New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
DND Registration

மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு

மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு என்பது மூத்த குடிமக்கள் தங்கள் முதுமைப் பருவத்தில் அவர்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் நிதிச் செலவுகளை ஈடுகட்ட வடிவமைக்கப்பட்ட, ஒரு வகையான சுகாதார காப்பீடு ஆகும். மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பல நன்மைகளை வழங்கக்கூடும்.  

India +91✓

IRDAI UIN: SHAHLIP26041V082526

HIGHLIGHTS

Plan Essentials

purple essential logo 3

ஏதுவான காப்பீட்டுத் தொகை

தனிநபர் அடிப்படையில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை - 1/2/3/4/5/7.5/10/15/20/20/25 லட்சம் மற்றும் ஃப்ளோட்டர் (தனி நபர் மற்றும் மனைவி) அடிப்படையில் - 10/15/20/25 லட்சம்.

purple essential logo 3

நவீன சிகிச்சை

வாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா விட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும்.

purple essential logo 3

பிரீமியம் தள்ளுபடிகள்

பாலிசியை ஆன்லைனில் வாங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் 5% தள்ளுபடி பெறலாம். கூடுதலாக, பாலிசியை வாங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன் 45 நாட்களுக்குள் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட ஆரோக்கியமான நபர்களுக்கு 10% தள்ளுபடி பொருந்தும்.

purple essential logo 2

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருக்கும் காலம்

ஏற்கனவே இருக்கும் நோய்கள் (PED) மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த பாலிசியின் கீழ் 12 மாதங்களுக்குப் பிறகு காப்பீடு செய்யப்படும்.

purple essential logo 2

வெளிநோயாளருக்கான கன்சல்டேஷன்

நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான மருத்துவ ஆலோசனை, பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும்.

purple essential logo 3

நுழைவு வயது

60 முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள், நிலையான பிரீமியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனுடன் இந்த பாலிசியைப் பெறலாம்.

purple essential logo 3

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயமில்லை.

purple essential logo 4

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.

Detailed List

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.

காப்பீட்டுத் தொகை

ரூ. 1,00,000/-, ரூ. 2,00,000/-, ரூ. 3,00,000/-, ரூ. 4,00,000/-, ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- , ரூ. 10,00,000/-, ரூ. 15,00,000/-, ரூ. 20,00,000/- மற்றும் ரூ. 25,00,000/- ஆகியவை இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான ஆப்ஷன்களாகும். அதுமட்டுமின்றி, காப்பீட்டுத் தொகை ரூ. 10,00,000/- முதல் ரூ. 25,00,000/- வரை ஃப்ளோட்டர் அடிப்படையில் கிடைக்கிறது.

உள்நோயாளராக அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் கவர் செய்யப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவர் செய்யப்படும்.

டிஸ்சார்ஜூக்கு பிறகு

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகான மருத்துவச் செலவுகள் 7% வரை கவராகும்.

அறை வாடகை

தேர்வு செய்யப்பட்ட அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு, உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை வாடகை , தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 10,000/- வரை கவர் செய்யப்படும்.

ஐசியூ கட்டணங்கள்

ரூ.10 லட்சம் வரை எடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில், 2% வரை ICU கட்டணமாக கவர் செய்யப்படும். மேலும் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு ICU கட்டணங்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வரை கவர் செய்யப்படும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் கவர் செய்யப்படும்.

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது.

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை 24 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவர் செய்யப்படும்.

கோ-பேமண்ட்

இந்த பாலிசியானது அனைத்து க்ளைம்ஸ்களுக்கும் 30% கோ-பேமண்ட் செலுத்துதலுக்கு உட்பட்டது.

உடல்நலப் பரிசோதனை

ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், நெட்வொர்க் மருத்துவமனைகளில் வருடாந்திர உடல்நல பரிசோதனைக்காக ஏற்படும் செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.

தவணை முறைகள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுதோறும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

அனைத்து திட்டங்களையும் பார்க்க
உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

கூடுதல் தகவல்கள் தேவையா?
கூடுதல் தகவல்கள் தேவையா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு

 

முதுமை - இது ஒரு இயற்கையான செயல்முறை. நமது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதுவொரு தனித்துவமான சவாலாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் மூத்த குடிமக்களாகக் கருதப்படுவார்கள். இந்தியாவின் முதல் லாங்கிட்யூடினல் ஏஜிங் ஆய்வின் (LASI) படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று மூத்த குடிமக்களில் இருவர் சில நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்படும் நோய்களில் இருதய நோய்கள் (CVD), நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் மற்றும் பல அடங்கும். உடல்நலப் பாதுகாப்புத் தேவைகள் என்பவை ஓய்வு பெற்றவர்கள் அறியாத மிகப் பெரிய விஷயமாக உள்ளது. மூத்த குடிமக்களாகிய உங்கள் நிதி நிலைமையில் இருந்து, இத்தகைய நாள்பட்ட நோய்களுக்கான நிலையான சிகிச்சையைப் பெறுவது, அதிகரித்து வரும் மருத்துவச் செலவு காரணமாக உங்கள் சேமிப்பை வீணாக்கலாம். மேலும் இது நீங்கள் வகுத்திருந்த ஓய்வூதிய திட்டத்தை கடினமாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட உடல்நல தேவைகளைப் பூர்த்தி செய்ய மருத்துவ காப்பீடு தேவைப்படுகிறது. எனவே, உங்கள் உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளைத் தணிக்கும் சரியான மற்றும் பயனுள்ள மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டத்துடன் உடனடியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு பயனுள்ள அணுகுமுறையுடன் வழங்குகிறது. இந்தத் திட்டம் 60 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

 

இந்த மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டமானது, மூத்த குடிமக்களுக்கான சிறந்த பலன்களுடன் உள்ளது. இதில், நவீன சிகிச்சை மூலம் பெறும் பெரும்பாலான டே கேர் நடைமுறைகள் கவராகும். இரண்டாவது பாலிசி ஆண்டிலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.  இதன் பிரீமியம் தொகை நிலையானது, வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த பாலிசி தனிநபர்/ஃப்ளோட்டர் தொகை காப்பீடு அடிப்படையில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் சிறந்த பிரீமியம் கொண்ட பாலிசி இது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பாலிசியை வாங்கும் போது காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. அதேபோல், ​​பிரிவு 80டியின் கீழ் வரி விலக்கின் பலனையும் நீங்கள் பெறலாம்.

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது, ​​கீழே பட்டியலிடப்பட்டுள்ளபடி ஏராளமான பலன்களைப் பெறலாம்:

  • தனிநபர் அடிப்படையில் ரூ.25 லட்சம் வரையிலும், ஃப்ளோட்டர்  அடிப்படையில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலும் அதிக காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
  • நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளராக பெற்ற மருத்துவ ஆலோசனைகளுக்கான செலவுகளும் கவராகும்.
  • காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
  • ஏற்கனவே இருக்கும் நோய்கள் (PED) ஒரு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவர் செய்யப்படும்.
  • எங்களின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பெறும் டே கேர் சிகிச்சை நடைமுறைகள் மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் பணமில்லா மற்றும் ரீஇம்பர்ஸ்மெண்ட் முறையில் கவராகும்.
  • தற்போதைய வருமான வரி விதிகளின்படி செலுத்தப்பட்ட பிரீமியத்தின் மீதான வரிச் சலுகைகளைப் பெறும் பட்சத்தில், வருமான வரிச் சட்டத்தின் 80-D பிரிவின் கீழ் நிவாரணம் பெற தகுதியுண்டு.
  • வாழ்நாள் புதுப்பித்தல் ஆப்ஷனில் கூடுதல் நன்மை.
  • குறிப்பிட்ட மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பித்தால் பிரீமியத்தில் 10% தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
  • பாலிசியை ஆன்லைனில் வாங்குவதற்கு 5% தள்ளுபடி.
  • பிரீமியங்களை காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். நீங்கள் வருடாந்திர, இரண்டு வருட மற்றும் மூன்று வருட விதிமுறைகளில் பணம் செலுத்த விரும்பினாலும் அனுமதியுண்டு.

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, மூத்த குடிமக்களுக்கு உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், 60+ வயதுடையவர்களுக்கான சிறந்த பாலிசியாக தனது கவரேஜை விரிவு செய்கிறது.

டே கேர் நடைமுறைகள்

24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், மற்ற சிகிச்சைகள் மற்றும் டே கேர் நடைமுறைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் கவர் ஆகிறது.

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சை செலவுகள்

காப்பீட்டுத் தொகை வரம்பு வரை, உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சை செலவுகள் கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பும், பின்பும் ஏற்படும் செலவுகள்

நெட்வொர்க் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அதிகபட்சமாக 30 நாட்களுக்கு முந்தைய செலவுகள் கவர் செய்யப்படும்.

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை, டிஸ்சார்ஜுக்கு பின்பு ஏற்படும் செலவினங்களில் அதிகபட்சமாக 7% வரை கவராகும்.

நவீன சிகிச்சைகள்

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகள் வரை பலூன் சைனப்ளாஸ்டி, இம்யூனோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றை உள்ளடக்கிய பன்னிரண்டு நவீன சிகிச்சைகள் கவர் செய்யப்படுகின்றன.
 

வெளி நோயாளருக்கான செலவுகள்

ஒரு நெட்வொர்க் மருத்துவமனையில், வெளிநோயாளராக பெறும் எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கான செலவுகளில், ஒரு கன்சல்டேஷனுக்கு ரூ.200 என்ற வரம்பிற்குள் செலுத்தப்படும்.
 

வருடாந்திர உடல்நல பரிசோதனைகள்

நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், அதன் வரம்புகள் வரை உடல் நலப் பரிசோதனைக்கான செலவுகள் கவராகும்.

ஏற்கனவே இருக்கும் நோய் (PED)

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு, ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்க்கான சிகிச்சை கட்டணத்துக்கும் நீங்கள் க்ளைம் செய்யலாம். 

குறிப்பிட்ட நோய்/சில நோய்களுக்கான கவரேஜ்

சில குறிப்பிட்ட நோய்கள்/சிகிச்சைகளுக்கு 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு மட்டுமே இந்த பாலிசியில் கவராகும். காப்பீடு செய்யப்பட்ட ஆப்ஷன்கள் அடிப்படையில், குறிப்பிட்ட வரம்புகள் வரை கண்புரை அறுவை சிகிச்சைக்கான கட்டணம் கவராகும்.

ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர).

கீழே பட்டியலிடப்பட்டுள்ள சிகிச்சைகள் மற்றும் நிபந்தனைகள் இந்த 
மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டத்தில் விலக்கப்பட்டுள்ளது.

  • ஒப்பனை அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செலவுகள்
  • பாலின மாற்று அறுவை சிகிச்சை
  • தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட காயம்
  • ஆபத்தான அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்றதன் காரணமாக ஏற்படும் சிகிச்சை செலவுகள்
  • ஆல்கஹால் அல்லது போதைபொருள் பயன்படுத்தலில் இருந்து மீட்கும் சிகிச்சைகள்
  • பிறவி குறைபாடு / பாதிப்புகள் / முரண்பாடுகள்

அத்தகைய விலக்குகளின் விரிவான பட்டியலைப் பெற, இணையதளத்தில் உள்ள பாலிசி பிரிவு பக்கத்தை பார்க்கவும். 

60+ வயதானவர்கள் ஏன் ஸ்டார் ஹெல்த் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்

 

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஒரு காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்பிய மூத்த குடிமக்களுக்காக உடல்நல காப்பீடு திட்டங்களை வடிவமைக்கிறது. சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது முதியோர் சமூகத்திற்கு ஆதரவான ஒரு முழுமையான திட்டமாகும்.

பாலிசியை வாங்குவதில் மூத்த குடிமக்கள் அனுபவிக்க பல மதிப்புமிக்க நன்மைகள் உள்ளன:

 

  • நெட்வொர்க் மருத்துவமனையில் வெளிநோயாளராக பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான கவரேஜ்
  • காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
  • ஏற்கனவே இருக்கும் நோய்கள் (PED) ஒரு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவராகும்..
  • டே கேர் நடைமுறைகள் மற்றும் நவீன சிகிச்சைகளுக்கான முழு பாதுகாப்பு.

 

மூத்த குடிமக்களுக்கான க்ளைம்ஸ் மற்றும் குறைகள்

 

காப்பீட்டாளர்களுக்கு எதிராக புகார்கள் இருந்தால், பாலிசிதாரர்கள் கீழே உள்ள புகார்கள்/குறைகளைத் தீர்க்கும் லிங்கை க்ளிக் செய்து அணுகலாம்,

https://www.starhealth.in/grievance-redressal/

இ-மெயில்:gro@starhealth.in or grievances@starhealth.in

அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் காப்பீட்டாளரிடமிருந்து பதிலைப் பெறவில்லை என்றால் அல்லது நிறுவனத்தின் பதிலில் அதிருப்தி அடைந்தால், இங்கே தொடர்பு கொள்ளவும்

ஒருங்கிணைந்த புகார் மேலாண்மை அமைப்பு (IGMS) - IRDAI போர்டல், https://igms.irda.gov.in இல் புகார்களைப் பதிவுசெய்வதற்கு complaints@irdai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மேலும் கட்டணமில்லா எண் 155255 அல்லது 1800 4254 732-ஐ அழைக்கலாம்.

 

ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம் கிடைக்கும் வரிச் சலுகை

 

பாலிசியின் முக்கிய நன்மை என்னவென்றால், ரொக்கமாக செலுத்துவதைத் தவிர வேறு எந்த முறையில்  பிரீமியம் செலுத்தியிருந்தாலும், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80-D இன் கீழ், காப்பீடு செய்யப்பட்ட நபர் வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுபவர் ஆகிறார்.

FAQ's

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம், 1 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை அடிப்படையாகக் கொண்டது.

பிரீமியம் தொகை வரிகள் தவிர ரூ.4500/- முதல் 36,000/- வரை இருக்கும். 

15 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியத்தை வாங்குவதற்கான சிறந்த ஆப்ஷன் ரூ.29,000/- ஆகும். மேலும், பிரிவு 80D நன்மையைப் பெறுங்கள்.

இந்த பாலிசியின் கீழ் 3 காலக்கெடு விதிவிலக்குகள் அல்லது காத்திருப்பு காலங்கள் உள்ளன, அதாவது

  1. ஏதேனும் தொடக்கத்தில் ஏற்படும் நோய் - 30 நாட்கள் (விபத்துகள் முதல் நாளிலிருந்து கவராகும்)
  2. குறிப்பிட்ட சிகிச்சை - 24 மாதங்கள், அதாவது, கண்புரை, முதுகெலும்புக்கு இடைப்பட்ட வட்டு, ENT, கிட்னியில் கற்கள், ஹெர்னியா போன்றவை
  3. ஏற்கனவே இருக்கும் நோய்கள் - 12 மாதங்கள்

ஆரோக்கியமான நபர், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில், 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது
 


முன்மொழிபவர் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தால்:

ஸ்ட்ரெஸ் தாலியம் அறிக்கை
BP அறிக்கை
சர்க்கரை (இரத்தம் மற்றும் சிறுநீர்) (உணவுக்கு முன் / உணவுக்குப் பின்)
இரத்தத்தின் யூரியா & கிரியேட்டினைன்


இந்த சோதனைகள் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்கு முன் இருக்கக்கூடாது.


நாங்கள் டிஜிட்டல் (ஜீரோ-கான்டாக்ட்) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறோம்


முதல்முறை வாங்கும் போது மட்டும் 5% ஆன்லைன் கொள்முதல் தள்ளுபடி.

உடல்நலக் காப்பீட்டு பாலிசியின் கீழ் செலவுப் பகிர்வுத் தேவை. காப்பீடு செய்தவர் க்ளைம் போது, அதன் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். அனைத்து க்ளைம்களிலும், காப்பீடு செய்தவர் 30% தானே செலவு செய்து கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான காப்பீடு ஏன் தேவைப்படுகிறது, என்று சிலர் யோசிக்கலாம். அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடு அவசியம், ஆனால் மூத்த குடிமக்களுக்கான காப்பீடு தேவை என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.  

 

65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு ஏன் தேவைப்படுகிறது?

 

அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளுக்கு எதிரான நிதிப் பாதுகாப்பிற்காகவும், வயது தொடர்பான நோய்கள் மற்றும் நாள்பட்ட நிலைமைகளுக்கு தரமான சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதை உறுதிசெய்யவும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சுகாதாரக் காப்பீடு தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு ஏன் தேவைப்படுகிறது, என்பதற்கான சில காரணங்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

 

நிதிப் பாதுகாப்பு

வயதுக்கு ஏற்ப மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, சிகிச்சைகள், மருத்துவமனையில் தங்குதல் மற்றும் ஆலோசனைகளுக்கான அதிக செலவுகளுக்கு எதிராக, மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. 

 

தரமான பராமரிப்புக்கான அணுகல்

ஒரு மூத்த குடிமக்களுக்கான சிறந்த சுகாதார காப்பீடு என்பது பொதுவாக, வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை நிர்வகிக்க உதவும், பல மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான அணுகலை வழங்குகிறது. 

 

வயது தொடர்பான நோய்களுக்கான காப்பீடு

வயதுக்கு ஏற்ப பொதுவாகக் காணப்படும் வாழ்க்கை முறை நோய்கள் போன்ற நிலைமைகளுக்கு, மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டங்கள் ஒரு காப்பீடு தொகையை வழங்க உதவக்கூடும். 

 

நோய் தடுப்பு பராமரிப்பு 

பல மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடுத் திட்டங்கள், வழக்கமான சுகாதார பரிசோதனைகள் போன்ற நன்மைகளை வழங்குகின்றன, இது உடல்நல அல்லது சுகாதாரப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவி செய்து, சிகிச்சைக்கான ஒட்டுமொத்த செலவைக் குறைக்கக்கூடும். எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு திட்டத்தில், நோய் தடுப்பு பராமரிப்பு அம்சம் உள்ளதா என்பதை கண்டறிந்து உங்கள் காப்பீட்டை தேர்ந்தெடுக்கவும்.  

 

விரிவான காப்பீட்டின்(காம்ப்ரேஹென்சிவ் கவரேஜ்) நன்மைகள்

மூத்த குடிமக்களுக்கான சிறந்த சுகாதார காப்பீடு திட்டங்கள் சிலவற்று ,  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், நவீன சிகிச்சைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் ஒரு சில மாற்று மருத்துவ சிகிச்சைகள் (ஆயுஷ் சிகிச்சைகள்) உட்பட பல்வேறு செலவுகளை ஈடுகட்ட உதவுகின்றன. 

 

மன அமைதி

ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது, அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்பை தரக்கூடும் என்ற உறுதியை அளிக்கிறது. மேலும், இந்த 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு ஆண்டுகளில் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்த நேரம் அளிக்கிறது. 
 

மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு
Disclaimer:

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment. 
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in