தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ் ஃபார் பேரன்ட்ஸ்

உங்கள் பெற்றோருக்கு அன்பு, அக்கறை, மற்றும் ஆதரவை வழங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு.

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

All Health Plans

Section Title

Individual Health Insurance

மெடி க்ளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்)

ரீஸ்டோரேஷன் நன்மை: ஒரு பாலிசி காலத்தில் ஒரேயொரு முறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 200% ரீஸ்டோர் செய்யப்படும்

சாலை போக்குவரத்து விபத்து: அடிப்படை கவரேஜ் தொகை முடிவுற்ற நிலையில், சாலை போக்குவரத்து விபத்து ஏற்படும் பட்சத்தில், கவரேஜ் மீண்டும் கிடைக்கும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Assure Insurance Policy

ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்ஷூரன்ஸ் பாலிசி

குடும்பத்தின் அளவு: தனி நபர், மனைவி, பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் உட்பட 6 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகளுக்கு கவர் ஆகிறது.

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: ஒவ்வொரு முறையும் 100% வரை காப்பீட்டுத் தொகை எண்ணற்ற முறை ரீஸ்டோர் செய்யப்படும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Gain Insurance Policy

ஸ்டார் ஹெல்த் கெய்ன் இன்ஷூரன்ஸ் பாலிசி

விரிவான கவரேஜ்: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் வெளிநோயாளருக்கான மருத்துவ செலவுகள் ஆகிய இரண்டிற்கும் விரிவான கவரேஜ் வழங்குகிறது

நவீன சிகிச்சை: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது டே கேர் நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகிறது

வெளிநோயாளருக்கான நன்மை: எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் கவராகும்

View Plan

Star Hospital Cash Insurance Policy

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

மொத்த-தொகை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கையில் கிடைக்கும் நன்மை: மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தற்செயலான செலவுகளுக்கு தினசரி பணப் பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்: மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டால், ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% வரை பெறுங்கள்

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்: விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150% வரை ஹாஸ்பிடல் கேஷ் தொகையைப் பெறுங்கள்

View Plan

Star Micro Rural and Farmers Care

ஸ்டார் மைக்ரோ ரூரல் அண்ட் ஃபார்மர்ஸ் கேர்

கிராமப்புற கவரேஜ்: பிரத்யேகமாக கிராமப்புற மக்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது

காப்பீட்டுக்கு முந்தைய சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

குறைவான காத்திருப்பு காலம்: PED & குறிப்பிட்ட நோய்கள் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பாதுகாக்கப்படும்

View Plan

Star Women Care Insurance Policy

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

தனித்துவமான பாலிசி: பெண்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் ஒரு முறை 100% காப்பீடு தொகை ரீஸ்டோர் செய்யப்படும்

மகப்பேறு கட்டணங்கள்: நார்மல் & சிசேரியன் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டணம் கவர் செய்யப்படும் (பிறப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு பிறகான கட்டணம் உட்பட)

View Plan

Senior Citizen Health Insurance

சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

முதியோர்களுக்கான கவரேஜ்: 60 - 75 வயதுக்குட்பட்டவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

வெளிநோயாளருக்கான கவரேஜ்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளராக பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணத்துக்கும் கவரேஜ் பெறுங்கள்

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

View Plan

Star Comprehensive Insurance Policy

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% திரும்பப் பெறலாம்

பை-பேக் PED: முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க உதவும் ஆப்ஷனல் கவரேஜ் இது

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும்

View Plan

Arogya Sanjeevani Policy

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.

கிராமப்புறங்களுக்கான தள்ளுபடி: கிராமப்புற மக்களுக்கு பிரீமியத்தில் 20% தள்ளுபடி
நவீன சிகிச்சைகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை நவீன சிகிச்சைகளுக்கான காப்பீட்டைப் பெறுங்கள்
ஆயுஷ் கவர்: ஆயுஷ் சிகிச்சைகளில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை உள்ளடக்கியது

View Plan

Top-up Health Insurance

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி

குறை நிரப்பு திட்டம்: மலிவு பிரீமியத்தில் மேம்படுத்தப்பட்டஉடல்நல பாதுகாப்பைப் பெறுங்கள்
ரீசார்ஜ் பலன்:  காப்பீட்டுத் தொகை தீர்ந்தால், கூடுதல் செலவு எதுவுமில்லாமல் கூடுதல் இழப்பீட்டைப் பெறுங்கள்
நீண்ட கால தள்ளுபடி: 2 வருட காலத்திற்கு பாலிசி தேர்ந்தெடுக்கப்பட்டால், 5% பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Premier Insurance Policy

ஸ்டார் ஹெல்த் ப்ரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி

சிறப்பு பாலிசி: அதிகபட்ச வயது வரம்பு ஏதுமின்றி 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.

மருத்துவ பரிசோதனைக்கான தள்ளுபடி: பாலிசியின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால் ப்ரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும்.

View Plan

பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

 

ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் ஆன்மாவைப் பெறுவதற்கு மேன்மையுடன் முதுமையடைவது ஒரு முக்கிய வழியாகும். ஒரு வயது முதிர்ந்த நபர் உடல்நலச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கண்புரை, முதுகு வலி, கழுத்து வலி மற்றும் கீல்வாதம், நீரிழிவு, மனச்சோர்வு மற்றும் டிமென்ஷியா போன்றவற்றை வயோதிகர்கள் எதிர்கொள்ளக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. எந்தவொரு மருத்துவச் சிக்கல்கள் இருந்தாலும் உங்கள் பெற்றோருக்கு சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும், பாதுகாப்பான சேமிப்பையும் பரிசாக அளிக்கவும்.

 

பெற்றோருக்கு ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் தேவை?

 

60-வயதை நெருங்குபவர்களுக்கு சில மருத்துவ ரீதியான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளின் காரணமாக, பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் அவசியமானதாகவும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, உங்கள் பெற்றோருக்கு தற்செயலாக ஏற்படும் எந்தவொரு உடல்நல பாதிப்பினையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க உதவுகிறது, சரியான நேரத்தில் கவனிப்பு மற்றும் தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்கிறது. உங்கள் பெற்றோருக்கு ஏன் உடனடியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற வேண்டும் என்பதை பின்வரும் முக்கியக் குறிப்புகள் உங்களுக்குப் புரிய வைப்பதாக இருக்கும்:

 

நிதிசார் சுதந்திரம்

 

மருத்துவ ரீதியான அவசரநிலையின் போது, ​​உங்கள் குடும்ப உறுப்பினர்களை நம்பிக் காத்திருக்காமல், மருத்துவக் கட்டணங்களை நீங்களே செலுத்த விரும்புவீர்கள். மருத்துவக் காப்பீட்டின் உதவியுடன் அதனை நீங்கள் செய்யலாம். மருத்துவக் காப்பீடு என்பது ஒரு நிதிசார் அபாயத்தினை நிர்வகிக்க உதவும்  வசதியாகும், இதில் அந்த நிதியிழப்பு அபாயமானது பல நபர்களை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

 

உங்கள் சேமிப்பை அப்படியே பாதுகாத்திடுங்கள்

 

பணி ஓய்விற்குப் பிறகு சௌகரியமாக இருப்பதற்கு பல வருட சேமிப்பு தேவைப்படுகிறது. பல தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட உங்களது வளம் ஒரே ஒரு மருத்துவ சிகிச்சையில் தீர்ந்து போகலாம். உங்களுக்கு அப்படி நிகழாமல் தடுக்க விரும்பினால், நீங்கள் சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டும் போதும்.

 

இக்காப்பீடு வருமான பற்றாக்குறையை ஈடுசெய்கிறது

 

உங்கள் ஓய்வூதியத்தின் மூலம் மருத்துவக் கட்டணங்களை ஈடுகட்டுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களிடம் ஒரு சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  திட்டம் இருந்தால், நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மருத்துவ சிகிச்சைக்கான அவசரநிலை ஏற்பட்டால், உங்கள் கையிருப்பை மீறிய செலவுகளைக் குறைக்க இந்தக் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கு உதவும்.

 

நீங்கள் திட்டமிட்டபடி வாழலாம்

 

ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு தனிநபரின் பல வருட சேமிப்பை அடிப்படையாக் கொண்ட ஒரு கனவாகும். நீங்கள் ஒரு உலக சுற்றுலாவை மேற்கொள்ளலாம், அல்லது உங்களுக்கு  எப்போதும் பிடித்த ஒரு சிறு தொழிலைத் தொடங்கலாம். சீனியர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது உங்கள் கனவுகளை நனவாக்க உதவுகிறது. மருத்துவ சிகிச்சைக்கான அவசரநிலை ஏற்பட்டால் நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை இக்காப்பீடு உறுதி செய்கிறது.

 

உங்கள் பெற்றோருக்கான சரியான மருத்துவ காப்பீட்டை எவ்வாறு தேர்வு செய்வது?

 

வயது முதிர்வுடன் சேர்த்து பெரும்பாலும் ஆரோக்கியமும் குறையத் துவங்கும். மேலும், காலப்போக்கில், மருத்துவ செலவினங்களின் விலையேற்றமானது நீங்கள் சேமித்து வைத்தவற்றை இழக்கும் அபாயத்தில் தள்ளிவிடும். இந்த நெருக்கடியில், உங்கள் பெற்றோருக்கு சரியான மற்றும் சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பது எப்போதும் சிறந்ததாகும். உங்களுக்கு முதுமையில் மன அமைதியும் கிடைக்கும். எனவே, உங்கள் பெற்றோருக்கான சரியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள், அதற்கு பின்வரும் பட்டியலில் உள்ள சில பயனுள்ள மற்றும் சிறப்பான குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

 

போதுமான கவரேஜைத் தேர்ந்தெடுக்கவும்

 

காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை, ஆனால் உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் செலுத்தும் பிரீமியத்தின் மதிப்பீட்டிற்கேற்ப உங்களுக்கான அதிகபட்ச கவரேஜை எந்த நிறுவனம் வழங்குகிறது, என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் பெற்றோருக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அது சிறந்த மதிப்பீட்டை வழங்குகிறதா என்பதை சரிபார்க்கவும்.

 

தேவைக்கேற்ப மாற்றும் சௌகரியம்

 

பல்வேறு வகையான பாலிசிகள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைக்கேற்ப அம்சங்களை மாற்றும் சௌகரியத்தை வழங்குகின்றன. காப்பீடு வழங்கும் பாதுகாப்புகள், காப்பீட்டுக் காலம், கூடுதலாக சேர்க்கக்கூடிய அம்சங்கள், காப்பீட்டுத் தொகை போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் தேவைகேற்ப மாற்றத்தக்க சௌகரியத்தை வழங்கும் பாலிசியையே எப்போதும் தேர்ந்தெடுங்கள்.

 

இணை-கட்டண வசதி 

 

எப்போதும், மிகக் குறைவான இணை-கட்டண (கோ-பேமென்ட்ஸ்) முறையை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. கோ-பேமென்ட்ஸ்  உங்கள் பாலிசியை சிக்கனமானதாகவும், கட்டுப்படியாவதாகவும் ஆக்குகிறது.

 

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீட்டுப் பாதுகாப்பை நாடுங்கள்

 

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக - 1 வருடம் அல்லது 6 மாதங்கள். உங்களுக்கு ஏற்கனவே உள்ள நோய்கள் மற்றும் அவை தொடர்பான சிக்கல்களுக்கு பாலிசி காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். சில பாலிசிகள் அவ்வாறு வழங்காது, எனவே அப்படி வழங்கும் காப்பீட்டுத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

 

புதுப்பிப்பதற்கான வயது

 

இது பாலிசி மற்றும் வாடிக்கையாளரைப் பொறுத்தது, ஆனால் 'வாழ்நாள் முழுவதும் காப்பீட்டைப் புதுப்பிக்கும் வசதியினை’ வழங்கும் நிறுவனங்களும் உள்ளன. அப்படிப்பட்ட வாய்ப்புகளை வழங்கும் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யவும்.

 

க்ளைம் செயல்முறை

 

உங்கள் பாலிசியில், நீங்கள் பின்பற்ற வேண்டியதாக உள்ள க்ளைம் செயல்முறைகள் மிகவும் எளிதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். க்ளைம் கோரும் செயல்பாட்டில் உங்கள் நேரத்தை வீணடிக்கும் முன், அதற்கான செயல்முறை பற்றி முன்கூட்டியே நீங்கள் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

பரிந்துரைக்கப்படும் பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

 

பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டினை வயதின் அடிப்படையில் வகைப்படுத்தலாம் - 60 வயதுக்கு குறைவானவர்கள் | 60 ஆண்டுகளுக்கும் மேலானவர்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் பெற்றோருக்காக பரிந்துரைக்கப்படும் சில மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பின்வருமாறு:

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

ஸ்டார் வழங்கும்  சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியானது,  60 முதல் 75 வயதுடைய முதியவர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம் வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியை வழங்குவதோடு - வயதானவர்களுக்கு அவசியமாக இருக்கக்கூடிய பல்வேறு தினசரி பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள், ஏற்கனவே உள்ள நோய்கள், நவீன சிகிச்சைகள் மற்றும் முக்கிய மருத்துவ தலையீட்டு சிகிச்சைகளை உள்ளடக்கியதாகும். 

 

மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள், பொதுவாக,  வயதுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். இருப்பினும், இந்த பாலிசி வயதைப் பொருட்படுத்தாமல் நிலையான ஒரே பிரீமியத்தை கொண்டுள்ளது. உங்கள் பெற்றோர் உங்களுக்கு அளித்த ஆதரவையும், காட்டிய அன்பையும் அவர்களுக்கும் கொடுங்கள். சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குவதன் மூலம், உங்கள் பெற்றோர் அவர்களின் மரியாதைக்குரிய வயதில் சரியான பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெறுவதை உறுதிசெய்யுங்கள்; மேலும், பிரிவு 80D-இன் கீழ் வரி விலக்கையும் பெறுங்கள்.

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் என்னென்ன காப்பீட்டுப் பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?

 

வயதானவர்களுக்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் காப்பீடு செய்வதால், உங்களது நிதியில் நீங்கள் கைவைக்காமல், எந்தச் சிக்கலுமின்றி சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறலாம். இந்தப் பாலிசியின்  கீழ் வழங்கப்படும் முக்கிய காப்பீட்டுப் பாதுகாப்புகள் பின்வருமாறு:

 

 • உள்நோயாளர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மேற்கொள்ளப்படும்  - தீவிர சிகிச்சை பிரிவிற்கான (ICU) கட்டணங்கள், நர்சிங் செலவுகள், அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம், இரத்தத்திற்கான கட்டணம், ஆக்ஸிஜன், மருந்துகளின் விலை, நோய் கண்டறியும் பரிசோதனைகள், ஆகியவற்றிற்கு காப்பீட்டினை பெறலாம்.
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
 • அவசரகால போக்குவரத்து கட்டணங்கள் (ஆம்புலன்ஸ்)
 • நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளி நோயாளராக ஆலோசனை பெறுதல்
 • இந்தியா முழுவதும் உள்ள நெட்வொர்க்/நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுதல்
 • வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு
 • நவீன சிகிச்சைகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு
 • காப்பீட்டுத் திட்டத்தில் இணைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை
 • ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கும் காப்பீடு
 • காப்பீட்டுத் தொகை கோரப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகளும் காப்பீட்டின் கீழ் வரும்.
 • நிறுவனத்தின் சொந்த க்ளைம் செட்டில்மெண்ட் செயல்முறை

 

எவையெல்லாம் காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வராது

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ், பின்வரும் சிகிச்சைகள்/நோய்களுக்கு காப்பீடு  வழங்கப்படுவதில்லை:

 

1.இந்தியாவிற்கு வெளியே பெறப்படும் சிகிச்சை
2.விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாற்றும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை, மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
3.7.5 டையோப்டர்களுக்கு குறைவான ரிஃப்ராக்டிவ் குறைபாட்டை சரிசெய்தல், செவித்திறன் குறைபாட்டை சரிசெய்தல், மாற்றுப் பல் சிகிச்சை.
4.போதைப்பொருள் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் காயங்கள், பால்வினை நோய்கள் (STD)
5.அபாயகரமான விளையாட்டு, போர், பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் அல்லது சட்ட மீறல்களால் ஏற்படும் பாதிப்புகள்
6.அனைத்து விதமான சேவைக் கட்டணம், கூடுதல் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், பதிவுக் கட்டணம், மருத்துவமனையால் வழங்கப்படும் அடையாள அட்டைக்கான கட்டணம்.

 

காத்திருப்பு காலம்

 

விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உள்ளது.

 

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் கீழ் வரும்.

 

காப்பீட்டுத் திட்ட ஆவணத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்கள் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

 

வரி ஆதாயங்கள்

 

வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 80D-இன் கீழ் பிரீமியம் தொகையின் மீது ஒருவர் ரூ. 50000 வரை வரிச் சலுகையைப் பெறலாம். 

 

காப்பீட்டுத் தகுதி வரம்புகள்

 

காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு 60-75 வயது என்கிற உயர்த்தப்பட்ட நுழைவு வயது வரம்புடன், விரிவான கவரேஜை வழங்கும் சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி – வயது முதிர்ந்த குடிமக்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் காப்பீட்டுத் திட்டங்களில் இதுவும் ஒன்று; இது முதியோரின் குறிப்பிட்ட மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காப்பீடு தகுதிக்கான விதிமுறை வரம்புகள்  பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன:

 

 • நுழைவு வயது: 60 - 75 ஆண்டுகள்
 • புதுப்பிக்கும் வசதி: வாழ்நாள் முழுவதும்
 • காப்பீட்டுத் தொகை வரம்பு: ரூ.1 லட்சம் - ரூ. 25 லட்சம்
 • மருத்துவ பரிசோதனைக்கான தேவை: இன்ஷூரன்ஸுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை இல்லாமல் பாலிசியைப் பெறலாம்.

 

கோ-பேமன்ட் முறை எவ்வாறு செயல்படுகிறது

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியானது பின்வருமாறு கோ-பேமன்ட் முறைக்குட்பட்டது:

 

அனைத்து காப்பீட்டுத் தொகைக்கும் கோ-பே (Co-pay) முறை உண்டு.ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைம்களுக்கு 30 % வழங்கப்படும்

 

உதாரணமாக:

 

 • அனைத்து காப்பீட்டுத் தொகைக்கும் – ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைம் தொகை 1 லட்சமாகவும், அது ஏற்கனவே இருக்கும் நோய் (PED) / PED அல்லாத நோய்க்கான கிளைமாக இருக்கும் பட்சத்தில், ரூ.30000 (30%) பாலிசிதாரர் செலுத்த வேண்டும். மீதமுள்ள 70000 (70 %) காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்படும்.

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது முழுமையான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும் ஒரு திட்டமாகும்; இது அவசர மருத்துவத் தேவைகளின் போது நிதி பாதுகாப்பினை அளிக்கிறது. 18 முதல் 65வயது வரையிலான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமான இந்த பாலிசி, வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியுடன் வருகிறது. உங்கள் தேவைகளைப் பொறுத்து, 5 லட்சம் முதல் 1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பிரீமியத்தை தவணைகளாக செலுத்தலாம்.

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் என்னென்ன காப்பீட்டு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் பின்வரும் காப்பீட்டு பாதுகாப்புகள் கிடைக்கின்றன:

 

 • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
 • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
 • தினசரி மருத்துவ செயல்முறைகள் / சிகிச்சைகள்
 • வீட்டிலேயே செய்யப்படும் சிகிச்சைகள் 
 • ஆம்புலன்ஸ் செலவுகள்
 • ஆயுஷ் சிகிச்சைகள்
 • இரண்டாம் மருத்துவரின் கருத்தை பெறுவது
 • பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான காப்பீடு
 • உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள்
 • எடை குறைப்பு அறுவைசிகிச்சை
 • தனிநபர் விபத்துக் காப்பீடு – மரணமடைந்தால் & நிரந்தர முழுவதும்  ஊனமடைந்தால் மொத்த காப்பீட்டுத் தொகையின் பலன்
 • வெளி-நோயாளராக மருத்துவ ஆலோசனை பெறுதல்
 • வெளி-நோயாளராக பெறும் பல் மற்றும் கண் சிகிச்சை
 • மருத்துவமனை கேஷ் பெனிஃபிட்
 • காத்திருப்பு காலம் முடிந்த பிறகு ஏற்கனவே இருக்கும் உடல் நல பாதிப்புகள்
 • நோயறியும் தகவலைப் பெற வேண்டும் என்கிற முதன்மையான நோக்கத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்
 • இந்தியாவிற்கு வெளியே சிகிச்சை பெறுதல்
 • விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாற்றும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
 • 7.5 டையோப்டர்களுக்கு குறைவான ரிஃப்ராக்டிவ் பார்வை குறைபாடுகளை சரிசெய்தல், செவித்திறன் குறைபாட்டிற்கான சிகிச்சை, பல் சீரமைத்தல் மற்றும் அழகியல் பல் அறுவை சிகிச்சை
 • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளால் ஏற்படும் காயங்கள்
 • நிரூபிக்கப்படாத சிகிச்சைகள்
 • வெனேரல் நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் (STD) (HIV எயிட்ஸ் தவிர)
 • அணு ஆயுதம் மற்றும் போர் தொடர்பான ஆபத்துகள்
 • வேண்டுமென்றே சுயமாக காயம் ஏற்படுத்துதல்

 

எவையெல்லாம் காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வராது

 

பின்வருபவை காப்பீட்டால் பாதுகாப்பு வழங்கப்படாதவற்றின் பட்டியலின் ஒரு பகுதியாகும். காப்பீட்டு ஆவணத்தில் விலக்கி வைக்கப்பட்ட அனைத்தின் விரிவான பட்டியல் உள்ளது.

 

 • காத்திருப்பு காலம் முடியும் வரை, ஏற்கனவே உள்ள உடல் நல பாதிப்புகள்
 • நோயறியும் தகவலைப் பெற வேண்டும் என்கிற முதன்மையான நோக்கத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்
 • இந்தியாவிற்கு வெளியே சிகிச்சை பெறுதல்
 • விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாற்றும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
 • 7.5 டையோப்டர்களுக்கு குறைவான ரிஃப்ராக்டிவ் பார்வை குறைபாடுகளை சரிசெய்தல், செவித்திறன் குறைபாட்டிற்கான சிகிச்சை, பல் சீரமைத்தல் மற்றும் அழகியல் பல் அறுவை சிகிச்சை
 • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளால் ஏற்படும் காயங்கள்
 • நிரூபிக்கப்படாத சிகிச்சைகள்
 • வெனேரல் நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் (STD) (HIV எயிட்ஸ் தவிர)
 • அணு ஆயுதம் மற்றும் போர் தொடர்பான ஆபத்துகள்
 • வேண்டுமென்றே சுயமாக காயம் ஏற்படுத்துதல்

 

காத்திருப்பு காலம்

 

விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உள்ளது.

 

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் கீழ் வரும்.

 

குறிப்பிட்ட நோய்கள் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

 

வரி ஆதாயங்கள்

 

வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 80D-இன் கீழ் பிரீமியம் தொகையின் மீது ஒருவர் வரிச் சலுகையைப் பெறலாம். 

 

காப்பீட்டுத் தகுதி வரம்புகள்

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரையிலான தனிநபர்கள் வாங்கலாம், 65 வயதுக்கு மேல் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி கிடைக்கும். இந்த காம்ப்ரிஹென்சிவ் ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டமானது, இரண்டு பெரியவர்கள் மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது வரை உள்ள மூன்று சார்ந்திருக்கும் குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தையும் காப்பீட்டின் கீழ் கொண்டுவர பாலிசிதாரரை அனுமதிக்கிறது.

 


 

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் ப்ளான்

 

ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக ஆதரிப்பதென்பது சவாலாக இருக்கலாம். எனவே, முழு குடும்பத்திற்கும் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், உங்கள் செலவுகளைக் குறைக்கும் ஒரு சூப்பர் சேவர் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யலாம். மிகக்குறைந்த வயதுடைய குழந்தை உட்பட உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் உடல் நல பிரச்சனைகளையும் நீங்கள் கவனித்துக்கொள்ளும் வகையில், ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா (FHO) இன்ஷூரன்ஸ் திட்டம் சரியான விலையில் கிடைக்கிறது. நீங்கள் இளம் பெற்றோராக இருந்தால், புதிதாகப் பிறந்த குழந்தையின் 16வது நாளிலிருந்து காப்பீட்டின் கீழ் கொண்டுவந்து மருத்துவமனையில் அனுமதித்து பெறப்படும் சிகிச்சைகளுக்கு காப்பீட்டை பெறலாம். முழுமையாக காப்பீட்டுத் தொகையை முழுமையாக பயன்படுத்திய ஒவ்வொரு முறைக்குப் பிறகும் 3 தடவை தாமாகவே  100% காப்பீட்டுத் தொகை ரீஸ்டோர் செய்யப்படும். 

 

இந்தத் திட்டத்தின் மூலம், உங்களது காப்பீட்டுத் தொகையை 300% (ஒவ்வொரு முறையும் 100 %) தாமாகவே ரீஸ்டோர் செய்வது, மரணமடைந்தோர் உடலை கொண்டுச் செல்லுதல், நோயாளருடன் பயணித்தல், அவர்களை உள்நாட்டிற்குள் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லுதல், உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள், ரீசார்ஜ் பெனிஃபிட்ஸ், சாலை போக்குவரத்து விபத்துகள் (RTA) மற்றும் உதவியுடன் கூடிய மகப்பேறு சிகிச்சைக்கு கூடுதல் காப்பீட்டுத் தொகை போன்ற பல நன்மைகளை நீங்கள் பெறலாம். 

 

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் ப்ளான் கீழ் என்னென்ன காப்பீட்டு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?

 

 • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
 • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
 • தினசரி மருத்துவ நடைமுறைகள்/சிகிச்சைகள்
 • காப்பீட்டுத் தொகையைக் கோராத ஒவ்வொரு ஆண்டும், இலவச வருடாந்திர மருத்துவப் பரிசோதனை
 • வீட்டிலேயே செய்யப்படும் சிகிச்சைகள்
 • ஆம்புலன்ஸ் செலவுகள்
 • ஆயுஷ் சிகிச்சைகள்
 • இரண்டாம் மருத்துவரின் கருத்தை பெறுதல்
 • புதிதாக பிறந்த குழந்தைக்கான காப்பீடு
 • உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்
 • உதவியுடன் கூடிய மகப்பேறு சிகிச்சை

 

எவையெல்லாம் காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வராது

 

 • போர் போன்ற சூழ்நிலைகள், எதிரிகளின் படையெடுப்பு போன்றவற்றால் ஏற்படும் காயம் அல்லது நோய்.
 • சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் காயத்திற்கான செலவுகள்.
 • எதேர்சையான காயங்களின் காரணமாக பல சிகிச்சை தேவைப்படுவது தவிர்த்து, மேற்கொள்ளப்படும் பல் சிகிச்சைகள்
 • கடிக்குப் பின் மற்றும் பிற மருத்துவ சிகிச்சைகள் தவிர்த்து, செலுத்தப்படும் தடுப்பூசிகள்

 

 

காத்திருப்பு காலம்

 

விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உள்ளது.

 

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 48 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் கீழ் வரும்.

 

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட நோய்களுக்குப் கவரேஜ் அளிக்கப்படும்.

 

வரி ஆதாயங்கள்

 

வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 80D-இன் கீழ் பிரீமியம் தொகையின் மீது ஒருவர் வரிச் சலுகையைப் பெறலாம். 

 

காப்பீட்டுத் தகுதி வரம்புகள்

 

இந்தியாவில் வசிக்கும் 18 முதல் 65 வயது வரையிலான எவரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறலாம். 65 வயதுக்கு மேல், வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியைப் பெற்று பயனடையலாம். 16வது நாளிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தையும் குடும்பத்தின் ஒரு அங்கமாக காப்பீட்டின் கீழ் சேர்க்கப்படலாம். இந்தக் காப்பீட்டுத் திட்டமானது ஃப்ளோட்டர் அடிப்படையிலானது. எனவே, பாலிசிதாரர், அவரது வாழ்க்கைத்துணை, 16 நாட்கள் முதல் 25 வயது வரையிலான சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரும் காப்பீட்டின் பாலிசியைப் பெறலாம்.

 

 

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இளைஞர்கள் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ளனர். எனவே, உங்கள் இளமைப் பருவத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியமாகும். 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்குவதே யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியின் முதன்மையான நோக்கமாகும். இந்த காப்பீட்டுத் திட்டம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது - சில்வர் மற்றும் கோல்டு, இவற்றில் ஒன்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

 

இக் காப்பீட்டுத் திட்டம் ஊக்கத்தொகையால் வழிநடத்தப்படும் வெல்னஸ் திட்டங்கள், காப்பீட்டை புதுப்பிக்கும் போது  தள்ளுபடி வழங்குதல், குறைந்தபட்ச காத்திருப்பு காலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை ஈடுசெய்வது, ஒட்டுமொத்த போனஸ், மருத்துவமனை கேஷ் பெனிஃபிட்ஸ், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள், காப்பீட்டுத் தொகையை தானாக ரீஸ்டோர் செய்தல், மற்றும் சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கான கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் என்னென்ன காப்பீட்டு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?

 

 • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
 • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
 • தினசரி மருத்துவ நடைமுறைகள்/சிகிச்சைகள்
 • அவசர சாலை வழி ஆம்புலன்ஸ்
 • வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள்
 • மனைவி/புதிதாகப் பிறந்த குழந்தையை காப்பீட்டின் கீழ் இடைக்காலத்தில் சேர்ப்பது
 • பிரசவ செலவுகள் (கோல்டு ப்ளானின் கீழ் மட்டும்)
 • மருத்துவமனை கேஷ் பெனிஃபிட் (கோல்டு ப்ளானின் கீழ் மட்டும்)
 • ஓய்வு சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் ஓய்வில் கவனிப்பது
 • உடல் பருமன்/எடை கட்டுப்பாடு
 • விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாற்றும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
 • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளால் ஏற்படும் காயங்கள்
 • ரிஃப்ராக்டிவ் பார்வைக் குறைபாடு
 • பல் அறுவை சிகிச்சைகள், விபத்தின் காரணமாக ஏற்படாவிட்டால் 
 • வீட்டிலேயே அளிக்கப்படும் சிகிச்சை, இந்தியாவிற்கு வெளியே பெறப்படும் சிகிச்ச
 • கர்ப்பம் (கோல்டு ப்ளானின் கீழ் தவிர), மலட்டுத்தன்மை, பிறவி வெளி நோய்/குறைபாடுகள்
 • வஸ்து துஷ்பிரயோகம், வேண்டுமென்றே சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் காயம், போர், பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் அல்லது சட்ட மீறல்

 

எவையெல்லாம் காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வராது

 

 • ஓய்வு சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் ஓய்வில் கவனிப்பது
 • உடல் பருமன்/எடை கட்டுப்பாடு
 • விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாற்றும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி
 • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளால் ஏற்படும் காயங்கள்
 • ரிஃப்ராக்டிவ் பார்வைக் குறைபாடு
 • பல் அறுவை சிகிச்சைகள், விபத்தின் காரணமாக ஏற்படாவிட்டால் 
 • வீட்டிலேயே அளிக்கப்படும் சிகிச்சை, இந்தியாவிற்கு வெளியே பெறப்படும் சிகிச்சை
 • கர்ப்பம் (கோல்டு ப்ளானின் கீழ் தவிர), மலட்டுத்தன்மை, பிறவி வெளி நோய்/குறைபாடுகள்
 • வஸ்து துஷ்பிரயோகம், வேண்டுமென்றே சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் காயம், போர், பயங்கரவாதம், உள்நாட்டுப் போர் அல்லது சட்ட மீறல்

 

காத்திருப்பு காலம்

 

விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உள்ளது.

 

பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் கீழ் வரும்.

 

குறிப்பிட்ட நோய்கள் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

 

வரி ஆதாயங்கள்

 

வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 80D-இன் கீழ் பிரீமியம் தொகையின் மீது ஒருவர் வரிச் சலுகையைப் பெறலாம். 

 

காப்பீட்டுத் தகுதி வரம்புகள்

 

காப்பீட்டுத் திட்டத்தின் உள்ளே வரும் போது 18 முதல் 40 வயதுடையவர்கள் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். 91 நாட்கள் முதல் 25 வயது வரையிலான சார்ந்திருக்கும் குழந்தைகளை காப்பீட்டின் கீழ் கொண்டு வரலாம். 

 

இந்தக் காப்பீட்டுத் திட்டம் தனிநபர் அடிப்படையிலும், குடும்ப ஃப்ளோட்டர் அடிப்படையிலும் கிடைக்கும். பாலிசிதாரர், மனைவி மற்றும் 3க்கு மிகாமல் சார்ந்திருக்கும் குழந்தைகள் ஆகியோர் இந்தக் காப்பீட்டின் நோக்கத்திற்காக ஒரு குடும்பம் எனப்படுகிறது.

 

மோராடோரியம் பீரியட்

 

பாலிசியின் கீழ் தொடர்ந்து எட்டு வருடங்களை நிறைவு செய்த பிறகு அதன் மீதான கோரலை நிறுத்தி வைக்க முடியாது. இந்த எட்டு வருட காலம் மோராடோரியம் பீரியட் என்று அழைக்கப்படுகிறது. முதல் பாலிசியின் மொத்தக் காப்பீட்டுத் தொகைக்கு இந்தத் மோராடோரியம் பீரியட் பொருந்தும், மற்றும் உயர்த்தப்பட்ட காப்பீட்டு வரம்புகளுக்கு மட்டும்  மேலும் தொடர்ந்து 8 வருடங்களை நிறைவு செய்ய வேண்டும்; இது காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படும். மோராடோரியம் பீரியட் முடிவடைந்த பிறகு, பாலிசி ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஏதேனும் நிரூபிக்கப்பட்ட மோசடி மற்றும் நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட்ட விஷயங்களைத் தவிர, வேறு எந்தவொரு மருத்துவக் காப்பீட்டுக் கோரலையும் தர மறுத்து எதிர்க்க முடியாது. இருப்பினும், பாலிசிகள் அந்தந்த காப்பீட்டுத் திட்ட ஆவணத்தின்படி அதன் அனைத்து வரம்புகள், துணை வரம்புகள், கோ-பேமென்ட் செலுத்துதல், விலக்கி வைக்கப்பட்டவை ஆகியவற்றிற்கு உட்பட்டதாகவே இருக்கும்.

 

உதவி மையம்

குழப்பமா? பதில் எங்களிடம்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.