புறம் மற்றும் ஈறுகளுக்கு இடையே தாடையின் அடிப்பகுதியில், புகையிலையை உருட்டி வைத்து அதன் திரவங்களை மென்று உட்கொள்கிறார்கள். பொதுவாக, புகைபிடிக்கும் போது வாயில் அதிக உமிழ்நீர் உருவாகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்

மதுவை அளவுக்கு அதிகமாக அருந்தினால் வாய் புற்றுநோய் ஏற்படுவது  மட்டுமல்லாமல்,  உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய் மற்றும் செரிமான பிரச்சினைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு  உயர் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் ஏற்படுகிறது.

குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பின் பின்னணி இருத்தல்

பெரும்பாலான புற்றுநோயாளிகளுக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் இருப்பதில்லை. இருப்பினும், புற்றுநோய் பாதிக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் சுமார் 5% முதல் 10% வரை மரபுரீதியாக கடத்தப்படுகிறது. பரம்பரை புற்றுநோய் என்பது ஒரு நபரின் DNA-வில் உள்ள ஒரு மரபணு உருமாற்றம் அடைவது அல்லது மாறுவதைக் குறிக்கிறது; அதன் காரணமாக மற்றவர்களை விட இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

அளவுக்கு அதிகமாக வெயிலில் இருப்பது

சூரிய ஒளிக்கதிர்கள் கண்கள் மற்றும் தோல் ஆகிய இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஒரு நாள் வெயிலில் இருந்தால் கூட, கார்னியல் பாதிப்பு எனப்படும் ‘கண்ணின் வெளிப்புறத்தில் இருக்கும் தெளிவான சவ்வு படலத்தில் கருவிழி சுடு காயங்கள்’ ஏற்படலாம். அதிக நேரம் கண்ணில் வெயில் நேரடியாக படுமாறு இருந்தால், அது கண் லென்ஸை மறைக்கும் கண்புரை  பாதிப்பிற்கு வழிவகுக்கும்; கண்புரையால் பார்வை மங்கலாகும்.

ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV)

ஒரு வகையான வைரஸ் இனமான இந்த ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV)  ஒருவரது தோலிலிருந்து மற்றொருவர் தோலுக்கு ஏற்படும் நேரடித் தொடர்பின் மூலம் பரவுகிறது. HPV வைரஸ் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகைகளில் உள்ளன, அவற்றில் 40-க்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்றன, மற்றும் இவை உங்கள் பிறப்புறுப்புகள், வாய் மற்றும் தொண்டையை பாதிக்கின்றன.

வயது

புற்றுநோய், இருதய நோய் மற்றும் நரம்பியல் சிதைவு நோய் ஆகியன – வளர்ந்த நாடுகளில் மிகவும் பொதுவாக ஏற்படும் நோய்களாக உள்ளன. ஒருவரின் வயது, எந்தவொரு நோய்க்கும் மிகப்பெரிய ஆபத்து காரணியாக உள்ளது.

பாலினம்

பெரும்பாலான சமூகங்களில், வாய் புற்றுநோய் (OC) என்பது விகிதாசார அடிப்படையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படும் ஒரு நியோபிளாசம் பாதிப்பாக உள்ளது. பெண்களுக்கு கேன்சர் கட்டிகள் ஏற்படும் நிகழ்வு குறைவாக இருப்பதும், ஆண்களுக்கு அதிகமாக இருப்பதும், கேன்சர் கட்டியின் வளர்ச்சியில் எண்டோகிரைனின் பங்கு இருப்பதைக் குறிக்கிறது.

மோசமான உணவு

மோசமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடாதது போன்ற காரணங்கள், உங்கள் உடலுக்கு மோசமான உடல்நல ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைத்து, பலமிழக்க செய்து, உங்கள் உடலை பாதிக்கும் பல நோய்களையும்  ஏற்படுத்துகிறது.

வாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

பின்வரும் முறைகளைக் கொண்டு வாய் புற்றுநோய்க்கு  சிகிச்சையளிக்க முடியும்:

கதிர்வீச்சு சிகிச்சை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வாய் பகுதியில் எஞ்சியுள்ள புற்றுநோய் அணுக்களை அழிக்க, கதிர்வீச்சு சிகிச்சை அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரது மெல்லும், விழுங்கும் மற்றும் பேசும் திறனைப் பாதுகாத்தபடியும், அதே நேரத்தில் வாய் புற்றுநோய் கட்டிகளை அழிக்க முடியுமென மருத்துவர்கள் நம்பும்  பட்சத்தில் மட்டுமே, இந்த கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட இலக்குடன் செய்யப்படும் டார்கெட்டட் சிகிச்சை

புற்றுநோய் செல்கள் வளர்வதையும், பரவுவதையும், அவை உயிர்வாழ்வதையும் தடுக்கும் நோக்கில், அவற்றை குறிவைக்கும் பிரத்தியேக மருந்துகளைப் பயன்படுத்துவதே ‘டார்கெட்டட் மருந்து சிகிச்சை’ எனப்படுகிறது. வாய் பகுதியை பாதுகாக்கவும், புற்றுநோய் உயிரணுக்களை அகற்ற அல்லது அவற்றின் வளர்ச்சியை குறைக்க இவ்வகை சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.

கீமோதெரபி

1-வது நிலை அல்லது 2-வது நிலை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பயனுள்ள சிகிச்சைகளாக இருக்கும். கார்போபிளேட்டின் மற்றும் 5-FU போன்ற கீமோதெரபி மருந்துகள் வாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான கலப்பு மருந்துகளாகும். இந்த கலவையானது வாய் பகுதி மற்றும் ஓரோஃபேர்னிக்ஸில் உள்ள புற்றுநோயைக் குறைக்கிறது.

நோயெதிர்ப்பு சிகிச்சை (இம்யூனோதெரபி)

இம்யூனோதெரபி எனப்படும் நோயெதிர்ப்பு சிகிச்சை என்பது வாய் புற்றுநோய்  மற்றும் ஓரோஃபேர்னிஜியல் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மாற்று சிகிச்சையாகும். இம்யூனோதெரபி என்பது – மருந்துகளை பயன்படுத்தி ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பரிசோதிக்கவும், அதன் மூலம் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் முறையாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள சில புரதங்களை குறிவைப்பதன், அதற்கான நோயெதிர்ப்பு வினையை  மேம்படுத்துகிறது.

வாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அறுவை சிகிச்சைகள்

வாய் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காகவே பின்வரும் அறுவை சிகிச்சைகள் குறிப்பாக மேற்கொள்ளப்படுகின்றன:

பிரைமரி டியூமர் அறுவை சிகிச்சை

இந்த சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் வாயில் உள்ள கேன்சர் கட்டியைச் சுற்றியுள்ள பாதிப்பில்லாத திசுக்கள் சிறிதளவுடன் சேர்த்து புற்றுநோய் திசுக்களையும் அகற்றுவார். திசுக்களின் சேதமடைந்த பகுதியை சரிசெய்ய அப்பகுதியில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் போது உங்கள் உடலின் மற்றொரு பகுதியிலிருந்து ஆரோக்கியமான திசுக்களை அகற்றி இடம்பெயற்கும் நடைமுறையும் உள்ளடங்கியுள்ளது.

க்ளாசெக்டோமி

க்ளாசெக்டோமி என்பது நாக்கு புற்றுநோய்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமான செயல்முறையாகும். பார்ஷியல் க்ளாசெக்டோமி என்பது சிறிய கட்டிகள் இருக்கும் நாக்கின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றுவதாகும். பெரிய கட்டிகள் இருப்பின், நாக்கின் பெரிய பகுதியை அகற்ற வேண்டியிருக்கும்.

மேண்டிபுலெக்டோமி

மேண்டிபுலெக்டோமி அல்லது மேண்டிபுலர் ரீசெக்ஷன் என்பது கேன்சர் கட்டிகளைக் கொண்ட தாடை எலும்பின் அனைத்து, அல்லது குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றும் ஒரு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையாகும். கட்டி தாடை எலும்பு வரை பரவியிருந்தால் இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தாடை எலும்பில் புற்றுநோய் செல்கள் பரவுவதால் தாடை அசைவதில் சிரமம் ஏற்படுகிறது.

மேக்ஸிலெக்டோமி

மேக்ஸிலெக்டோமி என்பது கடினமான அண்ணத்திற்கு (வாயின் மேல்புறத்தின்  முன் பகுதி) பரவியுள்ளது பாதிக்கப்பட்ட எலும்பை (மேக்ஸில்லா) அகற்றும் அறுவைசிகிச்சையாகும். எலும்பு முழுவதையும் அகற்றுவது மேக்ஸிலெக்டோமி என்றும், அல்லது குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றுவது பார்ஷியல் மேக்ஸிலெக்டோமி என்றும் அழைக்கப்படுகிறது.

சென்டினல் லிம்ஃப் நோடு பயாப்ஸி

சென்டினல் லிம்ஃப் நோடு பயாப்ஸி என்பது மருத்துவ ரீதியாக நெகட்டிவ் கழுத்து உள்ள ஒரு நோயாளருக்கு ஆக்கல்ட் மெட்டாஸ்டேடிக் நோய் இருக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்காக, குறைந்தபட்ச அறுவையுடன் செய்யப்படும் ஒரு சப்ளிமென்ட் சிகிச்சை முறையாகும். இந்த அணுகுமுறையானது கழுத்தில் அறுவை செய்ய வேண்டிய இடத்தினை தீர்மானிக்க உதவுகிறது; இது வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு பாதிப்பின் தன்மையைக் குறைக்க உதவுகிறது.

கழுத்து அறுவை சிகிச்சை

லேட்டரலைஸ்டு ஓரோஃபேரிஞ்சியல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு முதற்கட்டமாக ஒரு குணப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படும். அந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு இப்ஸிலேட்டரல் நிலை 2 முதல் 4 வரை கழுத்தில் டைசெக்ஷன் செய்ய வேண்டியிருக்கும்.

மறுசீரமைப்பு சிகிச்சை

இந்த சிகிச்சை முறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை  அகற்றுவதோடு மறுசீரமைப்பும் செய்யப்படுகிறது. மறுசீரமைப்பின் போது உடலின் மற்றொரு பகுதியிலிருந்து திசு அல்லது எலும்பு எடுக்கப்பட்டு, வாய் பகுதிக்கு மாற்றப்படலாம். மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது திசுக்களை இடமாற்றம் செய்வதற்காக, சிறிய இரத்த நாளங்களை வெட்டி, தைக்கும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்.

வாய் புற்றுநோயைத் தடுத்தல்

ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்

HPV தடுப்பூசிகளை ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம். 15 வயதிற்குப் பிறகு HPV தடுப்பூசிகளை தொடர் முறையில் செலுத்தத் துவங்கினால், ஆறு மாதங்களில் மூன்று டோஸ் மருந்துகள் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் ஏற்கனவே அப்நார்மல் Pap பரிசோதனையை செய்திருந்தாலும், HPV தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள வேண்டும்; ஏனெனில் நீங்கள் HPV-யின் அனைத்து ரகங்களினாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது.

சரிவிகித உணவை உண்ணுங்கள்

நல்ல உணவுமுறை என்பது மனித உடலை சில நோய்களிலிருந்து, குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய் மற்றும் எலும்புக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பது உங்களது எடையை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும் உதவும்.

பல் பரிசோதனைகள் வழக்கமாக்கிடுங்கள்

பல் மருத்துவரை வழக்கமாக ஆலோசிப்பதால், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். பல் பரிசோதனையின் போது, உங்கள் பல் மருத்துவர் ஏதேனும் சாத்தியமான பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை அறிய உங்கள் வாய் முழுவதையும் பரிசோதிப்பார். பற்களை சுத்தம் செய்யும் போது, ஏதேனும் ப்ளாக் அல்லது டார்டார் சேர்ந்திருந்தால், அவற்றை அகற்றி உங்கள் பற்களை பாலிஷ் செய்வார்.

மதுவை மிதமாக குடிக்கவும்

ஆரோக்கியமான உடல்நிலை உள்ள நபர்களுக்கு உட்கொள்ள பரிந்துரைக்கப்படும்  மதுவின் மிதமான அளவு: பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ட்ரிங்க் என்றும்,  ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ட்ரிங்க் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. மிதமாக மது உட்கொள்வதால், பின்வரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவது உட்பட, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது:

  • இதய நோய்
  • இஸ்கிமிக் ஸ்ட்ரோக்
  • நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்கள்

கட்டுரை சுருக்கம்

ஒருவரது வாய் புற்றுநோய் அல்லது ஓரோஃபேரிஞ்சியல் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகள், அவரது புற்றுநோயின் நிலை மற்றும் தீவிரத் தன்மையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க மக்கள் எந்த விதமான புகையிலை தயாரிப்புகளையும் பயன்படுத்தக் கூடாது. அதிகப்படியான மது உட்கொள்வதையும், பாக்கு போடுவதையும் தவிர்க்க வேண்டும், மற்றும்  பல் பரிசோதனையை வழக்கமாக மேற்கொண்டு வாய் சுகாதரத்தை பேணுதல் வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.வாய் புற்றுநோய் என்பது நாட்பட்ட பாதிப்பா அல்லது ஒரு தற்காலிக நிலையா?

புற்றுநோய் செல்கள் வாய் மற்றும் தொண்டைக்கு அப்பால் பரவவில்லை என்றால் அந்த வாய் புற்றுநோயானது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும். இல்லையெனில், அது நாள்பட்ட நோயாக மாறக்கூடும்.

2.வாய் புற்றுநோயின் முக்கிய காரணம் என்ன?

வாய் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று புகையிலை மற்றும் மதுப்பழக்கமாகும்.

3.வாய் புற்றுநோயின் முதல் நிலை என்ன?

வாய் புற்றுநோயின் முதல் கட்டம், கிரேடு 1 நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது.

4.வாய் புற்றுநோய் காண்பதற்கு எப்படி இருக்கும்?  

வாய் புற்றுநோயின் முதல் கட்டம் லேசான அறிகுறிகளுடன் உண்டாகும். இதன் ஆரம்ப அறிகுறிகளில் வாய் புண் ஏற்படும், ஆனால் அது போகாமல் நீடிக்கும் (இதுவே மிகவும் பொதுவான அறிகுறியாகும்). ஈறுகள், நாக்கு, டான்சில்ஸ் அல்லது வாயின் படலத்தில் வெள்ளை அல்லது சிவப்பு நிற பாதிப்புகள் காணப்படலாம்.

5.வாய் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் வலி  தெரியுமா ?

வாய் புற்றுநோயானது ஆரம்ப கட்டங்களில் அரிதாகவே வலியை உண்டாக்கும். தட்டையான திட்டுகள் காணப்பட்டால், அது வழக்கத்திற்கு மாறான உயிரணுக்கள் உருவாவதன் பொதுவான அறிகுறியாக இருக்கலாம். ஒரு கேன்சர் புண் என்பது சாதாரண அல்சர் புண் போன்றே, நடுவில் ஒரு குழியுடன் இருக்கும். புற்றுநோய் புண்ணின் மையம் வெள்ளை, சாம்பல் அல்லது மஞ்சள் நிறங்களில் இருக்கலாம், அதே நேரத்தில் அதன் விளிம்புகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

6. வாய் புற்றுநோய் எவ்வாறு நீங்கும்?  

புற்றுநோயானது, உங்கள் வாய்க்கு அப்பால் அல்லது வாயின் பின்புறத்தில் (ஓரோஃபேரினிக்ஸ்) உள்ள தொண்டை பகுதிக்கு அப்பால் செல்லவில்லை என்றால், உங்களை முழுமையாக குணப்படுத்த அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஒருவேளை புற்றுநோய் பெரியதாக இருந்தால் அல்லது உங்கள் கழுத்திற்கும் பரவியிருந்தால் – அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்றவை அவசியமாகலாம்.

7.வாய் புற்றுநோய் பொதுவாக எங்கு ஆரம்பிக்கின்றன ?  

உங்கள் உதடுகள் மற்றும் உங்கள் வாயின் உட்புறத்தை நேர்படுத்தும் தட்டையான, மெல்லிய உயிரணுக்களில் (ஸ்குவாமஸ் செல்கள்) தான் பெரும்பாலான வாய் புற்றுநோய்கள் ஆரம்பமாகின்றன.

8.வாய் புற்றுநோயின் கடைசி கட்டம் என்ன?  

வாய் புற்றுநோயின் மிகவும் தீவிரமான கட்டம், 4-வது நிலை ஆகும். இதன் பாதிப்பு எந்த அளவிலும் இருக்கலாம், ஆனால் இது தாடை மற்றும் வாய் பகுதியின் பிற பாகங்கள் போன்ற அருகிலுள்ள திசுக்களுக்கு பரவி காணப்படும்.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top