
மகப்பேறு காப்பீடு
மகப்பேறு மருத்துவக் காப்பீடு என்பது கர்ப்பக் காலம் தொடர்பான அனைத்து மருத்துவச் செலவுகளையும் முழுமையாக ஏற்கும், ஒரு விரிவான மருத்துவக் பாலிசியாகும். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான செலவுகள், பிரசவச் செலவுகள் (சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன்), பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பு, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் குழந்தைக்கான சிகிச்சைச் செலவுகள் ஆகியவை அடங்கும். இக்காப்பீடு பெண்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கி, எவ்வித நிதிச்சுமையுமின்றி குழந்தையை வளர்க்கும் பொறுப்பை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது.
இந்த மகப்பேறு திட்டத்தில் சுகப்பிரசவத்திற்கான மருத்துவ நடைமுறைகளும், மருத்துவர்களால் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளும் அடங்கும். பிரசவச் செலவுகளைச் சுமுகமாக நிர்வகிப்பதற்காக, பெரும்பாலான தம்பதிகள் முன்கூட்டியே, இந்த மகப்பேறு திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர்.
தற்காலத்தில் பல நிறுவனங்கள் தங்களின் பெண் ஊழியர்களுக்கு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுடன் மகப்பேறு பலன்களையும் ஒரு கூடுதல் இணைப்பாகவோ (Rider) அல்லது பாலிசியின் ஒரு பகுதியாகவோ வழங்குகின்றன. இந்தியாவில் உள்ள மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களில், குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசி விதிமுறைகளைப் பொறுத்து 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் (Waiting Period) நிர்ணயிக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சிறந்த தரமான மருத்துவ வசதிகளைப் பெறவும், பிரசவச் செலவுகளை எவ்வித சிரமமுமின்றி சமாளிக்கவும், இந்த மகப்பேறு மருத்துவக் காப்பீடு பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்தியாவில் மகப்பேறு மருத்துவக் காப்பீடு
ஒரு குழந்தையின் வருகை நம் இல்லத்தையும் உள்ளத்தையும் அளவில்லாத மகிழ்ச்சியாலும் பூரிப்பாலும் நிரப்புகிறது. “பெரும் பாக்கியத்தோடு கூடவே பெரிய பொறுப்பும் வந்து சேர்கிறது” என்பார்கள், பெற்றோராக மாறுவது என்பது ஒரு குழந்தையை அன்போடும் அக்கறையோடும் வளர்த்தெடுக்கும், அழகிய பொறுப்பு. இந்தத் தருணம் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்குத் தயாராக இருப்பது மிக அவசியமாகும்.
பெரும்பாலான மகப்பேறு சிகிச்சைத் திட்டங்கள், தாய் மற்றும் சேயின் உடல்நலனைக் கண்காணித்து உறுதிசெய்யும் பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகின்றன. பொதுவாக, குழந்தை பிறப்பிற்கான ஒட்டுமொத்தச் செலவுகளைத் திட்டமிடுவதற்காக, பெற்றோராகப் போகும் தம்பதிகள் பல்வேறு மகப்பேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களை முன்கூட்டியே எடுக்க வேண்டியிருந்தாலும், சில காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது கர்ப்பமான பிறகும், சிறப்பு காத்திருப்பு கால நிபந்தனைகளுடன் கூடிய காப்பீடுகளை வழங்குகின்றன. எனினும், இத்தகைய காப்பீடுகளின் பலன்கள் பொதுவாக அடுத்தடுத்த பிரசவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தொடர்ந்து உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளும், மருத்துவமனைக் கட்டணங்களும் தம்பதிகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதை, நாங்கள் உணர்கிறோம். இதன் காரணமாகவே, அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைப் பற்றிய கவலையின்றி, நீங்கள் நிம்மதியாக இருக்க, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரத்யேக மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
IRDAI வழிகாட்டுதலின்படி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது பிரசவம் தொடர்பாக (சுகப்பிரசவம் அல்லது சிசேரியன்) ஏற்படும் மருத்துவச் செலவுகள் மகப்பேறு செலவுகளாகக் கருதப்படுகின்றன. பாலிசி காலத்தின் போது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புச் செலவுகளும், இதில் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
குறிப்பாக பிரசவத்திற்கு முந்தைய மருத்துவக் கவனிப்பு, மருத்துவப் பரிசோதனைகள், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பு போன்றவற்றிற்குத் தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க, பிரசவப் பலன்களைக் கொண்ட, ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசி மிகவும் அவசியமாகும்.
மகப்பேறு பாதுகாப்புடன் கூடிய மருத்துவக் காப்பீடு, பிரசவத்தின்போதும், குறிப்பாக பிரசவக் காலச் சிக்கல்கள் அல்லது குழந்தை பிறந்த ஆரம்ப நாட்களில் ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்போதும் தாய் மற்றும் சேய்க்கு முழுமையான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. எதிர்பாராத சிக்கல்களையும் கடைசி நேரக் குழப்பங்களையும் தவிர்க்க, மகப்பேறு க்ளெய்ம் வழிகாட்டுதல்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது நல்லது. மேலும், பெரும்பாலான தம்பதிகள் தங்களின் நிதி நிலைக்கு ஏற்ற வளைந்து கொடுக்கும் மகப்பேறு காப்பீட்டையே தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
மகப்பேறு காப்பீடு பற்றிய தெளிவான புரிதல், பெரும் செலவு பிடிக்கும், இந்த மகப்பேறு பயணத்தை எவ்வித நிதிச்சுமையுமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் பெற்றோருக்குப் பெரிதும் உதவுகிறது.
காப்பீட்டின் முழுப் பலன்களையும் தடையின்றிப் பெறுவதற்கு, காத்திருப்பு காலம் இல்லாத அல்லது மிகக் குறைந்த காத்திருப்பு காலத்தைக் கொண்ட மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதே சிறந்தது.
வழக்கமான மருத்துவக் காப்பீட்டிலேயே பிரசவச் செலவுகளையும் ஏற்கும் பாதுகாப்பு ஏன் அவசியம்?
மகப்பேறு மருத்துவக் காப்பீடு என்பது கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு தொடர்பான நிதிச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் அல்லது ரைடர் ஆகும்.
பொதுவாக, இந்த மகப்பேறு காப்பீடு என்பது மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள், பிரசவம் (சாதாரண அல்லது சி-பிரிவு), மருத்துவர் ஆலோசனைகள், மருத்துவமனையில் அனுமதித்தல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் தாய்க்கான பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் செலவுகளுக்கு ஒரு காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
இதனால், இது பெற்றோராக விரும்பும் தாய்மாருக்கு, முக்கியமான நிதிப் பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குகிறது. இத்தகைய பிரசவ செலவுகள் அனைத்தையும் ஈடுகட்டுவதன் மூலம், அதிக மருத்துவச் செலவுகளின் மன அழுத்தம் இல்லாமல் உங்கள் நல்வாழ்விலும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த ஒரு சிறந்த மகப்பேறு சுகாதார காப்பீடு உதவுகிறது.
மகப்பேறு பலன்களை உள்ளடக்கிய மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?
கர்ப்பக் காலமும் பிரசவமும் ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தருணங்கள். தாய்மை அடைவதில் அளப்பரிய மகிழ்ச்சி இருந்தாலும், அதோடு சேர்ந்து இயல்பாகவே, ஒருவித பதற்றமும் மனக்கவலையும் பெண்களுக்கு எழுவதுண்டு. எனவே, இந்த உன்னதமான காலகட்டத்தில் மருத்துவமனைச் செலவுகளைப் பற்றிய கவலை மட்டும், உங்களுக்கு இருக்கவே கூடாது. மகப்பேறு செலவுகளை ஏற்கும் ஒரு மருத்துவக் காப்பீடு உங்களிடம் இருந்தால், அத்தனை செலவுகளையும், அது பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு, கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உங்கள் கர்ப்பக் காலத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.
நாடு முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பிரசவக் கட்டண உயர்வை எதிர்கொள்ள, மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதே சிறந்த வழியாகும்; அதிலும் குறிப்பாக காத்திருப்பு காலம் இல்லாத திட்டங்களையோ அல்லது குடும்ப மருத்துவக் காப்பீட்டையோ (Family Mediclaim) எடுப்பது அனைத்துச் செலவுகளையும் சுமுகமாக நிர்வகிக்க உதவும்.
"ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் நிலையில் மருத்துவக் காப்பீடு எடுத்தால் பிரசவச் செலவுகள் கிடைக்குமா?" என்ற சந்தேகம் பல தம்பதிகளுக்கு எழுகிறது. கர்ப்பம் தரித்த பிறகு எடுக்கப்படும் பெரும்பாலான வழக்கமான பாலிசிகள் மகப்பேறு பலன்களை வழங்குவதில்லை; ஏனெனில் காப்பீட்டு நிறுவனங்கள் இதனைக் 'காப்பீடு எடுப்பதற்கு முன்பே உள்ள நிலை'யாகக் (Pre-existing condition) கருதுகின்றன. இருப்பினும், சில நிறுவனங்கள் கர்ப்பமான பிறகும் கூடக் குறைந்த காத்திருப்பு காலத்துடன் (எ.கா. 12 முதல் 24 மாதங்கள்) காப்பீடுகளை வழங்குகின்றன. எனினும், அக்காலம் முடிந்த பிறகே பிரசவப் பலன்கள் நடைமுறைக்கு வரும்.
"ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளில் சுமார் 41% இறப்புகள், குழந்தை பிறந்த முதல் 28 நாட்களுக்குள் (பச்சிளங் குழந்தை பருவம்) ஏற்படுகின்றன" என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவத்திற்கான சராசரி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், ரூ. 2 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து வருகின்றன.
இந்தியாவில் மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறைவாகவே இருந்தாலும், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் தனிநபர் மற்றும் குடும்பக் காப்பீட்டுத் (Family Floater) திட்டங்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், அவை பிரசவச் செலவுகளோடு பச்சிளங் குழந்தைக்கான மருத்துவச் செலவுகளையும் முழுமையாக ஏற்கின்றன.
முழுமையான குடும்ப நல்வாழ்வுப் பாதுகாப்பை விரும்பும் தனிநபர்களுக்கு, பிரசவச் செலவுகளையும் ஏற்கும் மெடிகிளைம் திட்டங்கள் மிகப்பெரிய நிதிப் பலனைத் தருகின்றன.
உங்கள் மனைவிக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ மகப்பேறு பாதுகாப்புடன் கூடிய மெடிகிளைம் பாலிசியை எடுக்க விரும்பினால், இது மிகச் சிறந்த தேர்வாகும். இத்தகைய காப்பீடு சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் செலவுகளை ஏற்பது மட்டுமின்றி, பிரசவக் காலச் சிக்கல்களால் குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தாலும் அதற்கான, செலவுகளையும் முழுமையாக ஈடுசெய்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்களின் பிரசவத் தேவைகளுக்காக மகப்பேறு காப்பீட்டைப் பரிசீலிப்பது அவசியம். கர்ப்பக் காலத்தில் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கப் பல பெற்றோர்கள் மகப்பேறு பரிசோதனைத் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர். தாய் மற்றும் சேயின் உடல்நலனை உடனுக்குடன் அறிந்துகொள்ள, இத்தகைய பரிசோதனைகள் பெரிதும் உதவுகின்றன.
பிரசவ பலன்கள் உள்ள மெடிகிளைம் பாலிசியைப் புதிதாக எடுக்க நினைத்தாலும் சரி, அல்லது குடும்பக் காப்பீட்டிற்கு மாற நினைத்தாலும் சரி, பெற்றோராகப் போகும் தம்பதிகளுக்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மிகச் சரியான மருத்துவப் பாதுகாப்பை வழங்குகிறது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் தனிநபர் மற்றும் குடும்பக் காப்பீட்டுத் திட்டங்கள், எவ்விதக் கவலையுமின்றி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மகப்பேறு காலத்தை அமைத்துத் தருகின்றன.
ஒரு குழந்தையின் வருகை அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தாலும், அடுத்தடுத்து வரும் புதிய செலவுகள் பெற்றோரின் நிதி நிலைக்கும் மன அமைதிக்கும் சவாலாக மாறக்கூடும்.
எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே மகப்பேறு தொடர்பான அனைத்துச் செலவுகளையும் முழுமையாக ஏற்கும், ஒரு மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக் கொள்வதே விவேகமானது.
இந்தியாவில் கணவன், மனைவி இருவருமே மகப்பேறு காப்பீட்டைக் கோர (Claim) முடியுமா? ஆம், இந்தியாவில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே தங்களின் மகப்பேறு மருத்துவக் காப்பீட்டைக் கோர முடியும். எனினும், தங்களின் பாலிசி விதிமுறைகளில் இருமுனைக் காப்பீட்டுக் கோரலுக்கு (Dual coverage) அனுமதி உள்ளதா அல்லது ஏதேனும் வரம்புகள் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைப் மருத்துவத் தேவைகளுக்கான ஒட்டுமொத்தச் செலவுகளையும், எந்தச் சுமையுமின்றி எளிதாக நிர்வகிக்க உதவும்.
பிரசவச் செலவுகளையும் ஏற்கும் மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதன் நன்மைகள்
இந்தியாவில் மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வதன் முக்கிய சிறப்பம்சங்களும் நன்மைகளும் பின்வருமாறு:
அவசர நிதிப் பாதுகாப்பு
மகப்பேறு மருத்துவக் காப்பீடு சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் ஆகிய இரண்டுக்குமான செலவுகளையும் முழுமையாக ஏற்கிறது. கர்ப்பக் காலத்தில் உங்களுக்கு எத்தகைய மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், உரிய நிதிப் பாதுகாப்பு இருக்கிறது என்ற நிம்மதியுடன் நீங்கள் இருக்கலாம். மேலும், இக்காப்பீடுகள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவத் தேவைகளையும் பார்த்துக்கொள்கின்றன.
பச்சிளங் குழந்தைக்கான பாதுகாப்பு
எங்களின் ‘ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி', 'யங் ஸ்டார் இன்சூரன்ஸ் பாலிசி' மற்றும் 'சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி' ஆகிய திட்டங்கள், குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே முழு மருத்துவப் பாதுகாப்பை வழங்குகின்றன. இதில் அவசர மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான செலவுகளும் அடங்கும். தொடர்ந்து உயர்ந்து வரும் மருத்துவக் கட்டணங்களால், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் உட்பட கர்ப்பக் காலம் சார்ந்த பல செலவுகள் இன்று பெரும்பாலான குடும்பங்களுக்குக் குறிப்பிடத்தக்க நிதிச்சுமையாக மாறியுள்ளன.
பிரசவச் செலவுகளை ஏற்கும் வசதி
மகப்பேறு பாதுகாப்புடன் கூடிய மெடிகிளைம் திட்டத்தைத் தேர்வு செய்வது, உங்கள் கர்ப்பக் காலம் முழுவதும் மன அமைதியைத் தருகிறது. சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ எதுவாக இருந்தாலும், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பு முதல் ஆம்புலன்ஸ் மற்றும் பிரசவக் கட்டணங்கள் வரை அனைத்தையும் இது முழுமையாக வழங்குகிறது.
எளிதான இணையவழி விண்ணப்ப நடைமுறை
இந்த மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்கள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பு, பிரசவச் செலவுகள் மற்றும் பச்சிளங் குழந்தைக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான மருத்துவப் பாதுகாப்பை வழங்குகின்றன.
மகப்பேறு பலன்களை உள்ளடக்கிய மெடிகிளைம் பாலிசியை எடுப்பதற்கு முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?
பிரசவச் செலவுகளை எவ்வித சிரமமுமின்றி சமாளிக்க, ஒவ்வொரு பெற்றோருக்கும் மகப்பேறு காப்பீட்டுப் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். மருத்துவக் காப்பீடு ஏதுமின்றி அதிகப்படியான மகப்பேறு மருத்துவச் செலவுகளைக் கையாள்வது தம்பதிகள் இருவருக்குமே பெரும் நிதிச் சவாலாக மாறக்கூடும். எனவே, உங்கள் குடும்பப் பொருளாதாரத்தைச் சுமுகமாகத் திட்டமிட்டு, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பெற்றோர் நிலையை உறுதிசெய்ய மகப்பேறு மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக்கொள்வதே சிறந்த வழியாகும்.
மகப்பேறு பலன்களைக் கொண்ட ஒரு மருத்துவக் பாலிசியைத் தேர்வு செய்வதற்கு முன், பின்வரும் முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவும்:
- வெறும் மருத்துவமனைக் கட்டணங்களை மட்டுமே பார்க்காமல், கர்ப்பக் காலம் தொடர்பான பல்வேறு மருத்துவச் செலவுகளையும் ஏற்கும் மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் குடும்பச் செலவுகளை எளிதாக நிர்வகிக்கும் வகையில், பிரீமியம் தொகையில் கிடைக்கக்கூடிய தள்ளுபடிகள் மற்றும் சேமிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
- அவசர மருத்துவத் தேவைகளின் போது தடையின்றி சிகிச்சை பெற, ரொக்கமில்லாச் சிகிச்சை (Cashless facility) வசதி கொண்ட நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
- பாலிசியில் என்னென்ன மருத்துவச் செலவுகள் சேரும், எவையெல்லாம் சேராது, துணை வரம்புகள் (Sub-limits) மற்றும் காத்திருப்பு கால விவரங்கள் ஆகியவற்றைப் பாலிசி ஆவணங்களைப் படித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும்.
- பல்வேறு மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களைச் சரியாக ஒப்பிட்டுப் பார்த்து, அதிகபட்சப் பலன்களும் வசதிகளும் நிறைந்த சரியான பாலிசியைத் தேர்வு செய்வதன் மூலம், கட்டுப்படியாகும் பிரீமியத்தில் சிறந்த மகப்பேறு பாதுகாப்பைப் பெற முடியும்.
திட்டமிடலுடன் செயல்படுவது மிக அவசியமானது. கர்ப்பமான பிறகு எடுக்கப்படும் காப்பீடுகளில் பொதுவாக சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால், முழுமையான பலன்களைப் பெறுவதற்குக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே காப்பீட்டில் இணைவதே பாதுகாப்பான வழியாகும். சரியான நேரத்தில் காப்பீடு எடுக்கும் தம்பதிகளுக்கு, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் திட்டங்கள் முழுமையான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
குறிப்பு: திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச மகப்பேறு பாதுகாப்பு மற்றும் கூடுதல் பலன்களை வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையே தேர்வு செய்ய வேண்டும்.
மகப்பேறு செலவுகளை ஏற்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் எவை?
மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் பல்வேறு மருத்துவச் செலவுகளில் இருந்து, உங்கள் குடும்பப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டார் ஹெல்த் நிறுவனம் கர்ப்பிணிப் பெண்களுக்காக வழங்கும் பல்வேறு பாலிசிகள், அவற்றின் காப்பீட்டுத் தொகை மற்றும் காத்திருப்பு கால விவரங்கள் கீழே விரிவாகத் தரப்பட்டுள்ளன:
நிறுவனங்களின் குழு காப்பீடுகள் (Employer Group Policies) அல்லது அரசுத் திட்டங்கள் போன்ற சிறப்பு விதிவிலக்குகளைத் தவிர, கர்ப்பமான பிறகு எடுக்கப்படும் காப்பீடுகளில் பொதுவாக மகப்பேறு பலன்கள் சேராது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஸ்டார் ஹெல்த் பாலிசிகளில் மகப்பேறு பலன்களைப் பெறுவதற்குக் கர்ப்பம் தரிப்பதற்கு, முன்னரே காப்பீட்டில் இணைந்திருக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக 'ஹெல்த் பூஸ்டர் மகப்பேறு ரைடர்' (Health booster maternity cover rider) போன்ற கூடுதல் இணைப்பைத் தேர்வு செய்வது சிறந்தது. இது சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் ஆகிய இரண்டுக்குமான செலவுகளையும் முழுமையாக ஏற்கிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இணையும் வகையில், பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் ஏற்றவாறு, இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோராகப் போகும் தம்பதிகள் சரியான மகப்பேறு பாலிசியைத் தேர்வு செய்வது மிக அவசியமாகும். பிரசவச் செலவுகள், மருத்துவமனைக் கட்டணங்கள் மற்றும் பச்சிளங் குழந்தைக்கான மருத்துவக் கவனிப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய, ஒரு சிறந்த மருத்துவக் காப்பீடு, இந்த உன்னதமான காலகட்டத்தில் தம்பதிகளுக்கு முழுமையான மன அமைதியைத் தருகிறது.
டெலிவரி செலவுகளையும் ஸ்டார் ஹெல்த் பாலிசிகள் கவர் செய்கிறதா?
| சிறப்பம்சங்கள் | ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் | யங் ஸ்டார் - கோல்ட் பிளான் | ஸ்டார் வுமன் கேர் | சூப்பர் சர்ப்ளஸ் - கோல்ட் | ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் - ஃப்ளோட்டர் கோல்ட் |
|---|---|---|---|---|---|
| சேரும் வயது – பெரியவர்கள் | 18 - 65 வயது | 18 - 40 வயது | 18 - 75 வயது | 18 - 65 வயது | 18 – 65 வயது |
| சேரும் வயது – சார்ந்திருக்கும் குழந்தைகள் | 91 நாட்கள் முதல் 25 வயது வரை | 91 நாட்கள் முதல் 25 வயது வரை | 91 நாட்கள் முதல் 25 வயது வரை (திருமணமாகாத / வருமானம் ஈட்டாத பெண் பிள்ளைகள்: 30 ஆண்டுகள் வரை) | 91 நாட்கள் முதல் 25 வயது வரை | 91 நாட்கள் முதல் 25 வயது வரை |
| பாலிசி வகை | தனிநபர் / குடும்பக் காப்பீடு | தனிநபர் / குடும்பக் காப்பீடு |
தனிநபர் / குடும்பக் காப்பீடு | தனிநபர் | குடும்பக் காப்பீடு |
| பாலிசி காலம் | 1 / 2 / 3 ஆண்டுகள் | 1 / 2 / 3 ஆண்டுகள் | 1 / 2 / 3 ஆண்டுகள் | 1 / 2 ஆண்டுகள் | 1 / 2 ஆண்டுகள் |
| காப்பீட்டுத் தொகை (ரூ. லட்சங்களில்) | 5 - 100 | தனிநபர்: 3 குடும்பக் காப்பீடு: 5 - 100 | 5 - 100 | 5 - 100 (காப்பீட்டுத் தொகை மற்றும் வரம்புகள் மாறுபடும்) | 5 - 100 (காப்பீட்டுத் தொகை மற்றும் வரம்புகள் மாறுபடும்) |
| குமுலேட்டிவ் போனஸ் | காப்பீட்டுத் தொகையில் 100% வரை | காப்பீட்டுத் தொகையில் 100% வரை | காப்பீட்டுத் தொகையில் 100% வரை | இல்லை | இல்லை |
| மகப்பேறு பாதுகாப்பு | உண்டு (24 மாதங்கள் காத்திருப்பு காலம்) | உண்டு (36 மாதங்கள் காத்திருப்பு காலம்) | உண்டு: ரூ. 5/10 லட்சத்திற்கு 24 மாதங்கள்; ரூ. 15 லட்சத்திற்கு மேல் 12 மாதங்கள் | உண்டு (12 மாதங்கள் காத்திருப்பு காலம்) | உண்டு (12 மாதங்கள் காத்திருப்பு காலம்) |
| இடைக் காலத்தில் உறுப்பினர்களைச் சேர்த்தல் | உண்டு | உண்டு | உண்டு | இல்லை | இல்லை |
மகப்பேறு பாதுகாப்புடன் கூடிய மெடிகிளைம் பாலிசியைத் தேர்வு செய்வதற்கான முக்கியக் காரணிகள்
இந்தியாவில் மகப்பேறுக்கான மெடிகிளைம் பாலிசியைத் தேர்வு செய்யும்போது, சில முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மகப்பேறு மெடிகிளைம் பாலிசியை எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணிகள்:
1. மருத்துவச் செலவுப் பாதுகாப்புப் பலன்கள்
- பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு: பிரசவத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள், ஸ்கேன் சோதனைகள் மற்றும் மருத்துவர் ஆலோசனைக் கட்டணங்கள் ஆகியவை பாலிசியில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
- பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பு: பிரசவத்திற்குப் பிந்தைய தொடர் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளுக்கான செலவுகளைக் காப்பீடு ஏற்கிறதா என்பதைக் கவனிக்கவும்.
- பிரசவ முறைகள்: சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் ஆகிய இரண்டுக்குமான செலவுகளையும் பாலிசி ஏற்கிறதா என்று பார்க்கவும்.
- பச்சிளங் குழந்தைக்கான பாதுகாப்பு: குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்கு, அதன் மருத்துவச் செலவுகளை மெடிகிளைம் பாலிசி ஏற்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
2. காத்திருப்பு காலம்
- பொதுவாக மற்ற மருத்துவப் பலன்களை விட மகப்பேறு காப்பீட்டிற்கு நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இது பொதுவாக 9 மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை இருக்கலாம்.
- ஒரு பாலிசியைத் தேர்வு செய்வதற்கு முன், பல்வேறு பாலிசிகளின் காத்திருப்பு காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
3. எளிதில் அணுகக்கூடிய நெட்வொர்க் மருத்துவமனைகள்
- அவசர நேரத்தில் பணமில்லாச் சிகிச்சை வசதியைப் பெறுவதற்கு, உங்கள் பகுதியில் உள்ள அதிக அளவிலான நெட்வொர்க் மருத்துவமனைகளை உள்ளடக்கிய மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
4. பிரீமியம் தொகை
- வழங்கப்படும் காப்பீட்டுப் பலன்களைக் கருத்தில் கொண்டு, வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் தொகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் குடும்ப வரவுசெலவுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பாலிசியில் சேராதவை
மெடிகிளைம் பாலிசி ஆவணங்களைக் கவனமாகப் படித்து, கர்ப்பக் காலம் தொடர்பான, ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சனைகள் (Pre-existing conditions) ஏதேனும் காப்பீட்டுப் பாதுகாப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
கூடுதல் பலன்கள்
குறிப்பிட்ட மருத்துவ இடர்பாடுகளுக்கான பாதுகாப்பு அல்லது பச்சிளங் குழந்தைக்கான கூடுதல் மருத்துவக் கவனிப்பு போன்ற மகப்பேறு பலன்களை மேலும் அதிகரிக்கக்கூடிய 'ஆட்-ஆன்' (Add-on) தேர்வுகளைச் சில காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கக்கூடும்.
மகப்பேறு மருத்துவக் காப்பீட்டை எடுப்பதற்கு எது சரியான நேரம்?
குழந்தைக்குத் திட்டமிடுவதற்கு முன்பே பாலிசியின் கட்டாயக் காத்திருப்பு காலத்தை நிறைவு செய்யும் வகையில், பெண்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மகப்பேறு மருத்துவக் காப்பீட்டை எடுத்துக்கொள்வது நல்லது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மகப்பேறு காப்பீடுகளில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உண்டு; இந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பம் சார்ந்த எந்தச் செலவுகளையும் காப்பீட்டின் மூலம் பெற முடியாது.
இள வயதிலேயே மகப்பேறு காப்பீட்டை எடுப்பது விரிவான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது பிரசவத்திற்கு முந்தைய மருத்துவக் கவனிப்பு, பிரசவக் கட்டணங்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகள் எனத் தொடர்ந்து அதிகரித்து வரும் அனைத்துத் தேவைகளையும் எவ்வித நிதி நெருக்கடியுமின்றி சுமுகமாகக் கையாளப் பெண்களுக்கு உதவுகிறது. எனவே, குழந்தைக்குத் திட்டமிடுவதற்கு சில வருடங்களுக்கு முன்பே மகப்பேறு காப்பீட்டைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது.
மேலும், காத்திருப்பு கால வரம்பு ஒவ்வொரு பாலிசி திட்டத்திற்கும் மாறுபடக்கூடும் என்பதால், எந்தவொரு காப்பீட்டையும் எடுப்பதற்கு முன் அதன் மகப்பேறு காத்திருப்பு கால விவரங்களைத் தெளிவாகச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
காத்திருப்பு காலமே இல்லாத மகப்பேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளனவா?
தற்போதைய சூழலில், காத்திருப்பு காலமே இல்லாத மகப்பேறு மருத்துவக் காப்பீடுகள் பொதுவாக இந்தியாவில் கிடைப்பதில்லை. அதாவது, காப்பீடு எடுத்த உடனேயே பெண்களுக்குப் பிரசவச் செலவுகளுக்கான பாதுகாப்பு கிடைக்காது, அவர்கள் காப்பீட்டுக் கோரலை முன்வைப்பதற்கு முன், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காத்திருப்பு காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேசமயம், வெறும் 3 மாதக் காத்திருப்பு காலம் மட்டுமே கொண்ட சில மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மகப்பேறு மருத்துவக் காப்பீட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பு
மிகச் சில காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய இரண்டு செலவுகளையுமே முழுமையாக ஏற்கின்றன; இதில் ஸ்டார் ஹெல்த் வழங்கும் விரிவான ஆதரவு, பெற்றோராகப் போகும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைகிறது.
பணமில்லாச் சிகிச்சை வசதி
கர்ப்பிணிப் பெண்கள் நாடு முழுவதும் உள்ள 16,000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லாச் சிகிச்சை வசதியை எளிதாகப் பெற முடியும்.
விரைவான மற்றும் எளிதான கிளைம் தீர்வு
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் 16,000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் சேவைகளைப் பெற முடியும் என்பதால், பிரசவம் போன்ற மிக முக்கியமான தருணங்களில், உங்கள் காப்பீட்டுக் கோரல்கள் மிக விரைவாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. இதனால், மூன்றாம் நபர் (TPA) தலையீடு ஏதுமின்றி ஸ்டார் ஹெல்த், உங்கள் கிளைமை நேரடியாகவும் சுமுகமாகவும் பார்த்துக்கொள்ளும், நீங்கள் எவ்வித அலைச்சலுமின்றி உடல்நலம் தேறுவதிலும், குடும்பத்துடன் அந்த மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாடுவதிலும் முழு கவனம் செலுத்த முடியும்.
முடிவுரை
ஒரு குழந்தையின் வருகை வாழ்வின் மிக அழகான, மகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்று, அதேசமயம், கூடவே வரும் எதிர்பாராத செலவுகள் பெரிய நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, மகப்பேறு பாதுகாப்புடன் கூடிய மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்து உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளுங்கள். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் இப்பாலிசி ஏற்றுக்கொள்வதால், மருத்துவச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையின் ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் நிம்மதியாக ரசிக்க முடிகிறது. போதுமான காப்பீட்டுத் தொகையுடன் கூடிய, இத்தகைய திட்டம் முழுமையான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்து, உங்கள் குடும்பத்திற்குத் தடையற்ற மன அமைதியைத் தருகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கர்ப்பமான பிறகு புதிதாக மகப்பேறு மருத்துவக் காப்பீட்டைப் பெற இயலாது. பிரசவச் செலவுகளுக்கான பாதுகாப்பைப் பெறுவதற்குக் குறைந்தபட்சம் 12 மாதங்கள் காத்திருப்பு காலம் (சூப்பர் சர்ப்ளஸ் கோல்ட் திட்டத்தில்) நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மகப்பேறு பலன்களைப் பெற இயலாது. இதேபோல், ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியில் 24 மாதங்களும், யங் ஸ்டார் பாலிசியில் 36 மாதங்களும் காத்திருப்பு காலத்தை நிறைவு செய்த பிறகே பிரசவச் செலவுகள் ஏற்கப்படும்.
பொதுவாக, சில்லறை தனிநபர் மருத்துவக் காப்பீட்டுப் பாலிசிகளில் காத்திருப்பு காலமே இல்லாமல் மகப்பேறு காப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பாலிசிகளில் பிரசவச் செலவுகளுக்கான காத்திருப்பு காலம் 36 மாதங்கள் வரை கூட இருக்கலாம். இருப்பினும், நிறுவனங்கள் வழங்கும் பிரத்யேகக் குழு காப்பீடுகளில் இணைந்திருந்தால், மகப்பேறு பலன்களுக்கான, இந்தக் காத்திருப்பு காலத்தில் இருந்து, உங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.
ஆம், குழந்தை பிறந்த தேதியிலிருந்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலம், பாலிசியைப் புதுப்பிக்கும் போதோ அல்லது பாலிசி காலத்தின் இடைக் கட்டத்திலோ குழந்தையைக் காப்பீட்டில் சேர்க்க முடியும்.
குழந்தைக்குத் திட்டமிடும்போது பாலிசியின் காத்திருப்பு காலத்தால் காப்பீட்டுப் பலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, குறைந்தபட்சம் 1 முதல் 3 ஆண்டுகளுக்கு முன்பே காப்பீட்டை எடுத்துக்கொள்வது நல்லது.
பாலிசி அமலில் இருக்கும்போதே இடைக் காலத்தில் குழந்தையைக் காப்பீட்டில் சேர்ப்பது 'இடைக் காலச் சேர்க்கை' (Mid-term Inclusion) எனப்படுகிறது. உங்கள் தற்போதைய பாலிசியில், இதற்கான வசதி இருந்தால், பச்சிளங் குழந்தையையும், உங்கள் மருத்துவக் காப்பீட்டின் கீழ் இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ஸ்டார் ஹெல்த் காப்பீடு வைத்திருந்தால், குழந்தை பிறந்த 90 நாட்களுக்குள் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்தால் போதும், குழந்தையின் 91-வது நாளில் இருந்து மருத்துவப் பாதுகாப்பு தானாகவே தொடங்கிவிடும். காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றும் யங் ஸ்டார் இன்சூரன்ஸ் போன்ற பாலிசிகளில், இந்த இடைக் காலச் சேர்க்கை வசதி உள்ளது. இந்தச் சேர்க்கை பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
ஆம், தாராளமாக ஏற்கும். காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றும் யங் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகிய பாலிசிகள் இரண்டாவது குழந்தையின் பிரசவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்கின்றன. இந்த பாலிசிகளின் கீழ், வாழ்நாளில் இரண்டு பிரசவங்களுக்கான மகப்பேறு பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மகப்பேறு மெடிகிளைம் பாலிசி பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. மருத்துவமனைச் சேர்க்கை, பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் பச்சிளங் குழந்தைக்கான சில குறிப்பிட்ட மருத்துவச் செலவுகள் உட்பட கர்ப்ப காலம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தேவைகள் சார்ந்த அனைத்துச் செலவுகளையும் ஏற்று, குடும்பத்திற்கு முழுமையான நிதிப் பாதுகாப்பை, இது உறுதி செய்கிறது.
இல்லை, இந்தியாவில் காத்திருப்பு காலம் இல்லாத மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லை. காப்பீட்டு நிறுவனம் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் பாலிசியைப் பொறுத்து, மகப்பேறு காப்பீட்டிற்கான காத்திருப்பு காலம் பொதுவாக 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை மாறுபடும்.
மகப்பேறு மருத்துவப் பாதுகாப்பு என்பது மெடிகிளைம் பாலிசி அல்லது வழக்கமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுடன் சேர்த்துத் தேர்வு செய்யப்படும், ஒரு கூடுதல் வசதியாகவே (Add-on) வழங்கப்படுகிறது.
கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தின் போது கணிசமான அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், மகப்பேறு மெடிகிளைம் காப்பீடு அவசியமாகிறது.
பிரசவச் செலவுகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, பச்சிளங் குழந்தைக்கான மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றை முழுமையாக வழங்குவதோடு, குறைவான காத்திருப்பு காலத்தைக் கொண்டிருப்பதே மகப்பேறுக்கான சிறந்த மருத்துவக் காப்பீடாகும். இந்த அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு மகப்பேறு காப்பீட்டுத் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் குடும்பத்திற்கு பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
ஆம், நிச்சயம் பயனுள்ளது. இது அதிகரித்து வரும் பிரசவச் செலவுகளைச் சமாளிக்கவும், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பை ஏற்கவும், பச்சிளங் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொருளாதாரச் சுமையையும் மன அழுத்தத்தையும், இது பெருமளவு குறைக்கிறது.
இல்லை, ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் பொதுவாகப் புதிதாக மகப்பேறு மருத்துவக் காப்பீட்டை எடுக்க முடியாது.
பெரும்பாலான மகப்பேறு திட்டங்களுக்குக் காத்திருப்பு காலம் உண்டு என்பதால், கர்ப்பமாவதற்கு முன்பே பாலிசி எடுத்திருந்தால் மட்டுமே பிரசவச் செலவுகளுக்கான முழுமையான பாதுகாப்பைப் பெற முடியும்.
மருத்துவக் காப்பீட்டில், பாலிசியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உச்சவரம்பு வரை மட்டுமே கர்ப்ப காலச் செலவுகள் ஏற்கப்படும், நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தைப் பொறுத்து, இது ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை மாறுபடலாம். பாலிசியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரசவச் செலவுகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவக் கவனிப்பு, பச்சிளங் குழந்தைக்கான பாதுகாப்பு ஆகியவை பொதுவாக, இத்தொகையில் அடங்கும்.
மகப்பேறு காப்பீடு (Maternity insurance) என்றும் அழைக்கப்படும் கர்ப்ப கால மருத்துவக் காப்பீடு என்பது, கர்ப்பம் சார்ந்த செலவுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும், ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இதில் பிரசவத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள், பிரசவச் செலவுகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
குறிப்பிட்ட சில பாலிசிகளில் மட்டுமே மகப்பேறு பலன்கள் வழங்கப்படுகின்றன; இது குறிப்பிட்ட காத்திருப்பு காலம் மற்றும் உச்சவரம்புகளுக்கு உட்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட பாலிசிகளில் மட்டுமே மகப்பேறு பலன்கள் கிடைக்கும், அதற்கும் நிர்ணயிக்கப்பட்ட காத்திருப்பு காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.
ஆம், இதற்கான தகுதியுள்ள பாலிசிகளில், குழந்தை பிறந்ததிலிருந்து மருத்துவப் பாதுகாப்பைப் பெற முடியும்; இதற்குத் தேவையான ஆவணங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



