ஹட யோகா என்பது பண்டைய கால யோகப் பயிற்சிமுறைகளின் ஒரு வடிவமாகும். யோகா போஸ் பற்றி உங்களை சிந்திக்க சொன்னால், நீங்கள் மனதில் நினைக்கும் பெரும்பாலான தோற்றங்கள் ஹட யோகாவைச் சேர்ந்தவையாகவே இருக்கும்.
நமது பண்பாடு வளரும் போக்கில், சில சொற்கள் கடந்துவரும் பண்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு அர்த்தங்களைப் பெறுகின்றன.
அதேபோல் சமஸ்கிருதத்தில் "ஹட" (Hatha) என்ற சொல்லுக்கு ஆற்றல் என்று அர்த்தம். யோகாவைப் பொருத்தவரை, ஹட என்பது உடல் மற்றும் மன பயிற்சிகள் மூலம் அமைதியான நிலையை அடைய உதவும் ஒரு நுட்பத்தைக் குறிக்கிறது.
மேற்கத்திய கலாச்சாரத்தின்படி, ‘ஹ’ (Ha) என்ற வார்த்தைக்கு சூரியன் என்று அர்த்தம், ‘தா’ (tha) என்ற வார்த்தைக்கு சந்திரன் என்று அர்த்தம். இதன்படி பார்த்தால், ஹட யோகா என்பது இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான சமநிலையைக் கண்டறிய உதவும் ஒரு நுட்பத்தைக் குறிக்கிறது.
எவ்வளவு வேறுபட்ட விளக்கங்கள் இருந்தாலும், ஹட யோகாவின் நன்மைகள் அனைத்து கலாச்சாரங்களிலும் ஒரே மாதிரியானவை.
ஹட யோகாவின் சுருக்கமான வரலாறு
இந்திய துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்திய-நேபாள எல்லையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஹட யோகா தோன்றியது. புத்தர் காலத்திலும் ஹடயோகா போஸ்கள் பரிணமித்துள்ளன.
ஆனால் ஹட யோகாவின் நுட்பங்கள் பற்றி எதிலும் தெளிவான குறிப்புகள் இல்லை.
ஆரம்பகால பயிற்சியாளர்கள் கிரேக்கம் மற்றும் பிற கலாச்சாரங்களில் ஹட யோகாவின் நுட்பங்களை அறிமுகப்படுத்தியதாக சில பதிவுகள் கூறுகின்றன.
இருப்பினும், இது 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளிலேயே பிரபலமடைந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் காலத்தில், சுவாமி விவேகானந்தரின் முயற்சியால் ஹட யோகா பல இடங்களுக்கும் சென்றடையத் துவங்கியது.
ஹட யோகாவை எப்படிப் பயில்வது?
நீங்கள் எங்கேனும் ஒரு யோகா வகுப்பைக் காண நேர்ந்தால், அங்கு கற்பிக்கும் நுட்பங்கள் பெரும்பாலும் ஹட யோகாவை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஏனெனில் பொதுவான யோகாவான ஹட யோகாவிலிருந்து தான் பல கிளை வகைகள் உருவாகியுள்ளன.
யோகா வகுப்புகள் அல்லது சில ஆன்லைன் வகுப்புகள் நீங்கள் மூலம் ஹட யோகாவைக் கற்றுக்கொள்ளலாம்.
இருப்பினும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, நேரடியான வகுப்புகளையே தேர்வுசெய்யவும், ஏனெனில் ஹட யோகா நுட்பமானது தொடர்ச்சியான சுவாசம் மற்றும் உடல் பயிற்சிகளை உள்ளடக்கியதாக இருப்பதால், அவற்றை இடைநிறுத்தாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பொதுவாக, யோகா வகுப்புகள் 60 - 90 நிமிடங்கள் வரை நீடிக்கும்; அவற்றில் நீங்கள் பின்பற்ற வேண்டிய உடல் தோரனைகளும், அவற்றிற்கென குறிப்பிட்ட சுவாசப் பயிற்சி முறைகளும் உள்ளன.
ஹட யோகாவின் சில பொதுவான பயிற்சி முறைகள் பின்வருமாறு:
- மூச்சுப் பயிற்சிகள்
- போஸ்கள் (உடல் தோரனைகள்)
- தியானம்
பொதுவாக, ஹட யோகா ஒரு தயார்படுத்தும் பயிற்சியுடன் (வார்ம்-அப்) தொடங்கும். அதன் பிறகு, நீங்கள் குறிப்பிட்ட சுவாசப் பயிற்சி முறைகளுடன் உடல் போஸ்களின் தொகுப்பைப் பின்பற்றி பயிற்சி செய்வீர்கள். பின்னர் அது தியானத்துடன் முடிவடையும்.
ஹட யோகாவின் ஆரோக்கிய நற்பலன்கள் யாவை?
பழங்காலம் முதல் யோகிகள் முக்தியடைய இந்த யோகாவை செய்து வந்துள்ளனர். இருப்பினும், இதன் மூலம் பலவிதமான உடல் மற்றும் மன ரீதியான நன்மைகளைப் பெறலாம்.
ஹட யோகாவின் சில நற்பலன்கள் பின்வருமாறு:
- மூட்டுகளின் இயக்கம் மேம்படுகிறது
- உடலின் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது
- மூளை மற்றும் முதுகெலும்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது
- கனெக்டிவ் திசுக்களின் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது
- கீல்வாதம் (ஆர்த்ரிட்டிஸ்) மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா (fibromyalgia) போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது.
- முதுகுவலிக்கு நிவாரணம் தருகிறது
- உயிரணுக்களின் மீளுருவாக்கம் மற்றும் அவற்றை பழுதுநீக்கம் செய்வதைத் தூண்டுகிறது
- உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது
- முதுகு வலி மற்றும் கழுத்து வலிக்கு தீர்வாக அமைகிறது
மேற்கண்ட உடலியல் சார்ந்த நன்மைகளைத் தவிர, ஹட யோகா பின்வரும் மனம் சார்ந்த நற்பலன்களையும் தருகின்றன:
- மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது
- ஒருவரது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
- ஐம்புலன்களையும் அமைதிப்படுத்த உதவுகிறது
- ஒருவரது மனதை ஒருநிலைப்படுத்தும் திறனைக் கூட்டுகிறது
- உணர்வுகளை சீரான அளவுகளில் பராமரிக்க உதவுகிறது
- ஒருவரது படைப்பாற்றலை அதிகரிக்கிறது
ஹட யோகா முறையில் நிபுணத்துவம் பெற தத்துவ ரீதியாக ஒரு ஆழமான புரிதல் தேவைப்படுகிறது; இருப்பினும், உடல் மற்றும் உணர்வு ரீதியான நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் ஹட யோகா பயனுள்ளதாக உள்ளது. இதனால் ஒருவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஹட யோகா பெரிதும் உதவுகிறது.
ஹட யோகாவிற்கும் மற்ற யோகா வகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
யோகிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் ஹட யோகா மட்டுமில்லாமல் பல்வேறு வகையான யோகாவையும் பயில்கிறார்கள். அவற்றில் சில பிரபலமான வகைகள் பின்வருமாறு:
- வினயாச யோகா
- குண்டலினி யோகா
- அஷ்டாங்க யோகா
- ஐயங்கார் யோகா
- பிக்ரம யோகா
மேற்கூறிய யோகா வகைகளில் பல மாறுபட்ட பிரிவுகள் இருந்தாலும், ஹட யோகா மற்றவற்றிலிருந்து அடிப்படை ரீதியான சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
- ஹட யோகாவில் உடலின் அசைவுகளைக் காட்டிலும் உடல் மற்றும் மனதின் அமைதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
- ஹட யோகா போஸ்கள் நீளமானவையாக இருக்கும். நீங்கள் ஹட யோகாவில் ஒரு குறிப்பிட்ட ஆசன நிலையில் சுமார் 1 - 5 நிமிடங்கள் இருக்க நேரும்; அதுவே மற்ற சில யோகா வகைகளில், ஆசன நிலைகள் சிறிது நேரத்திற்கு மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றன.
- மற்ற யோகா வகைகளுடன் ஒப்பிடும்போது, ஹட யோகா நுட்பங்களில் உங்கள் உடலுக்கு குறைவான தேய்மானமே ஏற்படுகிறது.
- ஹட யோகாவினால், உங்கள் உடலுக்கு குறைவான அளவே ஆக்ஸிஜனே தேவைப்படுகிறது.
- ஹட யோகா போஸ்கள் இயற்கையாகவே, மற்ற யோகா வகைகளுடன் ஒப்பிடும்போது குறைவான வளர்சிதை மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன.
புதிதாக யோகா பயில்வோருக்கு ஹட யோகா சிறந்ததா?
பெரும்பாலும், தொழில்முறை யோகா பயிற்சியாளர்கள் ஆரம்பத்தில் ஹட யோகாவையே பரிந்துரைப்பார்கள். பிரபலமடைந்தது காரணமாக, ஹட யோகா உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ளது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இதன் புகழ் மேலும் அதிகரித்து வருகிறது.
இதற்கென சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. இதனை திறம்பட பயிற்சி செய்வதற்கு பொதுவான யோகா உபகரணங்களே போதுமானதாகும். அவை பின்வருமாறு:
- தியான மெத்தைகள்
- போல்ஸ்ட்டர் தலையணைகள்
- யோகா பாய் (தரை விரிப்புகள்)
- கம்பளம்
புதிதாக யோகா பயில்பவர்கள் ஆரம்பிக்க சௌகரியமான யோகா வகைகளில் ஒன்றாக ஹட யோகா உள்ளது. இது நிலையான உடல் அமைப்பை (போஸ்) பெரிதும் வலியுறுத்துவதால், ஒப்பீட்டளவில் பயிற்சிகள் மெதுவாக செய்யப்படுகிறது.
யோகா பயில்வதில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு ஹட யோகா போஸ்கள், மற்றும் சுவாசப் பயிற்சிகளில் நிறைவான தேர்ச்சிநிலையை பெற வாய்ப்பளிக்கிறது.
கூடுதலாக, ஹட யோகா போஸ்களில் நீண்ட நேரம் இருக்க வேண்டியிருப்பதால், அதற்கு உங்களது முழு கவனம் அவசியமாகிறது. இது உங்கள் மனதின் கவனச்சிதறலைக் குறைத்து ஒருநிலைப்படுத்துகிறது.
எனவே ஹட யோகாவின் நன்மைகளை முழுமையாகப் பெறலாம், குறிப்பாக அதை இளம் வயதிலேயே தொடங்கும்பட்சத்தில்.
ஹட யோகா பற்றிய சுருக்கம்
ஹட யோகா உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட ஒரு பயிற்சியாளரிடம் நீங்கள் ஹட யோகாவை கற்றுக்கொண்டால், இது உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
"சந்திரன் மெதுவாக நகர்ந்தாலும், அது ஊரை முழுதாகக் கடக்கிறது" என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உள்ளது; அது போல யோகா சில நேரங்களில் மெதுவான பயிற்சியாகத் தோன்றலாம், ஆனால் காலப்போக்கில், நீங்கள் அதன் நன்மைகளை அதிவேகமாக பெறத் தொடங்குவீர்கள்.