Star Health Logo

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி

We have the answer to your happy and secure future

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி  IRDAI UIN: SHAHLIP22035V062122
ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் (ஃப்ளோட்டர்) இன்சூரன்ஸ் பாலிசி UIN: SHAHLIP22034V062122

முக்கியமானவை

அவசியமானவற்றை திட்டமிடுக

essentials

டாப்-அப் பாலிசி

ஏதுவான பிரீமியத்தில் கூடுதல் கவரேஜ் தொகையைப் பெற, தற்போதுள்ள பாலிசியுடன் இந்த டாப்-அப் பாலிசியையும் தேர்வு செய்யலாம்.
essentials

ஏதுவான பாலிசி

இந்த பாலிசியை தனிநபர் அல்லது 7 பேர் கொண்ட குடும்பமாக ஃப்ளோட்டர் அடிப்படையில் (அதாவது 2A, 2A+1C, 2A+2C, 2A+3C, 1A+1C, 1A+2C, 1A+3C) தேர்ந்தெடுக்கலாம்.
essentials

நீண்ட காலம் கொண்ட பாலிசிக்கான தள்ளுபடி

பாலிசியை 2 வருட காலத்திற்குத் தேர்வுசெய்தால், பிரீமியத்தில் 5% தள்ளுபடியைப் பெறலாம்.
essentials

உடல் நல பரிசோதனை

இந்தக் பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயமில்லை
essentials

தவணை விருப்பங்கள்

இந்த பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.
essentials

தனிப்பட்ட நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம்.
essentials

ஃப்ளோட்டர் நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். குழந்தைகளுக்கு 91வது நாளிலிருந்து 25 வயது வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
விரிவான பட்டியல்

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

பொதுவான அம்சம்

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒன்று அல்லது இரண்டு வருட காலத்திற்குப் பெறலாம்.

வாழ்நாள் முழுவதுமான புதுப்பித்தல்

இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனை வழங்குகிறது.

தனிநபர் திட்டம் (கோல்டு)

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும்.

அறை வாடகை

மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் தனியார் ஆம்புலன்ஸ் உட்பட ஆம்புலன்ஸ் கட்டணங்கள் ஒவ்வொரு பாலிசி காலத்திலும் ரூ.3000/-.வரை கவர் செய்யப்படும்.

ஏர் ஆம்புலன்ஸ்

ரூ.7 லட்சம் அதற்கு அதிகமாக கவரேஜ் தொகை இருக்கும் பட்சத்தில், அதில் 10% வரை ஏர் ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு கவர் செய்யப்படும்.

நவீன சிகிச்சை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளுக்கு உட்பட்டு, உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சை செலவுகள் அல்லது டே கேரில் தரப்படும் நவீன சிகிச்சை செலவுகள் கவராகும்.

மகப்பேறு செலவுகள்

அதிகபட்சம் இரண்டு பிரசவங்கள் வரை, சிசேரியன் உட்பட பிரசவ செலவுகள் தலா ஒருமுறைக்கு ரூ. 50,000/- வரை கவர் செய்யப்படும். 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு இந்த பலனை பெற முடியும்.

உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்

காப்பீடு செய்த நபர் உறுப்பு பெறுபவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கான செலவுகள், காப்பீட்டுத் தொகையின் இருப்புக்கு உட்பட்டு செலுத்தப்படும்.

ரீசார்ஜ் நன்மை

மீதமுள்ள பாலிசி காலத்திற்கான கவரேஜ் தொகை தீர்ந்தால், குறிப்பிட்ட வரம்புகள் வரை பாலிசி காலத்தில் ஒருமுறை கூடுதல் இழப்பீடு வழங்கப்படுகிறது.

வெல்னஸ் சேவைகள்

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்த நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டதே இந்த வெல்னஸ் திட்டங்களாகும்.

ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன்

நிறுவனத்தின் நிபுணர் குழுவிடமிருந்து ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி, காப்பீடு செய்த நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

வரையறுக்கப்பட்ட வரம்பு

வரையறுக்கப்பட்ட வரம்பு என்பது பாலிசி காலத்தில் நிறுவனம் பொறுப்பேற்காத தொகையை குறிப்பிடுவது ஆகும்.

தனிநபர் திட்டம் (சில்வர்)

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும்.

அறை வாடகை

மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவை ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை கவர் செய்யப்படும்.

நவீன சிகிச்சை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும்.

விலக்கு

விலக்கு என்பது ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிறுவனம் பொறுப்பேற்காத தொகையாகும்.

ஃப்ளோட்டர் பிளான் (கோல்டு)

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும்.

அறை வாடகை

மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.

ஏர் ஆம்புலன்ஸ்

ரூ.10 லட்சம் அதற்கு அதிகமாக கவரேஜ் தொகை இருக்கும் பட்சத்தில், அதில் 10% வரை ஏர் ஆம்புலன்ஸ் செலவுகளுக்கு கவர் செய்யப்படும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் தனியார் ஆம்புலன்ஸ் உட்பட ஆம்புலன்ஸ் கட்டணங்கள் ஒவ்வொரு பாலிசி காலத்திலும் ரூ.3000/-.வரை கவர் செய்யப்படும்.

நவீன சிகிச்சை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும்.

மகப்பேறு செலவுகள்

அதிகபட்சம் இரண்டு பிரசவங்கள் வரை, சிசேரியன் உட்பட பிரசவ செலவுகள் தலா ஒருமுறைக்கு ரூ. 50,000/- வரை கவர் செய்யப்படும். 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு இந்த பலனை பெற முடியும்.

உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்

காப்பீடு செய்த நபர் உறுப்பு பெறுபவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கான செலவுகள், காப்பீட்டுத் தொகையின் இருப்புக்கு உட்பட்டு செலுத்தப்படும்.

ரீசார்ஜ் நன்மை

மீதமுள்ள பாலிசி காலத்திற்கான கவரேஜ் தொகை தீர்ந்தால், குறிப்பிட்ட வரம்புகள் வரை பாலிசி காலத்தில் ஒருமுறை கூடுதல் இழப்பீடு வழங்கப்படுகிறது. இது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

ஆன்லைன் மருத்துவ கன்சல்டேஷன்

நிறுவனத்தின் நிபுணர் குழுவிடமிருந்து ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி, காப்பீடு செய்த நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும்.

வெல்னஸ் சேவைகள்

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காப்பீடு செய்த நபரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டதே இந்த வெல்னஸ் திட்டங்களாகும்.

வரையறுக்கப்பட்ட வரம்பு

வரையறுக்கப்பட்ட வரம்பு என்பது பாலிசி காலத்தில் நிறுவனம் பொறுப்பேற்காத தொகை.

ஃப்ளோட்டர் பிளான் (சில்வர்)

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும்.

அறை வாடகை

மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்படும் போது, அறை (தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவை ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை கவர் செய்யப்படும்.

நவீன சிகிச்சை

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன சிகிச்சை செலவுகள் கவராகும்.

விலக்கு

விலக்கு என்பது ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிறுவனம் பொறுப்பேற்காத தொகையாகும்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

star-health
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
star-health
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
star-health
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
star-health
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
star-health
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us

கூடுதல் தகவல்கள் தேவையா?

Get Insured

உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி / ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் (ஃப்ளோட்டர்) இன்சூரன்ஸ் பாலிசி

 

"இன்சூரன்ஸ் ஆஃப் ஹெல்த் ஈஸ் வெல்த்" என்பது இன்றைய நமது வேகமான உலகில் ஒரு முக்கிய வார்த்தையாக மாறியுள்ளது. நமது மனம் மற்றும் உடல் குறித்து நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும், வாழ்க்கையின் எந்த நேரத்திலும் ஆரோக்கியம் சார்ந்த அவசரநிலை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளுக்கு நீங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, நீங்கள் நோய்/காயத்தை எதிர்கொள்ளும் போது சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவுகிறது. உங்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலும், உங்கள் மருத்துவக் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கும் போது, 5-10 லட்சம் கவரேஜ் தொகை என்பது போதுமானதாக இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உங்கள் வழக்கமான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்திற்கு துணையாகச் செயல்படுகிறது. இந்தத் திட்டம் உங்களது தற்போதைய ஹெல்த் பாலிசிக்கு கூடுதல் கவரேஜ் தருகிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில், உங்களது தற்போதைய பாலிசி அதன் வரம்பை கடந்த பிறகு, டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்

 

ஸ்டார் ஹெல்த் வழங்கும் சூப்பர் சர்பிளஸ் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு கோடி ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை மலிவு பிரீமியத்தில் வழங்கும் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமாகும். இது மற்ற அடிப்படை திட்டங்களை விட பரந்த பாதுகாப்புடன் வருகிறது. இந்த பாலிசியானது மூன்று மாதங்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு தனிநபர் மற்றும் மிதவை அடிப்படையில் கிடைக்கும்.

 

இந்த பாலிசி கோல்டு மற்றும் சில்வர் திட்டங்களாக பயனர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. இந்த பாலிசியின் கீழ் காத்திருக்கும் காலம் முறையே 12 மாதங்கள் மற்றும் 36 மாதங்கள் ஆகும். இந்த பாலிசி காலம் ஒரு வருடம்/2 ஆண்டுகள் என்று உள்ளது. வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கக்கூடிய வசதியும் இந்த பாலிசியில் உள்ளது.

சூப்பர் சர்ப்ளஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அம்சங்கள்

 

வரிசை எண்பொருள்
 
Criteria
1.தகுதி18-65 வயது
2.பிள்ளைகள்91 நாட்கள் முதல் 25 வயது வரை
3.பாலிசி காலம்1/2 ஆண்டுகள்
4.பிளான் ஆப்ஷன்ஸ்சில்வர் / கோல்டு பிளான்
5.சில்வர் பிளான் கீழ் ஒவ்வொரு க்ளைம் போதும், விலக்கு வரம்பிற்கு மேல் நிறுவனம் செலுத்தும்சில்வர்கவரேஜ் தொகைகழிக்க வேண்டிய தொகை
தனிநபர்7 லட்சம் / 10 லட்சம்3 லட்சம்
ஃப்ளோட்டர்10 லட்சம்3 & 5 லட்சம்
தங்கத் திட்டத்தின் கீழ் பாலிசி ஆண்டில் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறிய அனைத்து உரிமைகோரல்களின் மொத்த தொகையையும் நிறுவனம் செலுத்தும்.கோல்டுகவரேஜ் தொகைவரையறுக்கப்பட்ட வரம்பு
தனிநபர்5 / 10 / 15 / 20 / 25 /50 / 75/ 100 லட்சம்3 / 5 /10 / 15 / 20 /25 லட்சம்
ஃப்ளோட்டர்
6.பாலிசி வகைதனிநபர் / ஃப்ளோட்டர்
7.தவணை வசதி காலாண்டு / அரையாண்டு
8.தள்ளுபடிகள்இரண்டு வருட பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே 5 சதவீதம் தள்ளுபடி
9.புதுப்பித்தல்வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் ஆப்ஷன்
10.காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைதேவையில்லை

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கவரேஜ் / ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் (ஃப்ளோட்டர்) இன்சூரன்ஸ் பாலிசி

 

கோல்டு மற்றும் சில்வர் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிக்கான விரிவான கவரேஜை வழங்குகிறது.

இந்த பலன்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது

 

தனிநபர் பிளான் (சில்வர்)

 

  1. மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகள் - அறை வாடகை, தங்குமிடம் மற்றும் நர்சிங் செலவுகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.4000 வரை செலவாகும். அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம், மயக்க மருந்து செலுத்துபவர், மருத்துவர், ஆலோசகர்கள், சிறப்புக் கட்டணம், இரத்தம், ஆக்ஸிஜன், ICU கட்டணங்கள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற பிற செலவுகளும் கவர் ஆகின்றன.
  2. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஏற்பட்ட செலவுகள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்கள் முன்பு வரை ஏற்பட்ட செலவுகள் கவர் செய்யப்படும்.
  3. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகான செலவுகள்- டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 60 நாட்கள் வரை ஏற்படும் செலவுகள் கவராகும்.
  4. நவீன சிகிச்சைக்கான கவரேஜ் - பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்பு வரை, குறிப்பிட்ட நோய்க்கான நவீன/மேம்பட்ட சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படுகிறது.

 

தனி நபர் பிளான் (கோல்டு) 

 

  1. மருத்துவமனை செலவுகள் - மருத்துவமனையால் வழங்கப்படும் அறை (ஒற்றை தனியார் ஏசி அறை) தங்குமிடம் மற்றும் சிகிச்சை செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம், மயக்க மருந்து நிபுணர், மருத்துவர், ஆலோசகர்கள், சிறப்புக் கட்டணம், இரத்தம், ஆக்ஸிஜன், ICU கட்டணங்கள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற பிற செலவுகளும் ஈடுசெய்யப்படுகின்றன.
  2. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய செலவுகள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 60 நாட்கள் முன்பு வரையிலான செலவுகள் கவர் செய்யப்படும்
  3. டிஸ்சார்ஜுக்கு பிறகான செலவுகள்- டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 90 நாட்கள் வரை ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படும்.
  4. நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜ் - பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன/ மேம்பட்ட சிகிச்சை செலவுகள் கவராகும்.
  5. எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் கட்டணம் - அவசர காலத்தில் காப்பீடு செய்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு, ஒவ்வொரு பாலிசி காலத்திலும் ரூ.3000 வரை கவர் செய்யப்படும்.
  6. ஏர் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் - ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலத்திற்கான கவரேஜ் தொகையில் 10 சதவீதம் வரை கவர் செய்யப்படும் (ரூ. 700000 மற்றும் அதற்கு மேற்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு மட்டுமே இது பொருந்தும்).

 

ஃப்ளோட்டர் பிளான் (சில்வர்) 

 

  1. மருத்துவமனை செலவுகள் - அறை, தங்குமிடம் மற்றும் நர்சிங் செலவுகள் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ரூ.4000 வரை கவராகும். அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம், மயக்க மருந்து நிபுணருக்கான கட்டணம், மருத்துவப் பயிற்சியாளர், ஆலோசகர்கள், சிறப்புக் கட்டணம், இரத்தம், ஆக்ஸிஜன், ICU கட்டணங்கள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற பிற செலவுகளும் கவராகும்.
  2. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய செலவுகள்- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்கள் முன்பு வரை ஏற்படும் செலவுகள் பாதுகாக்கப்படும்.
  3. டிஸ்சார்ஜுக்கு பிறகான செலவுகள் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 60 நாட்கள் வரை ஏற்படும் செலவுகள் கவராகும்.
  4. நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜ் - பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன/ மேம்பட்ட சிகிச்சை செலவுகள் கவராகும்.

 

ஃப்ளோட்டர் பிளான் (கோல்டு)

 

  1. மருத்துவமனை செலவுகள் - மருத்துவமனையால் வழங்கப்படும் அறை (ஒற்றை தனியார் ஏசி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம், மயக்க மருந்து நிபுணரின் கட்டணம், மருத்துவப் பயிற்சியாளர், ஆலோசகர்கள், சிறப்புக் கட்டணம், இரத்தம், ஆக்ஸிஜன், ICU கட்டணங்கள், ஆபரேஷன் தியேட்டர் கட்டணம், மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற பிற செலவுகளும் கவராகும்.
  2. டிஸ்சார்ஜுக்கு பிறகான செலவுகள் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 90 நாட்கள் வரை ஏற்படும் செலவுகள் கவராகும்.
  3. டிஸ்சார்ஜுக்கு பிறகான செலவுகள் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு 90 நாட்கள் வரை ஏற்படும் செலவுகள் கவராகும்.
  4. நவீன சிகிச்சைகளுக்கான கவரேஜ் - பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளின் அளவிற்கு நவீன/ மேம்பட்ட சிகிச்சை செலவுகள் கவராகும்.
  5. எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் கட்டணம் - அவசர காலத்தில் காப்பீடு செய்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு, ஒவ்வொரு பாலிசி காலத்திலும் ரூ.3000 வரை கவர் செய்யப்படும்.
  6. எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் கட்டணம் - அவசர காலத்தில் காப்பீடு செய்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு, ஒவ்வொரு பாலிசி காலத்திலும் ரூ.3000 வரை கவர் செய்யப்படும்.
  7. ஏர் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் - ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலத்திற்கான கவரேஜ் தொகையில் 10 சதவீதம் வரை கவர் செய்யப்படும் (ரூ. 1000000 மற்றும் அதற்கு மேற்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு மட்டுமே இது பொருந்தும்).

டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

 

டாப்-அப் பிளான் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவ காப்பீட்டு நிபுணர் கூறுகிறார். உதாரணமாக, தற்போதைய நோய்த்தொற்று காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், ஒரு டாப்-அப் பிளானை வாங்குவதன் மூலம், உங்கள் தற்போதைய அடிப்படை மருத்துவ காப்பீட்டுத் தொகையை விட அதிகமான பலன் பெற முடியும். இந்த டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் என்பது உங்களது தற்போதைய பாலிசி தீர்ந்துவிடும் பட்சத்தில், கூடுதல் காப்பீட்டை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிசியில் சேர்க்கப்பட்டவை மற்றும் விலக்குகள் என்னென்ன?

 

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசியில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (கவரேஜ்) மற்றும் சில விலக்குகளும்  (கவரேஜ் இல்லாதது) உள்ளன.  அவை பின்வருமாறு:

 

கவர் செய்யப்படும் அம்சங்கள்

 

  1. சூப்பர் சர்ப்ளஸ் கோல்டு பிளான் குறிப்பிட்ட வரம்புகள் வரை மகப்பேறுக்கான கவரேஜை வழங்குகிறது.
  2. தனிநபராக ரூ.7 லட்சத்துக்கு மேல் கவரேஜ் தொகையும், ஃப்ளோட்டராக ரூ.10 லட்சத்துக்கு மேல் கவரேஜ் தொகையும் உள்ளவர்களுக்கு, அதில் 10% ஏர் ஆம்புலன்ஸ் கட்டணத்தில் கவர் செய்யப்படும்.
  3. உறுப்பு தானம் அளிப்பவரின் செலவுகளுக்கான கவரேஜ்
  4. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செலவுகளுக்கான கவரேஜ்.
  5. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு மற்றும் டிஸ்சார்ஜூக்கு பிறகான செலவுகளும் கவராகும்
  6. அனைத்து டே-கேர் பராமரிப்பு நடைமுறைகள் அல்லது சிகிச்சை (தங்க திட்டத்தின் கீழ்) செலவுகள் கவராகும்.
  7. சூப்பர் சர்ப்ளஸ் சில்வர் பிளான் கீழ் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான கவரேஜ் 36 மாதங்களாகும். மேலும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 24 மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.
  8. சூப்பர் சர்ப்ளஸ் கோல்டு பிளான் கீழ், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான கவரேஜ் 12 மாதங்களாகும். மேலும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 12 மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.

 

விலக்குகள்

 

பின்வருபவை பாலிசி விலக்குகளின் பட்டியலாகும். பாலிசி ஆவணத்தில் அனைத்து விலக்குகளின் விரிவான பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.

 

  1. போர், உள்நாட்டுப் போர், உயிரியல் போர் போன்றவற்றால் ஏற்படும் ஏதேனும் நோய்/காயம் ஆகியவற்றுக்கான செலவுகள் கவர் ஆகாது.
  2. தற்கொலை முயற்சிகள் போன்ற தானாக ஏற்படுத்திக் கொள்ளும் காயங்கள்
  3. வாக்கர்ஸ் / சக்கர நாற்காலிகளின் செலவுகள்.
  4. எடை குறைப்பு அறுவை சிகிச்சை தொடர்பான செலவுகள்
  5. விபத்தின் காரணமாக இல்லாமல் தானாக மேற்கொள்ளும் காஸ்மெட்டிக் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செலவுகள் கவர் ஆகாது.
  6. பாலின சிகிச்சைகள் மற்றும் பாலியல் காரணமாக பரவிய நோய்கள் தொடர்பான செலவுகள்

சூப்பர் சர்ப்ளஸ் பாலிசியின் கூடுதல் நன்மைகள் என்ன?

 

1. கூடுதல் கவரேஜ்

 

இந்த சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி, உங்களது அடிப்படை காப்பீடு திட்டம் தீரும் பட்சத்தில், கூடுதல் கவரேஜை வழங்கும் டாப்-அப் திட்டமாக செயல்படுகிறது. ஏதுவான பிரீமியத்தில் அதிக காப்பீட்டுத் தொகையுடன் இந்த பிளான் உள்ளது.

 

2. காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கிடையாது 

 

பொதுவாக ஒருவர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, முன் மருத்துவ பரிசோதனை எடுக்க காப்பீட்டாளரால் அறிவுறுத்தப்படுவார். இந்த சூப்பர் சர்ப்ளஸ் பாலிசிக்கு அப்படிப்பட்ட காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை.

 

3. இலவச ஆன்லைன் மருத்துவ ஆலோசனை

 

ஸ்டார் ஹெல்த் வழங்கும் "டாக் டு ஸ்டார்" என்ற பிரத்யேக அம்சம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கான இலவச ஆலோசனை வரிசையாகும். உங்கள் உடல்நிலை குறித்து தொலைபேசியில் இலவச மருத்துவ ஆலோசனை பெற எங்கள் உள் மருத்துவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

4. வரி நன்மைகள்

 

சூப்பர் சர்ப்ளஸ் கீழ், ரொக்கமாக செலுத்தியதைத் தவிர வேறு எந்த முறையிலும் செலுத்தப்பட்ட பிரீமியம், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80D இன் கீழ் வரிச் சலுகைக்கு தகுதியுடையதாகும்.

 

5. ஃப்ரீ-லுக் பீரியட்

 

பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஃப்ரீ-லுக் காலத்தை இந்த பாலிசி வழங்குகிறது. எனினும், இந்த அம்சம் போர்ட்டபிலிட்டி, மைக்ரேஷன் மற்றும் புதுப்பித்தல்களுக்குப் பொருந்தாது.

 

6. சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பிளானுக்கான க்ளைமை எவ்வாறு பதிவு செய்வது?

 

ஸ்டார் ஹெல்த் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் இல்லாத க்ளைம் செட்டில்மெண்ட்டை வழங்குகிறது. உங்கள் வசதிக்கேற்ப க்ளைம் பதிவுசெய்ய இரண்டு வழிகள் உள்ளன.

FAQ's

சூப்பர் சர்ப்ளஸ் சில்வர் ப்ளான் கீழ், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம் 36 மாதங்கள் ஆகும். மேலும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 24 மாதங்கள் ஆகும். சூப்பர் சர்ப்ளஸ் கோல்டு ப்ளான் கீழ், ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 12 மாதங்கள் ஆகும்.