Star Health Logo
தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

மெட்டர்னிட்டி ஹெல்த் இன்ஷூரன்ஸ்

உங்களது பிரசவத்திற்கான செலவுகளை காப்பீடு மூலம் பெறுங்கள்

We have the answer to your happy and secure future

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

 

 

இந்தியாவில் மகப்பேறு மருத்துவக் காப்பீடு 

 

புதிதாக பெற்றோராகும் தம்பதியர், ஒரு புதிய உயிரை உலகிற்கு கொண்டு வருவதென்பது கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கும் ஒரு தருணமாகும். “பெரிய ஆற்றலுடன், பெரிய பொறுப்பும் வருகிறது" என்ற மேற்கோளின்படி, ஒரு குழந்தைக்குப் பெற்றோராக மாறுவது என்பது ஒரு புதிய ஜீவனை பராமரிக்கும் பெரிய பொறுப்பையும் அதனுடன் கொண்டு வருகிறது. வாழ்க்கையில் அது ஒரு உற்சாகமான தருணமாக இருந்தாலும், நிச்சயமற்ற சூழ்நிலைகள் ஏற்படலாம், அதற்கு எப்போதும் தயாராக இருப்பது நல்லது.

 

அதிகரித்து வரும் மருத்துவம் செலவினங்கள் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்டணங்கள் ஆகியன ஒரு தம்பதியரின் நிதி நிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். இதன் விளைவாக, ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது; எனவே இனி நீங்கள் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

 

IRDAI-வின் கூற்றுப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நிகழும் சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம் உட்பட பிரசவத்தின் போது மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் ஆகியன மகப்பேறு செலவுகள் என்று அழைக்கப்படுகிறது. பாலிசி காலத்தில் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்வதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

 

அதிகரித்து வரும் செலவினங்களை எதிர்கொள்ள, குறிப்பாக மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மருத்துவரை சந்தித்து ஆலோசித்தல், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு போன்ற செலவுகளை எதிர்கொள்ள, பிரசவத்திற்கான காப்பீட்டு பலன்களை வழங்கக் கூடிய ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அவசியமாகிறது.

 

பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தை நன்கு பாதுகாக்கப்படுவதை, பிரசவத்திற்கான காப்பீட்டு பலன்களை வழங்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உறுதி செய்கிறது; குறிப்பாக பிரசவத்தின் போதும், குழந்தையின் ஆரம்ப வாழ்நாட்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்திலும் உதவுகிறது.

 

உங்களது வழக்கமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரசவத்திற்கான செலவுகளை ஈடு செய்யும் கவரேஜ் உங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது?

 

"ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் கிட்டத்தட்ட 41% இறப்புகள் புதிதாகப் பிறந்த குழந்தைகள், பிறந்து 28 நாட்களுக்குள்ளான குழந்தைகள், அல்லது பிறந்து நியோநேட்டல் காலத்தில் இருக்கும் குழந்தைகளிடையே நிகழ்கின்றன", என்று உலக சுகாதார அமைப்பு (WHO), பச்சிளம் குழந்தைகளின் இறப்பு மற்றும் நோய் பற்றிய அதன் அறிக்கையில் கூறுகிறது.

 

சுகப்பிரசவம் அல்லது C-செக்ஷன் பிரசவங்களின் சராசரி செலவு அதிகரித்து வருகிறது, மற்றும் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் அதற்கான செலவு ₹ 2 லட்சத்திற்கும் அதிகமாக செல்லலாம்.

 

இந்தியாவில் குறைவான மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களே இருந்தாலும், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸின் தனிநபர் மற்றும் குடும்ப நல ஃப்ளோட்டர் பாலிசிகளின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக - பிரசவத்தின்போதும், பிறந்த குழந்தைக்கும் ஆகும் செலவுகளை எங்கள் காப்பீடு ஈடுசெய்கிறது.

 

உங்கள் குடும்பத்திற்கான அல்லது மனைவிக்கான பிரசவ செலவுக்கான காப்பீட்டுடன் கூடிய ஒரு மெடிகிளைம் திட்டத்தை நீங்கள் வாங்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு அற்புதமான அம்சமாக இருக்கும். உங்கள் மருத்துவக் காப்பீட்டின் ஒரு பகுதியாக வழங்கப்படும் மகப்பேறு காப்பீடு, சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம் மற்றும்/அல்லது ஏதேனும் மருத்துவச் சிக்கல்கள் காரணமாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதனால்  ஏற்படும் செலவுகளையும் இந்த காப்பீடு ஈடுசெய்யும்.

 

பிரசவத்திற்கான காப்பீட்டுப் பலன்களுடன் நீங்கள் ஒரு மெடிகிளைம் பாலிசியை வாங்க திட்டமிட்டாலோ, அல்லது குடும்பத்திற்கான பாலிசிக்கு மாற விரும்பினாலோ - விரைவில் பெற்றோராகவிருக்கும் அந்த தம்பதியினருக்கு ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் சரியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கர்ப்பகாலம் அமைவதற்கான ஆதரவை வழங்குகிறது.

 

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அதற்குரிய மகிழ்ச்சி மற்றும் செலவுகளுடனே வரும் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். இந்த செலவுகள் புதிதாக பெற்றோராகுபவரின் நிதி மற்றும் நல்வாழ்வை பாதிக்கலாம்.

 

எனவே, கர்ப்ப காலத்திற்கு முன்பே மகப்பேறு தொடர்பான செலவுகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது முக்கியமாகிறது.

 

டெலிவரி செலவுகளையும் ஸ்டார் ஹெல்த் பாலிசிகள் கவர் செய்கிறதா?

 

திட்டத்தின் பெயர்ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்)ஸ்டார் விமென் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசிசூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்)ஸ்டார் சூப்பர் சர்ப்லஸ் (ஃப்ளோட்டர்) இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்)
ஆரம்ப வயதுபெரியவர்18- 65 ஆண்டுகள்18- 40 ஆண்டுகள்18 - 75 ஆண்டுகள்18 - 65 ஆண்டுகள்18 - 65 ஆண்டுகள்
சார்ந்திருக்கும் குழந்தை91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை91 நாட்கள் முதல் 25 ஆண்டுகள் வரை
மகளாக  திருமணமாகாமல் இருப்பின் / ஊதியம் ஈட்டாமல் இருப்பின் - 30 ஆண்டுகள் வரை
இன்ஷூரன்ஸ் தயாரிப்பின் வகைதனிநபர் / ஃப்ளோட்டர்தனிநபர் / ஃப்ளோட்டர்தனிநபர் / ஃப்ளோட்டர்தனிநபர் ஃப்ளோட்டர்
பாலிசி காலம்1 /2 /3 – ஆண்டுகள்1 /2 /3 – ஆண்டுகள்1 /2 /3 – ஆண்டுகள்1 /2 – ஆண்டுகள்1 /2 – ஆண்டுகள்
மொத்த காப்பீட்டுத் தொகை (S.I.) ரூ. (லட்சம்)5 / 7.5/ 10/ 15 / 20/ 25 / 50 / 75 / 100 லட்சம்தனிநபர் - 3 லட்சம்

 

5 / 10 / 15 /20 / 25 /50 / 100 லட்சம்

SI: 5 / 7 / 10 / 15 / 20 / 25 / 50 / 75 / 100 லட்சம்SI: 5 / 10 / 15 / 20 / 25 / 50 / 75 / 100 லட்சம்
வரையறுக்கப்பட்ட அளவு: 3 லட்சம்வரையறுக்கப்பட்ட அளவு: 3 / 5 / 10 / 15 / 20 / 25 லட்சம்
தனிநபர் & ஃப்ளோட்டர் - 5 /10 / 15 /20 /25 / 50 / 75 / 100 லட்சம்SI: 5 / 10 / 15 / 20 / 25 / 50 / 75 / 100 லட்சம் 
வரையறுக்கப்பட்ட அளவு: 5 / 10 / 15 / 20 / 25 லட்சம் 
கிளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டுக்குமான ஒட்டுமொத்த போனஸ் 100% S.I. வரை100% S.I. வரை100% S.I. வரைஇல்லைஇல்லை
கிளைம் செய்யாத ஒவ்வொரு ஆண்டுக்குமான ஒட்டுமொத்த போனஸ் உண்டு & 24 மாதங்கள்உண்டு & 36 மாதங்கள்உண்டுஉண்டு & 12 மாதங்கள்உண்டு & 12 மாதங்கள்
5 /10 லட்சம் S.I. தொகைக்கு 24 மாதங்கள்
15 லட்சம் மற்றும் அதற்கு மேலான S.I. தொகைக்கு 12 மாதங்கள்
மிட்-டெர்ம் இன்க்ளூஷன் (இடைக்காலத்தில் சேர்க்கும் அம்சம்)உண்டுஉண்டுஉண்டுஇல்லைஇல்லை

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி வித் டெலிவரி கவர்

 

காப்பீட்டின் பெயரில் உள்ளது போல, ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது உங்களது அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் விரிவான மற்றும் ஒட்டுமொத்த காப்பீட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருமே காப்பீடு செய்யப்படும்போது, ​​ பிரசவம் தொடர்பான தனித்துவமான பல காப்பீட்டுப் ஆதாயங்களை இந்தத் திட்டம் அவர்களுக்கு வழங்குகிறது. புதிதாகத் திருமணமான மனைவி, அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையை இடைக்காலத்தில் காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்ப்பதை, முறையாக தெரிவிப்பதைத் தொடர்ந்து, கூடுதல் பிரீமியத்தைச் செலுத்துவதன் மூலம் அனுமதிக்கிறது. பிரீமியம் செலுத்திய தேதியிலிருந்து காப்பீட்டால் பாதுகாக்கப்படுவது தொடங்குகிறது. குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்கள், 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு உள்நோயாளராக பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுதல், மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆகும் செலவுகளுக்கான காப்பீட்டைப் பெறலாம்.

 

குறிப்பு: பிரசவத்திற்காக காப்பீட்டை கிளைம் செய்ததைத் தொடர்ந்து இரண்டாவது பிரசவத்திற்காக 24 மாதங்கள் புதிதாக காத்திருப்பு காலமாக சேர்க்கப்படும்.

 

பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பின்வரும் செலவுகளுக்கு ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் காப்பீடு பெறலாம் 

 

  • பாலிசி செயல்பாட்டில் இருக்கும் போது பாலிசிதாரரின் வாழ்நாளில் அதிகபட்சம் இரண்டு பிரசவங்கள் வரை, சிசேரியன் உட்பட பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகள்.
  • சிசேரியன் உட்பட, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கு குறிப்பிடப்பட்ட தொகை வரம்பு வரை.
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனை/நர்ஸிங் ஹோமில் செய்யப்படும் செலவுகள், ஏதேனும் பிறவிக் குறைபாடுகள் உட்பட உடல்நல பாதிப்பு, மற்றும் விபத்து காயங்களுக்கான சிகிச்சைக்கு குறிப்பிடப்பட்ட தொகை வரம்பு வரை.
  • குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை தடுப்பூசி செலுத்தும் செலவுகள், குறிப்பிடப்பட்ட தொகை வரம்புகளுக்கு உட்பட்டு காப்பீட்டின் கீழ் வரும்.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்)

 

இளமைப்பருவத்தில் ஆரோக்கியமாக இருக்கும் போது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதென்பது தேவையற்ற ஒன்றாகத் தோன்றலாம். இருப்பினும், காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பது அவசியமாகும்; என்னெனில் நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளை, குறிப்பாக அவசரகாலத்தில் எதிர்கொள்ள வேண்டியதில்லை.

 

18 முதல் 40 வயது வரை உள்ள இள வயதினருக்கு அவர்களின் குறிப்பிட்ட மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒரு நல்ல தேர்வாகும். இத்திட்டமானது ஊக்கத்தொகையால்-வழிநடத்தப்படும் வெல்னஸ் புரோகிராம்கள், குறைவான காத்திருப்பு காலங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கு காப்பீடு அளிப்பது, ஒட்டுமொத்த போனஸ், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மொத்தக் காப்பீட்டுத் தொகையை தாமாக ரீஸ்டோர் செய்யும் வசதி போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

 

யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியானது உங்களது பிரசவ காலத்தில் உதவுவதற்காக உள்ளது. இந்த பாலிசியின் கீழ் கணவன்-மனைவி இருவரும் தொடர்ந்து 36 மாதங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால், இதன் கோல்டு ப்ளான், பிரசவம் மற்றும் பிரசவம் சார்ந்த காப்பீடு போன்ற பல தனித்துவமான ஆதாயங்களை வழங்குகிறது. பாலிசி துவங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான செலவுகளை இந்த காப்பீடு ஈடுசெய்கிறது.

 

குறிப்பு: இரண்டாவது பிரசவத்திற்காக புதிதாக 24 மாத காத்திருப்பு காலம் சேர்க்கப்படும்.

 

பின்வரும் பிரசவ செலவுகள் யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் (கோல்டு ப்ளான்) கீழ் ஈடு செய்யப்படும்

 

  • சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் உட்பட, பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு, ஒரு பிரசவத்திற்கு அதிகபட்சம் ₹ 30000/- வீதம் காப்பீடு வழங்கப்படும்,  மற்றும் பாலிசி செயலில் இருக்கும் போது, ​​பாலிசிதாரரின் வாழ்நாளில் அதிகபட்சம் இரண்டு பிரசவங்கள் வரை இந்த பாலிசியின் கீழ் பலனைப் பெறலாம்.
  • சிசேரியன் உட்பட, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கு, ரூ. 30,000/- வரை காப்பீடு வழங்கப்படும்.
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கான காப்பீடானது, உகந்த முன்னறிவிப்புடன் பாலிசியின் கீழ் குழந்தையைச் சேர்த்த பிறகு, பிறந்த 91-வது நாளிலிருந்து துவங்குகிறது.

 

ஸ்டார் வுமென் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

பெண்களும், சிறுமிகளும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து, தங்கள் திறனை எட்டும் போது, ​​ஒட்டுமொத்த சமூகமும் பயனடைகிறது. பெண்களின் ஆரோக்கியம் என்பது வெறும் பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல. பெண்கள் வழக்கமான பராமரிப்பாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் போன்ற பாலின பாகுபாட்டுடன் கூடிய பொறுப்புகளில் மட்டும் இருந்த அந்த நாட்கள் கடந்து விட்டன. காலப்போக்கில், பெண்கள் உலகளாவிய தலைவர்களாக உருவெடுத்து அதிகாரமும் பெற்றனர். சமீபகாலமாக, பெண்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கும், சிரமமின்றி தங்கள் பணியை சமநிலைப்படுத்துவதற்கும் கடினமாக உழைக்கிறார்கள். மேலும் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் பணிசார் ஆர்வம் கொண்டவர்களாவும், தீர்மானங்களை எடுக்கும் பதவிகளிலும் இருப்பவர்களாக உருவாகிறார்கள். பெண்களின் ஆரோக்கியம் என்று வருகையில், ​​அவர்கள் பாதுகாப்பை நாடுவதையும், முன்னெச்சரிக்கையாக இருப்பதையும் புறக்கணிக்கிறார்கள். ஒரு கடுமையான நோய் தாக்கும் போது, ​​அவர்கள் தங்கள் நிதி சுதந்திரத்தையும் பணிசார் வாழ்க்கையையும் கைவிட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

 

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது பெண்களை மையமாகக் கொண்ட ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்; இது குழந்தைகள் மற்றும் கணவருடன் உள்ள பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது. இந்த காப்பீட்டுத் திட்டமானது 18 - 75 வயதுக்குட்பட்ட நபர்களுக்குக் கிடைக்கும். இந்த காப்பீட்டுத் திட்டம் மகப்பேறு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீடு, கருப்பையில் உள்ள கருக்குழந்தை அறுவை சிகிச்சைகள், உதவியுடன் கூடிய மகப்பேறு சிகிச்சைகள் போன்ற பலவிதமான சிகிச்சைகளுக்கு நிதி உதவியை வழங்குகிறது; இது மகளிர் மேம்பாட்டில் அக்கறை காட்டுவதில் ஒரு பகுதியாக உள்ளது. மகப்பேறு மற்றும் பெண் குழந்தைகளுக்கான காப்பீட்டு காத்திருப்பு காலங்கள் போன்ற இதர புதுப்பித்தல் நன்மைகள் இதில் உள்ளன.

 

பின்வரும் மகப்பேறு செலவுகள் ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படும்

 

  • சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் மூலம் செய்யப்படும் குழந்தை பிறப்பிற்கான பிரசவ செலவுகள் 
  • ரூ. 25,000/- வரை ரூ. 1,00,000/-
  • கருவுறாமைக்கான உதவியுடன் கூடிய மகப்பேறு சிகிச்சை பாலிசியின் கீழ் வரும்.
  • இன்-யூட்ரோ ஃபெடல் அறுவை சிகிச்சைகளுக்கு மொத்த காப்பீட்டுத் தொகை வரை கிடைக்கும்
  • குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளுக்கு மொத்த காப்பீட்டுத் தொகை வரை கிடைக்கும்
  • 12 வயது வரை குழந்தைக்கு, வருடத்திற்கு நான்கு முறை குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளுக்கு ஒரு ஆலோசனைக்கு ரூ.500/- வீதம் காப்பீடு வழங்கப்படும்
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மெட்டபாலிக் பரிசோதனைக்கு ரூ.3500/- வரை ஒருமுறை காப்பீடு வழங்கப்படும்
  • மகப்பேறுக்கு முந்திய பராமரிப்புக்கான, கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்கான வெளி-நோயாளர் ஆலோசனைகளுக்கு காப்பீடு கிடைக்கும்.

 

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்)

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒரு டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமாகும், இது உங்களது வழக்கமான காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டுத் தொகை போதாத போது உங்கள் மருத்துவமனை செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது. கோல்டு ப்ளான் திட்டத்தின் கீழ் பாலிசி காலம் 1 வருடம் மற்றும் 2 வருடங்கள் ஆகும், மற்றும் வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி உண்டு. இந்த டாப்-அப் திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய நன்மைகளுள் - ஒரு நாளுக்கு உட்பட்ட அனைத்து சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள், உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்தல், பிரசவ செலவுகள், உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள் மற்றும் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி போன்ற செலவுகள் இந்த காப்பீட்டில் அடங்கும்.

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி (கோல்டு ப்ளான்) பிரசவம் தொடர்பான செலவுகளை உள்ளடக்கியதாகும், மற்றும் பிரசவ நேரத்தில் நிதி உதவியையும் வழங்குகிறது. இந்த பாலிசியானது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. அதிக பிரீமியம் செலுத்தாமல் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க விரும்பும் மக்களுக்கு இத்திட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

 

பின்வரும் பிரசவ செலவுகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் ஈடு செய்யப்படுகின்றன

 

  • சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் உட்பட, பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு, ஒரு பாலிசி காலத்திற்கு அதிகபட்சம்₹ 50000/- வீதம் காப்பீடு வழங்கப்படும்,  மற்றும் பாலிசி செயலில் இருக்கும் போது, ​​பாலிசிதாரரின் வாழ்நாளில் அதிகபட்சம் இரண்டு பிரசவங்கள் வரை இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலனைப் பெறலாம்.
  • சிசேரியன் உட்பட, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கு, ரூ. 50,000/- வரை காப்பீடு வழங்கப்படும்
  • கர்ப்பத்தை சட்டப்பூர்வமாக கலைப்பதற்கு ஏற்படும் செலவுகளையும் காப்பீடு ஈடு செய்கிறது.

 

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் உள்ளடங்கியவை:

 

  • C-செக்ஷன் உட்பட பிரசவத்திற்கான செலவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான செலவுகளுக்கு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரம்புகளுக்குள் காப்பீடு கிடைக்கும்.
  • பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்.
  • புதிதாகப் பிறந்த குழந்தையை மருத்துவப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணத்திற்கு காப்பீடு வழங்குகிறது.
  • பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரம்பு வரை புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு வருடம் வரை தடுப்பூசிகளுக்கான செலவுகள்.
  • கர்ப்பத்தை சட்டப்பூர்வமாக கலைப்பதற்கு ஏற்படும் செலவுகளையும் காப்பீடு ஈடு செய்கிறது

 

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் கீழ் சேர்க்கப்படாதவை:

 

  • ஓய்வு சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் ஓய்வில் கவனிப்பது
  • உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற செலவுகள்
  • பாலினம் மாற்று சிகிச்சைகள்
  • அழகியல் அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி
  • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுதல்
  • காப்பீட்டு நிறுவனத்தால் குறிப்பாக விலக்கிவைக்கப்பட்ட எந்தவொரு மருத்துவமனையிலோ அல்லது எந்தவொரு மருத்துவரிடமோ, அல்லது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வேறு எந்த அனுமதிக்கபடாத சிகிச்சை அளிப்பவரிடமோ மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் ஏற்படும் செலவுகள் காப்பீட்டுக்குள் வராது.
  • மதுப்பழக்கம், போதைப்பொருள் அல்லது வஸ்துக்களை துஷ்பிரயோகம் செய்ததற்கான, அல்லது ஏதேனும் அடிமையாக்கும் பாதிப்பிற்கான சிகிச்சை மற்றும் அதன் விளைவுகளுக்கான சிகிச்சை செலவுகள் காப்பீட்டுக்குள் வராது.

 

தகுதி வரம்பு

 

மகப்பேறு நன்மைகளைக் கொண்ட மருத்துவக் காப்பீட்டுத்  திட்டமானது, காத்திருப்பு காலங்களுக்கு உட்பட்ட பிரசவம் தொடர்பான செலவுகளையும் உள்ளடக்கும். குடும்பத்திற்கான காப்பீட்டுத் திட்டத்தை முன்கூட்டியே வாங்கவும், மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தை  வாங்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். பெரும்பாலான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பிரசவ செலவுகளுக்கு 12-36 மாதங்கள் வரை காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன.

 

 

மகப்பேறு நன்மைகளுடன் கூடிய மருத்துவக் காப்பீடு ஏன் முக்கியமாகிறது?

 

கர்ப்பம் மற்றும் பிரசவத்தினை கடந்து வருவது என்பன ஒரு பெண்ணின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களாகும். ஒரு குழந்தைக்குப் பெற்றோராவது என்பது நிச்சயமாக மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் அதனுடன் கூடிய பதற்றத்தையும் அனுபவிக்கிறார்கள். எனவே இந்த நேரத்தில் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய ஒன்று மருத்துவமனை செலவுகளாகவே இருக்கும். மகப்பேறுச் செலவுகளுக்கான காப்பீட்டுத் திட்டம் உங்களிடம் இருந்தால், எல்லா செலவுகளும் காப்பீட்டால் ஈடு செய்யப்படும் என்பதை அறிந்து, உங்கள் கவலைகளை விடுத்து, உங்களால் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாக உணர முடியும்.

 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்ந்து வரும் பிரசவ செலவுகளின் காரணத்தால், மகப்பேறு காப்பீடு மற்றும் குடும்ப நல மருத்துவக் காப்பீடு ஆகியவை அச்செலவுகளைச் சமாளிக்கும் சிறந்த அணுகுமுறைகளாக உள்ளன.

 

டெலிவரி நன்மையுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதன் நன்மைகள்

 

நிதி கையிருப்பு

 

மகப்பேறு காப்பீடு என்பது சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவத்தின் போது மேற்கொள்ளும் செலவுகளை காப்பீட்டில் உள்ளடக்கியதாக இருக்கும். உங்களுக்கு என்ன மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும், நீங்கள் மன அழுத்தமோ கவலையோ படத்தேவையில்லை. மேலும், மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களுடன் கூடிய பாலிசிகள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளையும் உள்ளடக்கியவையாகும்.

 

புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் காப்பீடு பொருந்தும்

 

எங்களது ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ், யங் ஸ்டார் (கோல்டு) மற்றும் சூப்பர் சர்ப்லஸ் கோல்டு ப்ளான் ஆகிய காப்பீட்டுத் திட்டங்கள், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதல் நாளிலிருந்தே காப்பீட்டுப் பலனை வழங்குகின்றன. அவசர மருத்துவச் செலவுகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான செலவுகளும் இதில் உள்ளடங்கும்.

 

பிரசவ செலவுகளுக்கும் காப்பீடு பெறலாம்

 

மகப்பேறு நன்மைகளுடன் கூடிய மெடிகிளைம் திட்டத்தை வாங்குவதால், கர்ப்ப காலத்தில் நிதி பாதுகாப்பை பெறலாம். இது பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணம், பிரசவ செலவுகள், சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம் எதுவாக இருந்தாலும் காப்பீடு அளிக்கிறது.

 

மகப்பேறு நன்மைகளுடன் கூடிய மெடிகிளைம் பிளானை  வாங்குவதற்கு முன் நீங்கள் எவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்?

 

ஒவ்வொரு பெற்றோரும் மகப்பேறு செலவுகளை ஈடுகட்ட சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறவேண்டியது அவசியமாகும். மருத்துவ காப்பீடு இல்லாமல் மகப்பேறு மருத்துவ செலவுகளை மேற்கொள்வது பெற்றோர் இருவருக்கும் கடினமாக இருக்கலாம். இதன் விளைவாக, உங்கள் பணத்தை  ஒழுங்கமைப்பதற்கான சிறந்த வழி, ஒரு மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதாகும், இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான மற்றும் மன நிறைவான குழந்தை வளர்ப்புக்கு இது வழி வகுக்கும்.

 

மகப்பேறு நன்மைகளுடன் கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

 

  • மருத்துவமனை செலவுகள் மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் கட்டணங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் சிறந்த மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு குடும்பமும் பணத்தைச் சேமிக்க வேண்டும். அதன் விளைவாக, குறைந்த பிரீமியம் மூலம் சேமித்து ஆதாயத்தைப் பெற முயலவும்.
  • அவசர காலத்தில் பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெற கேஷ்லெஸ் நெட்வொர்க் மருத்துவமனை பட்டியலை காணவும்.
  • பாலிசி ஆவணங்களைப் படிப்பதன் மூலம் திட்டத்திற்கு உட்பட்டவை, உட்படாதவை, துணை நிபந்தனைகள், மற்றும் காத்திருப்பு காலம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

அதிகபட்ச காப்பீடு மற்றும் அம்சங்களுடன் கூடிய சரியான பாலிசியை கவனமாக ஒப்பிட்டுத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் மலிவு விலையில் மகப்பேறு காப்பீட்டைப் பெறலாம்.

 

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

 

பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை ஏற்றல்

 

அனைத்து மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை ஈடுகட்டுவதில்லை. உங்கள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை ஏற்கும் ஸ்டார் ஹெல்த் இன்ஷுரன்ஸ் சிறந்தது. 

 

கேஷ்லெஸ்  வசதி

 

நாடு முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் தாய்மார்கள் பணமில்லா சிகிச்சை பெறும் கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம்.

 

விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத க்ளைம் செட்டில்மென்ட்

 

ஸ்டார் ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசிதாரர்கள் 14000 நெட்வொர்க் மருத்துவமனைகளில் உடனடி க்ளைம் செட்டில்மென்ட்டை பெறலாம், இது பிரசவத்தின் போது உங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும் உதவும். ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில், திட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி TPA-வின் (தர்ட் பார்டி அட்மினிஸ்டிரேடர்) இடையூறு இல்லாமல் க்ளைம் செட்டில்மென்ட்டை தொந்தரவில்லாமல் பெறலாம்.

உதவி மையம்

குழப்பமா? பதில் எங்களிடம்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.

துரதிர்ஷ்டவசமாக முடியாது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கலாம். பிரசவத்திற்கான கவரேஜில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் காத்திருப்பு காலம் (சூப்பர் சர்ப்லஸ் கோல்டு ப்ளானின் கீழ்) உள்ளதால், மகப்பேறுக்கான காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியாது. ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆகியவை முறையே 24 மாதங்கள் மற்றும் 36 மாதங்கள் காத்திருப்பு காலத்துடன் பிரசவத்திற்கான செலவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.